என் மலர்tooltip icon

    ஈரோடு

    அம்மாபேட்டை அருகே முதியவரை தாக்கிய ஆரம்ப சுகாதார நிலைய டிரைவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
    அம்மாபேட்டை:

    அம்மாபேட்டை அருகே முதியவரை தாக்கிய ஆரம்ப சுகாதார நிலைய டிரைவர்  கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    அம்மாபேட்டை அருகே உள்ள முகாசிபுதூர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (32). இவர் கோபிசெட்டிபாளைம் அருகே உள்ள கூகலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.

    சம்பவத்தன்று சதீஷ் பூனாச்சி பஸ் நிறுத்தம் அருகில் உள்ள ஒரு பேக்கரிக்கு சென்று சில்லி சிக்கன் கேட்டுள்ளார். அப்போது சில்லி சிக்கன் தர தாமதம் ஆனதால் கடைக்காரரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

    அப்போது அருகே இருந்த மயில்சாமி (60) என்ற முதியவர் சதீஷிடம் எதற்காக இவ்வாறு தகராறு செய்கிறாய் என கேட்டுள்ளார். அதற்கு சதீஷ் மயில்சாமியை தகாத வார்த்தைகளால் திட்டி, அங்கிருந்த கல்லை எடுத்து தாக்கியதில் மயில்சாமியின் மண்டை உடைந்தது.

    உடனே மயில்சாமியை அங்கிருந்தவர்கள் மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதனையடுத்து மயில்சாமி அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சதீசை  கைது செய்து பவானி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    பர்கூர் மலைகிராமங்களில் புதிதாக கட்டப்பட்ட 22 தடுப்பணைகள் நிரம்பி வழிகிறது. நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    ஈரோடு:

    பர்கூர் மலைகிராமங்களில் புதிதாக கட்டப்பட்ட 22 தடுப்பணைகள் நிரம்பி வழிகிறது. நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


    அந்தியூர் அருகே மழை மேகங்கள் தவழும் பர்கூர் மலை உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 1050 மீட்டர் உயரத்தில் அமைந்து ள்ளது. இங்குள்ள 34 கிராமங்களில் ஏறத்தாழ 18 ஆயிரம் மக்கள் வசிக்கின் றனர்.

    இங்கு மானாவரி சாகுபடியாக கம்பு, சோளம், கேழ்வரகு அதிகம் பயிரிடப்படுகின்றன. சமவெளிப்பகுதியை விட கூடுதலாக மழைப்பொழிவு இருந்தாலும், பூலோக அமைப்பில் நீர்த்தேக்க வசதிகள் இல்லாததால் மழை நீர் சிற்றோடைகளில் பெருக்கெடுத்து வடிந்து விடும்.

    இதற்காக ஆய்வு மேற்கொண்ட மாவட்ட நிர்வாகம், பெஜலட்டி, கல்வாரை, கடையரெட்டி, பெஜிலிப்பாளையம், தொல்லி, செங்குளம் உள்பட 22 இடங்களில் தடுப் பணைகளை கட்டி தண்-ணீரை தேக்க திட்ட மிட்டது.

    இதற்காக சுமார் ரூ. 2.50 கோடி மதிப்பிலான திட்ட பணிகளுக்கு கடந்த ஜனவரி மாதம் முதல்& அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் மலை கிராம மக்களை கொண்டு பணிகள் மேற்கொள்ளப் பட்டன.

    இவற்றில் 15 தடுப் பணைகள் முழுவதுமாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மற்றவை 90 சதவீதம் பணிகள் முடிவடையும் நிலையிலும் உள்ளன. 5 அடி முதல் 15 அடி வரை உயரம் கொண்ட இந்த தடுப்பணைகள் தற்போது கோடையிலும் தண்ணீர் நிறைந்து காணப்படுகின்றன. இதனால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்திருப்பதுடன் அருகில் உள்ள நிலங்களில் கோடையிலும் பயிர் சாகுபடி செய்ய ஏற்ற சூழல் இருப்பதாக மலைகிராம மக்கள் தெரிவித்தனர்.

