ஒப்பந்த ஊழியர்கள் 2-வது நாளாக பணி புறக்கணித்து போராட்டம்

2-வது நாளாக ஒப்பந்த பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் மாநகராட்சி அலுவலகத்திற்கு திரண்டு வந்து முற்றுகையிட்டு பணி புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால் மாநகராட்சி அலுவலகத்தில் 2-வது நாளாக பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
ஒப்பந்த ஊழியர்கள் 2-வது நாளாக பணி புறக்கணித்து போராட்டம்
Published on

ஈரோடு:

ஈரோடு மாநகராட்சியில் பொது சுகாதாரம் உள்பட பல்வேறு பணிகளில் ஆயிரத்து 800-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கடந்த 15 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் அவுட்சோர்சிங் முறையில் தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை கண்டித்து ஊழியர்கள் மாநகராட்சியை முற்றுகையிட்டு நேற்று போராட்டம் நடத்தினர்.

காலையில் தொடங்கிய போராட்டம் மாலை 5 மணி வரை நடந்தது. இதில் மேயர் நாகரத்தினம், மாநகராட்சி கமிஷனர் சிவக்குமார் ஆகியோரை சந்தித்து பேசினார்கள். இதில் எந்த ஒரு சுமூக முடிவும் ஏற்படவில்லை.

இந்நிலையில் இன்று 2-வது நாளாக 500-க்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் மீண்டும் மாநகராட்சி அலுவலகத்திற்கு திரண்டு வந்து முற்றுகையிட்டு பணி புறக்கணித்து போரா ட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து தூய்மை பணியாளர் ஒருவர் கூறியதாவது:

நான் கடந்த 15 வருடத்திற்கு மேலாக ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியில் ஈடுபட்டு வருகிறேன். தினக்கூலி அடிப்படையில் ரூ.700 சம்பளம் வாங்கி வந்தேன். தற்போது தனியாருக்கு கொடுக்கும் முடிவால் தங்களது சம்பளம் பாதியாக குறைந்து ரூ.350 மட்டுமே வர வாய்ப்புள்ளது.

இதனால் எங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும். எனவே தனியாரிடம் ஒப்படைக்கும் 152 அரசாணையை உடனடி யாக ரத்து செய்ய வேண்டும்.

தூய்மை பணியாளர், துப்புரவு மேற்பரையாளர், ஓட்டுநர், கணினி இயக்குனர், தெருவிளக்கு பராமரிப்பு ஆகியவற்றில் பணிபுரியும் தொழிலா ளர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும். தின கூலி தொழிலாளர்களுக்கு 1.4.2021 முதல் உயர்த்த ப்பட்டதன் அடிப்படையில் நிலுவை ஊதியத்தை கணக்கிட்டு அனைத்து தின ஊதிய தொழிலா ளர்க ளுக்கும் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பெண் தூய்மை பணியாளர் ஒருவர் கூறியதாவது:

நான் கடந்த 10 வருடமாக தூய்மை பணியில் ஈடுபட்டு வருகிறேன். எனக்கு படிப்பறிவு கிடையாது. தனியாரிடம் கொடுக்கும் முடிவை உடனடியாக கைவிட வேண்டும். இல்லை யென்றால் எங்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெறும்.

நாங்கள் எங்கள் குழந்தை குடும்ப த்தினருடன் போராடும் சூழ்நிலை உருவாகலாம். தொடர்ந்து எங்களது கோரிக்கை நிராகரிக்க ப்பட்டால் நாங்கள் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழி இல்லை. தூய்மை பணியா ளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை கைவிட வேண்டும்.

முதல் - அமைச்சர் இந்த விஷயத்தில் தலையிட்டு எங்களது நியாயமான கோரிக்கை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனால் மாநகராட்சி அலுவலகத்தில் 2-வது நாளாக பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. டவுன் டி.எஸ்பி. ஆனந்தகுமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒப்பந்த பணியாளர்கள் தூய்மை பணியாளர்கள் 2-வது நாளாக பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் மாநகர் முழுவதும் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன.

ஈரோடு மாநகர் பகுதியில் நாள் ஒன்றுக்கு 70 டன் வரை குப்பைகள் சேரும். அதனை அந்தந்த மண்டல த்துக்கு ஒதுக்கப்பட்ட தூய்மை பணியாளர்கள் வீடு, வீடாக சென்று மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து எடுத்து செல்வார்கள்.

ஆனால் இந்த பணி 2 நாட்களாக நடைபெ றாததால் குப்பைகள் குவிந்துள்ளன. கிட்டத்தட்ட 140 டன் குப்பைகள் வரை குவிந்து ள்ளது. இதனால் பொது மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com