என் மலர்tooltip icon

    ஈரோடு

    பவானிசாகரில் சாக்கடை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    சத்தியமங்கலம்:

    பவானிசாகரில் சாக்கடை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    பவானிசாகர் அடுத்துள்ள நால்ரோடு பகுதியில் கடந்த சில நாட்களாக நெடுஞ்சாலை துறை சார்பில் சாக்கடை அமைக்க குழி தோண்டும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இன்று காலை திடீரென சாலை மறியல் செய்தனர்.

     இந்த போராட்டம்  காரணமாக ரோட்டின் இரு-புறமும் ஏராளமான வாகனங்-கள் அணிவகுத்து நின்றன. இதுப்பற்றி தெரியவந்ததும் பவானி சாகர் போலீசார் விரைந்து வந்து மறியல் செய்த பொது-மக்களிடம் பேச்சு-வார்த்தை நடத்தினர்.

     அப்போது விரைவில் குழி தோண்டும் பணியை முடிக்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் பொதுமக்களிடம் தெரிவித்தனர். இதையடுத்து சுமார் 45 நிமிடத்துக்கு பின்னர் பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டனர். இதையடுத்து அனைத்து வாகனங்களும் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

    சேவல் வைத்து சூதாடிய 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
    கருங்கல்பாளையம்:

    சேவல் வைத்து சூதாடிய 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
    கருங்கல்பாளையம் சப்&இன்ஸ்பெக்டர் ராம்பிரபு தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது கருங்கல்பாளையம் வெற்றி நகர் அருகே ஒரு காலி இடத்தில் சிலர் கும்பலாக சேவல் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். 

    அந்தக் கும்பல் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயற்சி செய்தனர். அந்த கும்பலை போலீசார் மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினார்கள்.

     விசாரணையில் அவர்கள் முகமது அப்பாஸ்(20), ஜீவானந்தம் (43), கர்ப்பகராஜன் (34), யோகேஸ்வரன் (21), குணசேகர் (21), முரளி (28), ரோகிட்(23), அரவிந்தன் (23) ஆகியோர் என்பதும் இவர்கள் சேவல் வைத்து  சூதாடி கொண்டிருந்தது தெரிய வந்தது.

    இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து 8 பேர் கும்பலை கைது செய்தனர். மேலும் இவர்களிடம் இருந்து 5 மோட்டார் சைக்கிள்கள், 9 சேவல்கள், ரூ 24 ஆயிரத்து 600 ரொக்க பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பெருந்துறை சாகர் பள்ளி விடுதியில் தங்கி படித்த 10-ம் வகுப்பு மாணவர் மாயமான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பெருந்துறை:

    பெருந்துறை சாகர் பள்ளி விடுதியில் தங்கி படித்த 10-ம் வகுப்பு மாணவர் மாயமான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை-பவானி ரோடு, சோளிபாளையம் பகுதியில் சாகர் இண்டர்நேஷனல் பள்ளி செயல்பட்டு வருகிறது. 

    இந்தப் பள்ளியில் கடலூர் மாவட்டம், பண்ருட்டி, காடையாம்-புலியூர் பகுதியை சேர்ந்த உக்கரவேல் என்பவரது மகன் கலையமுதன் (வயது 16) 10-ம் வகுப்பு படித்து வருகிறார். 

    இவர் இப்பள்ளியின் விடுதியில் தங்கி படித்து வந்தார். நேற்று ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால் மதியம் முதல் மாணவர் கலையமுதனை காண-வில்லை. 

    இதையடுத்து விடுதி வார்டன் மற்றும் மாணவர்கள் பள்ளி வளாகம் முழுவதும் தேடிப்-பார்த்தும் மாணவரை கண்டுபிடிக்க முடிய-வில்லை. 

    இதுதொடர்பாக பள்ளியின் தாளாளர் சுந்தர்ராஜன் பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதாபேகம் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன மாணவரை தேடி வருகிறார். பள்ளியில் தங்கி படித்த மாணவர் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    சித்தோடு பகுதியில் கட்டப்பட்டுள்ள 3264 அடுக்குமாடி குடியிருப்புகளை அமைச்சர் முத்துசாமி செய்தார்.
    ஈரோடு:

    சித்தோடு பகுதியில் கட்டப்பட்டுள்ள 3264 அடுக்குமாடி குடியிருப்புகளை அமைச்சர் முத்துசாமி செய்தார்.