    ஒவ்வொரு தடுப்பணைக்கும் தலா 50 ஏக்கர் வீதம் 22 தடுப்ப ணைகள் மூலம் குறைந்த பட்சம் ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பயன்பெறும் என்றும், கால்நடைகள் மற்றும் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய இயலும் என்றும் மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். 

    முதல்கட்டமாக தற்பொழுது கட்டப்பட்ட 22 தடுப்பணைகளை போலவே இன்னும் வாய்ப்புள்ள இடங்களில் கூடுதலாக தடுப் பணைகள் கட்டித்தரவும் கோரிக்கை விடுத்தனர்.
    இதுகுறித்து கல்வாரை, தேவர்மலை பகுதியை சேர்ந்த விவசாயிகள்  கூறியதாவது:-

    பருவ காலங்களில் பெய்யும் மழை நீரை நம்பி பயிர் சாகுபடி செய்வதும், மற்ற காலங்களில் மாற்று வேலை தேடி சமவெளி பகுதிக்கு செல்வதும் மலை கிராம மக்களின் வழக்கம். 

    கடின உழைப்பாளிகளான மலைவாழ் மக்களுக்கு போதுமான நீராதாரத்தையும் பயிர் சாகுபடிக்கான சூழலையும் உருவாக்கும் போது இவர்களின் வாழ்க் கையும், பொருளாதாரமும் நிச்சயம் மேம்படும் என்பது உறுதி. இவ்வாறு அவர்கள் கூறினர்.
    கடம்பூர் மலைப்பகுதியில் கூடுதலாக வங்கி வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என மலைகிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
    ஈரோடு:

    கடம்பூர் மலைப்பகுதியில் கூடுதலாக வங்கி வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என  மலைகிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    சத்தியமங்கலம் அடுத்த கடம்பூரில் தேசிய மயமாக்கப் பட்ட வங்கியின் கிளை செயல்பட்டு வருகிறது.

    இந்த வங்கியில் கடம்பூர், குன்றி, மாக்கம்பாளையம், பசுவானபுரம், போட்ட மாளம் உள்ளிட்ட 150&க்கும் மேற்பட்ட மலை கிராம மக்கள் 5 ஆயிரத் துக்கும் மேற்பட்டோர் கணக்கு வைத்துள்ளனர்.

    கடம்பூர் மலைப்பகுதி வட்டாரத்தில் இந்த ஒரே ஒரு வங்கி கிளை மட்டுமே செயல்பட்டு வருகிறது. இதனால் கடம்பூரில் உள்ள இந்த வங்கி கிளையில் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். கணக்கு வைத்திருப்போர் நீண்ட வரிசையில் நின்று செல்வதால் அவதியடைந்து வருகின்றனர்.
    இதுகுறித்து மலைகிராம மக்கள் கூறியதாவது:&

    கடம்பூர் மலைப்பகுதி வட்டாரத்தில் ஒரே ஒரு வங்கி மட்டுமே இருப்பதால் நாங்கள் (மக்கள்) நீண்ட வரிசையில் நின்று பணம் எடுக்கவும், பணம் செலுத் தவும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகிறோம்.

    இதில் பலர் 29 கிலோ மீட்டர் தூரமுள்ள சத்தியமங் கலம், இன்னும் சிலர் 22 கிலோமீட்டர் தூரமுள்ள கே.என். பாளையம் ஆகிய பகுதிகளுக்கு சென்று வங்கிகளில் கணக்கு வைத்து வரவு செலவு செய்து வருகின்றனர். எனவே கடம்பூர் மலைப்பகுதியில் கூடுதலாக வங்கி கிளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    கடத்தூர் அருகே கிராவல் மண் கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    ஈரோடு:

    கடத்தூர் அருகே கிராவல் மண் கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

    கோபிசெட்டிபாளையம் அடுத்த கரட்டுப்புதூர்-கக்ரா குட்டை சாலையில் கடத்தூர் போலீசார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் சபரிவாசன் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். 

    அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அதில் 3 யூனிட் கிராவல் மண் அனுமதியின்றி கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. 

    லாரியில் இருந்த 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த வெங்கடாசலம் , அரவிந்த், இளையராஜா ஆகியோர் என தெரிய வந்தது. 

    இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். மேலும் மணல் கடத்த பயன்படுத்திய டிப்பர் லாரி மற்றும் பொக்லைன் எந்திரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு அருகே பணம் வைத்து சூதாடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
    ஈரோடு:

    ஈரோடு அருகே பணம் வைத்து சூதாடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
     
    பங்களாபுதூர் போலீசார் வேட்டுவன்புதூர் பகுதியில் ரோந்து சென்றனர்.

     அப்போது அப்பகுதியை சேர்ந்த ஒருவரது வீட்டில் பணம் வைத்து சூதாட்டம் விளையாடி வருவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. 

    இதன் பேரில் அங்கு விரைந்து சென்ற போலீசார் பணம் வைத்து சூதாடி  வந்த வீட்டின் உரிமையாளரான ஏளூர் வேட்டுவன்புதூரை சேர்ந்த குமாரசாமி (62), கொடிவேரி நடுப்பாளையத்தை சேர்ந்த செந்தில் (38), ரஞ்சித்குமார் (28), முருகேசன் (37) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். 

    மேலும் அவர்களிடம் இருந்து சீட்டு கட்டினையும், ரூ.30ஆயிரத்து 150 ரொக்கத்தையும் பறிமுதல் செய்தனர்.
    கவுந்தப்பாடி அருகே மகனை அடித்து கொன்ற தந்தை கைது செய்யபட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
    ஈரோடு:

    கவுந்தப்பாடி அருகே மகனை அடித்து கொன்ற தந்தை கைது செய்யபட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    கவுந்தப்பாடி அருகே உள்ள திங்களூர் நிச்சாம் பாளையம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த வர் காளியப்பன் (வயது 26). இவரது மகன் பெரியசாமி (42). இவருக்கு இன்னும் திருமணமாக வில்லை. 

    இந்த நிலையில் கடந்த 19&ந் தேதி வீட்டில் இருந்த பெரியசாமியை காணவில்லை. இது குறித்து காளியப்பன் திங்களூர் போலீசில் தனது மகனை காணவில்லை. அவரை கண்டு பிடித்து தர வேண்டும்  என புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு பெரிய சாமி வீடு அருகே கீழ்பவானி வாய்க்காலில் ஒரு சாக்கு மூட்டை மிதந்து கொண்டு இருந்தது. மேலும் அதில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திங்களூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

    இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அந்த சாக்கு மூட்டையை பிரித்து பார்த்தனர். அதில் அழுகிய நிலையில் ஆண் பிணம் கிடந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந் தனர்.

    தொடர்ந்து போலீசார் அது காணாமல் போன பெரியசாமியாக இருக்கலாம் என கருதி அவரது தந்தை காளியப்பனிடம் அடை யாளம் காட்டுமாறு கூறினர். அவர் பிணத்தை பார்த்து தனது மகன் பெரியசாமி தான் என கூறினார். இதை யடுத்து போலீசார் பிணத்தை கைப்பற்றி பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதையடுத்து காளியப்பன் மீது சந்தேகம் அடைந்த வாய்க்காலில் வீசியதை ஒப்பு கொண்டார்.
    தொடர்ந்து அவர் போலீசில் அளித்த பரபரப்பு வாக்குமூலத்தில் கூறியிருப் பதாவது:-

    பெரியசாமி என்னிடம் தோட்டத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க ரூ.1 லட்சம் பணம் கேட்டார். ஆனால் நான் பணம் கொடுக்க மறுத்து விட்டேன். அப்போது பெரியசாமி சென்று விட் டார். அன்று இரவு பெரிய சாமி மீண்டும் வந்து பணம் கேட்டார். இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த பெரியசாமி கடப்பாரை எடுத்து என்னை அடிக்க முயன்றார். இதை தடுத்து அவரிடம் இருந்த கடப் பாரையை பிடுங்கி அவரை அடித்தேன். மேலும் அருகே இருந்த உருட்டு கட்டையை எடுத்து தாக்கினேன். இதில் அவர் இறந்து விட்டார்.

