என் மலர்tooltip icon

    ஈரோடு

    ரம்ஜான் பண்டிகையையொட்டி ஈரோடு ஜவுளி சந்தை களைகட்டியது. இதனால் சில்லரை வியாபாரம் 60 சதவீதம் நடந்தது.
    ஈரோடு:

    ரம்ஜான் பண்டிகையையொட்டி ஈரோடு ஜவுளி சந்தை களைகட்டியது. இதனால் சில்லரை வியாபாரம் 60 சதவீதம் நடந்தது.

    ஈரோடு ஜவுளி சந்தையானது வாரந்தோறும் செவ்வாய்கிழமை நடை பெறுவது வழக்கமாகும். இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கு பிறகு கடந்த சில வாரங்களாக வியாபாரம் மிகவும் மந்த நிலையில் இருந்து வந்தது.

    குறிப்பாக நூல் விலை உயர்வு காரணமாக மொத்த வியாபாரம் முற்றிலும் இல்லாமல் இருந்து வந்த நிலையில், ரம்ஜான் பண்டிகையையொட்டி இன்று நடைபெற்ற ஜவுளி சந்தையானது களை கட்டி காணப்பட்டது.

    குறிப்பாக கேரளா, ஆந்திரா, கர்நாடக போன்ற வெளி மாநிலங்களை சேர்ந்த மொத்த வியா பாரிகள் அதிக அளவில் ஜவுளி சந்தைக்கு வந்து ஜவுளிகளை கொள்முதல் செய்தனர். இதே போல சில்லரை விற்பனையும் அமோகமாக நடை பெற்றதாக வியாபாரிகள் கூறினர். 

    இது குறித்து ஜவுளி வியாபாரிகள் சங்க நிர்வாகி செல்வராஜ் கூறியதாவது:-
     ரம்ஜான் பண்டிகையை யொட்டி இந்தவாரம் ஜவுளி சந்தையில் மொத்த மற்றும் சில்லரை வியாபாரம் அமோகமாக நடைபெற்றது. பல வாரங்களுக்கு பிறகு கேரளா, ஆந்திராவில் இருந்து மொத்த வியாபாரிகள் வந்திருந்தனர்.

     சேலை, வேட்டி, லுங்கி, ஜரிகை வேலைபாடுகள் கொண்ட சுடிதார்கள் அதிக அளவில் விற்பனையானது. தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் அதிகமாக வந்திருந்தனர். உள்ளூர் பொதுமக்களின் வருகையும் வழக்கத்தை விட அதிக மாகவே காணப்பட்டது. 

    மொத்த வியாபாரம் 40 சதவீதத்திற்கு மேலும், சில்லரை வியாபாரம் 60 சதவீதம் அளவிலும் நடந்தது என்றார்.
    ஈரோட்டில் 28-ந் தேதி பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் என கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
    ஈரோடு:

    ஈரோட்டில் 28-ந் தேதி பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் என கலெக்டர் கிருஷ்ணனுண்ணி  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


    ஈரோடு மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தின் கீழ் 12 முதல் 14 வயது உடைய மாணவர்-களுக்கு முதல் தவணையாக 44,710 தடுப்பூசிகளும், 2&வது தவணையாக 13,268 தடுப்பூசிகளும் செலுத்தப்-பட்டுள்ளன. 15 முதல் 18 வயதுடைய பள்ளி மாணவர்-களுக்கு முதல் தவணையாக 89,373 தடுப்பூசிகளும், 2-வது தவணையாக 77,321 தடுப்புகளும்  செலுத்தப்-பட்டுள்ளன.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் வரும் 28ஆம் தேதி (வியாழக்கிழமை) பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தும் முகாம் நடைபெற உள்ளது.  

    இதில் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய பள்ளி மாணவர்களுக்கும் ,துவரை தடுப்பூசி செலுத்-தப்படாத மாணவர்களுக்கும் அந்தந்த பள்ளிகளில் பொது சுகாதாரத் துறை மூலமாக தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. 

    எனவே ஈரோடு மாவட்டத்தில் 12 முதல் 14 வயது உடையவர்களுக்கும், 15 முதல் 18 வயதுடைய உடையவர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொரோனா தடுப்பூசியை தவறாமல் செலுத்தி தாங்கள் ,ன்னுயிரை பாதுகாப்புடன் கொரோனா 4-ம் அலை  பரவலை தடுக்க ஒத்துழைக்க வேண்டும்.

