என் மலர்
ஈரோடு
- பொங்கல் பண்டிகைக்காக ஏற்கனவே ரெயில்களில் இருக்கைகள் அனைத்தும் நிரம்பி விட்டன.
- இதேபோல் பஸ்களிலும் முன்பதிவு இருக்கை நிரம்பி விட்டன.
ஈரோடு:
பொங்கல் பண்டிகையையொட்டி இன்று போகி பொங்கல் கொண்டாடப்படுகிறது. அதைத்தொடர்ந்து நாளை, பொங்கல், மறுநாள் மாட்டுப்பொங்கல், அதன் மறுநாள் காணும் பொங்கல் எனத் தொடர்ந்து இன்று முதல் வரும் செவ்வாய்க்கிழமை வரை 4 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது.
இதையொட்டி சொந்த ஊர்களுக்கு சென்று பொங்கல் கொண்டாடும் வகையில் ரெயில்கள், சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
பொங்கல் பண்டிகைக்காக ஏற்கனவே ரெயில்களில் இருக்கைகள் அனைத்தும் நிரம்பி விட்டன. இதேபோல் பஸ்களிலும் முன்பதிவு இருக்கை நிரம்பி விட்டன.
இந்நிலையில் ஈரோடு ரெயில் நிலையத்தில் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணம் செய்ய மக்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். இன்று அதிகாலை முதலே ஈரோடு ரெயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது.
முன்பதிவு இல்லாத பெட்டிகளில் இடம் பிடிக்க மக்கள் போட்டி போட்டனர். ஏராளமான பேர் குடும்பத்துடன் நேற்று இரவு முதல் ரெயில் நிலையங்களில் குவிய தொடங்கினர்.
இதனால் ஈரோடு வழியாக பிற மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்கள் அனைத்தும் நிரம்பி வழிந்தன.
இதேபோல் ஈரோடு பஸ் நிலையங்களிலும் நேற்று இரவு முதல் கூட்டம் அதிகமாக இருந்தது. பொங்கல் பண்டிகையை மக்கள் சிரமம் இன்றி கொண்டாடும் வகையில் ஏற்கனவே இயக்கப்படும் பஸ்களை விட கூடுதலாக 50 சிறப்பு பஸ்கள் நேற்று இரவு முதல் இயக்கப்பட்டு வருகிறது.
இதனால் அந்த பஸ்களில் இடம் பிடிக்க பயணிகள் போட்டா போட்டி போட்டனர். இதனால் பஸ் நிலையங்களில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாகவே இருந்தது.
இதேபோல் இன்று இரவும் ஈரோடு ரெயில் நிலையம், பஸ் நிலையங் களில் கூட்டம் அதிகமாக இருக்கும். கூட்டத்தை பயன்படுத்தி மர்ம நபர்கள் கைவரிசை காட்டி விடக்கூடாது என்பதற்காக ஈரோடு பஸ் நிலையத்தில் போலீசார் 24 மணி நேரமும் கண்கா ணித்து வருகின்றனர்.
இதேபோல் ஈரோடு மாநகரில் முக்கிய வீதிகளான ஈஸ்வரன் கோவில் வீதி, மணிக்கூண்டு பகுதி, பன்னீர்செல்வம் பார்க், ஆர்கே.வி. ரோடு பகுதிகளில், கடை வீதிகளிலும் மக்கள் கூட்டம் இன்று வழக்கத்தை விட அதிகமாக இருந்தது.
பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடும் வகையில் ஜவுளிக்கடைகளில் கூட்டம் குவிய தொடங்கியது.
பெரிய ஜவுளி கடைகள் முதல் சாதாரண நடை பாதை ஜவுளி கடைகள் வரை மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. பெண்களுக்கான பேன்சி கடையிலும் கூட்டம் அதிகமாக இருந்தது.
- மண்பானை செய்யும் தொழிலாளர்களிடம் பொங்கல் பானைகள் மற்றும் மாடுகளின் உருவ பொம்மைகளை வாங்கி சென்றார்கள்.
- கரும்பு விற்பனையும், சூடுபிடிக்க தொடங்கியுள்ளதால் அந்தியூர் பகுதியில் இப்போதே பொங்கல் பண்டிகை களைக்கட்ட தொடங்கி உள்ளது.
