என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
நீலகிரி பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் இன்று காலை பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
ஈரோடு:
நீலகிரி பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் இன்று காலை பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 47 ஆயிரம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
கடந்த சில நாட்களாகவே நீர்பிடிப்பு பகுதியில் மழைப் பொழிவு இல்லாததால் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து குறைந்து வருகிறது.
மேலும் நீர்வரத்தை காட்டிலும் அணையில் இருந்து பாசனத்துக்காகவும், குடிநீருக்காகவும் அதிக அளவில் தண்ணீர் தொடர்ந்து வெளி யேற்றப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று நீலகிரி பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் இன்று காலை பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 82.35 அடியாக உள்ளது. நேற்று வினாடிக்கு 182 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் இன்று 2812 கனஅடியாக அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து காலிங்கராயன் பாசனத் திற்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
இதேபோல் குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
கீழ்பவானி பாசனத்திற்காக 2,100 கன அடி என மொத்தம் 2 ஆயிரத்து 800 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
Next Story






