search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பவானிசாகர் அணையில் இருந்து ஆற்றில் 5, 100 கன அடி நீர் திறப்பு
    X

    பவானிசாகர் அணையில் இருந்து ஆற்றில் 5, 100 கன அடி நீர் திறப்பு

    • கடந்த சில நாட்களாக நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது.
    • மேலும் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும், கால்நடைகளை நீர் நிலைக்கு அழைத்துச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டத்தை சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

    பவானிசாகர் அணை யின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

    இதனால் பவானிசாகர் அணையின் நீர்மட்டமும் 105 அடியை நெருங்கி வருகிறது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.08 அடியாக உள்ளது.

    அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரத்து 48 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது.அணையில் இருந்து பவானி ஆற்றின் வழியாக உபரிநீராக 5, 100 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.

    இதனால் பவானி ஆற்றில் இரு கரையோரம் தண்ணீர் தொட்டபடி செல்கிறது. இதனால் பவானி ஆற்றில் பொது மக்கள் துணி துவைக்குவோ குளிக்கவோ கூடாது என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும், கால்நடைகளை நீர் நிலைக்கு அழைத்துச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதேபோல் கீழ்பவானி வாய்க்காலுக்கு வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மொத்தம் 5600 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வரு கிறது.

    Next Story
    ×