என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
பெருந்துறையில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள் திருட்டு
பெருந்துறையில் வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் தங்க நகைகள் திருடி சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பெருந்துறை:
பெருந்துறையில் வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் தங்க நகைகள் திருடி சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பெருந்துறை பவானி&ஈரோடு ரோடு டீச்சர்ஸ் காலனி பகுதியை சேர்ந்தவர் அற்புதராஜ் (வயது 49).
இவர் அதேபகுதியில் தனது மனைவி மற்றும் மகனுடன் குடியிருந்து வருகிறார்.
அற்புதராஜ் பெருந்துறை அடுத்துள்ள சிப்காட்டில் ஒரு தனியார் மில்லில் பிட்டர் ஆக வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் அற்புதராஜ் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்று விட்டார்.
நேற்று இரவு வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்துள்ளது.
பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டு உள்ளே இருந்த 3 பவுன் மதிப்புள்ள தங்க நகைகள் திருட்டு போனது தெரியவந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.35,000 ஆகும்.
இதுதொடர்பாக அற்புதராஜ் பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
Next Story






