என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    பவானிசாகர் அணையில் இருந்து காலிங்கராயன் வாய்க்காலுக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்

    பவானிசாகர் அணையில் இருந்து காலிங்கராயன் வாய்க்காலுக்கு தண்ணீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
    ஈரோடு:

    பவானிசாகர் அணையில் இருந்து காலிங்கராயன் வாய்க்காலுக்கு தண்ணீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு மாவட்ட மக்க ளின் முக்கிய குடிநீர் ஆதார மாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள் ளளவு கொண்ட பவானி சாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. 

    பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 47 ஆயிரம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. கடந்த சில நாட்களாகவே நீர்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து குறைந்து வருகிறது.

    மேலும் நீர்வரத்தை காட்டிலும் அணையில் இருந்து பாசனத்துக்காகவும், குடிநீருக்காகவும் அதிக அளவில் தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப் பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. 

    இந்நிலையில்   நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்ததால் இன்று பவானிசாகர் அணைக்கு 1,713 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இன்று காலை நிலவரப் படி பவானிசாகர் அணை யின் நீர்மட்டம் 81.23 அடியாக உள்ளது.  

    காலிங்க ராயன் பாசனத்திற்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்த நிலையில் காலிங்கராயன் பாசனத்திற்கு பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.  

    குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. கீழ்பவானி பாசனத்திற்காக 1,500 கன அடியும் என மொத்தம் 1,700 கனஅடி  தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
    Next Story
    ×