என் மலர்tooltip icon

    ஈரோடு

    • குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு, ரூ.1000 ரொக்க பணம் ஆகியவை அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது
    • முதல் அமைச்சர் அறிவுரைப்படி படி இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பு அனைத்து ரேஷன் கடையில் தர ப்படுகிறது

    ஈரோடு,

    பொங்கல் பண்டிகையை மக்கள் சந்தோஷமாக கொண்டாடும் வகையில் அரசு சார்பில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு, ரூ.1000 ரொக்க பணம் ஆகியவை அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது.

    இதற்கான டோக்கன் வீடு வீடாக சென்று அந்தந்த ரேஷன் கடை பணியாளர்கள் வழங்கி வந்தனர். இந்த பணிகள் அனைத்தும் நிறைவடைந்ததை அடுத்து இன்று தமிழக முழுவதும் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.

    ஈரோடு மாவட்டத்தில் 1,183 ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் தொகுப்பு வழங்க ப்படுகிறது. மாவட்டத்தில் மொத்தம் 7 லட்சத்து 65 ஆயிரத்து 845 ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர். இவர்களில் 7 லட்சத்து 47 ஆயிரத்து 474 ரேஷன் அரிசி அட்டைதாரர்களாக உள்ளனர்.

    சென்னையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டா லின் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி னார். இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.

    அதன்படி இன்று ஈரோடு மாவட்டத்திலும் அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

    ஈரோடு கொல்லம்பாளை யம் வண்டிக்காரன் பேட்டை பகுதியிலுள்ள சிந்தாமணி கூட்டுறவு சிறப்பு அங்கன்வாடியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை கலெக்டர் கிருஷ்ண னுண்ணி தொடங்கி வைத்தார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    தைப்பொங்கலை மக்கள் சிறப்பாக கொண்ட முதல்- அமைச்சர் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 6 அடி கரும்பு, ரூபாய் ஆயிரம் கார்டுதா ரர்களுக்கு வழங்க உத்தர விட்டுள்ளார். அதன்படி ஈரோடு மாவட்டத்திற்கு ரூ. 80 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் 868 முழு நேர நியாய விலை கடைகளும் 319 பகுதிநேர கடைகள் உள்ளன. இதன் மூலம் ஈரோடு மாவட்டத்தில் 7.65 லட்சம் குடும்ப அட்டை தாரர்கள் பயன்பெற்று வருகின்றனர். பொதுமக்கள் கூட்ட நெரிசலை தவிர்க்க டோக்கன்கள் ஜனவரி 3 முதல் 8 வரை வழங்க ப்பட்டுள்ளது.

    பொங்கல் தொகுப்பி ற்காக தரமான பச்சரிசி, சர்க்கரை, கரும்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முதல் அமைச்சர் அறிவுரைப்படி படி இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பு அனைத்து ரேஷன் கடையில் தர ப்படுகிறது. அனைவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் சென்று பாது காப்பாக பரிசுத்தொகை பெற்று செல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    இதில் கணேசமூர்த்தி எம்.பி, மேயர் நகரத்தினம், துணை மேயர் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் மாவட்டம் முழுவதும் ரேஷன் கடைகளில் இன்று பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. மக்கள் ஆர்வத்துடன் சென்று பொங்கல் பரிசு தொகுப்பை வாங்கி சென்று வரு கின்றனர். பொங்கல் பரிசு தொகுப்புடன் இலவச வேட்டி- சேலையும் வழங்கப்பட்டு வருகிறது.

    • மணி வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்
    • அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரி சோதித்த டாக்டர்கள் மணி ஏற்கனவே இறந்து விட்ட தாக தெரிவித்தனர்

    ஈரோடு,

    ஈரோடு வில்லரசம்பட்டி குறிஞ்சி நகரை சேர்ந்தவர் மணி (53). இவரது மனைவி கவிதா. மணி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் ஈரோடு காசி பாளையம் கிளையில் கடந்த 22 வருடமாக கண்டக்டராக வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் மணி வீட்டில் அடிக்கடி பீடி குடித்து வந்ததாக கூறப்படு கிறது. இதனால் கணவன் -மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மணி கோபித்து கொண்டு மனைவி யுடன் சில நாட்கள் பேசாமல் இருந்து வந்துள்ளார்.