    ஈரோடு மாவட்டம், சித்தோடு பேரூராட்சிக்-குட்பட்ட நல்லாக் கவுண்டன்-பாளையம் கிராமத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா தலைமையில் ஈரோடு மாநகராட்சி மேயர்  நாகரத்தினம் முன்னிலையில்  அமைச்சர்முத்துசாமி தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கட்டப்பட்டு வரும் 3264 அடுக்குமாடி குடியிருப்பு-களை நேரில்
    சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வின்போது,  அமைச்சர் நிருபர்களிடம் கூறியதாவது:&
    தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் இங்கே 3264 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. ஏழை, எளிய மக்களுக்காக பயன்படுத்-தப்பட இருக்கிறது. ஈரோடு மாநகராடசிக்குட்பட்ட பெரும்பள்ளம் ஓடை, பிச்சைக்காரன் பள்ளம் மற்றும் சுண்ணாம்பு ஓடை போன்ற நீர் வழிப்பகுதிகள், சாலை பகுதிகள் மற்றும் அரசு நிலங்களில் ஆக்கிர-மித்து அபாயகரமான நிலையில் வசித்து வரும் ஆக்கிரமனதாரர்களை ஆரோக்கியமான சூழ்நிலையில் மறுகுடியமர்வு செய்திடவும், நீர்வழி பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்-புகளை அகற்றிடவும், பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் ஒன்றிய, மாநில அரசுகளின் நிதி மற்றும் பயனாளிகளின் பங்களிப்போடு, அடுக்கு-மாடி குடியிருப்புகள் கட்டும் திட்டம் செயல்படுத்-தப்பட்டு வருகின்றது.

    மேலும் தேர்வு செய்யப்பட்ட வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் வீடற்ற நகர்புற ஏழைகளும் மறுகுடியமர்வு செய்யப்-படவுள்ளனர். இதில் ஈரோடு மாவட்டம், சித்தோடு பேரூராட்சிக்குட்பட்ட நல்லாக்கவுண்டன் பாளையம் வருவாய் கிராமத்தில் அருகருகே மூன்று திட்டப்பகுதிகளில் மாவட்ட கலெக்டரின் முன்நுழைவு அனுமதி பெற்று திட்டம் செயல்படுத்-தப்பட்டு வருகிறது. இதில் சுமார் 29 ஏக்கர் பரப்பளில் மொத்தம் 3264 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது.

    ஒருங்கிணைந்த திட்ட மதிப்பீடு ரூ.285.60 கோடி ஆகும். இதில் ஒன்றிய அரசின் நிதி ரூ.48.96 கோடியும், மாநில அரசின் நிதி ரூ.195.84 கோடியும், பயனாளிகளின் பங்களிப்பு ரூ.40.80 கோடியும் ஆகும். ஒரு குடியிருப்பிற்கான மதிப்பு ரூ.8.75  லட்சம் ஆகும். ஏற்கனவே இந்த இடத்திலே குடிவரக் கூடியவர்கள் கூடுதலாக பணம் கட்ட வேண்டிய அவசியம் இருந்தது.

    அதிலே சில சலுகைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதல்-அமைச்சர் அறிவித்து, அவர்களின் சுமையை குறைக்கின்ற அளவிற்கு நடவடிக்கை எடுத்துள்-ளார்கள். மேலும் இதுமட்டும் அல்லாமல் தமிழ்நாடு முழுவதும் இதுபோன்று பல இடங்களிலே தற்பொழுது குடியிருப்புகளை கட்டு-வதற்கு ஏற்பாடு செய்யப்-பட்டு வருகிறது.

    இதில் மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது, ஏழை மக்களுக்காக மாநில அரசு மானியம் கொடுக்கின்றது, வீடுகள் மிகவும் தரமானதாக இருக்க வேண்டும் என்பதே மாண்புமிகு தமிழ்நாடு முதல்&அமைச்சர் அவர்களின் நோக்கமாக உள்ளது. 

    எதிர்காலத்தில் வரக்-கூடிய கட்டிடங்கள் முழுமை-யான தரத்தோடு கட்டப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். 3264 குடியிருப்புகளும் முடியும் தருவாயில் உள்ளது. மேலும் இன்னும் 3 மாத  காலத்திற்குள் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது. ஒரு சில வீடுகளை மட்டும் உடனடியாக கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 
    சாலை, குடிநீர், போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் மிகசிறப்பாக ஏற்படுத்த வேண்டும் என்பதே அரசின் நோக்கம். எனவே இக்கட்டிங்கள் இன்று ஆய்வு மேற்கொள்ளப் பட்டுள்ளது. விரைவாக பணிகள் முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்-படும் என தெரிவித்தார்.

