என் மலர்
ஈரோடு
- கடந்த மாதம் அந்தியூர், பர்கூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை கொட்டி தீர்த்தது.
- பர்கூர் மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்டு பல இடங்களில் பாறைகள் ரோட்டில் விழுந்தது.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பாதை அமைந்து உள்ளது. இந்த மலைப் பாதையில் கர்நாடக மாநிலம் மைசூருக்கு செல்ல க்கூடிய தெசிய நெடுஞ் சாலை உள்ளது.
இந்த மலைப்பாதை வழியாக தினமும் கர்நாடகா மாநிலத்தில் இருந்து ஏராளமான கார், வேன், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கனரக வாகனங்கள் என பல்வேறு வாகனங்கள் வந்து செல்கிறது.
இந்த நிலையில் சத்திய மங்கலம், திம்பம் வனப்பகுதி மலைப்பாதை 23 கொண்டை ஊசி வளைவு கள் கொண்டது. இந்த வழியாக கர்நாடகா மாநிலம் மைசூருக்கு ஏராளமான கனரக வாகனங்கள் சென்று வருகிறது.
திம்பம் வனப்பகுதி ரோட்டில் அடிக்கடி வாகன ங்கள் பழுதாகி நிற்பதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.
இதனால் மாற்று பாதையாக அந்தியூர், பர்கூர் மலைப்பாதை வழியாக பல கனரக வாகனங்கள் மைசூருக்கு சென்று வருகிறது.
மேலும் நேரம் விரையம் ஏற்படு வதும் தவிர்க்கபபடுவதால் பர்கூர் மலை பாதையை வாகன ஓட்டிகள் அதிக அளவில் பயன்படுத்தி வரு கின்றனர்.
இதையடுத்து பர்கூர் மலை்பாதை சாலைகள் அந்தியூரில் இருந்து தமிழக எல்லைப் பகுதி வரை விரிவாக்கம் செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில் கடந்த மாதம் அந்தியூர், பர்கூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் அந்தியூர் நகரமே தண்ணீரில் மூழ்கியது.
மேலும் மைசூர் செல்லும் பர்கூர் மலை ப்பாதையில் மண் சரிவு ஏற்பட்டு பல இடங்களில் பாறைகள் ரோட்டில் விழுந்தது. இதை யடுத்து ஒரு சில இடங்களில் சரி செய்யப்பட்டது. பெருபாலான இடங்களில் ரோட்டோரங்களில் பாறை கள் அப்படியே கிடக்கிறது.
இதே போல் வரட்டு பள்ளம் அணைப்பகுதியில் இருந்து செட்டிநொடு, தாமரைக்கரை, பர்கூர் தட்டகரை, கர்கேகண்டி வரை சாலைகளில் சுமார் 24-க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு, பாறைகள் உருண்டும், சாலையில் மரங்கள் முறிந்தும் கிடக்கிறது.
இதனால் இந்த வழியாக கனரக வாகனங்கள் மற்றும் கார், வேன் போன்ற வாக னங்கள் செல்ல முடியாமல் உள்ளது. மேலும் போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டு இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஒரு சில 4 சக்கர வாகனங்கள் மட்டுமே தட்டுதடுமாறி சென்று வருகிறது. இதனால் விபத்து அபாயம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.
எனவே பர்கூர் மலை ப்பாதையில் ரோட்டோரம் கிடக்கும் பாறைகள் மற்றும் மரக்கிளைகளை வனத்துறை யினர் மற்றும் ேதசிய நெடுஞ்சாலைத் துறையினர் அகற்றி சரி செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் மலைப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கேட்டு கொண்டு உள்ளனர்.
- சாந்தா எதற்காக கொலை செய்யப்பட்டார் என்ற விவரம் தெரியவில்லை.
- காய்கறி சந்தை பகுதியில் படுத்து இருந்த சாந்தாவை யாரோ மர்ம நபர் இழுத்து வந்து தலையில் பயங்கரமாக தாக்கி கொலை செய்துள்ளனர்.
பெருந்துறை:
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த காஞ்சிகோவில் ரோடு, திருவேங்கடம்பாளையம், புதூர் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி சாந்தா (57). இவர்களுக்கு வெங்கடேஷ், கார்த்திக் என 2 மகன்களும், மீனா, வனிதா என 2 மகள்களும் உள்ளனர்.
இந்நிலையில் ராஜா கடந்த 6 வருடத்திற்கு முன்பு உடல்நிலை சரியில்லாததால் உயிரிழந்தார். மூத்த மகன் வெங்கடேஷ் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு மாயமாகி விட்டார்.
இதையடுத்து சாந்தா தனது 2-வது மகன் கார்த்திக்குடன் வசித்து வந்தார். சாந்தாவும், கார்த்திக்கும் கட்டிட வேலைக்கு சென்று வந்தனர். பின்னர் கார்த்திக் பெருந்துறையில் உள்ள வாரச்சந்தை பகுதியில் உள்ள மளிகை கடையில் வேலை பார்த்து வந்தார்.