    இந்நிலையில் மீண்டும் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மணி வேலைக்கு சென்று விட்டு நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு வந்தார். பின்னர் மனைவி யிடம் சாப்பாடு கேட்ட போது நீங்கள் வெளியில் சாப்பிட்டு வந்து விடுவீர்கள் என நினைத்து வீட்டில் இருந்த சாப்பாட்டை சாப்பிட்டு விட்டோம் என்று கூறியுள்ளார்.

    இதனால் கோபித்து கொண்டு வீட்டின் மேல் மாடிக்கு மணி தூங்க சென்று விட்டார். காலை கவிதா மாடிக்கு சென்று பார்த்தபோது கதவு திறந்து இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது மணி வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரி சோதித்த டாக்டர்கள் மணி ஏற்கனவே இறந்து விட்ட தாக தெரிவித்தனர்.

    இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர். 

    • கடந்த 2 வருடமாக கொரோனாவை முன்னிட்டு கோவில் பூசாரிகள் மட்டும் குண்டம் இறங்கினர். பக்தர்களுக்கு குண்டம் இறங்க அனுமதிக்கவில்லை
    • ஆங்காங்கே பக்தர்கள் வரிசையாக நின்று குண்டம் மிதிப்பதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன

    கோபி,

    கோபிசெட்டிபாளையம் அருகே பிரசித்தி பெற்ற பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது. இங்கு வருடம் தோறும் ஜனவரி மாதம் குண்டம் மற்றும் தேர் திருவிழா நடைபெற்று வருகிறது.

    கடந்த 2 வருடமாக கொரோனாவை முன்னிட்டு கோவில் பூசாரிகள் மட்டும் குண்டம் இறங்கினர். பக்தர்களுக்கு குண்டம் இறங்க அனுமதிக்கவில்லை.

    இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழா கடந்த மாதம் 29-ந்தேதி இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. ஆண், பெண்கள் குண்டம்இறங்குவதற்காக மாலைஅணிந்து விரதம் இருந்து வருகின்றனர்.

    இன்று மாலை 4 மணி அளவில் அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரமும், 11-ந் தேதி பெண்கள் மாவிளக்கு எடுத்து வருதல் நிகழ்ச்சியும், அதை தொடர்ந்து 12-ந்தேதி முக்கிய நிகழ்ச்சியான குண்டம் திருவிழா நடைபெறுகிறது.

    இதையொட்டி அதிகாலை 5.30 மணி அளவில் கோவிலுக்கு முன்பு அமைக்கப்பட்டுள்ள 50 அடி குண்டத்தில் முதன்முதலாக தலைமை பூசாரி ஆனந்த் என்பவர் குண்டம் இறங்கி தொடங்கி வைப்பார்.

    அதைத் தொடர்ந்து பக்தர்கள் ஆயிரக்கணக்கா னோர் குண்டம் இறங்குவார்கள்.

    இதையொட்டி ஆங்காங்கே பக்தர்கள் வரிசையாக நின்று குண்டம் மிதிப்பதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. மேலும் 13-ந் தேதி மாலை 4 மணி அளவில் தேர் திருவிழா நடைபெறுகிறது. 14-ந் தேதி மலர் பல்லக்கு நடைபெற உள்ளது. அன்று இரவு 11 மணி அளவில் மலர் பல்லக்கானதுபாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு அம்மன் மலர் பல்லக்கில் கோபி பெருமாள் கோவிலை வந்து அடைகிறது.

    அதைத் தொடர்ந்து 15-ந்தேதி கோபியில் தெப்ப உற்சவம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 16-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை மஞ்சள் நீர் உற்சவம் நடைபெற உள்ளது. 21-ந் தேதி சனிக்கிழமை மறுபூஜையுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

    குண்டம் திருவிழாவையொட்டி குண்டத்துக்கு தேவையான விறகுகளை பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்தி வருகின்றனர்.