    இந்த ஆய்வின்போது, மாநகராட்சி துணை மேயர்  செல்வராஜ், 1-வது மண்டலக் குழுத்தலைவர்  ப.க.பழனிசாமி, மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார், செயற்பொறியாளர்  விஜயகுமார் உட்பட ஈரோடு வட்டாட்சியர் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே கள்ளக்காதலியுடன் விஷம் குடித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த ராசபட்டி, கே.கே.வலசு பகுதியைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி (30). இவருக்கும் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த தினேஷ்குமார்(36) என்பவருக்கும் திருமணம் நடந்தது.

    இந்நிலையில் முத்துலட்சுமியின் தம்பி மணிகண்டனின் மனைவி சுகந்திக்கும், தினேஷ்குமாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

    தினேஷ்குமாருக்கு சுகந்தி தங்கை உறவு முறையாகும். உறவுமுறை மீறிய இந்த பழக்கத்தை கேள்விப்பட்டு முத்துலட்சுமி தனது கணவர் தினேஷ்குமாரை கண்டித்துள்ளார். அதேபோல் மணிகண்டனும் தனது மனைவியை கண்டித்துள்ளார். இருவருக்கும் அறிவுரை கூறியும், புத்திமதியும் உறவினர்கள் கூறினார்கள்.

    ஆனால் இதனை ஏற்க மறுத்து கடந்த 19-ந் தேதி தினேஷ்குமார், சுகந்தி ஆகியோர் வீட்டை விட்டு வெளியேறினர். இது தொடர்பாக திண்டுக்கல் மாவட்டம் கீரனூர் போலீஸ் நிலையத்தில் தினேஷ்குமார், சுகந்தி காணாமல் போய் விட்டதாக புகார் அளிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் வீட்டை விட்டு வெளியேறிய தினேஷ் குமார், சுகந்தியை அழைத்துக் கொண்டு ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள தனது சொந்த ஊருக்கு வந்தார்.

    அவர்களை தினேஷ்குமாரின் பெற்றோர் ஏற்க மறுத்து கண்டித்து வெளியே அனுப்பி விட்டனர். இதனால் தினேஷ்குமார் கோபியில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் சுகந்தியை அழைத்துக் கொண்டு பவானிசாகர் வந்தார். பின்னர் அவர்கள் அங்குள்ள கருப்பராயன் கோவில் அருகே வி‌ஷம் குடித்தனர்.

    பின்னர் திடீரென தினேஷ்குமார் மோட்டார்சைக்கிளில் சுகந்தியை அழைத்துக் கொண்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வந்தார். அவர் தாங்கள் 2 பேரும் வி‌ஷம் குடித்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து 2 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இதில் மேல் சிகிச்சைக்காக தினேஷ் குமாரை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சையில் இருந்த தினேஷ்குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். சுகந்தி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து பவானிசாகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கீழ்பவானி பாசன திட்டத்தின் கீழ் புனரமைப்பு செய்யப்படவுள்ள வாய்க்கால் பகுதிகளில் அமைச்சர் முத்துசாமி ஆய்வு செய்தார்.
    ஈரோடு:

    கீழ்பவானி பாசன திட்டத்தின் கீழ் புனரமைப்பு செய்யப்படவுள்ள வாய்க்கால் பகுதிகளில் அமைச்சர் முத்துசாமி ஆய்வு
    செய்தார்.

    ஈரோடு-மாவட்டம் நம்பியூர்-வட்டம் எலத்தூர் செட்டிபாளையம் முதல் கோபிசெட்டிபாளையம் வட்டம் சிறுவலூர் வரை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி  தலைமையில் அந்தியூர்  ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. முன்னிலையில் அமைச்சர் முத்துசாமி கீழ்பவானி திட்டத்தின் கீழ் புனரமைப்பு செய்யப்-படவுள்ள வாய்க்கால் பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    இந்தஆய்வின்போது அமைச்சர்முத்துசாமி கீழ்பவானிதிட்டத்தின் கீழ் நம்பியூர் வட்டத்திற்குட்பட்ட எலத்தூர் செட்டிபாளையம், கரட்டுப்பாளையம், குருமந்தூர் மற்றும் கோபி-செட்டி பாளையம் வட்டத் திற்குட்-பட்ட-கோட்டுப்-புள்ளாம்பாளையம், அயலூர், கலிங்கியம், சிறுவலூர் ஆகிய பகுதிகளின் வழியே செல்லும் கீழ்பவானி பிரதான கால் வாய் மற்றும் கிளைக்கால் வாய்களில் மேற்கொள்ளப்படவுள்ள புனரமைப்பு பணிகள் தொடர்பாக விவசாயிகள், விவசாய சங்கபிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரிடமிருந்து கருத்-துக்களைக் கேட்டறிந்-தார்.
    இதை தொடர்ந்து அமைச்சர் முத்துசாமி கூறியதாவது:-

