என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    சாகர் பள்ளி விடுதியில் தங்கி படித்த 10-ம் வகுப்பு மாணவர் மாயம்

    பெருந்துறை சாகர் பள்ளி விடுதியில் தங்கி படித்த 10-ம் வகுப்பு மாணவர் மாயமான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பெருந்துறை:

    பெருந்துறை சாகர் பள்ளி விடுதியில் தங்கி படித்த 10-ம் வகுப்பு மாணவர் மாயமான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை-பவானி ரோடு, சோளிபாளையம் பகுதியில் சாகர் இண்டர்நேஷனல் பள்ளி செயல்பட்டு வருகிறது. 

    இந்தப் பள்ளியில் கடலூர் மாவட்டம், பண்ருட்டி, காடையாம்-புலியூர் பகுதியை சேர்ந்த உக்கரவேல் என்பவரது மகன் கலையமுதன் (வயது 16) 10-ம் வகுப்பு படித்து வருகிறார். 

    இவர் இப்பள்ளியின் விடுதியில் தங்கி படித்து வந்தார். நேற்று ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால் மதியம் முதல் மாணவர் கலையமுதனை காண-வில்லை. 

    இதையடுத்து விடுதி வார்டன் மற்றும் மாணவர்கள் பள்ளி வளாகம் முழுவதும் தேடிப்-பார்த்தும் மாணவரை கண்டுபிடிக்க முடிய-வில்லை. 

    இதுதொடர்பாக பள்ளியின் தாளாளர் சுந்தர்ராஜன் பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதாபேகம் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன மாணவரை தேடி வருகிறார். பள்ளியில் தங்கி படித்த மாணவர் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×