    • தீபா கல்லூரிக்கு செல்வதாக அவரது உறவினரிடம் கூறி விட்டு வீட்டில் இருந்து வெளியே சென்றார்
    • அவர் வீட்டுக்கு வந்து அக்கம் பக்கம் மற்றும் உறவின ர்களிடம் விசாரித்தும், தேடி பார்த்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை

    ஈரோடு,

    அந்தியூர் அருகே உள்ள சங்கராபாளையம் பகுதியை சேர்ந்தவர் மணி. இவரது மனைவி ராதாமணி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். ராதாமணி கணவரை பிரிந்து மகளுடன் தனியாக வசித்து வருகிறார். இவரது பெரிய மகள் சத்தியாவுக்கு திருமணமாகி விட்டது.

    இவர்களது இளைய மகள் தீபா (19). இவர் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். ராதா மணி ஆதிரெட்டியூரில் உள்ள அவரது அண்ண னுக்கு உடல்நிலை சரியி ல்லாததால் அவருடன் இருந்து அவரை பராமரித்து வருகிறார். வீட்டில் ராதாமணியின் இளைய மகள் தீபா மட்டும் தனியாக இருந்து வந்தார்.

    இந்த நிலையில் தீபா கல்லூரிக்கு செல்வதாக அவரது உறவினரிடம் கூறி விட்டு வீட்டில் இருந்து வெளியே சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் தீபா வீட்டுக்கு வரவில்லை. இது குறித்து அக்கம் பக்கத்தினர் ராதாமணிக்கு தகவல் கொடுத்தனர்.

    இதையடுத்து அவர் வீட்டுக்கு வந்து அக்கம் பக்கம் மற்றும் உறவின ர்களிடம் விசாரித்தும், தேடி பார்த்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. மேலும் அவர் கல்லூரிக்கு சென்று விசாரித்தார். ஆனால் கல்லூரி விடுமுறை என தெரிய வந்தது.

    இது குறித்து ராதாமணி வெள்ளி திருப்பூர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான தீபா குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • காளிங்கராயன் கால்வாய் வழியாக பாசன வாய்க்காலில் இருந்து வரும் நீரின் மூலம் விவசாயிகள் கரும்பு பயிரிட்டுள்ளார்கள்
    • சாகுபடி செய்யப்பட்டுள்ள கரும்பு பொங்கல் பண்டிகை யையொட்டி அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது

    கொடுமுடி,

    தமிழர்கள் திருநாளான தை முதல் நாள் பொங்கல் விழாவானது தமிழர்களின் பாரம்பரிய திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. பொங்கல்விழா என்று கூறியவுடன் முதலில் நமக்கு நினைவுக்கு வருவது தித்திக்கும் கரும்புதான்.

    தமிழர்கள் இந்த விழாவை உழவுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் சூரியனுக்கும், உழவுக்கு பயன்படுத்தும் உயிரினங்களான ஆடு, மாடுகள் மற்றும் உழவு பொருட்களான ஏர், மண்வெட்டி, நெல் அறுவடை செய்யும் அரிவாள் என உழவர்கள் உழவுக்கு பயன்படுத்தும் அனைத்தையும் வணங்கி வழிபடுவது வழக்கம்.

    பொங்கல் பண்டிகை என்றாலே நினைவுக்கு வருவது செங்கரும்பு, மஞ்சள், வெல்லம் மற்றும் பொங்கல் பானையாகும். பொங்கல் பண்டிகையையொட்டி அனைத்து வீடுகளிலும் தவறாமல் இடம் பெறுவது கரும்பு. புதிய தம்பதிகளுக்கு கரும்பு அடங்கிய பொங்கல் சீதனம் கொடுக்கும் பழக்கமும் காலம் காலமாக தமிழர்களிடையே இருந்து வருகிறது.

    இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் கொடுமுடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியான ஊஞ்சலூர், குளத்துப் பாளையம், கொம்பனைப் புதூர், தாமரைப்பாளையம், மலையம்பாளையம், நடிப்பாளையம், சிவகிரி, அரச்சலூர் போன்ற பகுதிகளில் காளிங்கராயன் கால்வாய் வழியாக பாசன வாய்க்காலில் இருந்து வரும் நீரின் மூலம் விவசாயிகள் கரும்பு பயிரிட்டுள்ளார்கள்.