    இதையடுத்து அவரது பிணத்தை சாக்கு மூட்டையில் கட்டி கீழ்பவானி வாய்க் காலில் வீசி விட்டு வந்து விட்டேன். தற்போது போலீ சார் உண்மையை கண்டு பிடித்து விட்டனர்.
    இவ்வாறு அவர் கூறி னார்.

    இது குறித்து திங்களூர் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து காளியப்பனை கைது செய்தனர்.

    பின்னர் காளியப்பனை பெருந்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி அவரை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதை யடுத்து காளியப்பன் பெருந்துறை சிறையில் அடைக்கப்பட்டார்.
    அம்மாபேட்டை அருகே உள்ள கோனேரிப்பட்டி கதவணை மின்நிலையம் பராமரிப்பு பணி காரணமாக காவிரி பாறை திட்டுகளாக காட்சி அளிக்கிறது.

    அம்மாபேட்டை:

    அம்மாபேட்டை அருகே உள்ள கோனேரிப்பட்டி கதவணை மின்நிலையம் பராமரிப்பு பணி காரணமாக காவிரி பாறை திட்டுகளாக காட்சி அளிக்கிறது.

    மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறந்துவிடப்படும் தண்ணீர் செக்கானூர், நெருஞ்சிப்பேட்டை  கோனேரிப்பட்டி ஊராட்சிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளை கடந்து திருச்சி, தஞ்சாவூர் வரை செல்கிறது.

    அம்மாபேட்டை அடுத்து உள்ள கோனேரிபட்டி  நீர் மின் தேக்க கதவணையில் தண்ணீரில் இருந்து தலா 15 மெகாவாட் என 2 எந்திரங்களைக் கொண்டு மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. மேலும் காவிரியில் அதிகப்படியான தண்ணீர் செல்லும் போது 20 மெகாவாட் வரையிலும் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

    இந்நிலையில் ஆண்டுதோறும் நீர்மின் தேக்க கதவணை பகுதிகளில்  ஏப்ரல் ,மே ,மாதங்களில் நீர்மின் தேக்க கதவணை பகுதிகளில் தேக்கி வைக்கப்பட்ட தண்ணீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டு பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம்.

    கடந்த 26 நாட்களுக்கு முன்பு பவானி அருகே ஊராட்சிக்கோட்டை நீர்மின் தேக்க கதவணையில் 18 மதகுகள் திறந்து விடப்பட்டு தண்ணீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டு பராமரிப்பு பணிகள் நடைபெற்றது.

    இதனையடுத்து பராமரிப்பு பணிகள் முடிக்கப்பட்டு மீண்டும் தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து தற்போது  கோனேரிபட்டி நீர்மின் தேக்க கதவணை பகுதியில் தேக்கி வைக்கப்பட்டுள்ள தண்ணீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டு பராமரிப்பு நடைபெறுவதால் கடல் போல் தேங்கி இருந்த காவிரியாறு தண்ணீரின்றி பாறைத் திட்டுகளாக காட்சி அளிக்கிறது.
    மாலை நேரங்களில் வனப்பகுதிக்குள் மேய்ச்சலுக்கு மாடுகளை ஓட்டிச்செல்ல வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
    அந்தியூர்:

    அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் மான், கரடி, புலி, செந்நாய், காட்டெருமை, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    இந்த நிலையில் வனப்பகுதிக்குள் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அந்தியூர் வனச்சரகம் தாமரைக்கரை, பர்கூர் வனச்சரகம் தட்டகரை உள்ளிட்ட வனப்பகுதிகளில் 35-க்கும் மேற்பட்ட இடங்களில் தானியங்கி கேமரா பொருத்தப்பட்டு புலிகளின் நடமாட்டம் குறித்தும், எத்தனை புலிகள் வருகின்றன என்பது குறித்து அறிவதற்காக வனத்துறை சார்பில் தானியங்கி கேமரா பொருத்தப்பட்டது.

