என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    வீட்டில் 128 கிலோ புகையிலை பொருட்களை பதுக்கி வைத்த நபர் கைது

    கோபிசெட்டிபாளையம் அருகே வீட்டில் 128 கிலோ புகையிலை பொருட்களை பதுக்கி வைத்த நபர் கைது செய்யபட்டார்.
    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே வீட்டில் 128 கிலோ புகையிலை பொருட்களை பதுக்கி வைத்த நபர் கைது செய்யபட்டார்.

    கோபிசெட்டிபாளையம் சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது கோபி- மொடச்சூர், பச்சைமலை செந்தில்நாதன் நகரில் ஒரு வீட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகை யிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவ-தாக தகவல் கிடைத்தது. 

    அதன்பேரில் சப்-இன்ஸ் பெக்டர் விஜயன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பொது மொடச் சூர் செந்தில்நாதன் நகரில் உள்ள ஒரு வீட்டின் முன்பு ஒரு நபர் தனது மோட்டார் சைக்கிளில் 2 மூட்டைகளை ஏற்றி கொண்டு இருந்தார்.

    அந்த மூட்டையை போலீசார்  சோதனை செய்தபோது அதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், ஹான்ஸ், பான் மசாலா ஆகியவை இருந்தன.

    அந்த நபரை பிடித்து விசாரித்த போது அவர் அதை பகுதியை சேர்ந்த சூசைமாணிக்கம் (43) என தெரியவந்தது. மேலும் வீட்டில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதையும் அவர் ஒப்பு கொண்டார்.

     தொடர்ந்து வீட்டுக்குள் சென்று சோதனை செய்த போலீசார் அப்போது வீட்டில் மூட்டை, மூட்டை யாக புகையிலை பொருட்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    மொத்தம் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 128 கிலோ புகையிலை பொருட் களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.83 ஆயிரம் இருக்கும். இது குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து சூசைமாணிக்கத்தை கைது செய்தனர்.
    Next Story
    ×