    இவ்வாறு சாகுபடி செய்யப்பட்டுள்ள கரும்பு பொங்கல் பண்டிகை யையொட்டி அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதையொட்டி கரும்பு மொத்த வியாபா ரிகள் கரும்பு சாகுபடி செய்துள்ள விவசாயி களிடம் கரும்புகளை மொத்தமாக கொள்முதல் செய்ய விவசாயிகளை இன்னும் சில நாட்களில் தேடி வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • 3 ஆயிரம் இரு சக்கர வாகனங்களும், 1000 கார்களும் மலைப்பாதை வழியாக சென்று வருகிறது
    • கோவிலுக்கு செல்லும் தார்சாலையின் இரு ஓரங்களிலும் மண் அரிப்பு ஏற்பட்டு குண்டும், குழியுமாக இருப்பதுடன் கல் குவியலாக காணப்படுகிறது

    சென்னி மலை,

    சென்னிமலை முருகன் கோவில் சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த கோவிலாகும். இந்த கோவிலில் தான் கந்த சஷ்டி கவசம் அரங்கே ற்றம் செய்யப்ப ட்டது. பல வருடங்களுக்கு முன்பு சென்னிமலை முருகன் கோவிலுக்கு செல்ல 1320 படிக்கட்டுகள் மட்டும் இருந்தது.

    அதன்பிறகு வாகனங்கள் செல்லும் வகையில் கடந்த 15.2.1963 அன்று 4 கி.மீ தூரத்திற்கு மலைப்பாதை அமைக்கும் பணி தொடங்கப்பட்டு ஒரே வருடத்தில் 58 ஆயிரத்து 576 ரூபாய் மதிப்பில் சாலை அமைக்கும் பணியை நிறைவு செய்து 15.-2.-1964 முதல் மலைப்பாதையில் கார்கள் மட்டும் செல்லும் வகையில் அனுமதிக்க ப்பட்டது. அதன்பிறகு நாளடைவில் மண் சாலை தார்சாலையாக மாற்ற ப்பட்டு தற்போது அனைத்து வாகனங்களும் சென்று வருகிறது.

    மழைக்காலங்களில் முருகன் கோவிலுக்கு செல்லும் தார்சாலையின் ஓரத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு அடிக்கடி போக்குவரத்துக்கு இடையூறாக இருந்து வந்தது. கடந்த 2014-ம் ஆண்டு சென்னிமலை முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்ற போது தார்சாலை சீரமைக்க ப்பட்டது. அதன்பிறகு பல முறை பலத்த மழை பெய்ததால் தார் ரோட்டின் ஓரங்களில் மீண்டும் அதிக அளவில் மண் அரிப்பு ஏற்பட்டது.

    இதனை கோவில் நிர்வாகத்தினர் சீரமைப்பு செய்து வந்தனர். ஆனால் நிரந்தரமான பராமரிப்பு இல்லாததால் மீண்டும் தார்சாலை ஓரங்களில் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. சென்னிமலை முருகன் கோவிலுக்கு வாரம் தோறும் செவ்வாய்க்கிழமை நாட்களில் அதிக அளவில் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

    அன்று மட்டும் சராசரியாக 3 ஆயிரம் இரு சக்கர வாகனங்களும், 1000 கார்களும் மலைப்பாதை வழியாக சென்று வருகிறது. இதன் மூலம் வாகன கட்டணமாக கோவில் நிர்வாகத்துக்கு ரூ. 50 ஆயிரம் வரை கிடைக்கிறது.

    அதுமட்டுமல்லாமல் கோவிலுக்கு சொந்தமான இரண்டு பஸ்கள் மூலம் தலா ரூ.10 ஆயிரத்து க்கும் மேல் டிக்கெட் கட்ட ணமாக கிடைக்கி றது. மேலும் உண்டியல் காணிக்கையாக ஆண்டுக்கு ரூ.1.5 கோடிக்கு மேல் கிடைப்பதால் முதல் நிலை கோவில் அளவுக்கு சென்னிமலை முருகன் கோவிலின் தரம் உயர்ந்துள்ளது. ஆனால் கோவிலுக்கு செல்ல பாதுகாப்பான சாலை வசதி இல்லை என பக்தர்கள் கூறுகின்றனர்.

    இதுகுறித்து சென்னி மலை முருகன் கோவிலுக்கு அடிக்கடி சென்று வரும் பக்தர்கள் கூறும்போது,

    ஈரோடு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவிலாக சென்னிமலை முருகன் கோவில் உள்ளது. செவ்வாய்க்கி ழமை நாட்கள் மட்டுமின்றி சஷ்டி, கிருத்திகை, அமா வாசை உள்ளி ட்ட அனைத்து நாட்களிலும் இந்த கோவி லுக்கு ஆயிரக்க ணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.