சாந்தாவுக்கும், அவரது மகன் கார்த்திக்குக்கும் மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. சாந்தாவும், கார்த்திக்கும் இரவில் பெருந்துறை காய்கறி மார்க்கெட்டில் உள்ள பகுதிகளில் தங்குவது வழக்கம். இரவில் மது அருந்திவிட்டு அங்கேயே தூங்கி விடுவார்கள். சாந்தா அவ்வப்போது கருமாண்டி செல்லிபாளையத்தில் உள்ள இளைய மகள் வனிதா வீட்டிற்கு சென்று வருவார்.
இந்நிலையில் நேற்று மாலை 5 மணியளவில் சாந்தா குடிபோதையில் வனிதா வீட்டிற்கு வந்தார். பின்னர் இரவு 7 மணி அளவில் காய்கறி மார்க்கெட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார்.
இந்நிலையில் இரவு 11 மணி அளவில் கார்த்திக் தனது தங்கை வனிதா வீட்டிற்கு வந்து கதவை தட்டியுள்ளார். சத்தம் கேட்டு வனிதா அவரது கணவர் வேலன் ஆகியோர் கதவை திறந்து வெளியே வந்து கார்த்திக்கிடம் எதற்காக பதட்டமாக இருக்கிறீர்கள் என்று கேட்டுள்ளனர்.
அதற்கு கார்த்திக் இரவு 10.30 மணி அளவில் அம்மாவுக்கு சாப்பாடு வாங்கி கொண்டு அம்மா படுத்து தூங்கும் காய்கறி மார்க்கெட் பகுதிக்கு சென்று பார்த்தபோது அம்மாவை காணவில்லை என்றும் சந்தையின் மேற்புறம் பகுதியில் சென்று பார்த்தபோது அம்மா தலையில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் மூச்சு பேச்சில்லாமல் கிடப்பதாக கூறினார்.
இதனையடுத்து வனிதா தனது கணவர் மற்றும் உறவினர்களுடன் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தார். அப்போது காய்கறி சந்தை மேற்பகுதியில் தலையில் ரத்த காயங்களுடன் சாந்தா கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அந்த இடம் முழுவதும் ரத்தம் உறைந்து காணப்பட்டது.
இதுகுறித்து பெருந்துறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாந்தா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
சாந்தா எதற்காக கொலை செய்யப்பட்டார் என்ற விவரம் தெரியவில்லை. சாந்தா தலையில் பலத்த காயம் இருந்துள்ளது. காய்கறி சந்தை பகுதியில் படுத்து இருந்த சாந்தாவை யாரோ மர்ம நபர் இழுத்து வந்து தலையில் பயங்கரமாக தாக்கி கொலை செய்துள்ளனர். குடிபோதை தகராறில் கொலை நடந்ததா? அல்லது வேறு என்ன காரணம் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- வட மாநில வாலிபர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஒடிசா மாநிலம் சுனந்தா கிராமத்தை சேர்ந்தவர் பாபு நாயக். கடந்த 5 மாதமாக பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் எர்த் மூவர்ஸ் கம்பெனியில் தங்கி லாரி கிளீனராக வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் பாபு நாயக்குக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. சம்பத்தன்று பாபு நாயக் மது அருந்தியுள்ளார். பின்னர் திடீரென வயிறு வலிப்பதாக கூறி அலறினார். அக்கம் பக்கத்தினர் இது குறித்த அவரிடம் கேட்டபோது தான் மது அருந்திய போது அருகில் இருந்த கழிவறை கிளீனரை தண்ணீர் என நினைத்து மதுவில் கலந்து குடித்து விட்டதாக கூறினார்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்தவர்கள் உடனடியாக பாபு நாயக்கை மீட்டு பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாபு நாயக் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நிறைமாத கர்ப்பிணியான மைலாவுக்கு இன்று அதிகாலை 5 மணியளவில் பிரசவ வலி ஏற்பட்டது.
- மருத்துவ குழுவினர் மைலாவுக்கு பிரசவம் பார்த்தனர். இதில் மைலாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாலுகா கடம்பூர் மாக்காம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரங்கசாமி. இவருடைய மனைவி மைலா (21). நிறைமாத கர்ப்பிணியான மைலாவுக்கு இன்று அதிகாலை 5 மணியளவில் பிரசவ வலி ஏற்பட்டது.
இதையடுத்து அவரது உறவினர் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் மருத்துவ குழுவினருடன் குத்தியாளத்தூரில் இருந்து மயிலாவை ஏற்றி கொண்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தது.
108 ஆம்புலன்ஸ் கிட்டா பாளையம் வனப்பகுதியில் வந்தபோது மைலாவுக்கு பிரசவ வலி அதிகரிக்கவே, நிலைமையை புரிந்து கொண்ட ஆம்புலன்ஸ் டிரைவர் வாகனத்தை ஓரமாக நிறுத்தினார்.