அந்தியூர்:
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் ஈரோடு மாவட்ட த்தில் பொங்கல் வைக்க ேதவையான பானை மற்றும் மாடுகளுக்கு தேவையான வண்ண பொடிகள், வண்ண கயிறுகள் விற்பனை அதி கரித்து வருகிறது.
மேலும் கிராம பகுதி களில் சந்தை மற்றும் கடை வீதிகளில் பொங்கல் வைக்க தேவையான பொருட்கள் விற்பனை அதி களவில் நடந்து வருகிறது.
இதே போல் அந்தியூர் பகுதிக்கு சுற்று வட்டார பகுதிகளான தவிட்டு ப்பாளையம், வெள்ளை யம்பாளையம், அண்ணா மடுவு, கந்தம்பாளையம், காட்டூர், பச்சாபாளையம், சின்னத்தம்பி பாளையம், சங்கரா பாளையம், மூல க்கடை, செல்லம் பாளையம், புதுக்காடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பொது மக்கள் வந்து பானை மற்றும் மளிகை பொருட்களை அதிகளவில் வாங்கி செல்கிறார்கள்.
மேலும் பொங்கல் வைப்பதற்கு தேவையான மண் பானைகள், கரும்பு களை ஆர்வமுடன் வாங்குகிறார்கள். இதனால் அந்தியூர் பகுதிகளில் மக்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது.
இதே போல் மாட்டுப் பொங்கல் அன்று விவ சாயிகள் மாடுகளின் கொம்புகளுக்கு வர்ணம் பூசி, கொம்புகளுக்கு வண்ண கயிறுகளை கட்டி மாடுகளுக்கு பூஜை செய்வார்கள்.
மேலும் அந்தியூர் பகுதியில் மாடுகள் எந்தவித நோய்களும் தாக்காமல் இருக்க மாடுகள் போன்று மண்ணினால் செய்யப்பட்ட உருவ பொம்மைகளை வாங்கியும் தங்கள் குல தெய்வங்கள் முன் வைத்து பூஜை செய்து மாடுகளுக்கு, படைத்த உணவுகளை கொடுப்பது வழக்கம்.
இதனால் அந்தியூர் பாலம் அருகே மண்பானை செய்யும் தொழிலாளர்களிடம் பொங்கல் பானைகள் மற்றும் மாடுகளின் உருவ பொம்மைகளை வாங்கி சென்றார்கள்.
இந்த பானைகள் ரூ.100 முதல் ரூ.200 வரையிலும் மாடுகள்உருவ பொம்மைகள் சிறியது 100 ரூபாய் முதல் பெரியது 300 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும் கரும்பு விற்பனையும், சூடுபிடிக்க தொடங்கியுள்ளதால் அந்தியூர் பகுதியில் இப்போதே பொங்கல் பண்டிகை களைக்கட்ட தொடங்கி உள்ளது.
- 15 இடங்களில் கொள்முதல் நிலையங்கள் அமைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
- விவசாயிகள் என்ற பெயரில் போலியாகவும் வியாபாரிகள் மூலமும் நெல்லை கொள்முதல் செய்வதை தடுக்க வேண்டும்.
ஈரோடு:
பவானிசாகர் அணையில் திறக்கப்படும் தண்ணீர் மூலம் கீழ்பவானி பாசன வாய்காலில் 1 லட்சத்து 3 ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன.
நடப்பாண்டு கீழ்பவானியில் தண்ணீர் திறப்பு உரிய நேரத்தில் நடந்தாலும், ஆங்காங்கே முறையாக பராமரிப்பு பணி செய்யாததால் உடைப்பு ஏற்பட்டது.
அதனை விரைவாக சீரமைக்காததால் பல நாட்கள் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. இருப்பினும் மழை கை கொடுத்ததால் கடந்த 15 நாட்களுக்கு மேலாக அறுவடை பணிகள் நடந்து வருகிறது.
இது குறித்து நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் கூறியதாவது:
கீழ்பவானி பாசன பகுதியில் அறுவடை பணிகள் நடந்து வருவதால் 12 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, விவசாயிகள் கொண்டு வரும் நெல் முழு அளவில் கொள்முதல் செய்யப்படுகிறது.