    இந்த நிலையில்அந்தியூர் வனச்சரகதிற்கு உட்பட்ட வரட்டுப்பள்ளம் அணை, கொம்புதூக்கி வனப்பகுதி, அத்தாணி பீட் உள்ளிட்ட இடங்களிலும், பர்கூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட தாமரைக்கரை வனப்பகுதியில் இரவு நேரத்தில் புலி ஒன்று நடமாடுவது வனத்துறையினர் வைத்த கேமராவில் பதிவாகியுள்ளது.

    இதனால் இரவு நேரங்களில் மலைப்பகுதியில் வசிக்க கூடிய மலைவாழ் மக்கள் இருசக்கர வாகனம் மற்றும் நடைபாதை வழியில் நடந்து செல்ல வேண்டாம். மேலும் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்பவர்கள் எச்சரிக்கையோடு வனப்பகுதிக்குள் இருக்க வேண்டும்.

    மாலை நேரங்களில் வனப்பகுதிக்குள் மேய்ச்சலுக்கு மாடுகளை ஓட்டிச்செல்ல வேண்டாம் எனவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    பவானிசாகர் அணை பகுதியில் சுற்றித் திரியும் ஒற்றை யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கிராம மக்களும், பொதுப்பணித்துறை ஊழியர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் வனப்பகுதியில் போதிய மழையின்றி வெயில் கொளுத்துவதால் மரம், செடி, கொடிகள் காய்ந்து, நீர் நிலைகள், குட்டைகளில் தண்ணீர் இல்லாமல் உள்ளது.

    இதனால் வனப்பகுதியில் வசிக்கும் யானை, மான் உள்ளிட்ட வன விலங்குகள் தண்ணீர் தேடி அலைந்து திரிந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக யானைக்கூட்டம் பவானிசாகர் அணையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் முகாமிட்டு உள்ளது.

    மாலை மற்றும் இரவு நேரங்களில் குட்டிகளுடன் பவானிசாகர் அணையின் மேல் பகுதியை கடந்து தண்ணீர் குடிக்க செல்கின்றன.

    இந்நிலையில் பவானிசாகர் அணை அருகே வனப்பகுதியில் முகாமிட்டிருந்த காட்டு யானை கூட்டத்தில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை பவானிசாகர் அணை பூங்கா அருகே உள்ள புங்கார் பழத்தோட்ட நுழைவு வாயில் அருகே சுற்றித் திரிந்தது. ஒற்றை யானை நடமாட்டத்தால் பொதுப்பணித்துறை ஊழியர்கள் மற்றும் புங்கார் கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

    பவானிசாகர் அணை பகுதியில் சுற்றித் திரியும் ஒற்றை யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கிராம மக்களும், பொதுப்பணித்துறை ஊழியர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    பவானிசாகர் அணையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் குட்டிகளுடன் முகாமிட்டுள்ள யானை கூட்டம் பவானிசாகர் அணை மற்றும் கரைப்பகுதியை கடந்து தண்ணீர் குடிக்க செல்கிறது. மேலும் ஒற்றை யானை ஒன்றும் தனியாக சுற்றித்திரிந்து வருகிறது.

    எனவே அந்தப் பகுதியில் கால்நடை மேய்ப்போர், பவானிசாகர் அணை அருகே மீன்பிடிக்க செல்வோர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
    கடம்பூர் மலைப்பகுதி அருகே கர்நாடக மது விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்
    ஈரோடு:

    கடம்பூர் மலைப்பகுதி அருகே கர்நாடக மது விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்

    கடம்பூர் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது கடம்பூர் மலைப்பகுதி மக்கம்பாளையம்& செல்லிபாளையம் செல்லும் சாலையில் மோட்டார் சைக்கிளில் ஒருவர் சென்று கொண்டிருந்தார். அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தனர். 