    கோவிலுக்கு செல்லும் தார்சாலையின் இரு ஓரங்களிலும் மண் அரிப்பு ஏற்பட்டு குண்டும், குழியுமாக இருப்பதுடன் கல் குவியலாக காணப்படுகிறது. இதனால் எதிரே வரும் வாகனங்களுக்கு வழி விடுவதற்காக இரு சக்கர வாகன ஓட்டிகள் தார் ரோட்டில் இருந்து கீழே இறங்கினால் பள்ளத்தில் தான் விழ வேண்டும்.

    அப்படி குடும்பத்தோடு விழுந்தவர்கள் ஏராளம். கடந்த ஆங்கில புத்தாண்டு தினத்தில் இளம்பெண் ஒருவர் எதிரில் வந்த வாகனத்துக்கு வழி விடுவதற்காக கீழே இறங்கிய போது தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். பின்னர் அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    இப்படி பல விபத்துக்கள் நடந்துள்ளது. செவ்வாய்க் கிழமை நாட்களில் இரவு 8 மணி பூஜையில் கலந்து கொள்ள பெரும்பாலான பக்தர்கள் குடும்பத்துடன் மோட்டார் சைக்கிளில் வருவார்கள். அவர்கள் அனைவரும் உயிரை கையில் பிடித்து கொண்டு தான் செல்ல வேண்டும்.

    அதனால் உடனடியாக சென்னிமலை முருகன் கோவிலுக்கு செல்லும் தார்சாலையை அகலப்படுத்தி விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்க அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 

    • மழைப்பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்தும் வெகுவாக குறைந்து விட்டது.
    • இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102.84 அடியாக உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் பவானிசாகர் அணை தொடர்ந்து உயர்ந்து வந்தது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர்வரத்தை காட்டிலும் பாசனத்திற்கு தொடர்ந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

    மேலும் மழைப்பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்தும் வெகுவாக குறைந்து விட்டது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102.84 அடியாக உள்ளது.

    அணைக்கு வினாடிக்கு 821 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 1,700 கன அடியும், தடப்பள்ளி -அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 800 கன அடியும், பவானி ஆற்றுக்கு குடிநீருக்காக 100 கன அடியும் என மொத்தம் பவானிசாகர் அணையிலிருந்து 2,600 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

    • கங்காதேவியின் உடல் கீழ்வாணி ஆற்று பாலத்திற்கு கீழே உள்ள பாறை இடுக்குக்குள் சிக்கி கிடந்தது.
    • ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆப்பக்கூடல்:

    அந்தியூர் தவுட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கங்காதேவி (வயது 74). இவர் தனியாக வசித்து வந்தார்.

    இந்நிலையில், கங்காதேவி சம்பவத்தன்று காலை அத்தாணி-பவானி ஆற்றில் குளித்து விட்டு வருவதாக சென்றவர் நீண்ட மணி நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.

    இதனால் உறவினர்கள் அத்தாணி-பவானி பகுதியில் தேடிச்சென்று பார்த்தனர். அப்போது கங்காதேவியின் உடல் கீழ்வாணி ஆற்று பாலத்திற்கு கீழே உள்ள பாறை இடுக்குக்குள் சிக்கி கிடந்தது.

    ஆற்றின் ஆழமான பகுதியில் குளிக்க சென்ற கங்காதேவி தண்ணீரில் மூழ்கி இழுத்து செல்லப் பட்டு இறந்திருக்கலாம் என்றும் தெரியவந்தது.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஆப்பக்கூடல் போலீசார் கங்காதேவியின் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இச்சம்பவம் குறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சவுந்தரராஜன் டிரான்ஸ்பார்மரில் ஏறி பீஸ் மாற்றி கொண்டு இருந்த போது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது.
    • இதையடுத்து அவர் மயங்கி டிரான்ஸ்பாரிலேயே தொங்கி கொண்டு இருந்தார்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள பெரிய கள்ளிப்பட்டி ஓலக் காரன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் சவுந்தரராஜன் (வயது 43). விவசாயி. இவருக்கு உமா என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.

