என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கிணற்றில் தவறி விழுந்த டிக் வண்டி தொழிலாளி பலி

    கொடுமுடி அருகே கிணற்றின் சுற்றுச்சுவரில் படுத்திருந்த டிக் வண்டி தொழிலாளி தவறி கிணற்றுக்குள் விழுந்து பலியாக சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கொடுமுடி:

    கொடுமுடி அருகே கிணற்றின் சுற்றுச்சுவரில் படுத்திருந்த டிக் வண்டி தொழிலாளி தவறி கிணற்றுக்குள் விழுந்து பலியாக சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொடுமுடி அருகே உள்ள கொளத்துப் பாளையம் நாடார் காலனி பருதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (55). இவரது மனைவி லட்சுமி. சுப்பிரமணி ரிக் வண்டிக்கு வேலைக்கு சென்று வந்தார்.

    சம்பவத்தன்று சுப்பிரமணி ஆராம்பாளையத்தில் உள்ள ஒரு விவசாய தோட்டத்தில் உள்ள கிணற்றின் சுற்றுச்சுவரில் படுத்து இருந்தார். அப்போது நிலை தடுமாறி கிணற்றின் உள்ளே விழுந்து தண்ணீரில் மூழ்கி விட்டார்.

    உடனே அருகில் இருந்தவர்கள் கொடுமுடி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அலுவலர் (பொறுப்பு) ஜெயச்சந்திரன் தலைமையில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தண்ணீரில் மூழ்கி இறந்த நிலையில் சுப்பிரமணி உடலை மீட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்து வந்த கொடுமுடி போலீசார் சுப்பிரமணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் பிரேத பரிசோதனைக்கு முடிந்து சுப்பிரமணியின் மனைவி லட்சுமியிடம் உடலை ஒப்படைத்தனர்.

    மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
    Next Story
    ×