பின்னர் மருத்துவ குழுவினர் மைலாவுக்கு பிரசவம் பார்த்தனர். இதில் மைலாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் தாயும், சேயும் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
தக்க நேரத்தில் துரிதமாக செயல்பட்டு பெண்ணுக்கு பிரசவம் பார்த்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவ குழுவினருக்கு பொது மக்கள் நன்றி தெரிவித்து கொண்டனர்.
- 2-வது நாளாக ஒப்பந்த பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் மாநகராட்சி அலுவலகத்திற்கு திரண்டு வந்து முற்றுகையிட்டு பணி புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- இதனால் மாநகராட்சி அலுவலகத்தில் 2-வது நாளாக பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
ஈரோடு:
ஈரோடு மாநகராட்சியில் பொது சுகாதாரம் உள்பட பல்வேறு பணிகளில் ஆயிரத்து 800-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கடந்த 15 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் அவுட்சோர்சிங் முறையில் தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை கண்டித்து ஊழியர்கள் மாநகராட்சியை முற்றுகையிட்டு நேற்று போராட்டம் நடத்தினர்.
காலையில் தொடங்கிய போராட்டம் மாலை 5 மணி வரை நடந்தது. இதில் மேயர் நாகரத்தினம், மாநகராட்சி கமிஷனர் சிவக்குமார் ஆகியோரை சந்தித்து பேசினார்கள். இதில் எந்த ஒரு சுமூக முடிவும் ஏற்படவில்லை.
இந்நிலையில் இன்று 2-வது நாளாக 500-க்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் மீண்டும் மாநகராட்சி அலுவலகத்திற்கு திரண்டு வந்து முற்றுகையிட்டு பணி புறக்கணித்து போரா ட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து தூய்மை பணியாளர் ஒருவர் கூறியதாவது:
நான் கடந்த 15 வருடத்திற்கு மேலாக ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியில் ஈடுபட்டு வருகிறேன். தினக்கூலி அடிப்படையில் ரூ.700 சம்பளம் வாங்கி வந்தேன். தற்போது தனியாருக்கு கொடுக்கும் முடிவால் தங்களது சம்பளம் பாதியாக குறைந்து ரூ.350 மட்டுமே வர வாய்ப்புள்ளது.
இதனால் எங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும். எனவே தனியாரிடம் ஒப்படைக்கும் 152 அரசாணையை உடனடி யாக ரத்து செய்ய வேண்டும்.
தூய்மை பணியாளர், துப்புரவு மேற்பரையாளர், ஓட்டுநர், கணினி இயக்குனர், தெருவிளக்கு பராமரிப்பு ஆகியவற்றில் பணிபுரியும் தொழிலா ளர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும். தின கூலி தொழிலாளர்களுக்கு 1.4.2021 முதல் உயர்த்த ப்பட்டதன் அடிப்படையில் நிலுவை ஊதியத்தை கணக்கிட்டு அனைத்து தின ஊதிய தொழிலா ளர்க ளுக்கும் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பெண் தூய்மை பணியாளர் ஒருவர் கூறியதாவது:
நான் கடந்த 10 வருடமாக தூய்மை பணியில் ஈடுபட்டு வருகிறேன். எனக்கு படிப்பறிவு கிடையாது. தனியாரிடம் கொடுக்கும் முடிவை உடனடியாக கைவிட வேண்டும். இல்லை யென்றால் எங்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெறும்.
நாங்கள் எங்கள் குழந்தை குடும்ப த்தினருடன் போராடும் சூழ்நிலை உருவாகலாம். தொடர்ந்து எங்களது கோரிக்கை நிராகரிக்க ப்பட்டால் நாங்கள் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழி இல்லை. தூய்மை பணியா ளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை கைவிட வேண்டும்.
முதல் - அமைச்சர் இந்த விஷயத்தில் தலையிட்டு எங்களது நியாயமான கோரிக்கை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனால் மாநகராட்சி அலுவலகத்தில் 2-வது நாளாக பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. டவுன் டி.எஸ்பி. ஆனந்தகுமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒப்பந்த பணியாளர்கள் தூய்மை பணியாளர்கள் 2-வது நாளாக பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் மாநகர் முழுவதும் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன.
ஈரோடு மாநகர் பகுதியில் நாள் ஒன்றுக்கு 70 டன் வரை குப்பைகள் சேரும். அதனை அந்தந்த மண்டல த்துக்கு ஒதுக்கப்பட்ட தூய்மை பணியாளர்கள் வீடு, வீடாக சென்று மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து எடுத்து செல்வார்கள்.