    வாய்க்கால் தரைதளத்தில்-கான்கிரீட் அமைக்க கூடாது எனஅரசுஅறிவுறுத்துள்ளது.அதன்படிகான்கிரீட் தளம் அமைப்படாது என்பதை தெரிவித்துக் கொள்கின்-றேன். மேலும், மண்கரை வாய்க்காலில் 33 சதவீதம் கசிவுநீர் வெளியேற்றலாம் என வரையறுக்கப்பட்டுள் ளது. அதன்படி, அதற்கு அதிகமாக உள்ள கசிவுநீரை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. மேலும், அதிகமாக தண்ணீர் வீணாகும் இடங்கள், கரைகளில் உடைப்பு மற்றும் பலவீனமான பகுதிகள் ஆகிய இடங்களில் மட்டும் கான்கிரீட் பக்கவாட்டு சுவர்கள் அமைக்க நடவ-டிக்கை மேற்-கொள்ளப்-படும்.

    இந்தப் பணிகளும் விவசாயிகள் மற்றும் பொது-மக்களிடம் கருத்துகளைக் கேட்டு மேற்கூரிய பணிகள் மேற்கொள்ளப்படும். தொடர்ந்து, வாய்க்கால் முழுவதும் தூர் வாருவதற்கு நடவடிக்கை மேற்-கொள்ளப்படும். அவ்வாறு தூர்வாருகின்ற மண் விவசாயிகளின் கருத்தின்படி, அந்தந்த வாய்க்கால் கரைகளை பலப்படுத்தும் வகையில் வாய்க்கால் கரைகளில் பயன்-படுத்தப்-படும். மேலும் வாய்க்கால் கரைகளை பலவீனபடுத்துகின்ற மரங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு அந்தந்த மரங்களைஅகற்றுவதற்கும் நடவடிக்கை மேற்-கொள்ளப்--படும் என தெரிவித்தார். 

    இந்த ஆய்வுகளின் போது, கோபிசெட்டிபாளையம் ஆர்.டி.ஓ. பழனிதேவி, கீழ்பவானி வடிநிலகோட்ட செயற்பொறியாளர் கண்ணன்,  உதவிசெயற்-பொறியாளர் ஆனந்தராஜ்உமாபதி, உதவி-பொறியா-ளர்கள் சதீஷ்-குமார், அய்யன்துரை, ரமேஷ், கோபிவருவாய் வட்டாட்சியர் தியாகராஜன் உட்பட பலர் கடந்து கொண்டனர்.

    கோபிசெட்டிபாளையம் அருகே வீட்டில் 128 கிலோ புகையிலை பொருட்களை பதுக்கி வைத்த நபர் கைது செய்யபட்டார்.
    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே வீட்டில் 128 கிலோ புகையிலை பொருட்களை பதுக்கி வைத்த நபர் கைது செய்யபட்டார்.

    கோபிசெட்டிபாளையம் சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது கோபி- மொடச்சூர், பச்சைமலை செந்தில்நாதன் நகரில் ஒரு வீட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகை யிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவ-தாக தகவல் கிடைத்தது. 

    அதன்பேரில் சப்-இன்ஸ் பெக்டர் விஜயன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பொது மொடச் சூர் செந்தில்நாதன் நகரில் உள்ள ஒரு வீட்டின் முன்பு ஒரு நபர் தனது மோட்டார் சைக்கிளில் 2 மூட்டைகளை ஏற்றி கொண்டு இருந்தார்.

    அந்த மூட்டையை போலீசார்  சோதனை செய்தபோது அதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், ஹான்ஸ், பான் மசாலா ஆகியவை இருந்தன.

    அந்த நபரை பிடித்து விசாரித்த போது அவர் அதை பகுதியை சேர்ந்த சூசைமாணிக்கம் (43) என தெரியவந்தது. மேலும் வீட்டில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதையும் அவர் ஒப்பு கொண்டார்.

