என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
சாலை விபத்தில் மாற்றுத்திறனாளி பலி
சாலை விபத்தில் மாற்றுத்திறனாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
சாலை விபத்தில் மாற்றுத்திறனாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு சாஸ்திரி நகர் கருப்பண்ணசாமி கோவில் வீதியை சேர்ந்தவர் யோகேஷ் குமார் (36).மாற்றுத்திறனாளி. இவரது மனைவி தீபா. இவர்களுக்கு ஹரி கிருஷ்ணன் (12), புகழேந்தி (4) என 2 மகன்கள் உள்ளனர்.
யோகேஷ் குமார் ஈரோடு பிரப் ரோட்டில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ஜவுளி கடையில் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் சம்பவத் தன்று யோகேஷ்குமார் மகன் ஹரிகிருஷ்ணனை பள்ளியில் விடுவதற்காக தனது மொபட்டில் அழைத்து சென்று கொண்டி ருந்தார். மொபட்டை யோகேஷ்குமார் ஓட்ட பின்னால் ஹரிகிருஷ்ணன் அமர்ந்து வந்தார்.
காந்திஜி ரோடு பெட்ரோல் பங்க் அருகே வந்து கொண்டிருந்தபோது யோகேஷ்குமார் முன்னால் மற்றொரு மோட்டார் சைக் கிளில் சென்று கொண்டி ருந்த நபர் திடீரென பிரேக் போட்டார். இதை சற்றும் எதிர்பாராத யோகேஷ்குமார் மொபட் அந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் யோகேஷ் குமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. பின்னால் அமர்ந்து வந்த ஹரி கிருஷ்ணாவுக்கு மூக்கில் அடிபட்டு ரத்தம் கொட்டியது.
உடனே அந்த வழியாக சென்றவர்கள் 108 ஆம்புலன் சுக்கு தகவல் கொடுத்து ஈரோடு அரசு மருத்துவ மனைக்கு யோகேஷ்குமார் மற்றும் ஹரிகிருஷ்ணாவை சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். ஹரி கிருஷ்ணா வுக்கு அங்கே சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனால் யோகேஷ்குமார் நிலைமை மோசமானதால் மேல் சிகிச்சைக்காக அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சையில் இருந்த யோகேஷ்குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