    இந்த தகவலை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
    கோபிசெட்டிபாளையம் அருகே வாய்க்காலில் மிதந்து வந்த ஆண் பிணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    -கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே வாய்க்காலில் மிதந்து வந்த ஆண் பிணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கூகலூர் கீழ் பவானி கிளை வாய்க்காலில் ஒரு ஆண் பிணம் மிதந்து வந்தது. அந்த வழியாக வந்த பொதுமக்கள் இதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து கோபிசெட்டி பாளையம் போலீஸ் நிலை யத்துக்கு தகவவல் கொடுத் தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிணத்தை கைப்பற்றி கோபி செட்டி பாளையம் அரசு ஆஸ்பத் திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் இறந்த வரின் குறித்த புகைப்படம் வாட்ஸ்-அப் போன்ற சமூக வலை தளங்களில் பரவியது.  இந்த புகைப்படத்தை செல்போனில் பார்த்து அதிர்ச்சி அடைந்த கோபி அடுத்த நாகதேவன்பாளை யம் பகுதியை சேர்ந்த என்பவர் இறந்தது தனது தந்தை பழனிசாமி என தெரிந்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவரது உற வினர்களின் செல்போனி லும் தகவல் வந்தது. 
    இதையடுத்து கோபி போலீஸ் நிலையத்துக்கு சென்ற வெங்கடாசலம் இறந்தது தனது தந்தை என தகவல் தெரிவித்தார்.

    போலீசார் விசாரணை யில் அவர் கோபி அடுத்த நாகதேவன் பாளையம் பகுதியை சேர்ந்த பழனிசாமி (55). எலக்ரீசியன் என்றும்,  நேற்று முன்தினம் வேலைக்கு சென்றவர் வாய்க்காலில் தவறி விழுந்ததும் தெரிய வந்தது.

    இது குறித்து கோபிசெட்டி பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.
    ஈரோடு மாவட்டத்தில் கொரோனா முதல் தவணை தடுப்பூசியை இன்னும் 1.75 லட்சம் பேர் செலுத்தவில்லை என சுகாதாரத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கொரோனா முதல் தவணை தடுப்பூசியை இன்னும்  1.75 லட்சம் பேர் செலுத்தவில்லை என சுகாதாரத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

    உலகை ஆட்டிப்படைத்து வரும் கொரோனா  தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்தியாவிலும் தடுப்பூசி போடும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.

    தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் கோவேக்சீன், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள்  போடும் பணி தொடங்கி நடந்து வருகிறது. முதலில் முன் களப்பணி யாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதனைத் தொடர்ந்து 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வந்தது.

    கோவேக்சீன்  தடுப்பூசி முதல் தவணை செலுத்தி யவர்கள் 28 நாட்கள் கழித்து  2-ம் தவணை தடுப்பூசி செலுத்தி  கொள்ள அறிவுறுத்தப்பட்டனர்.  இதேப்போல் கோவிஷீல்டு   முதல் தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள்  84 நாட்கள் கழித்து  2-ம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ள அறிவுறுத்தப் பட்டனர்.

    தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தி கொள்ள பொது மக்களிடம் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் சுகாதாரத்துறையினர் சார்பில்  வாரவாரம் சனிக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு அதன் மூலமும் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வந்தது.

    ஈரோடு மாவட்டத்தில் இதுவரை முதல் தவணை தடுப்பூசியை 16 லட்சத்து 34 ஆயிரத்து 340 பேர்  செலுத்தி கொண்டு உள்ளனர். இது 90.32 சதவீதம் ஆகும்.  2&ம் தவணை தடுப்பூசியை மாவட்டத்தில் இதுவரை 13 லட்சத்து 11 ஆயிரத்து 320 பேர்  தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். இது 72 சதவீதம் ஆகும்.

    மாவட்டத்தில் இதுவரை  முதல் தவணை தடுப்பூசியை 1 லட்சத்து 75 ஆயிரத்து 59 பேர்  செலுத்தி கொள்ள வில்லை என்றும், 2-ம் தவணை தடுப்பூசியை  3 லட்சத்து 39 ஆயிரத்து 903 செலுத்திக் கொள்ளவில்லை என்றும் சுகாதாரத்துறை யினர் தெரிவித்துள்ளனர். 

    மேலும் இதுவரை தடுப்பூசி போட்டு கொள்ளா தவர்கள் உடனடியாக அருகில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையம்,  அல்லது அரசு மருத்துவமனையில் சென்று செலுத்திக் கொள்ளலாம்  எனவும் சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.
    நீலகிரி மலைப்பகுதியில் பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
    ஈரோடு:

    நீலகிரி மலைப்பகுதியில் பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 47 ஆயிரம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. 

