என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
ஈரோட்டில் 28-ந் தேதி பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்
ஈரோட்டில் 28-ந் தேதி பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் என கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
ஈரோடு:
ஈரோட்டில் 28-ந் தேதி பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் என கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தின் கீழ் 12 முதல் 14 வயது உடைய மாணவர்-களுக்கு முதல் தவணையாக 44,710 தடுப்பூசிகளும், 2&வது தவணையாக 13,268 தடுப்பூசிகளும் செலுத்தப்-பட்டுள்ளன. 15 முதல் 18 வயதுடைய பள்ளி மாணவர்-களுக்கு முதல் தவணையாக 89,373 தடுப்பூசிகளும், 2-வது தவணையாக 77,321 தடுப்புகளும் செலுத்தப்-பட்டுள்ளன.
இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் வரும் 28ஆம் தேதி (வியாழக்கிழமை) பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தும் முகாம் நடைபெற உள்ளது.
இதில் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய பள்ளி மாணவர்களுக்கும் ,துவரை தடுப்பூசி செலுத்-தப்படாத மாணவர்களுக்கும் அந்தந்த பள்ளிகளில் பொது சுகாதாரத் துறை மூலமாக தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.
எனவே ஈரோடு மாவட்டத்தில் 12 முதல் 14 வயது உடையவர்களுக்கும், 15 முதல் 18 வயதுடைய உடையவர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொரோனா தடுப்பூசியை தவறாமல் செலுத்தி தாங்கள் ,ன்னுயிரை பாதுகாப்புடன் கொரோனா 4-ம் அலை பரவலை தடுக்க ஒத்துழைக்க வேண்டும்.
இந்த தகவலை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Next Story