    சவுந்தரராஜன் அந்த பகுதியில் உள்ள ஒரு விவசாய தோட்டத்தை குத்த கைக்கு எடுத்து மல்லிகைப்பூ சாகுபடி செய்து தோட்ட வேலைகளை கவனித்து வந்தார்.

    இந்த தோட்டத்துக்கு அருகே பம்ப் செட் கிணறு ஒன்று உள்ளது. மேலும் அருகே டிரான்ஸ் பார்மர் உள்ளது. மேலும் பம்ப் செட்டில் மின் இணைப்பு பழுது ஏற்படும். அப்போது அருகே உள்ள டிரான்ஸ்பார்மரில் சுவிட்ஸ் ஆப் செய்து விட்டு சுந்தரராஜன் ஏறி சரி செய்வது வழக்கம்.

    இந்த நிலையில் நேற்று சவுந்தரராஜன் தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சி கொண்டு இருந்தார். அப்போது பம்ப் செட்டில் மின்சாரம் தடைபட்டது.

    இதையடுத்து வழக்கம் போல் சவுந்தரராஜன் டிரான்ஸ்பார்மரில் ஏறி பீஸ் மாற்றி கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் அலறி துடித்தார்.

    இதையடுத்து அவர் மயங்கி டிரான்ஸ்பாரி லேயே தொங்கி கொண்டு இருந்தார்.

    இதை கண்ட அக்கம் பக்கத்தினர் மற்றும் அவரது உறவினர்கள் அவரை மீட்டு பு.புளியம்பட்டியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    மேல் சிகிச்சைக்காக சத்தியமங்க லம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சூரியம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

    ஈரோடு:

    சூரியம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

    இதையொட்டி நாளை (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சித்தோடு, ராயபாளையம், சுண்ணாம்பு ஓடை, அமராவதி நகர்,

    தண்ணீர் பந்தல் பாளையம், ஆர்.என். புதூர், கோணவாய்க்கால், லட்சுமி நகர், பெருமாள் மலை, ஐ.ஆர்.டி.டி., குமிளம்பரப்பு, கங்காபுரம், செல்லப்பம் பாளையம், பேரோடு, மாமரத்துப்பாளையம்,

    மேட்டு பாளையம், நொச்சி பாளையம், தயிர் பாளையம் கொங்கம் பாளையம், நரிப்பள்ளம், எல்லப்பாளையம், சேமூர், சூளை, சொட்டையம் பாளையம், ராசாம்பாளையம், தொட்டம்பட்டி,

    பி.பெ.அக்ரகாரம், மரவபாளையம், சி.எஸ். நகர், கே.ஆர்.குளம், காவேரி நகர், பாலாஜி நகர், மாணிக்கம் பாளையம், ஈ.பி.பி. நகர், எஸ்.எஸ்.டி. நகர், வேலன் நகர், ஊத்துக்காடு,

    வாவிக்கடை, பெருந்துறை சந்தை, அணைக்கட்டு, பழையூர், பெரியார் நகர், பூலப்பாளையம், பெரிய புலியூர், வளையக்கார பாளையம், மூவேந்தர் நகர், எலவமலை பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என மின்வாரிய செயற் பொறியாளர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

    • அந்தியூர் வட்டாரத்தில் வேளாண்மை அறிவியல் கல்லூரியை சேர்ந்த மாணவிகள் விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் செய்து வருகின்றனர்.
    • பத்ரகாளியம்மன் கோவில் வளாகத்தை தூய்மை செய்யும் பணியிலும் கல்லூரி மாணவிகள் ஈடுபட்டு சிறப்பான முறையில் செய்தனர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டாரத்தில் ஜே.கே.கே. முனிராஜா வேளாண்மை அறிவியல் கல்லூரியை சேர்ந்த 4-ம் ஆண்டு மாணவிகள் தங்கள் திட்டத்தின் கீழ் 75 நாட்கள்அந்தியூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் செய்து வருகின்றனர்.

    விவசாயம் சார்ந்த தொழில்நுட்பங்களை கற்று கொடுத்தல், மண் மாதிரி எடுத்தல், ஜீவாமிர்தம் தயாரிப்பு முறை, வாழைக்கன்று நேர்த்தி பண்ணை, குட்டை அமைத்தல், சூரிய ஒளி உலர்த்தி, உயிர் உரம் ஆகியவற்றை பற்றி விவசாயிகளிடத்தில் எடுத்து கூறும் வகையில் பச்சாம்பாளையம், கீழ்வாணி, அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று விவசாயிகளிடத்தில் செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தனர்.

