என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண் இன்ஸ்பெக்டர்
    X
    பெண் இன்ஸ்பெக்டர்

    தற்கொலை செய்வதாக கூறி சென்ற பெண் இன்ஸ்பெக்டர் மீண்டும் பணிக்கு திரும்பினார்

    தற்கொலை செய்வதாக கூறி சென்ற பெண் இன்ஸ்பெக்டர் நீலாவதி மீண்டும் ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு பணிக்கு திரும்பினார்.
    ஈரோடு:

    ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் நீலாவதி.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் நீலாவதி திடீரென மன அழுத்தம் காரணமாக தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக உயர் அதிகாரிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பி விட்டு சோலாரில் உள்ள தனது தோழி வீட்டிற்கு சென்று மயங்கி விழுந்தார்.

    பின்னர் அவர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து குணமடைந்த அவர் பணிக்கு வராமல் விடுமுறையில் இருந்து வந்தார். இதற்கிடையே இன்ஸ்பெக்டர் நீலாவதி பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. அதில் தனது நிலைமைக்கு ஒரு உயர் அதிகாரியும், தனிப்பிரிவு ஏட்டுவும் தான் காரணம் என்று குற்றம்சாட்டி இருந்தார். இதுதொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய டவுன் டி.எஸ்.பி ஆனந்தகுமாருக்கு போலீஸ்சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவிட்டார்.

    இதையடுத்து புகாருக்கு ஆளான தனிப்பிரிவு ஏட்டு, இன்ஸ்பெக்டர் நீலாவதியிடம் தனித்தனியே விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணை அறிக்கை மேற்கு மண்டல ஐ.ஜி.க்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் விடுமுறையில் இருந்த இன்ஸ்பெக்டர் நீலாவதி மீண்டும் ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு பணிக்கு திரும்பினார். 
    Next Story
    ×