என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முககவசம் அணியாமல் வருபவர்களிடம் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது
    X
    முககவசம் அணியாமல் வருபவர்களிடம் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது

    முககவசம் அணியாமல் வருபவர்களிடம் ரூ.500 அபராதம் வசூலிக்கும் பணி தொடங்கியது

    ஈரோடு மாவட்டத்தில் முககவசம் அணியாமல் வருபவர்களிடம் ரூ.500 அபராதம் வசூலிக்கும் பணி தொடங்கியது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில்  முககவசம் அணியாமல் வருபவர்களிடம் ரூ.500 அபராதம் வசூலிக்கும் பணி தொடங்கியது.

    உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா  உருமாற்றம் அடைந்து    மீண்டும் மிரட்ட தொடங்கியுள்ளது.  முதலில் கொரோனா தாக்கம் தொடங்கியதும் அதில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள அடிக்கடி சோப்பு போட்டு கைகளை கழுவ வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் குறிப்பாக முக கவசம் அணிந்து வர வேண்டும் என வலியுறுத்த ப்பட்டது.

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2020-ம் ஆண்டு தாய்லாந்தில் இருந்து வந்திருந்த 2 பேர் மூலம் முதன் முதலில் கொரோனா தாக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து வேகமாக பரவியதால் வீட்டை விட்டு வெளியே வரும்போது மக்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வர வேண்டும் என அறிவுறுத்தப் பட்டது.

    முக கவசம் அணிய வில்லை என்றால் ரூ.100 அபராதம் விதிக்கப்படும் எனவும் கலெக்டர் அறிவுறுத்தி இருந்தார். ஆனால் இதை பெரும் பாலானோர் காதில் வாங்கிக் கொள்ளாமல் சர்வ சாதாரணமாக முக கவசம் அணியாமல் சுற்றி திரிந்தனர். 

    இதனை அடுத்து முக கவசம் அணியாமல் வருபவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பெரும் பாலானோர் முக கவசம் அணியும் பழக்கத்தை ஏற்படுத்தி கொண்டனர். இந்நிலையில் மாவட்டத்தில் கொரோனா தாக்கமும் குறைய தொடங்கியது. 

    பின்னர் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் தொற்று காரணமாக மாவட்டத்தில் 3&ம் அலை ஏற்பட்டு அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டது.  இந்த இடத்தில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் கடுமையாக விதிக்கப் பட்டன.
    பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறையத் தொடங் கியது. இதனை அடுத்து வழக்கம்போல் பொது மக்களில் பெரும்பாலா னோர் முககவசம் அணியும் பழக்கத்தை மறந்தனர்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. நேற்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 57 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பொது இடங்களுக்கு வரும் மக்கள் கண்டிப்பாக முககவசம் அணிந்து வரவேண்டும் என்றும் முககவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

    இதனைத்தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் நேற்று முதல் முககவசம் அணியாதவர்களுக்கு  ரூ.500 அபராதம் விதிக்கும் பணி தொடங்கியுள்ளது.

     பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மாநகராட்சி சார்பில் அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு முககவசம் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.

    சுகாதார ஆய்வாளர்கள் தலைமையில் ஆங்காங்கே சோதனை செய்து முக கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப் பட்டு வருகிறது. அரசு அறிவித்தபடி முககவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கும் பணி நமது மாவட்டத்தில் தொட ங்கி விட்டதாக மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார் தெரிவித்துள்ளார். இன்னும் நாட்கள் செல்ல செல்ல அபராதம் விதிக்கும் பணி தீவிரப்படுத்தப்படும் என்றார்.
    Next Story
    ×