     தொடர்ந்து வீட்டுக்குள் சென்று சோதனை செய்த போலீசார் அப்போது வீட்டில் மூட்டை, மூட்டை யாக புகையிலை பொருட்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    மொத்தம் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 128 கிலோ புகையிலை பொருட் களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.83 ஆயிரம் இருக்கும். இது குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து சூசைமாணிக்கத்தை கைது செய்தனர்.
    ஈரோடு மாவட்டத்தில் பொதுத்தேர்வுக்கான செய்முறை தேர்வு நாளை தொடங்குகிறது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் பொதுத்தேர்வுக்கான செய்முறை தேர்வு நாளை தொடங்குகிறது.

    தமிழகத்தில் பிளஸ்-1, பிளஸ்-2 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் மே மாதம் 5-ந் தேதி முதல் 31--ந் தேதி வரை நடைபெற உள்ளது.
    ஈரோடு மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத் தேர்வினை 24,909 மாணவ-மாணவிகளும், பிளஸ்- 1 பொதுத்-தேர்-வினை 27,656 மாணவ-மாணவிகளும், 10-ம் வகுப்பு பொதுத் தேர்வினை 28,365 மாணவ- மாணவி-களும் எழுத உள்ளனர்.

    இந்நிலையில் பிளஸ்-1, பிளஸ்-2 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான அறிவியல் பாட செய்முறை தேர்வுகள் நாளை (திங்கட்கிழமை) தொடங்க உள்ளது. இதற்காக செய்முறை தேர்வு பயிற்சி வகுப்புகள் நடந்த அனைத்து பள்ளிகளிலும் பொதுத்தேர்வுக்கான செய்முறை தேர்வுக்காக மாணவ, மாணவிகள் பகுதி பகுதியாக பிரிக்கப் பட்டுள்ளனர்.

    மேலும், தனித் தேர்வர்களும் செய்முறை தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. செய்முறை தேர்வு வரும் மே மாதம் 2-ற் தேதியுடன் நிறைவடைகிறது என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    மழை காரணமாக வரத்து குறைந்ததுள்ளதால் வ.உ.சி. மார்க்கெட்டில் காய்கறி விலை உயர்ந்தது காணப்படுகிறது.
    ஈரோடு:

    மழை காரணமாக வரத்து குறைந்ததுள்ளதால் வ.உ.சி. மார்க்கெட்டில் 
    காய்கறி விலை உயர்ந்தது காணப்படுகிறது.

    ஈரோடு வ.உ.சி பூங்கா பகுதியில் நேதாஜி  பெரிய காய்கறி மார்க்கெட்  தற்காலி கமாக செயல்பட்டு வருகிறது.  இங்கு இரவு முழுவதும் மொத்த வியாபாரமும்,  பகலில் சில்லரை வியாபாரம் நடைபெற்று வருகிறது.

    ஈரோடு மாவட்டம் தாளவாடி, சத்தியமங்கலம்,  திண்டுக்கல், ஒட்டன்-சத்திரம், கிருஷ்ணகிரி,  கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங் களில் இருந்து இங்கு காய்கறிகள் அதிக அளவில் வரத்தாகி வருகிறது.

    இந்நிலையில் தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக காய்கறி விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்தும் குறைந்து உள்ளது.

    வ.உ.சி. காய்கறி மார்க் கெட்டில் இன்று வழக்-கத்தை விட காய்கறிகள் வரத்து குறைந்ததன் காரணமாக பல்வேறு காய்கறிகளின் விலை அதிரடியாக உயர்ந்-துள்ளது. 
    கடந்த வாரத்தை காட்டிலும் இந்த வாரம் ரூ. 10 முதல் ரூ.25 வரை காய்கறிகள் விலை உயர்ந்துள்ளது. 

    குறிப்பாக வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டுக்கு தினமும் 50 டன் தக்காளி வரத்தாகும். ஆனால் மழை காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்துள்ளது. இன்று கர்நாடகா ஆந்திராவில் இருந்து வெறும் 20 டன் மட்டுமே தக்காளி வரத்து ஆகி இருந்தது. 

    இதனால் இன்று ஒரு கிலோ தக்காளி ரூ.40 முதல் ரூ.50 வரை விற்பனையானது.
    கடந்த 10 நாட்களாகவே தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கிறது.  இதேபோல் மற்ற காய்கறிகளையும் சற்று அதிகரித்துள்ளது.

