என் மலர்tooltip icon

    ஈரோடு

    • கடந்த சில நாட்களாக நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது.
    • மேலும் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும், கால்நடைகளை நீர் நிலைக்கு அழைத்துச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டத்தை சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

    பவானிசாகர் அணை யின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

    இதனால் பவானிசாகர் அணையின் நீர்மட்டமும் 105 அடியை நெருங்கி வருகிறது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.08 அடியாக உள்ளது.

    அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரத்து 48 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது.அணையில் இருந்து பவானி ஆற்றின் வழியாக உபரிநீராக 5, 100 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.

    இதனால் பவானி ஆற்றில் இரு கரையோரம் தண்ணீர் தொட்டபடி செல்கிறது. இதனால் பவானி ஆற்றில் பொது மக்கள் துணி துவைக்குவோ குளிக்கவோ கூடாது என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும், கால்நடைகளை நீர் நிலைக்கு அழைத்துச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதேபோல் கீழ்பவானி வாய்க்காலுக்கு வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மொத்தம் 5600 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வரு கிறது. 

    • கொடுமுடி அருகே உள்ள வளந்தாங்கோட்டையில் இருந்து 7 பேர் காரில் கரூர் நோக்கி நேற்று சென்று கொண்டு இருந்தனர்.
    • படுகாயம் அடைந்த 4 பேருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    கொடுமுடி:

    கொடுமுடி அருகே உள்ள வளந் தாங்கோட்டையில் இருந்து 7 பேர் காரில் கரூர் நோக்கி நேற்று சென்று கொண்டு இருந்தனர்.

    ஒத்தக்கடை அருகே என்ற பகுதியில் மாலை 6 மணி அளவில் சென்றபோது காரும் கரூரில் இருந்து ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்த லாரியும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக் கொண்டன.

    இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கி சேதமடைந்தது. இதில் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி உள்ளே இருந்த ஊட்டி கலைஞர் நகரை சேர்ந்த ரவிக்குமார் (70) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    காரில் இருந்த வளந்தாங் கோட்டையைச் சேர்ந்த கார்த்தி, சங்கர், செந்தில், குப்புசாமி, சசிதரன், சரவணன் (40) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

    விபத்து நடந்ததும் லாரியை நிறுத்தாமல் அங்கிருந்து டிரைவர் தப்பி சென்று விட்டார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் கொடுமுடி போலீசருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதைத் தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ரவிக்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த 6 பேரையும் சிகிச்சைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர்கள் கரூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்ப–ட்டனர்.

    இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சரவணன் என்பவர் இன்று காலை பரிதாபமாக இறந்தார். இதனால் இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. படுகாயம் அடைந்த 4 பேருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கேரள மாநிலம் வயநாட்டில் இருந்து ஒரு சுற்றுலா வேன் பயணிகளை ஏற்றிக்கொண்டு சேலம் நோக்கி சென்றது.
    • சுற்றுலா வேன் கவிழ்ந்து பஸ்சுக்காக காத்திருந்த மாணவர் கவிணேஷ் மீது விழுந்தது.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கணபதிபாளையம் காந்திநகரை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி பிரியா. இவர்களது மகன் கவிணேஷ் (12). இவர் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள அரசு நிதி உதவி பெறும் ஒரு பள்ளியில் 8-ம்வகுப்பு படித்து வந்தார்.

    மாணவர் கவிணேஷ் தினமும் காந்திநகர் பஸ் நிறுத்தத்தில் இருந்து அரசு பஸ் மூலம் பள்ளிக்கு சென்று வந்தார். வழக்கம்போல் இன்று காலையும் மாணவர் கவிணேஷ் பள்ளிக்கு புறப்பட்டு காந்திநகர் பஸ் நிறுத்தத்தில் உள்ள வாய்க்கால் கரையில் பஸ்சுக்காக காத்திருந்தார்.

    அப்போது கேரள மாநிலம் வயநாட்டில் இருந்து ஒரு சுற்றுலா வேன் பயணிகளை ஏற்றிக்கொண்டு சேலம் நோக்கி சென்றது. பஸ் ஈரோடு-சத்தியமங்கலம் மெயின் ரோட்டில் வந்தபோது குறுக்கே மோட்டார் சைக்கிளில் ஒருவர் வந்தார்.

    அப்போது சுற்றுலா வேன் டிரைவர் மோட்டார் சைக்கிள் மீது மோதாமல் இருக்க திடீர் பிரேக் போட்டார். இதில் நிலைதடுமாறிய சுற்றுலா வேன் கவிழ்ந்து பஸ்சுக்காக காத்திருந்த மாணவர் கவிணேஷ் மீது விழுந்தது.