    கடந்த சில நாட்களாகவே நீர்பிடிப்பு பகுதியில் மழைப்-பொழிவு இல்லாததால் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து குறைந்து வருகிறது. மேலும் நீர்வரத்தை காட்டிலும் அணையில் இருந்து பாசனத்-துக்காகவும், குடிநீருக்காகவும் அதிக அளவில் தண்ணீர் தொடர்ந்து வெளியேற்-றப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. 

    இந்நிலையில் நீலகிரி மலைப்பகுதியில் பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் இன்று பவானிசாகர் அணைக்கு 2 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 80.79 அடியாக உள்ளது. குடிநீருக்-காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. கீழ்-பவானி பாசனத்திற்காக 1, 800 கன அடியும் என மொத்தம் 2 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்-றப்பட்டு வருகிறது.

    கொடுமுடி அருகே செல்வ விநாயகர் கோவில் கும்பாபிசேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    கொடுமுடி:

    கொடுமுடி அருகே செல்வ விநாயகர் கோவில் கும்பாபிசேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


    கொடுமுடி அருகே சத்திரப்-பட்டியில் உள்ள ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ பாப்பாத்-தாள், ஸ்ரீ கன்னிமார், ஸ்ரீ கருப்பண்ண சுவாமி கோவில் கும்பா பிசேக விழா (நடைபெற்றது. கும்பாபிசேக விழா கடந்த 24-ந் தேதி காலை விக்னேஸ் வர பூஜை, ஸ்ரீ கணபதி, மகாலட்சுமி, ஸ்ரீநவக்கிரக யாகம், தீபாராதனையுடன் தொடங்கியது. 

    பின்னர் பக்தர்கள் காவேரி ஆற்றுக்கு சென்று தீர்த்தம் கொண்டு வந்தனர். தொடர்ந்து விமான கலசம், சுவாமியந்திர, அஷ்டபந்தன பிரதிஷ்டை நடைபெற்றது. மாலை வாஸ்துசாந்தி, முளைப்பாலிகை அழைத் தல் நிகழ்ச்சியும், முதல் கால யாக வேள்வி தொடங்கி நடைபெற்றது.

    நேற்று காலை 2-ம் கால யாகமும், நாடி சந்தனம், பூர்ணா ஹீதி, மகா தீபாராதனை நடைபெற்றது. தெடர்ந்த மகா கும்பாபி சேகம் தச தரிசனம், தீபாராத னையும், பிரசாதம் வழங்கல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. 

    ஏராளமான பக்தர்கள் கும்பாபிசேக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து காலை முதல் மதியம் வரை அன்னதானம் நடைபெற்றது.
    பால் கொள்முதல் விலையை உயர்த்த வலியுறுத்தி மே மாதம் பால் நிறுத்த போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
    ஈரோடு:

    பால் கொள்முதல் விலையை உயர்த்த வலியுறுத்தி மே மாதம் பால் நிறுத்த போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநில தலைவர் ஏ.எம்.முனுசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். 

    அப்போது அவர் கூறியதாவது:-
    பாலுக்கு கொள்முதல் விலை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தி, பசும்பாலுக்கு 42 ரூபாய், எருமை பாலுக்கு 51 ரூபாய் என அறிவிக்க வேண்டும். கடந்த 2019&ல் அப்போதைய அரசு பால் கொள்முதல் விலையை அறிவித்தது.

    அதன்பின் கொள்முதல் விலை உயர்த்தவில்லை. ஆனால் ஆவின் தீவனம் 50 கிலோ மூட்டை 840&ல் இருந்து 1,040 ரூபாயானது. இதர தீவனங்கள் 50 சதவீதம் உயர்ந்துள்ளது. தனியார் பால் கொள்முதல் நிறுவனங் கள் லிட்டருக்கு 5 ரூபாய் கூடுதல் விலை கொடுத்து கொள்முதல் செய்கிறது.

    பாலுக்கு கொள்முதல் விலையை 10 ரூபாய் உயர்த்தாவிட்டால் ஆவின் பால் கொள்முதல் உயராது. தமிழகத்தில் தினமும் 2 கோடி லிட்டர் பால் உற்பத்தியாகும் நிலையில் ஒரு கோடி லிட்டர் அளவு ஆவின் கொள்முதல் செய்ய கட்டமைப்பை ஏற்படுத்தி, வாங்க வேண்டும்.