ஆனால் இந்த பணி 2 நாட்களாக நடைபெ றாததால் குப்பைகள் குவிந்துள்ளன. கிட்டத்தட்ட 140 டன் குப்பைகள் வரை குவிந்து ள்ளது. இதனால் பொது மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
- பிரதம மந்திரியின் திருந்திய பயிர் காப்பீட்டுத்திட்டம் தமிழகத்தின் 37 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
- ஈரோடு மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் அக்ரிகல் சுரல் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
ஈரோடு:
விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதிஉதவி வழங்கி பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் மற்றும் அதிநவீன தொழில் நுட்பங்களை கடைபி டிப்பதை ஊக்குவிக்கவும், பிரதம மந்திரியின் திருந்திய பயிர் காப்பீட்டுத்திட்டம், தமிழகத்தின் 37 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் அக்ரிகல் சுரல் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
நடப்பு சம்பா பருவத்தில் நெல் பயிர் பிர்க்கா அளவில் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 28 பிர்காக்கள் அறிவிக்கை செய்யப்ப ட்டுள்ளன. அறிவிக்கை செய்யப்ப ட்டுள்ள பிர்காக்களின் கீழ் உள்ள அனைத்து வருவாய் கிராமங்களை சேர்ந்த அனை த்து விவசாயிகளும் திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். சம்பா நெல்பயிருக்கு பிரீமிய தொகையாக ஏக்கருக்கு ரூ.554.25 செலுத்த வேண்டும்.
அறிவிக்கை செய்யப்ப ட்டுள்ள பிர்காக்களை சார்ந்த கடன் பெறும் விவசாயிகள் தாங்கள் பயிர் கடன் பெறும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாக தங்கள் விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம்.
அறிவிக்கை செய்யப்ப ட்டுள்ள பிர்காக்களைச் சார்ந்த கடன் பெறா விவசாயிகள் நடப்பு பசலி ஆண்டுக்கான அடங்கல் அல்லது பயிர் சாகுபடி சான்றை கிராம நிர்வாக அலுவலரிடம் பெற்று அதனுடன் வங்கி கணக்குபுத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் சிட்டா ஆகியவற்றை பொது சேவை மையங்கள் அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் அல்லது தேசிய மயமாக்க ப்பட்ட வங்கிகள் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம்.
வருகின்ற 15-ந் தேதி சம்பா நெல் பயிருக்கு காப்பீடு செய்ய கடைசி நாளாகும். இறுதி நேர கூட்ட நெரிசலை தவிர்க்க வும் விண்ணப்பங்கள் விடுபடாமல் இருக்கவும் பிரதம மந்திரியின் திருந்திய பயிர் காப்பீட்டு திட்டத்தில் குத்தகை விவசாயிகள் உள்பட அனைத்து விவசாயிகளும் முன் கூட்டியே பதிவு செய்து தங்கள் சம்பா நெல் பயிர்களுக்கு ஏற்படும் எதிர்பாராத மகசூல் இழப்புகளில் இருந்து பாதுகாத்து பயனடையுமாறு ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சி.சின்னசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
- இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை தொடர்ந்து 102 அடியில் உள்ளது.
- குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் இன்று காலை முதல் நிறுத்தப்பட்டுள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய அணையாக பவானிசாகர் அணை உள்ளது. 105 அடி கொள்ள ளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.
கடந்த சில நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வந்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக கடந்த மாதம் 17-ந் தேதி பவானிசாகர் அணை 102 அடியை எட்டியது.
அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே பவானி ஆற்றுக்கு திருப்பி விடப்பட்டு வந்தது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை தொடர்ந்து 102 அடியில் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,566 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது.
அணையில் இருந்து தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு மட்டும் 300 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் இன்று காலை முதல் நிறுத்தப்பட்டுள்ளது.
- விளாங்கோம்பை கிராமத்தில் 45 ஊராளி இன பழங்குடி குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
- டி.என் பாளையம் வட்டார கல்வி அலுவலகத்திலும், டி.என்.பாளையம் வனச்சரக அலுவலகத்திலும் விளாங்கோம்பை கிராம மக்கள் மேற்கண்ட கோரி க்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.
டி.என்.பாளையம்:
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள டி.என்.பாளையம் அடுத்த கொங்கர் பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட விளாங்கோம்பை கிராமத்தில் நிரந்தரமாக ஒரு தொடக்கப் பள்ளியை தொடங்க வேண்டும் மற்றும் சாலை வசதியை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கத்தின் சார்பில் பள்ளி குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் 40-க்கும் மேற்பட்டோர் டி.என்.பாளையம் அண்ணாசிலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனை தொடர்ந்து டி.என் பாளையம் வட்டார கல்வி அலுவலகத்திலும், டி.என்.பாளையம் வனச்சரக அலுவலகத்திலும் விளாங்கோம்பை கிராம மக்கள் மேற்கண்ட கோரி க்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது:
விளாங்கோம்பை கிராமத்தில் 45 ஊராளி இன பழங்குடி குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
கொங்கர்பாளையம் ஊராட்சியில் வினோபாநகர் வரை பஸ் போக்குவரத்து வசதியுள்ளது. வினோபா நகர் பகுதியில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் அடர்ந்த வனப்பகுதியில் வசிக்கும் மலைக்கிராம பகுதிகளில் தரமான சாலை வசதியோ பஸ் போக்கு வரத்தோ இல்லாமல் பல ஆண்டுகளாக சிரமப்படு கிறோம்.