வரும் வாரங்களில் மேலும் சில இடங்களில் கொள்முதல் நிலையங்கள் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே 15 இடங்களில் கொள்முதல் நிலையங்கள் அமைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளன. கூடுதல் நிலையங்கள் விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சுப்பு கூறியதாவது:
கீழ்பவானி பாசன பகுதியில் அறுவடை பணிகள் தீவிரமாக நடப்பதால் தேவையான இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் உடன் திறந்து முழு அளவில் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும்.
நெல் கொள்முதலுக்கு கடந்த காலங்களில் நடந்த தவறுகள் இந்தாண்டு நடக்காமல் தொடக்கம் முதல் தடுக்க வேண்டும்.
குறிப்பாக சாக்கு எடை எனக்கூறி மூட்டைக்கு 10 ரூபாய் விவசாயிகளிடம் கட்டாயமாக வசூலிப்பதை தடுக்க வேண்டும். விவசாயிகள் என்ற பெயரில் போலியாகவும் வியாபாரிகள் மூலமும் நெல்லை கொள்முதல் செய்வதை தடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இயற்கை விவசாயிகளுக்கு ஈரோடு மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் மோகனசுந்தரம் பயிற்சி அளித்தார்.
- இயற்கை விவசாயம் மேற்கொள்பவர்களுக்கு வழங்கப்படும் மானிய விபரம் குறித்து விளக்கமளித்தார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்த குருப்பநாயக்கன்பாளையம் அரசு விதைப்பண்ணை அலுவலக வளாகத்தில் ஈரோடு, நாமக்கல், சேலம் மற்றும் தர்மபுரி மாவட்டத்தில் இருந்து விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்றுத் துறையில் புதிதாக பதிவு செய்துள்ள இயற்கை விவசாயிகளுக்கு ஈரோடு மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் மோகனசுந்தரம் பயிற்சி அளித்தார்.
அங்ககப்பண்ணையில் மேற்கொள்ளப்பட வேண்டிய பயிர் மேலாண்மை முறைகள், விதை தேர்வு செய்தல், ரகம் தேர்வு செய்தல் மற்றும் பயிரிட வேண்டிய பருவங்கள், அங்ககப் பண்ணையில் பயன்படுத்தக் கூடிய இடுபொருட்கள் மற்றும் பயன்படுத்தக்கூடாத இடுபொருட்கள், அறுவடைக்கு பின் நேர்த்தி முறைகள், விற்பனை வாய்ப்புகள் குறித்து பயிற்சி அளித்தார்.
ஈரோடு அங்ககச்சான்று ஆய்வாளர் மகாதேவன் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள், களை மேலாண்மை மற்றும் நீர் மேலாண்மை பற்றி பயிற்சியளித்தார்.
உயிர் உரம் உற்பத்தி மையத்தின் வேளாண்மை அலுவலர் புனிதா உயிர் உரம் தயாரிப்பு முறைகள் மற்றும் பயன்படுத்தும் முறைகள் அதனால் பயிருக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து தெரிவித்தார்.
உயிரியல் கட்டுப்பாட்டு மையத்தின் வேளாண்மை அலுவலர்கள் கோகுலவாசன் மற்றும் மிதுன் ஆகியோர் உயிரியல் பூஞ்சாணக்கொல்லிகளான பெவேரியா பேசியானா, டிரைக்கோடெர்மா விரிடி, சூடோமோனஸ் புளோ ரசன்ஸ் ஆகியவற்றைக் கொண்டு நோயைக் கட்டுத்துதல், டிரைக்கோகி ரம்மா முட்டை ஒட்டுண்ணி மற்றும் கிரைசோபெர்லா இறை விழுங்கியை கொண்டு பூச்சிகளைக் கட்டுப்படுத்துல் பற்றி பயிற்சி அளித்தனர்.
பவானி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சத்யராஜ் வேளாண்மைத் துறை மூலம் பாரம்பரிய நெல் ரகங்கள் 50 சதவீத மானிய விலையில் வழங்கப்படுவது குறித்து தெரிவித்தார்.
தோட்டக்கலை உதவி இயக்குநர் மல்லிகா தோட்டக்கலை துறை மூலம் இயற்கை விவசாயம் மேற்கொள்பவர்களுக்கு வழங்கப்படும் மானிய விபரம் குறித்து விளக்கமளித்தார்.