    ஆவின் பால் ஒரு லிட்டர் விற்பனைக்கு 1.57 ரூபாய் முதல் 3 ரூபாய் மட்டுமே கமிஷன் தருகிறது. 10 ஆண்டாக இத்தொகை உயரவில்லை. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, பால் கறந்து பெறும் சொசை ட்டிகளிலேயே பாலின் அளவு, தரம், கொழுப்பு உள்ளிட்ட சத்துக்களின் அளவை குறித்து வழங்க வேண்டும்.

    சத்துணவில் குழந்தை களுக்கு தினமும் ஆவின் பால் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  உரிய காலங்களில் மாடுகளுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும்.

    இக்கோரிக்கைகளை வலியுறுத்த மே மாதம் பால் நிறுத்த போராட்டம் நடத்த திட்டமிட்டு, பிரசாரம் செய்கிறோம். போராட்ட தேதி ஓரிரு நாளில் அறிவிக்கப்படும்.
    இவ்வாறு அவர் கூறினார்.
    நடுரோட்டில் யானை நிற்பதை பார்த்த 108 ஆம்புலன்சு ஊழியர்கள் வாகனத்தை நிறுத்தினர். யானையும் நகராமல் சாலையின் நடுவே தொடர்ந்து நின்று கொண்டிருந்தது. சுமார் அரை மணி நேரம் நின்ற காட்டு யானை பின்னர் காட்டுக்குள் சென்றது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதி மயானம் அருகே பர்கூர்- அந்தியூர் பிரதான சாலையில் ஒற்றை காட்டு யானை சாலையில் நின்று அங்கிருந்த மூங்கில் தூர்களை முறித்து தின்று கொண்டிருந்தது.

    அப்போது பர்கூரிலிருந்து 108 ஆம்புலன்சு எலச்சிபாளையம் மலை கிராமத்திற்கு நிறைமாத கர்ப்பிணியை பிரசவத்திற்காக அழைத்துவர சென்றது.

    நடுரோட்டில் யானை நிற்பதை பார்த்த 108 ஆம்புலன்சு ஊழியர்கள் வாகனத்தை நிறுத்தினர். யானையும் நகராமல் சாலையின் நடுவே தொடர்ந்து நின்று கொண்டிருந்தது. சுமார் அரை மணி நேரம் நின்ற காட்டு யானை பின்னர் காட்டுக்குள் சென்றது.

    அதன் பின்னரே ஆம்புலன்சு டிரைவர் வண்டி அங்கிருந்து எடுத்து கர்ப்பிணியை மீட்டு பர்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு வந்து அனுமதித்தார். யானைகள் உணவு தண்ணீர் தேடி சாலையோரம் அடிக்கடி வருவதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என்றும், யானை அருகில் சென்று புகைப்படம் எடுப்பது போன்ற செயலில் ஈடுபடக்கூடாது எனவும் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

    புஞ்சை புளியம்பட்டியில் கஞ்சா விற்பனை செய்த வடமாநில தம்பதி கைது செய்யபட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
    பு.புளியம்பட்டி:

    புஞ்சை புளியம்பட்டியில் கஞ்சா விற்பனை செய்த வடமாநில தம்பதி கைது செய்யபட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    புஞ்சைபுளியம்பட்டி பனையம்பள்ளி பகுதியில் கஞ்சா விற்பனை நடை-பெறுவதாக புஞ்சைபுளி-யம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி தலைமையிலான போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். 

    அப்போது அங்குள்ள தனியார் நூற்பாலையில் பணிபுரிந்து வரும் அசாம் மாநிலத்தை சேர்ந்த அஷ்ரப் அலி(26)  அவரது மனைவி ஜூலைக்கான்கத் தூண்(22) ஆகியோர் பனையம்-பள்ளியில் இருந்து தேசி-பாளையம் செல்லும் ரோட்டில் கஞ்சா  விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து  அவர்கள் விற்பனைக்காக வைத்து இருந்த 2 கிலோ கஞ்சா பொட்டலங்களை  பறிமுதல் செய்தனர். பின்னர் சத்தியமங்கலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவர்களை சிறையில் அடைத்தனர்.