மலைக்கிராம மக்கள் நகரப்பகுதிக்கு வேலைக்கு வந்து செல்லவும் ரேசன் பொருட்கள், இதர மளிகை பொருட்கள் உள்ளிட்ட அடிப்படை பயன்பாட்டிற்கு நகரப்பகுதிக்கு வந்து செல்ல அடர்ந்த வனப்பகுதி வழியாகவே அச்சத்துடன் இரு சக்கர வாகனத்தில் மற்றும் நடந்தே வந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.
யானைகள், சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்கு களின் நடமாட்டம் மிக்க சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியாக விளாங்கோம்பை உள்ளதால் இந்தப் பாதையில் ஆள் நட மாட்டமே இருக்காது.
இந்த விளாங்கோம்பை மலைகிராமத்தை சேர்ந்த மாணவ- மாணவிகள் இந்த வழியாக பள்ளிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இவர்கள் பள்ளிக்கு செல்ல வேண்டுமாயின் அடர்ந்த வனப்பகுதியில் நான்கு காட்டாறுகளை கடந்து இந்த வனச்சாலையில் 8 கிலோ மீட்டர் பயணித்து வினோபா நகர் பகுதியில் உள்ள பள்ளிக்கு வந்து செல்ல வேண்டும்.
இதன் காரணமாகவே இந்த மலைகிராமத்தில் உள்ள மாணவ- மாணவி கள் நகர் பகுதியில் உள்ள பள்ளிக்கு செல்லாமல் இருந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் 2007-ம் ஆண்டு பள்ளி குழந்தைகள் ஒரு சரக்கு வாகனத்தில் வந்து வினோபாநகர் நடு நிலைப் பள்ளியில் படித்த னர். 2010-ம் ஆண்டு காட்டாற்று வெள்ளத்தில் தரை பாலங்கள் அடித்து செல்லப்பட்டன.
இதனால் பள்ளி குழந்தைகள் கல்வி தடைப்பட்டது. குடும்ப ஏழ்மை கருதி சில குழந்தைகள் பல்வேறு வேலைகளுக்கு சென்றனர்.
இதனைத் தொடர்ந்து 2014-ம் ஆண்டு இங்கு ஒரு குழந்தை தொழிலாளர் சிறப்பு பள்ளி தொடங்கப்பட்டது. இந்த பள்ளியும் கடந்த ஆண்டு மூடப்பட்டது. மூடப்பட்ட பள்ளியில் இருந்து மாணவ- மாணவி களை 20 பேரை வினோபா நகர் நடுநிலைப் பள்ளியிலும், 10 பேரை கொங்க ர்பாளையம் உயர்நிலைப் பள்ளியிலும் சேர்த்தனர்.
ஒரு தனியார் சரக்கு வாகனம் மூலம் விளா ங்கோம்பை மலைக்கிராம மாணவ- மாணவிகள் பள்ளிக்கு சென்று வந்தனர்.சில நாட்களுக்காக பெய்த கனமழை காரணமாக விளாங்கோம்பை வனப்பகுதியில் உள்ள காட்டாறுகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதில் பாதை முற்றிலும் சிதலமடைந்து தற்போது எந்த வாகனமும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் படி ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்குள் ஒரு தொடக்கப் பள்ளியை அரசு ஏற்படுத்த வேண்டும். ஆனால் இந்த பகுதியில் பள்ளி இல்லை.
எனவே, பள்ளிக்கல்வி த்துறை உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு விளாங்கோம்பை கிராமத்திலேயே நிரந்தரமாக ஒரு தொடக்கப் பள்ளியை தொடங்க வேண்டும் மற்றும் சாலை வசதியை மேம்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- அம்மாபேட்டை அருகே உள்ள சின்னப்பள்ளம் வழுக்குப்பாறையில் 60 அடி உயரத்தில் இருந்து நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
- இந்த நீர் வீழ்ச்சிகளில் குளிப்பதற்கும், ரசிப்பதற்கும் ஈரோடு மற்றும் சேலம் மாவட்டத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் பலர் வந்த வண்ணம் உள்ளனர்.
அம்மாபேட்டை:
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள சின்னப்பள்ளம் வழுக்குப் பாறை நீர்வீழ்ச்சி யில் தண்ணீர் கொட்டுவதால் பார்ப்பதற்கும் குளிப்ப தற்கும் சுற்று வட்டாரத்தில் இருந்து பொதுமக்கள் செல்கின்றனர்.
சேலம் மாவட்டப் பகுதியில் ஆரம்பித்து ஈரோடு மாவட்டத்தில் முடியும் மேற்கு தொடர்ச்சி மலையின் ஓர் பகுதியாக பாலமலை உள்ளது. சுமார் 40 கிலோ மீட்டர் தூரமும் கடல் மட்டத்தில் இருந்து 5967 மீட்டர் உயரம் கொண்ட தாக பாலமலை இருப்பதாக கூறப்படுகிறது.