    இன்று விற்கப்பட்ட காய்கறிகள் விலை கிலோவில் வருமாறு:-
    கடந்த வாரத்தில் ரூ.60-க்கு விற்கப்பட்ட பீன்ஸ் இந்த வாரம் ரூ.80-க்கு விற்கப்படுகிறது. பீட்ரூட்-50, கேரட்-50, கத்திரிக்காய்-25, வெண்டைக்காய்-40, பீர்க்கங்காய்-60, பாவைக் காய்-50, முள்ளங்கி-30, முருங்கைக்காய்-40, கருப்பு அவரை-50, மிளகா-40, இஞ்சி-50,  முட்டைக் கோஸ்-25, காலிபிளவர்-15, சின்னவெங்காயம்,  பெரிய வெங்காயம்-20.
    ஈரோடு மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.இதனால் கொரோனாவுக்கு 3 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
    இதனால் கொரோனாவுக்கு 3 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தாக்கம் மார்ச் மாதம் முதல் குறைய தொடங்கி ஒற்றை இலக்கில் பதிவாகி வந்தது. இந்நிலையில் கடந்த 2-ந் தேதி கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த ஒருவரும் குணமடைந்து வீடு திரும்பினார். 

    இதனால் சுமார் 2 வருடங்களுக்கு பிறகு கொரோனா இல்லாத மாவட்டமானது ஈரோடு.
    இந்நிலையில் கிட்டத்தட்ட 15 நாட்களுக்கு பிறகு கடந்த 17-ந் தேதி ஈரோட்டில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

    அதைத் தொடர்ந்து 3 நாட்களாக யாருக்கும் பாதிப்பு ஏற்படாமல் இருந்தது. கடந்த 20&ந் தேதி மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து மறுநாள் மேலும் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 

    மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 670 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 1லட்சத்து 31 ஆயிரத்து 933 பேர் குணமடைந்துள்ளனர்.  இதுவரை சிகிச்சை பலனின்றி 734 பேர் இறந்துள்ளனர். தற்போது கொரோனா பாதிப்புடன் மாவட்டத்தில் 3 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்.
    பவானிசாகர் அணையில் இருந்து காலிங்கராயன் வாய்க்காலுக்கு தண்ணீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
    ஈரோடு:

    பவானிசாகர் அணையில் இருந்து காலிங்கராயன் வாய்க்காலுக்கு தண்ணீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு மாவட்ட மக்க ளின் முக்கிய குடிநீர் ஆதார மாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள் ளளவு கொண்ட பவானி சாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. 

    பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 47 ஆயிரம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. கடந்த சில நாட்களாகவே நீர்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து குறைந்து வருகிறது.

    மேலும் நீர்வரத்தை காட்டிலும் அணையில் இருந்து பாசனத்துக்காகவும், குடிநீருக்காகவும் அதிக அளவில் தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப் பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. 

    இந்நிலையில்   நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்ததால் இன்று பவானிசாகர் அணைக்கு 1,713 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இன்று காலை நிலவரப் படி பவானிசாகர் அணை யின் நீர்மட்டம் 81.23 அடியாக உள்ளது.  

    காலிங்க ராயன் பாசனத்திற்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்த நிலையில் காலிங்கராயன் பாசனத்திற்கு பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.  

    குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. கீழ்பவானி பாசனத்திற்காக 1,500 கன அடியும் என மொத்தம் 1,700 கனஅடி  தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
    பவானி அருகே மின்கசிவு காரணமாக வீடு தீப்பிடித்து எரிந்தது. இதில் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின.
    பவானி:

    பவானி அருகே மின்கசிவு காரணமாக வீடு தீப்பிடித்து எரிந்தது. இதில் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின.

    பவானி அடுத்த குப்பிச்சி பாளையம் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி (48). இவர் அந்த பகுதியில் ஓலை வீடு அமைத்து அதற்குமேல் தகர சீட்டுகள் போட்டுள்ளார்.  

    இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது திடீரென மின் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற் பட்டது. தொடர்ந்து வீடு தீப்பற்றி எரிய தொடங்கியது. 

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கம் இருந்தவர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து நிலைய அலுவலர் ஜான்சன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

    இதனால் வீட்டில் இருந்த பொருட்கள் மற்றும் துணி உள்பட பல்வேறு பொருட் கள் எரிந்து சாம்பலானது. இதில் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பொருள்கள் சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது.

    ×