என் மலர்
உள்ளூர் செய்திகள்

தண்ணீரின்றி பாறை திட்டுகளாக காட்சியளிக்கும் கோனேரிப்பட்டி கதவணை பகுதி காவிரி ஆறு.
பாறை திட்டுகளாக காட்சியளிக்கும் காவிரி ஆறு
அம்மாபேட்டை அருகே உள்ள கோனேரிப்பட்டி கதவணை மின்நிலையம் பராமரிப்பு பணி காரணமாக காவிரி பாறை திட்டுகளாக காட்சி அளிக்கிறது.
அம்மாபேட்டை:
அம்மாபேட்டை அருகே உள்ள கோனேரிப்பட்டி கதவணை மின்நிலையம் பராமரிப்பு பணி காரணமாக காவிரி பாறை திட்டுகளாக காட்சி அளிக்கிறது.
மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறந்துவிடப்படும் தண்ணீர் செக்கானூர், நெருஞ்சிப்பேட்டை கோனேரிப்பட்டி ஊராட்சிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளை கடந்து திருச்சி, தஞ்சாவூர் வரை செல்கிறது.
அம்மாபேட்டை அடுத்து உள்ள கோனேரிபட்டி நீர் மின் தேக்க கதவணையில் தண்ணீரில் இருந்து தலா 15 மெகாவாட் என 2 எந்திரங்களைக் கொண்டு மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. மேலும் காவிரியில் அதிகப்படியான தண்ணீர் செல்லும் போது 20 மெகாவாட் வரையிலும் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்நிலையில் ஆண்டுதோறும் நீர்மின் தேக்க கதவணை பகுதிகளில் ஏப்ரல் ,மே ,மாதங்களில் நீர்மின் தேக்க கதவணை பகுதிகளில் தேக்கி வைக்கப்பட்ட தண்ணீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டு பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம்.
கடந்த 26 நாட்களுக்கு முன்பு பவானி அருகே ஊராட்சிக்கோட்டை நீர்மின் தேக்க கதவணையில் 18 மதகுகள் திறந்து விடப்பட்டு தண்ணீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டு பராமரிப்பு பணிகள் நடைபெற்றது.
இதனையடுத்து பராமரிப்பு பணிகள் முடிக்கப்பட்டு மீண்டும் தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து தற்போது கோனேரிபட்டி நீர்மின் தேக்க கதவணை பகுதியில் தேக்கி வைக்கப்பட்டுள்ள தண்ணீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டு பராமரிப்பு நடைபெறுவதால் கடல் போல் தேங்கி இருந்த காவிரியாறு தண்ணீரின்றி பாறைத் திட்டுகளாக காட்சி அளிக்கிறது.
Next Story