    டி.என்.பாளையம் அருகேயுள்ள கே.என்.பாளையம் செல்லி-பாளை--யத்தை சேர்ந்தவர் குமாரசாமி (51), இவர் அதே பகு-தியில் உரக்-கடை நடத்தி வரு-கிறார்.
    டி.என்.பாளையம்: 

    டி.என்.பாளையம் அருகே உரக்கடையில் ரூ.25 ஆயிரம் திருடிய தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

    டி.என்.பாளையம் அருகேயுள்ள கே.என்.பாளையம் செல்லி-பாளை--யத்தை சேர்ந்தவர் குமாரசாமி (51), இவர் அதே பகு-தியில் உரக்-கடை நடத்தி வரு-கிறார்.

    இங்கு கணக்காளராக அதே பகுதியை சேர்ந்த கவிதா என்பவர் பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று கவிதா வரவு, செலவு கணக்கை பார்த்துவிட்டு, ரூ.25 ஆயிரத்தை கடையில் இருந்த பெட்டியில் வைத்து பூட்டி விட்டு சாப்பிடுவதற்காக சென்றார்.

    பின்னர் வந்து பார்த்த போது பெட்டியில் பணம் இல்லாததை கண்டு அதிர்ச்சி-யான குமாரசாமி, கடையில் வேலை செய்து வரும் கே.என்.பாளையம் பகுதியை சேர்-ந்த சின்னுச்-சாமி (30) என்-பவர் மீது கடையில் இருந்த ரூ.25 ஆயிரத்தை திருடியதாக பங்களாப்-புதூர் போலீசில்  புகார் கொடுத்-தார்.

    புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசார-ணையில் கூலித்தொழிலாளி சின்னசாமி திருடிய பணத்தில் 2 ஆயிரத்தை செலவு செய்து விட்டதாக, ஒப்புக்கொண்டார். இதனை-யடுத்து போலீசார் சின்ன-சாமியை கைது செய்து, அவரிடம் இருந்து ரூ.23 ஆயிரத்தை மீட்டு குமாரசாமியிடம் ஒப்படைத்தனர்.

    சூரம்பட்டியில் வீட்டில் தீ பிடித்து மின்சாதன பொருட்கள் எரிந்து சேதமடைந்தது. இந்த சம்பவம் குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள.
    ஈரோடு:

    சூரம்பட்டியில்  வீட்டில் தீ பிடித்து மின்சாதன பொருட்கள் எரிந்து சேதமடைந்தது. இந்த சம்பவம் குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள.

    சூரம்பட்டி முத்துக்-குமாரசாமி வீதியை சேர்ந்தவர் ஆனந்த். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று அவர் வெளியூர் சென்று இருந்தார். 

    இதனால் அவருடைய தாய் பாக்கியலட்சுமி மட்டும் வீட்டில் இருந்தார். இந்நிலையில் இரவு அவரது வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு புகை வெளி-யேறியது. 
    இதனால் பாக்கியலட்சுமி அலறியடித்துக்கொண்டு வீட்டில் இருந்து வெளியேறி உயிர் தப்பினார். மேலும் அக்கம் பக்கத்தினர் திரண்டனர். 

    இதுகுறித்து அவர்கள் ஈரோடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு படை வீரர்கள் அங்கு சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். 

    இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த கட்டில் மற்றும் டி.வி., மின்விசிறிகள், பிரிட்ஜ் உள்பட பல்வேறு பொருட்கள் எரிந்து சேதமானது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக  கூறப்படுகிறது. 

    இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தொட்டகோம்பை மலை பகுதியில் பகுதி நேர ரேசன் கடை அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
    டி.என்.பாளையம்:

    தொட்டகோம்பை மலை பகுதியில் பகுதி நேர ரேசன் கடை அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

    டிஎன்.பாளையம் ஒன்றியம் பெருமுகை ஊராட்சியில் வசிக்கும் தொட்டகோம்பை பகுதி மலைவாழ் மக்களின் நீண்டகால கோரிக்கையான கரும்பாறை பகுதியில் பகுதிநேர ரேசன் கடையை அந்தியூர் எம்.எல்.ஏ. ஏ.ஜி.வெங்கடாசலம் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

     அதனை தொடர்ந்து கணக்கம்பாளையம் தனியார் மண்டபத்தில் கலைஞர் அறக்கட்டளை சார்பில் இலவச டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்து மாணவ-மாணவிகளுக்கு கையேடு--களை வழங்கினார். 

    நிகழ்ச்-சியில் ஒன்றிய பொறுப்பாளர் எம்.சிவ-பாலன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் நவமணி கந்தசாமி, மாவட்ட அவைத்-தலைவர் பெருமாள்-சாமி, டி.என்.பி.எஸ்.சி. பயிற்சியாளர் கிருபாகரன், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ×