என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஈரோடு எஸ்.கே.சி. ரோட்டில் மாநகராட்சி பணியாளர்கள் கடைகளின் முன்பு இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றிய போது எடுத்த பட
போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்
ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு பகுதி அருகே போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் மாநகராட்சி அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றினர்-.
ஈரோடு:
ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு பகுதி அருகே போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் மாநகராட்சி அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றினர்-.
ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு பகுதி, எஸ்.கே.சி ரோடு, ஜெகநாதபுரம் காலனி ஆகிய பகுதிகளில் சாலையின் இருபுறமும் ஏராளமான கடைகள் உள்ளன. இந்த பகுதியில் ரோட்டோரம் ஆக்கிர மிப்புகள் உள்ளதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக புகார் எழுந்தது.
இதேபோல் எஸ்.கே.சி ரோடு பகுதியில் சாக்கடை அடைப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பகுதியில் சில கடை களில் கடைக்காரர்கள் சாக் கடைக்கு மேல் கான்கிரீட் தளம் அமைத்து படிகள் அமைத்துள்ளனர்.
இதனால் இந்த பகுதியில் தூய்மை பணியாளர்கள் சாக்கடையில் இறங்கி தூர்வார முடிய வில்லை. இதனால் இந்த பகுதியில் சாக்கடைகள் அடைத்து விடுகின்றன. இது தொடர்பாக மாநகராட்சி சார்பில் சம்மந்தப்பட்ட கடைக்காரர் களுக்கு நோட்டீஸ் அனுப்பியும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை.
இதனால் ஆணையாளர் சிவகுமார் உத்தரவு பேரில் இன்று 3&ம் மண்டல உதவி ஆணையாளர் விஜயா, இளநிலை பொறியாளர் சந்திரசேகர் ஆகியோர் மேற்பார்வையில் சூரம்பட்டி நால்ரோடு, எஸ்.கே.சி. ரோடு, ஜெகநாதபுரம் காலனி வரை உள்ள பகுதி களில் ரோட்டோரம் ஆக்கிர மிப்பு செய்யப்பட்டுள்ள கடைகளின் முன் பகுதிகள் அகற்றப்பட்டன.
மாநகராட்சி பணியாளர் கள் ஆக்கிரமிப்பு பணியில் ஈடுபட்டனர். சிலர் தங்களது கடைகளில் முன் சாக்கடைக்கு மேல் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கான்கிரீட் தளத்தை ஜே.சி.பி. எந்திரம் மூலம் இடித்து அகற்றினர்.
இதேபோல் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள பிளக்ஸ் போர்டுகளையும் மாநகராட்சி பணியாளர்கள் அகற்றினர்.
மேலும் சாலையோரம் போடப்பட்டிருந்த காய்கறி கடைகளும் அகற்றப்பட்டன. தொடர்ந்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் நடந்து வருகின்றன. இதையடுத்து முன் எச்சரிக்கை நடவடிக் கையாக சூரம்பட்டி போலீ சார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Next Story