    இதில் மாணவர் கவிணேஷ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார். இதுகுறித்து தெரிய வந்ததும் கடத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பலியான மாணவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இறந்த ரவிக்குமார் தன்னை கூப்பிடுவதாக அடிக்கடி கோவிந்தராசு கூறி வந்துள்ளார்.
    • கவுந்தப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அடுத்த ஓம் சக்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராசு (41). இவர் சலங்கபாளையம் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வந்தார்.

    இவரது மனைவி பவளக்கொடி (40). இவர் பெ.மேட்டுப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

    பெ.மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ரவிக்குமார் என்பவர் கோவிந்தராசின் நெருங்கிய நண்பராக இருந்தார். இந்நிலையில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு ரவிக்குமார் தற்கொலை செய்து கொண்டார்.

    இதன் பின்னர் இறந்த ரவிக்குமார் தன்னை கூப்பிடுவதாக அடிக்கடி கோவிந்தராசு கூறி வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று பெ.மேட்டுப்பாளையம் வெங்கமேடு மணிக்காரர் தோட்டம் அருகே உள்ள தென்னை மரத்தடியில் கோவிந்தராசு மயங்கிய நிலையில் கிடந்தார்.

    அவரது அருகே மது பாட்டில் மற்றும் விஷ மருந்து டப்பா இருந்துள்ளது. அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு கவுந்தப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். கோவிந்தராசை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    போலீசார் விசாரணையில் சம்பவத்தன்று மதுவில் விஷம் கலந்து குடித்து கோவிந்தராசு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

    இது குறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வழக்கம்போல் மாணவர் திவாகர் இன்று காலை 7.40 மணி அளவில் குதிரைக்கல்மேடு பகுதியில் பள்ளி வேனுக்காக காத்திருந்தார். வேன் வந்ததும் அதில் ஏறி பள்ளிக்கு சென்றார்.
    • வேன் தொடர்ந்து மற்ற மாணவர்களை ஏற்றி செல்ல கோனேரிபட்டி பேரேஜ் நோக்கி சென்றது. அப்போது வேனில் ஏறிய மாணவர் திவாகர் முன்படிக்கட்டு வாசல் அருகே நின்று பயணித்தார்.

    அம்மாபேட்டை:

    ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள குதிரைக்கல்மேடு என்ற பகுதியை சேர்ந்தவர் மாதையன், மில் தொழிலாளி. இவரது மனைவி தங்கமணி. இவர்களுக்கு திவாகர் (13), ஜீவா (3) என்ற 2 மகன்கள் உள்ளனர்.

    திவாகர் அம்மாபேட்டை அருகே உள்ள பூதப்பாடியில் செயல்படும் அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். தினமும் இவர் பள்ளிக்கு சொந்தமான வேனில் சென்று வந்தார்.

    வழக்கம்போல் மாணவர் திவாகர் இன்று காலை 7.40 மணி அளவில் குதிரைக்கல்மேடு பகுதியில் பள்ளி வேனுக்காக காத்திருந்தார். வேன் வந்ததும் அதில் ஏறி பள்ளிக்கு சென்றார்.

    வேன் தொடர்ந்து மற்ற மாணவர்களை ஏற்றி செல்ல கோனேரிபட்டி பேரேஜ் நோக்கி சென்றது. அப்போது வேனில் ஏறிய மாணவர் திவாகர் முன்படிக்கட்டு வாசல் அருகே நின்று பயணித்தார். வேன் கோனேரிபட்டி பேரேஜ் கதவணை மின்நிலைய சோதனை சாவடி அருகே சென்றபோது டிரைவர் திடீர் பிரேக் போட்டார்.

    அப்போது வேனுக்குள் இருந்த மாணவர் திவாகர் நிலைதடுமாறி முன்பக்க படிக்கட்டு வழியாக கீழே தவறி விழுந்தார். அப்போது அந்த வேனின் பின் சக்கரம் அவரது தலையில் ஏறி இறங்கி நசுக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே மாணவர் திவாகர் துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் பலியானார். இதைப்பார்த்த மற்ற மாணவர்கள் அலறி சத்தம் போட்டனர். இதையடுத்து டிரைவர் வேனை நிறுத்தினார். பின்னர் கீழே இறங்கி சென்று பார்த்தபோது திவாகர் பின்பக்க சக்கரத்தில் சிக்கி இறந்து கிடப்பது தெரிய வந்தது.