மலையில் மழை பொழிவு ஏற்பட்டால் மழையின் கீழ் பகுதியில் உள்ள ஏரிகளுக்கு தண்ணீர் வரும் பால மலையில் நெரிஞ்சிபேட்டை, சின்னப்பள்ளம், ஊமா ரெட்டியூர், குருவரெட்டியூர், கண்ணாமூச்சி போன்ற பகுதிகளில் மிக முக்கியமான 7 பள்ளங்கள் உள்ளது. இதில் மழை காலங்களில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடும்.
ஆனால் இந்த பகுதிகளில் கடந்த 3 வருடங்களாக போதிய மழை பெய்யாததால் இந்த பள்ளங்களில் தண்ணீர் வரத்து இன்றி வரண்டு போய் கிடந்தது. இதனால் ஏரிகளும் தண்ணீ ரின்றி காணப்பட்டது.
இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக அம்மா பேட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக பாலமலை சுற்றியுள்ள சிறு, சிறு அருவி களில் தண்ணீர் கொட்டி வருகிறது.
மலை பகுதியில் பெய்த மழையில் காரணமாக சின்னபள்ளம் வழுக்குப் பாறை நீர் ஊற்று, நெரிஞ்சி ப்பேட்டை வெள்ளைபாறை நீர் ஊற்று, கொடம்பக்காடு, ஊமா ரெட்டியூர் யானை கட்டிபள்ளம், நாவரளி ஊற்று, குருவரெட்டியூர் பகுதியில் உள்ள வெள்ளை பாறை, பெருமாள் கோவில் நீருற்று, போன்ற பகுதிகளில் நீர் வரத்து அதிகரித்தது.
இதனால் பாலமலை பகுதியில் பல்வேறு இடங்களில் நீர்வீழ்ச்சிகள் உருவாகி உள்ளன. மேலும் அம்மாபேட்டை அருகே உள்ள சின்னப்பள்ளம் வழுக்குப்பாறையில் 60 அடி உயரத்தில் இருந்து நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் பசுமையாக காட்சி தருகிறது.
இது பற்றி அறிந்ததும் இந்த நீர் வீழ்ச்சிகளில் குளிப்பதற்கும், ரசிப்பதற்கும் ஈரோடு மற்றும் சேலம் மாவட்டத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் பலர் வந்த வண்ணம் உள்ளனர்.
இந்த அருவிக்கு செல்வதற்கு மேட்டூர் - பவானி மெயின் ரோட்டில் சின்னப்பள்ளத்தில் இருந்து மேற்குப் பகுதியில் ஒரு கிலோ மீட்டர் தூரம் தார் ரோடு செல்கிறது. அதன் பின்பு மலைப்பாதையில் 1 கிலோ மீட்டர் தூரம் ஒத்தையடி பாதையில் மலை ஏற வேண்டும்.
மலை மேல் செல்ல சற்று கட்டினமாக இருந்தாலும் அதனையும் பொருட்படு த்தாமல் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் மேலே சென்று கொட்டும் அருவி யில் குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.
இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறும் போது, இந்த அருவியில் தண்ணீர் கொட்டுவதால் குளிப்பதற்கு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை குடும்பம் குடும்பமாக வந்த வண்ணம் உள்ளனர். அருவிக்குச் செல்ல கரடு முரடான பாதையில் தான் செல்ல வேண்டி இருக்கிறது.
பருவ மழை பெய்யும் காலங்களில் இந்த அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் தினந்தோறும் வருகின்றனர். வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த அருவி பாதை சீரமைத்து சுற்றுலா தளமாக மாற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக பிருந்தாவின் தாய் வளர்மதி சித்தோடு போலீசில் புகார் செய்தார்.
- கொலை செய்யப்பட்ட பிருந்தா முதலில் கார்த்தியை காதலித்து வந்தார்.
பவானி:
ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள நசியனூர் ராயப்பாளையம் ரோடு நெசவாளர் காலனியைச் சேர்ந்தவர் சென்னியப்பன். இவரது மனைவி வளர்மதி. இவர்களுக்கு மங்கையர்கரசி, பிருந்தா(23) ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.
மூத்த மகள் மங்கையர்கரசி திருமணமாகி மொடக்குறிச்சியில் வசித்து வருகிறார். 2-வது மகள் பிருந்தா வெட்டுக்காட்டு வலசை சேர்ந்த கார்த்தி என்பவரை காதலித்து கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு கலப்பு திருமணம் செய்து கொண்டார்.
பிருந்தா தற்போது 4 மாத கர்ப்பிணியாக இருந்தார். கடந்த தீபாவளி அன்று பிருந்தாவின் பெற்றோர் மொடக்குறிச்சியில் உள்ள மூத்த மகள் வீட்டுக்கு சென்று விட்டனர். அவரது கணவர் கார்த்தி வேலை விசயமாக திண்டுக்கல் சென்று விட்டார்.
பிருந்தா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இந்த நிலையில் பிருந்தாவின் தாய் தினமும் தனது மகளிடம் செல்போனில் பேசி வந்தார். கடைசியாக கடந்த 27-ந் தேதி இரவு 10 மணி அளவில் வளர்மதி தனது மகள் பிருந்தாவிடம் உடல் நலம் குறித்து போனில் விசாரித்தார்.