    அப்போது சட்டவிரோதமாக கர்நாடகா மாநில மதுபானங்களை விற்பனைக்கு கொண்டு சென்றது தெரிய வந்தது. போலீசார் விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த சிவராஜ் (42) என தெரியவந்தது. அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். 

     இது குறித்து கடம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சிவராஜை கைது செய்தனர்.
    வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஈரோடு:

    வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோடு மாவட்டம் கோபி எடுத்த கொலப்பலூர் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி.இவரது மகன் சதீஷ (வயது 26). பந்தல் போடும் வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை.

    சதீஷ் கோபி அடுத்த அரக்கன்-கோட்டை இலூர் பழையய காலனியில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கியிருந்தார். இந்நிலையில் சதீஷ்க்கு குடிப்பழக்கம் இருந்து வந்த-தாக கூறப்படுகிறது. இதனால் சதீஷ் கடந்த சில நாட்களாக சரியாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்-ளார். இதனால் பழனிசாமி தனது மகனுக்கு போனில் அறிவுரை கூறியுள்ளார்.

    இந்நி-லையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் சதீஷ் வீட்டில் உள்ள அறையில் தூங்க சென்று விட்டார். இந்நிலையில் நேற்று காலை சதீஷின் பாட்டி அவரது அறைக்கு சென்று பார்த்தபோது சதீஷ்தூக்குப் போட்டுக் கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.  

    அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே சதீஷ இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து பங்களாபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
    ரம்ஜான் பண்டிகையையொட்டி ஈரோடு ஜவுளி சந்தை களைகட்டியது. இதனால் சில்லரை வியாபாரம் 60 சதவீதம் நடந்தது.
    ஈரோடு:

    ரம்ஜான் பண்டிகையையொட்டி ஈரோடு ஜவுளி சந்தை களைகட்டியது. இதனால் சில்லரை வியாபாரம் 60 சதவீதம் நடந்தது.

    ஈரோடு ஜவுளி சந்தையானது வாரந்தோறும் செவ்வாய்கிழமை நடை பெறுவது வழக்கமாகும். இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கு பிறகு கடந்த சில வாரங்களாக வியாபாரம் மிகவும் மந்த நிலையில் இருந்து வந்தது.

    குறிப்பாக நூல் விலை உயர்வு காரணமாக மொத்த வியாபாரம் முற்றிலும் இல்லாமல் இருந்து வந்த நிலையில், ரம்ஜான் பண்டிகையையொட்டி இன்று நடைபெற்ற ஜவுளி சந்தையானது களை கட்டி காணப்பட்டது.

    குறிப்பாக கேரளா, ஆந்திரா, கர்நாடக போன்ற வெளி மாநிலங்களை சேர்ந்த மொத்த வியா பாரிகள் அதிக அளவில் ஜவுளி சந்தைக்கு வந்து ஜவுளிகளை கொள்முதல் செய்தனர். இதே போல சில்லரை விற்பனையும் அமோகமாக நடை பெற்றதாக வியாபாரிகள் கூறினர். 

    இது குறித்து ஜவுளி வியாபாரிகள் சங்க நிர்வாகி செல்வராஜ் கூறியதாவது:-
     ரம்ஜான் பண்டிகையை யொட்டி இந்தவாரம் ஜவுளி சந்தையில் மொத்த மற்றும் சில்லரை வியாபாரம் அமோகமாக நடைபெற்றது. பல வாரங்களுக்கு பிறகு கேரளா, ஆந்திராவில் இருந்து மொத்த வியாபாரிகள் வந்திருந்தனர்.

     சேலை, வேட்டி, லுங்கி, ஜரிகை வேலைபாடுகள் கொண்ட சுடிதார்கள் அதிக அளவில் விற்பனையானது. தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் அதிகமாக வந்திருந்தனர். உள்ளூர் பொதுமக்களின் வருகையும் வழக்கத்தை விட அதிக மாகவே காணப்பட்டது. 

    மொத்த வியாபாரம் 40 சதவீதத்திற்கு மேலும், சில்லரை வியாபாரம் 60 சதவீதம் அளவிலும் நடந்தது என்றார்.
    ×