    மேலும் அந்தியூரில் புகழ் பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் வளாகத்தை தூய்மை செய்யும் பணியிலும் கல்லூரி மாணவிகள் ஈடுபட்டு சிறப்பான முறையில் செய்தனர்.

    இதில் காவியா, கீர்த்தனா, கவுசல்யா, காவியாஸ்ரீ, மதிமிதா, கீர்த்தனா, மாளவிகா, கவுசல்யா, மரியா தெரஸ்மனோஜ், மேக்னா விஸ்வின், மோனிகா உள்ளிட்ட மாணவிகள் செய்திருந்தார்கள்.

    • ஈரோடு மாவட்டத்தில் 1,183 ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது.
    • இதற்கான டோக்கன் வீடு, வீடாக சென்று வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

    ஈரோடு:

    பொங்கல் பண்டிகையையொட்டி ஒவ்வொரு ஆண்டும் அரசு சார்பில் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

    அதேபோல் இந்து ஆண்டும் பொங்கல் பண்டிகையை மக்கள் சந்தோஷமாக கொண்டாடும் வகையில் அரசு சார்பில் அரிசி குடும்ப அட்டைதாரர் களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு, ரூ.1000 ரொக்க பணம் ஆகியவை அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது.

    இதற்கான டோக்கன் வீடு, வீடாக சென்று வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

    ஈரோடு மாவட்டத்தில் 1,183 ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் மொத்தம் 7 லட்சத்து 65 ஆயிரத்து 845 ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர்.

    இவர்களில் 7 லட்சத்து 47 ஆயிரத்து 474 ரேஷன் அரிசி அட்டைதாரர்களாக உள்ளனர். இவர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது.

    இதற்காக மாவட்டத்தில் கடந்த 3-ந் தேதி முதல் ரேஷன் கடை பணியாளர்கள் வீடு, வீடாக சென்று பொங்கல் தொகுப்பு டோக்கனை வழங்கி வருகின்றனர். டோக்கனில் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் நாள், நேரம் குறிப்பிடப் பட்டிருந்தது.

    அதன் அடிப்படையில் ரேஷன் அட்டைதாரர்கள் வந்து பொங்கல் தொகுப்புகளை பெற்று செல்லலாம் என்று கூறியுள்ளனர். இது குறித்து பொதுமக்களுக்கு சந்தேகம் இருந்தால் அதற்கென்று தனியாக தொலைபேசி எண்ணும் வழங்கப்பட்டிருந்தது.

    வீடு வீடாக டோக்கன் வழங்கும் பணி மாவட்டத்தில் தீவிர படுத்தப்பட்டது. இன்றுடன் டோக்கன் வழங்கும் பணி நிறைவடைகிறது.

    இதனைத் தொடர்ந்து நாளை (திங்கட்கிழமை) பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் நாளை முதல் 1,183 ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது. பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை அமைச்சர் சு.முத்துசாமி தொடங்கி வைக்கிறார்.

    கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் நாள் ஒன்றுக்கு ஒவ்வொரு கடைகளிலும் சுமார் 200 பேர் வரை பொங்கல் தொப்புக்குகளை வாங்கி செல்ல டோக்கன்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளது.

    ரேஷன் கடைகளுக்கு கார்டுகளின் எண்ணி க்கையின் அடிப்படையில் பொங்கல் பரிசு தொகுப்பான அரிசி, சர்க்கரை ஆகியவை அனுப்பி வைக்கப்பட்டு விட்டது. கரும்பு அனுப்பும் பணியும் நடந்து முடிவடைந்து விட்டது. அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    வீடு, வீடாக டோக்கன் விநியோகம் செய்யப்பட்ட சமயத்தில் பல்வேறு காரணங்களுக்காக டோக்கன் விநியோகம் செய்ய முடியாத அரிசி அட்டைதாரர்கள் வருகிற 13-ந் தேதி அன்று அந்தந்த ரேஷன் கடைகளில் தங்களது ரேஷன் கார்டை கொண்டு வந்து பொங்கல் தொகுப்பினை பெற்று செல்லலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ×