என் மலர்
உள்ளூர் செய்திகள்

மேம்பாட்டு வாரியம் சார்பில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
3264 அடுக்குமாடி குடியிருப்புகளை ஆய்வு செய்த அமைச்சர் முத்துசாமி
சித்தோடு பகுதியில் கட்டப்பட்டுள்ள 3264 அடுக்குமாடி குடியிருப்புகளை அமைச்சர் முத்துசாமி செய்தார்.
ஈரோடு:
சித்தோடு பகுதியில் கட்டப்பட்டுள்ள 3264 அடுக்குமாடி குடியிருப்புகளை அமைச்சர் முத்துசாமி செய்தார்.
ஈரோடு மாவட்டம், சித்தோடு பேரூராட்சிக்-குட்பட்ட நல்லாக் கவுண்டன்-பாளையம் கிராமத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா தலைமையில் ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் முன்னிலையில் அமைச்சர்முத்துசாமி தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கட்டப்பட்டு வரும் 3264 அடுக்குமாடி குடியிருப்பு-களை நேரில்
சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, அமைச்சர் நிருபர்களிடம் கூறியதாவது:&
தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் இங்கே 3264 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. ஏழை, எளிய மக்களுக்காக பயன்படுத்-தப்பட இருக்கிறது. ஈரோடு மாநகராடசிக்குட்பட்ட பெரும்பள்ளம் ஓடை, பிச்சைக்காரன் பள்ளம் மற்றும் சுண்ணாம்பு ஓடை போன்ற நீர் வழிப்பகுதிகள், சாலை பகுதிகள் மற்றும் அரசு நிலங்களில் ஆக்கிர-மித்து அபாயகரமான நிலையில் வசித்து வரும் ஆக்கிரமனதாரர்களை ஆரோக்கியமான சூழ்நிலையில் மறுகுடியமர்வு செய்திடவும், நீர்வழி பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்-புகளை அகற்றிடவும், பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் ஒன்றிய, மாநில அரசுகளின் நிதி மற்றும் பயனாளிகளின் பங்களிப்போடு, அடுக்கு-மாடி குடியிருப்புகள் கட்டும் திட்டம் செயல்படுத்-தப்பட்டு வருகின்றது.
மேலும் தேர்வு செய்யப்பட்ட வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் வீடற்ற நகர்புற ஏழைகளும் மறுகுடியமர்வு செய்யப்-படவுள்ளனர். இதில் ஈரோடு மாவட்டம், சித்தோடு பேரூராட்சிக்குட்பட்ட நல்லாக்கவுண்டன் பாளையம் வருவாய் கிராமத்தில் அருகருகே மூன்று திட்டப்பகுதிகளில் மாவட்ட கலெக்டரின் முன்நுழைவு அனுமதி பெற்று திட்டம் செயல்படுத்-தப்பட்டு வருகிறது. இதில் சுமார் 29 ஏக்கர் பரப்பளில் மொத்தம் 3264 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது.
ஒருங்கிணைந்த திட்ட மதிப்பீடு ரூ.285.60 கோடி ஆகும். இதில் ஒன்றிய அரசின் நிதி ரூ.48.96 கோடியும், மாநில அரசின் நிதி ரூ.195.84 கோடியும், பயனாளிகளின் பங்களிப்பு ரூ.40.80 கோடியும் ஆகும். ஒரு குடியிருப்பிற்கான மதிப்பு ரூ.8.75 லட்சம் ஆகும். ஏற்கனவே இந்த இடத்திலே குடிவரக் கூடியவர்கள் கூடுதலாக பணம் கட்ட வேண்டிய அவசியம் இருந்தது.
அதிலே சில சலுகைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதல்-அமைச்சர் அறிவித்து, அவர்களின் சுமையை குறைக்கின்ற அளவிற்கு நடவடிக்கை எடுத்துள்-ளார்கள். மேலும் இதுமட்டும் அல்லாமல் தமிழ்நாடு முழுவதும் இதுபோன்று பல இடங்களிலே தற்பொழுது குடியிருப்புகளை கட்டு-வதற்கு ஏற்பாடு செய்யப்-பட்டு வருகிறது.
இதில் மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது, ஏழை மக்களுக்காக மாநில அரசு மானியம் கொடுக்கின்றது, வீடுகள் மிகவும் தரமானதாக இருக்க வேண்டும் என்பதே மாண்புமிகு தமிழ்நாடு முதல்&அமைச்சர் அவர்களின் நோக்கமாக உள்ளது.
எதிர்காலத்தில் வரக்-கூடிய கட்டிடங்கள் முழுமை-யான தரத்தோடு கட்டப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். 3264 குடியிருப்புகளும் முடியும் தருவாயில் உள்ளது. மேலும் இன்னும் 3 மாத காலத்திற்குள் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது. ஒரு சில வீடுகளை மட்டும் உடனடியாக கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சாலை, குடிநீர், போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் மிகசிறப்பாக ஏற்படுத்த வேண்டும் என்பதே அரசின் நோக்கம். எனவே இக்கட்டிங்கள் இன்று ஆய்வு மேற்கொள்ளப் பட்டுள்ளது. விரைவாக பணிகள் முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்-படும் என தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது, மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ், 1-வது மண்டலக் குழுத்தலைவர் ப.க.பழனிசாமி, மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார், செயற்பொறியாளர் விஜயகுமார் உட்பட ஈரோடு வட்டாட்சியர் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
Next Story