    பின்னர் சம்பவம் குறித்து பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடி வந்து மகனின் உடலை பார்த்து கதறி அழுதனர். மேலும் இந்த விபத்து குறித்து அம்மாபேட்டை போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

    அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் பலியான மாணவர் திவாகர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் பள்ளி வேன் டிரைவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • பாதயாத்திரை சீசனுக்கு கோவில்களுக்கு செல்வோருக்கு பெரிய பைகளை விட ஜோன்லா பை, இருமுடி பை அவசியம் தேவை.
    • எடை குறைவு என்பதுடன் எளிதில் உலர்ந்து விடுவதுடன் தூக்கி செல்வதும் எளிதாகும்.

    ஈரோடு:

    இந்தியாவில் ஒவ்வொரு சீசனிலும் குறிப்பிட்ட சுவாமி வழிபாட்டுக்கான யாத்திரை, மாலை அணிவித்து செல்லுதல் போன்றவை நடக்கிறது. இதன் படி தமிழகம் உள்பட தென் மாநிலங்களில் முருகன், அய்யப்பன், மாரியம்மன் வழிபாடு அதிகம் நடக்கிறது.

    இந்த கோவில்களுக்கு இருமுடி கட்டியும், விரதம் இருந்தும், பாதயாத்திரையாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் செல்கின்றனர். இவர்களுக்கான துணியால் ஆன இருமுடி ஜோல்னா பையை ஈரோடு அடுத்த நாராயணவலசு பகுதியில் தயாரித்து அவற்றில் சுவாமி படங்களுடன் ஸ்லோகங்கள் பிரிண்ட் செய்து பல்வேறு மாவட்டங்கள், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கின்றனர்.

    இதுகுறித்து இருமுடி ஜோல்னா பை உற்பத்தியில் ஈடுபடும் சுகுமாரன் என்பவர் கூறும் போது:-

    பாதயாத்திரை சீசனுக்கு கோவில்களுக்கு செல்வோருக்கு பெரிய பைகளை விட ஜோன்லா பை, இருமுடி பை அவசியம் தேவை. எடை குறைவு என்பதுடன் எளிதில் உலர்ந்து விடுவதுடன் தூக்கி செல்வதும் எளிதாகும்.

    இந்த பை ஈரோடு பகுதியில் உற்பத்தி, பிரிண்ட் செய்து தருகிறோம். மார்கழி, தை, மாசி, பங்குனி, மாதங்களில் முருகனுக்கும், ஆடி மற்றும் மார்கழி மாதம் அம்மனுக்கும், கார்த்திகை முதல் தை வரை ஐய்யப்பனுக்கும் மேல்மருவத்தூர், சமயபுரம், பண்ணாரி அம்மன் கோவில் யாத்திரை செல்லும் சீசன் காலமாகும்.

    இதற்காக இருமுடி பையுடன், ஜோல்னா பை பிரிண்ட் செய்து தமிழகம் உள்பட தென் மாநிலங்கள், ஒடிசா மாநிலத்திற்கும், கனடா உள்ளிட சில வெளிநாடுகளுக்கும் அனுப்புகிறோம். நீலம், கருப்பு, மஞ்சள், பச்சை போன்ற நிறங்களில் ஜோல்னா பையும், இருமுடி பையும் தயாரித்து வழங்குகிறோம். இவை 160 ரூபாய் முதல் 180, 195 ரூபாய் வரையிலான விலையில் கிடைக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஈரோட்டில் இருந்து இன்று காலை முத்தூர் நோக்கி மக்காச்சோளம் லோடு ஏற்று கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டு இருந்தது.
    • இதனால் அந்த பகுதியில் அடுத்தடுத்து இருந்த 5 மின்கம்பங்கள் உடைந்து சேதம் அடைந்தன.

    கொடுமுடி:

    ஈரோட்டில் இருந்து இன்று காலை முத்தூர் நோக்கி மக்காச்சோளம் லோடு ஏற்று கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டு இருந்தது.

    லாரி வெள்ளகோவில் ரோடு அருகே விளக்கேத்தி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது சாலையின் ஒரு பள்ளத்தில் திடீரென லாரியின் இரு சக்கரங்கள் சிக்கி ஒரு பகுதி கவிழ்ந்த நிலையில் மற்றொரு பகுதி மேல்நோக்கி இருந்தது. லாரி பள்ளத்தில் கவிழ்ந்து அருகில் இருந்த மின்கம்பத்தில் மோதியது.

