என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் உயர்வு
அந்தியூர் பகுதியில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்ததால் வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
அந்தியூர்:
அந்தியூர் பகுதியில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்ததால் வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதி அடிவாரத்தில் அமைந்துள்ளது வரட்டுப்பள்ளம் அணை.
மழைக்காலங்களில் மலையை சுற்றியுள்ள பகுதி களில் பெய்யக்கூடிய மழை நீரை தேக்கி வைத்து பின்பு பாசனத்திற்கும், கோடை காலங்களில் வனவிலங்குகளுக்கு தாகம் தீர்க்கும் நீராகவும் இந்த அணையின் தண்ணீர் பயன்படுகிறது.
கடந்த 14-ந் தேதி 70 மி.மீ. அளவிற்கும், 15-ந் தேதி 8 மி.மீ., 18-ந் தேதி 44 மி.மீ. மழை வரட்டுப்பள்ளம் அணை சுற்றியுள்ள பகுதியில் மழை பெய்தது. இந்த 3 நாட்களில் மட்டும் 122 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
அணையின் முழு கொள்ளளவான 33.5 அடி உயரமுள்ள அணையில் கடந்த வாரம் 27 அடியாக இருந்தது. கடந்த 3 நாட்களில் வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் பெய்த மழையினால் 27.5 அடியாக தற்போது உள்ளது.
இதனால் அணையை சுற்றியுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story






