என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 29-ந் தேதி ஏலம்
ஈரோடு கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள 29-ந் தேதி ஏலம் நடக்கிறது.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள 29-ந் தேதி ஏலம் நடக்கிறது.
போக்குவரத்து துறையில் வரி செலுத்தாத, இதர குற்றங்களுக்காக ஆர்.டி.ஓ. மூலம் பறிமுதலான, நிதியா ளர்களால் விடுவிக்கப்படாத 69 வாகனங்கள், ஈரோடு ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் உள்ளன.
இவற்றை கடந்த 11-ந் தேதி ஏலம் விட அறிவிப்பு செய்யப்பட்டது. ஆனால் நிர்வாக காரணத்தால் ஏலம் தேதி மாற்றியமைக்கப்பட்டு வரும் 29-ந் தேதி (வெள்ளிக் கிழமை) காலை 11 மணி முதல் மாலை, 5 மணி வரை ஏலம் விடப்படுகிறது.
விருப்பம் உள்ளவர்கள் வரும் 21-ந் தேதிக்கு பின் ஈரோடு கிழக்கு ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ரூ.500 செலுத்தி ஒப்பந்த புள்ளி விண்ணப்பம் பெறலாம்.
ஏற்கனவே செலுத்தியவர்கள் வரும் 27-ந் தேதி வரை ரசீதை காண்பித்து படிவம் பெறலாம்.
பூர்த்தியான விண்ணப்பம் வரும் 28-ந் தேதி மாலை 5:45 மணிக்குள் திரும்ப வழங்க வேண்டும்.
ஏலம் விடப்படும் வாகனங்களை அலுவலக வேலை நாளில் வரும் 21-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை நேரில் ஈரோடு கிழக்கு ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் பார்வையிடலாம்.
Next Story