    இதனால் அந்த பகுதியில் அடுத்தடுத்து இருந்த 5 மின்கம்பங்கள் உடைந்து சேதம் அடைந்தன. உடைந்த மின் கம்பங்கள் சாலையில் விழுந்ததால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இது குறித்து தகவல் கிடைத்ததும் மின் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் ஜே.சி.பி. எந்திரம் வரவழைக்கப்பட்டு பள்ளத்தில் கவிழ்ந்த லாரி நேராக நிமிர்த்தி வைக்கப்பட்டது. இந்த விபத்தில் டிரைவருக்கு காயம் ஏற்படவில்லை. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    • சென்னிமலை மலை முருகன் கோவிலுக்கு செல்லக்கூடிய 2-வது கொண்டை ஊசி வளைவில் மண்சரிவு ஏற்பட்டு பெரிய கற்கள் ரோட்டில் கிடந்தது.
    • இந்த மண்சரிவால் எவ்வித பாதிப்பும் இல்லை

    சென்னிமலை:

    சென்னிமலை பகுதியில் கடந்த 2 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் அதிகபட்சமாக 99 மில்லி மீட்டர் அளவு சென்னிமலையில் மழை பதிவாகியிருந்தது.

    இந்த நிலையில் சென்னிமலை மலை முருகன் கோவிலுக்கு செல்லக்கூடிய 2-வது கொண்டை ஊசி வளைவில் மண்சரிவு ஏற்பட்டு பெரிய கற்கள் ரோட்டில் கிடந்தது.

    இது குறித்து அறிந்த கோவில் பணியாளர்கள் உடனடியாக செயல் அலுவலருக்கு தகவல் தெரிவித்து பொக்லைலன் எந்திரம் மூலம் ஒரு மணி நேரத்தில் மண்சரிவு கற்களை அகற்றினர்.

    இந்த மண்சரிவால் எவ்வித பாதிப்பும் இல்லை. தொடர்ந்து இடைவிடாது மழை பெய்ததால் மண் சரிவு ஏற்பட்டு கற்கள் சரிந்துள்ளதாக தெரிகிறது.

    • சென்னிமலை அருகே உள்ளது ஒரத்துப்பாளையம் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 10 அடி உயர்ந்து உள்ளது.
    • அணையில் இருந்து 514 கன அடி தண்ணீர் நொய்யல் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ளது ஒரத்துப்பாளையம் அணை. 40 அடி உயரம் உள்ள இந்த அணையில் கடந்த சில நாட்களாக 5 அடி தண்ணீர் மட்டுமே இருந்தது. மேலும் அணைக்கு நீர்வரத்தும் குறைவாகவே இருந்தது.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக நீர் பிடிப்பு பகுதியான கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் ஒரத்து ப்பாளையம் அணைக்கு நீர்வரத்து 204 கன அடியில் இருந்து 1,193 கன அடியாக உயர்ந்தது.

    நீர்வரத்து அதிகரித்ததால் நேற்று (சனிக்கிழமை) மாலை அணையின் நீர்மட்டம் 15 அடியாக உயர்ந்தது. இதனால் ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 10 அடி உயர்ந்து உள்ளது.

    ஆனால் மாலை 5 மணிக்கு மேல் அணைக்கு வரும் நீரின் அளவு 578 கன அடியாக குறைந்தது. அணையில் இருந்து 514 கன அடி தண்ணீர் நொய்யல் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

    இதனால் நுங்கும் நுரையு மாக மழை நீர் நொய்யல் ஆற்றில் வெளியேறுகிறது. நொய்யல் ஆற்று படுகையில் வெள்ள அபாய முன் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

    இது குறித்து அதிகாரிகள் கூறும் போது, நொய்யல் ஆற்றின் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும்.

    அணையில் இருந்து வெளியேறும் நீரில் உப்பு தன்னை 1550 டி.டி.எஸ்., என்ற அளவில் இருந்து தற்போது 1050 என்ற அளவில் குறைந்து உள்ளது. இன்னும் உப்பு தன்மை குறைய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தனர்.

    • கூடுதுறை பகுதியில் இன்று ஏராளமான உள்ளூர் வெளியூர் பக்தர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி பரிகாரங்கள் செய்து வழிபாடு மேற்கொண்டு சென்றனர்.
    • கடந்த இரு நாட்களாக மழையின் காரணமாக கூடுதுறை பகுதி கூட்டம் இன்றி காணப்பட்ட நிலையில் இன்று சற்று கூட்டம் நிறைந்து காணப்பட்டது.

    பவானி:

    பவானி சங்கமேஸ்வரர் கோவில் பின்னால் உள்ள கூடுதுறை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான இன்று ஏராளமான உள்ளூர் வெளியூர் பக்தர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி பரிகாரங்கள் செய்து வழிபாடு மேற்கொண்டு சென்றனர்.

    வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததை தொட ர்ந்து கடந்த 2 நாட்களாக பவானி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சாரல் மழை முதல் மிதமான மழை மற்றும் கனமழை கொட்டி தீர்த்தது.

    இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்க ப்பட்ட நிலையில் பொது மக்கள் பலரும் தங்கள் வீடுகளில் முடங்கிக் கிடந்தனர்.

    இந்நிலையில் விடுமுறை நாளான இன்று காலை பவானி சங்கமேஸ்வரர் கோவில் பின்பகுதியில் உள்ள கூடுதுறை காவேரி, பவானி, அமுதநதி கூடும் முக்கூடல் சங்கத்தில் உள்ளூர், வெளியூர் பகுதியில் இருந்து ஏராள மான பக்தர்கள் வருகை தந்து காவிரி ஆற்றில் புனித நீராடி தங்கள் குடும்பத்தில் இறந்த முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம், பிண்டம் விடுதல் போன்ற பரிகார பூஜைகள் செய்து சாமி வழிபாடு மேற்கொண்டு சென்றனர்.

    கடந்த இரு நாட்களாக மழையின் காரணமாக கூடுதுறை பகுதி கூட்டம் இன்றி காணப்பட்ட நிலையில் இன்று சற்று கூட்டம் நிறைந்து காணப்பட்டது.

    • பவானி ஆற்றில் இரு கரையோரம் தண்ணீர் தொட்டபடி செல்கிறது.
    • கீழ்பவானி வாய்க்காலுக்கு வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டத்தை சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

    பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் பவானிசாகர் அணையின் நீர்மட்டமும் 105 அடியை நெருங்கி வருகிறது.

    நேற்று மாலை முதல் நீர்ப்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 6 ஆயிரம் கன அடி நீர் வந்தது. இதனால் உபரி நீர் அப்படியே பவானி ஆற்றுக்கு திருப்பி விடப்பட்டது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.43 அடியாக உள்ளது.

    அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரத்து 700 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பவானி ஆற்றின் வழியாக உபரிநீராக 6,300 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் பவானி ஆற்றில் இரு கரையோரம் தண்ணீர் தொட்டபடி செல்கிறது. கீழ்பவானி வாய்க்காலுக்கு வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 105 அடியை எந்த நேரத்திலும் எட்டும் நிலை ஏற்பட்டுள்ளதால் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் பவானி ஆற்றுக்கு திறந்து விட வாய்ப்புள்ளது. இதனையடுத்து பொதுப்பணித்துறை சார்பாக பவானிசாகர் அணையில் இருந்து பவானி கூடுதுறை வரை பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளை பொதுப்பணித்துறையினர், வருவாய் துறையினர் இணைந்து செய்து வருகின்றனர்.

    • மனம் உடைந்து காணப்பட்ட சிந்து திடீரென வீட்டில் மின்விசிறியால் தூக்குபோட்டு கொண்டார்.
    • இதுகுறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    டி.என்.பாளையம்:

    ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அடுத்த பெருமுகை ஏரங்காட்டூரை சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மகன் சேகர் (23) இவர் விவசாய கூலி வேலை செய்து வருகிறார்.

    இவர் அதே பகுதியை சேர்ந்த சிந்து (21) என்பவரை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆரம்பத்தில் சிந்துவின் பெற்றோர் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதன் பிறகு அவர்களை ஏற்று கொண்டனர்.

    இந்நிலையில் அவர்களது குழந்தை நிச்சிகாவை, சிந்து வின் தந்தை அவரது வீட்டுக்கு அழைத்து சென்று விட்டு பின்னர் மாலை அழைத்து வந்தார்.

    அப்போது சேகர், சிந்துவிடம் ஏன் குழந்தையை அங்கு அனுப்புகிறாய் என கேட்டார். இதனால் அவர்களுக்கள் தகராறு ஏற்பட்ட தாக கூறப்படுகிறது. இதனையடுத்து சேகர் வெளியில் சென்றுள்ளார்.

    இதனால் மனம் உடைந்து காணப்பட்ட சிந்து திடீரென வீட்டில் மின்விசிறியால் தூக்குபோட்டு கொண்டார். இதனைக்கண்ட அக்கம் பக்கத்தினர் சிந்துவின் பெற்றோருக்கு தகவல் தெரி வித்தனர்.

    இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் சிந்துவை மீட்டு கோபி செட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    தொடர்ந்து சிந்துவை மேல் சிகிச்சைக்காக பெரு ந்துறை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த சிந்து சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து பங்களா ப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் சேகர்-சிந்து திரு மணம் நடந்து 3 வருடங்களே ஆவதால் ஆர்.டி.ஓ. மற்றும் ஏ.எஸ்.பி. விசாரணை நடக்கிறது.

    ×