108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது

நிறைமாத கர்ப்பிணியான மைலாவுக்கு இன்று அதிகாலை 5 மணியளவில் பிரசவ வலி ஏற்பட்டது.மருத்துவ குழுவினர் மைலாவுக்கு பிரசவம் பார்த்தனர். இதில் மைலாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாலுகா கடம்பூர் மாக்காம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரங்கசாமி. இவருடைய மனைவி மைலா (21). நிறைமாத கர்ப்பிணியான மைலாவுக்கு இன்று அதிகாலை 5 மணியளவில் பிரசவ வலி ஏற்பட்டது.

இதையடுத்து அவரது உறவினர் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் மருத்துவ குழுவினருடன் குத்தியாளத்தூரில் இருந்து மயிலாவை ஏற்றி கொண்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தது.

108 ஆம்புலன்ஸ் கிட்டா பாளையம் வனப்பகுதியில் வந்தபோது மைலாவுக்கு பிரசவ வலி அதிகரிக்கவே, நிலைமையை புரிந்து கொண்ட ஆம்புலன்ஸ் டிரைவர் வாகனத்தை ஓரமாக நிறுத்தினார்.

பின்னர் மருத்துவ குழுவினர் மைலாவுக்கு பிரசவம் பார்த்தனர். இதில் மைலாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் தாயும், சேயும் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

தக்க நேரத்தில் துரிதமாக செயல்பட்டு பெண்ணுக்கு பிரசவம் பார்த்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவ குழுவினருக்கு பொது மக்கள் நன்றி தெரிவித்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com