மறுநாள் 28-ந் தேதி காலை வெகுநேரம் ஆகியும் பிருந்தாவின் நடமாட்டம் இல்லை. இதனால் சந்தேகமடைந்த பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஒரு பெண் வீட்டிற்கு சென்று பார்த்து உள்ளார். அப்போது பிருந்தா இறந்து கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண் பிருந்தாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து பதறி அடித்துக்கொண்டு பெற்றோர் வீட்டிற்கு வந்து பிருந்தாவின் உடலைப்பார்த்து கதறி அழுதனர்.
மேலும் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக பிருந்தாவின் தாய் வளர்மதி சித்தோடு போலீசில் புகார் செய்தார். போலீசார் தற்கொலை என்று வழக்கு பதிவு செய்து பிருந்தாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் பிருந்தாவின் சாவுக்கான காரணம் பற்றி தெரிந்து கொள்ள பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்து இருந்தனர். அப்போது பிரேத பரிசோதனை அறிக்கையில் பிருந்தா கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் தற்கொலை வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணையை தொடங்கினர். சித்தோடு இன்ஸ்பெக்டர் முருகையா, சப்-இன்ஸ்பெக்டர் பாபு செந்தில் குமார் ஆகியோரைக் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
அப்போது போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது,
கொலை செய்யப்பட்ட பிருந்தா முதலில் கார்த்தியை காதலித்து வந்தார். இந்த நேரத்தில் பிருந்தாவின் பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒரு பெண்ணின் வீட்டிற்கு அவரது உறவினரான திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரது மகன் அரவிந்த் (21) என்பவர் அடிக்கடி வந்து உள்ளார். இதனால் அரவிந்துடனும் பிருந்தாவுக்கு பழக்கம் ஏற்பட்டு உள்ளது. நாளடைவில் அது காதலாக மாறி உள்ளது.
ஒரே நேரத்தில் பிருந்தா கார்த்தி, அரவிந்த் ஆகியோரை காதலித்து வந்து உள்ளார். இதில் கார்த்தி முந்திக்கொண்டு பிருந்தாவை திருமணம் செய்து கொண்டார். இது பற்றி தெரிய வந்ததும் அரவிந்த் அதிர்ச்சி அடைந்தார்.
இந்த நிலையில் தான் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பிருந்தா வீட்டிற்கு அரவிந்த் வந்து உள்ளார். அவர்கள் நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது அரவிந்த் பிருந்தாவை நாம் திருமணம் செய்து கொள்ளலாம் வா என்று அழைத்து உள்ளார். அதற்கு பிருந்தா நான் தற்போது 4 மாத கர்ப்பிணியாக உள்ளேன். எனவே உன்னுடன் வர முடியாது என்று மறுத்து உள்ளார்.
இதைக் கேட்டு ஆத்திரம் அடைந்த அரவிந்த் என்னுடன் வரவில்லை என்றால் நாம் 2 பேரும் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று கூறி உள்ளார். அதற்கு பிருந்தா என்னால் தற்கொலை செய்து கொள்ள முடியாது நீ வேண்டுமானால் என்னை கொலை செய்து விட்டு நீ தற்கொலை செய்து கொள் என்று கூறி உள்ளார்.
இதையடுத்து அரவிந்த் பிருந்தாவை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு சென்னைக்கு தப்பி ஓடிவிட்டார். ஓட்டல் மேனேஜ்மென்ட் படித்து உள்ள அரவிந்த் சென்னையில் உள்ள ஒரு பிரபல ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். இதையடுத்து தனிப்படை போலீசார் சென்னைக்கு சென்று அரவிந்தை கைது செய்து ஈரோட்டுக்கு அழைத்து வந்தனர். பின்னர் போலீசார் அவரை ஈரோடு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- நிதி இல்லாததால் அனைத்து வார்டுகளிலும் முக்கிய பணிகளை செய்து வருவதாக மேயர் விளக்க மளித்தார்.
- இதேபோல் மற்ற கவுன்சிலர்களும் தங்களது வார்டியில் உள்ள குறைகள் குறித்து விளக்கம் அளித்து பேசினர்.
ஈரோடு, அக்.31-
ஈரோடு மாநகராட்சி அவசர கூட்டம் மாநகராட்சி அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்றது. மேயர் நாகரத்தினம் தலைமை தாங்கினார்.துணை மேயர் செல்வராஜ், மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
கூட்டம் தொடங்கியதும் மேயர் நாகரத்தினம் திருக்குறள் வாசித்து அதற்கான பொருள் குறித்து விளக்கி பேசினார். பின்னர் 30 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டது.
கூட்டம் தொடங்கியதும், பேசிய 8-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் ஆதி பேசும் போது, தனது வார்டில் எந்த பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை என அடுக்கடுக்காக குற்றம் சாட்டினார்.
இதனால் அவருக்கும் மேயர் நாகரத்தினம், துணைமேயர் செல்வராஜிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
நிதி இல்லாததால் அனைத்து வார்டுகளிலும் முக்கிய பணிகளை செய்து வருவதாக மேயர் விளக்க மளித்தார்.
