என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆர்.டி.ஓ. ரெங்கநாதன் தலைமையில் கிராம மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
தேங்காய் நார் கயிறு ஆலையை இயக்க கிராம மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம்
கொடுமுடி அருகே இச்சிபாளையம் கிராமத்தில் உள்ள தேங்காய் நார் கயிறு ஆலையை இயக்க கிராம மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
கொடுமுடி:
கொடுமுடி அருகே இச்சிபாளையம் கிராமத்தில் உள்ள தேங்காய் நார் கயிறு ஆலையை இயக்க கிராம மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
கொடுமுடி அருகே இச்சிபாளையம் கிராமத்தில் 6.95 ஏக்கரில் தனியாருக்கு சொந்தமான தேங்காய் நார் கயிறு மற்றும் பல்வேறு உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனம் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்நிறுவனம் தேங்காய் நாரில் இருந்து கயிறு மற்றும் பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனம் ஆகும். கடந்த ஆண்டு சுமார் 20 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்ட இந்-நிறுவனம் அமைக்கப் பட்டபோதே இந்த பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த ஆலையில் உற்பத்தி தொடங்கினால் காற்று, சுற்றுச்சூழல் மாசு உண்டாகும். மேலும் இந்த ஆலை கழிவு நீரினால் நிலத்தடிநீர் மாசு ஏற்படும் என்ற காரணத்தை வலியுறுத்தி கடந்த ஆண்டு அக்டோபர் 2-ந் தேதி நடை பெற்ற கிராமசபா கூட்டத்தில் இந்த ஆலை இயங்க அனுமதிக்கத் கூடாது என தீர்மானம் நீறைவேற்றி மாவட்ட கலெக்டருக்கு ஊர் பொதுமக்கள் சார்பாக அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில் மீண்டும் இந்த காயர் ஆலையை இயக்க பொதுமக்களிடம் கருத்து கேட்புக் கூட்டம் இச்சிப் பாளையம் சமுதாய நலகூடத்தில் ஈரோடு ஆர்.டி.ஓ. ரெங்கநாதன் தலைமையில் நடைபெற்றது.
இதில் ஈரோடு மாவட்ட தொழில்நுட்ப பொது மேலாளர் திருமூர்த்தி, உதவி இயக்குனர் (ஊராட்சி) உமாசங்கர், கொடுமுடி தாசில்தார் ஸ்ரீதர், கொடுமுடி இன்ஸ்பெக்டர் முருகன், இச்சிப்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ராஜ் குமார் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்கள் மற்றும் காயர் ஆலை பங்குதாரர்கள் ஆகியோரிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டது.
பொதுமக்கள் சார்பாக இந்த காயர் ஆலை மாதிரி ஓட்டம் நடைபெற்றபோது ஏற்ப்பட்ட தண்ணீர் மாசு, சுற்றுச்சூழல் மாசு போன்ற வற்றின் புகைப்பட ஆதா-ரங்கள் ஆர்.டி.ஓ முன்னி-லையில் காட்டப்பட்டு இந்த ஆலைக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று வலியுறுத்தப்பட்டது.
ஆலை நிர்வாகத்தின் சார்பில் தண்ணீர் ஒரு சொட்டு கூட பயன்படுத்த மாட்டோம் என அதிகாரி-களிடம் தெரிவித்தனர். இருதரப்பு கருத்துக்களையும் கேட்டுக் கொண்ட அதிகாரி-கள் இது குறித்து மேல் அதிகாரிகளுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என தெரிவித்தனர்.
Next Story






