என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
வீட்டில் தீ பிடித்து மின்சாதன பொருட்கள் எரிந்து சேதம்
சூரம்பட்டியில் வீட்டில் தீ பிடித்து மின்சாதன பொருட்கள் எரிந்து சேதமடைந்தது. இந்த சம்பவம் குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள.
ஈரோடு:
சூரம்பட்டியில் வீட்டில் தீ பிடித்து மின்சாதன பொருட்கள் எரிந்து சேதமடைந்தது. இந்த சம்பவம் குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள.
சூரம்பட்டி முத்துக்-குமாரசாமி வீதியை சேர்ந்தவர் ஆனந்த். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று அவர் வெளியூர் சென்று இருந்தார்.
இதனால் அவருடைய தாய் பாக்கியலட்சுமி மட்டும் வீட்டில் இருந்தார். இந்நிலையில் இரவு அவரது வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு புகை வெளி-யேறியது.
இதனால் பாக்கியலட்சுமி அலறியடித்துக்கொண்டு வீட்டில் இருந்து வெளியேறி உயிர் தப்பினார். மேலும் அக்கம் பக்கத்தினர் திரண்டனர்.
இதுகுறித்து அவர்கள் ஈரோடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு படை வீரர்கள் அங்கு சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த கட்டில் மற்றும் டி.வி., மின்விசிறிகள், பிரிட்ஜ் உள்பட பல்வேறு பொருட்கள் எரிந்து சேதமானது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