இதனை ஏற்காமல் தொடர்ந்து கவுன்சிலர் ஆதி வாக்கு வாதம் செய்து கொண்டிருந்ததால் ஆவேசமடைந்த மேயர், தனது இருக்கையில் இருந்து எழுந்து கவுன்சிலர் இருக்கைக்கு சென்று அவரது குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து சமாதான ப்படுத்தினார்.
மற்ற கவுன்சிலர்களும் சமாதானப்படுத்தினர். இதனால் மாநகராட்சி கூட்டரங்கில் பரபரப்பு நிலவியது.
தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில், மாநகராட்சியில் ஒப்பந்த பணிகளை தனியாருக்கு விடும் தமிழக அரசின் அரசாணையை எதிர்த்து தீர்மானம் கொண்டு வர கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.
அப்போது மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் தங்கமுத்து பேசும்போது, வார்டை நான்காக பிரிப்பது குறித்து எங்களுடன் கலந்தோசி க்காமல் முடிவு செய்யப்பட்டுள்ளது.
எங்களையும் அந்த குழுவில் இடம் பெற செய்ய வேண்டும். அப்போதுதான் வளர்ச்சிப் பணி தங்கு தடை இன்றி நடைபெறும் என்றார்.
மேலும் தூய்மை பணியாளர்கள் அவர்கள் உரிமைக்காக போராடி வருகின்றனர். தனியார் மயமாக்கு வதை கைவிட வேண்டும் .
அவர்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் இல்லை என்றால் அ.தி.மு.க. சார்பில் நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம் என்றார்.
அப்போது பேசிய ஆணை யாளர் சிவக்குமார் மாநகராட்சி ஒப்பந்த பணியாளர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும். இது குறித்து அரசு கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றார்.
இதனை ஏற்று அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்யாமல் சபை நடவடிக்கைகளில் தொடர்ந்து பங்கேற்றனர்.
36-வது வார்டு கவுன்சிலர் பழனியப்பா செந்தில்குமார் பேசும்போது, என் வார்டில் நாய் தொல்லை அதிக அளவில் உள்ளது.
அதனை கட்டுப்படுத்த மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் என் வார்டில் குண்டும் குழியுமாக ரோடுகள் காட்சியளிப்பதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
அதனைப் போர்க்கால அடிப்படையில் சீரமைத்து தர வேண்டும் என்றார்.
இதேப்போல் 43- வது வார்டு கவுன்சிலர் சபுராமா சாதிக் பேசும்போது, என்னுடைய வார்டில் நடைபெறும் பணிகள் குறித்து அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டும். இதேபோல் மற்ற மாநகராட்சியில் குப்பை வரி எடுக்கப்பட்டுவிட்டது.
இதனால் சொத்து வரி வசூல் பாதிக்கப்படுகிறது.
எனவே நமது மாநகராட்சியில் குப்பை வரி நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதேபோல் மற்ற கவுன்சிலர்களும் தங்களது வார்டியில் உள்ள குறைகள் குறித்து விளக்கம் அளித்து பேசினர்.
- உறுதி மொழியை மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா வாசிக்க அனைத்துத் துறை அலுவலர்களும் பின் தொடர்ந்து வாசித்து ஏற்றுக் கொண்டனர்.
- சுமார் 250 மாணவ, மாணவியர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
ஈரோடு:
இந்திய நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் மற்றும் பாதுகாப்பையும் பேணவும், மேலும் சர்தார் வல்லபாய் பட்டேலின் தொலைநோக்கு பார்வையாலும், நடவடிக்கைகளாலும், சாத்தியமாக்கப்பட்ட ஒன்றினைந்த தேசத்தின் நல்லுணர்வினை பேணவும் மற்றும் நாட்டின் உள் பாதுகாப்பினை உறுதி செய்ய பங்களிப்பை வழங்கும் பொருட்டும், தேசிய ஒற்றுமை நாள் உறுதி மொழி எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில், தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா தலைமையில் நடைபெற்றது.
உறுதி மொழியை மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா வாசிக்க அனைத்துத் துறை அலுவலர்களும் பின் தொடர்ந்து வாசித்து ஏற்றுக் கொண்டனர்.
முன்னதாக கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் தேசிய ஒற்றுமை தின விழிப்புணர்வு ஓட்டத்தினை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த பேரணியானது, கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கி, முக்கிய சாலைகள் வழியே சென்று அரசு தலைமை மருத்துவ–மனை வளாகத்தை வந்தடைந்தது.
இதில் சுமார் 250 மாணவ, மாணவியர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் எஸ்.கணேஷ் (பொது), தனித்துணை கலெக்டர் (ச.பா.தி) குமரன், மாவட்ட விளையாட்டு அலுவலர் சதீஷ்குமார், தொடக்க கல்வி அலுவலர் ஜோதி சந்திரா உள்பட அனைத்து துறை அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.






