என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
அனுமதியின்றி மது விற்ற 53 பேர் ஒரே நாளில் கைது
ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் அனுமதியின்றி மது விற்ற 53 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் அனுமதியின்றி மது விற்ற 53 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் அரசு அனுமதியின்றி பல்வேறு இடங்களில் 24 மணி நேரமும் மது விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.
மேலும் சிலர் கள்ளச்சந்தையில் மதுவை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்று வருவதாகவும் புகார் வந்தது. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் அந்தந்த போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட எல்லைப் பகுதியில் போலீசார் நேற்று ஒரு நாளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
இவர்களுடன் மதுவிலக்கு போலீசாரும் இணைந்து அதிரடி சோதனை மேற்கொண்டனர். ஈரோடு மாநகர பகுதியில் கருங்கல்பாளையம், டவுன், சூரம்பட்டி, கோபி, அந்தியூர், பவானி, பெருந்துறை, சத்தியமங்கலம், ஆசனூர், தாளவாடி மொடக்குறிச்சி, கொடுமுடி உட்பட மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடி வேட்டை நடத்தினர்.
இதில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த மது பாட்டில்கள், அனுமதியின்றி மது விற்றவர்கள், கள்ள சந்தையில் கூடுதல் விலைக்கு மது பெற்றவர்கள், வாகனங்களில் மதுவை கடத்தி விற்றவர்கள் என ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் மது விற்பனையில் ஈடுபட்ட 53 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக 54 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும் ஒரே நாளில் 831 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்-பட்டுள்ளது. மது விற்ற 2 பேர் தலைமறைவாக உள்ளனர்.
மேலும் இருசக்கர வாகனங்கள், ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். போலீசாரின் இந்த அதிரடி வேட்டை இன்று 2&வது நாளாக தொடர்ந்து நடந்து வருகிறது.
Next Story