குப்புச்சிபாளையத்தில் கடந்த 7 வருடங்களாக இயற்கை விவசாயம் மேற்கொண்டு வரும் ஞானபிரகாசம் தனது பண்ணையில் பஞ்சகாவ்யா, ஜுவாமிர்தம், மீன் அமிலம், வெர்மிகம்போஸ்ட், வெர்மிவாஷ் ஆகியவை தயாரிப்பது குறித்து செயல்விளக்கம் அளித்தார்.
இப்பயிற்சிகளுக்கான ஏற்பாடுகளை ராதா, நாசர்அலி, தமிழரசு ஆகிய விதைச்சான்று அலுவலர்கள் செய்திருந்தனர்.
- கன்சல்டிங் நிறுவனத்தில் நிறுத்தப்பட்ட கார்களில் ஒரு காரை காணவில்லை.
- இது குறித்து கோபுராஜ் வெள்ளோடு போலீசில் புகார் செய்தார்.
சென்னிமலை:
சென்னிமலையை அடுத்த பெருந்துறை ஆர்.எஸ். வெள்ளமுத்து கவுண்டன்வலசை சேர்ந்த வர் கோபுராஜ் (வயது 30).
இவர் பெருந்துறை ஆர்.எஸ். பகுதியில் உள்ள பெருந்துறை ரோட்டில் தனது நண்பர் குமரவேல் என்பவருடன் சேர்ந்து கார்களை வாங்கி விற்கும் கன்சல்டிங் நிறுவனம் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் கோபு ராஜ் வழக்கம்போல் தனது கன்சல்டிங் நிறு வனத்தில் வெளி மாவட்டங்களில் இருந்து வாங்கி வந்த 7 கார்களை கம்பி வேலி அமைக்கப்பட்ட பகுதிக்குள் நிறுத்தி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.
இதையடுத்து அவர் காலை நிறுவனத்துக்கு வந்து பார்த்தார். அப்போது அங்கு நிறுத்தப்பட்ட கார்களில் ஒரு காரை காணவில்லை. இது குறித்து அக்கம் பக்கம் விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்க வில்லை.
காரை திருடி சென்றது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ.60 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்து கோபுராஜ் வெள்ளோடு போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அந்த பகுதியில் பொருத்த ப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
- சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டுக்கு சீசன் காலங்களில் சுமார் 3 முதல் 5 டன் வரை மல்லிகைப்பூக்கள் கொண்டு வரப்படும்.
- தற்போது கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் மல்லிகைப்பூக்கள் செடியிலேயே கருகி வருகிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் பல்வேறு வகையான மலர்களை சாகுபடி செய்து வருகின்றனர். இதில் அதிக அளவில் சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் மல்லிகைப்பூ சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
அதிகாலை நேரத்தில் விவசாயிகள் மல்லிகைப்பூக்களைபறித்து விற்பனைக்காக சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டுக்கு கொண்டுவருவார்கள். அங்கு ஏலம் முறையில் பூக்கள் விற்பனை நடைபெறும்.
இந்த சந்தையில் மல்லிகைப்பூக்களை ஏலம் எடுக்க பல்வேறு பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் அதிகளவில் வருவார்கள். மேலும் இந்த மார்க்கெட்டில் இருந்து கேரளாவுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டுக்கு சீசன் காலங்களில் சுமார் 3 முதல் 5 டன் வரை மல்லிகைப்பூக்கள் கொண்டு வரப்படும். ஆனால் தற்போது கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் மல்லிகைப்பூக்கள் செடியிலேயே கருகி வருகிறது. இதனால் பூ உற்பத்தி குறைந்து விட்டது.
இன்று சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டுக்கு குறைந்த அளவிலேயே மல்லிகைப்பூக்கள் கொண்டு வரப்பட்டது. மேலும் தற்போது பொங்கல் பண்டிகை என்பதால் மல்லிகைப்பூக்கள் தேவை அதிகரித்து உள்ளது. பூக்கள் வரத்து குறைந்து தேவை அதிகரித்து உள்ளதால் இன்று நடந்த பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.6200-க்கு விற்பனை ஆனது.
- பொள்ளாச்சி டாப்சிலிப் பகுதியில் இருந்து கபில்தேவ், அரிசி ராஜா, கலீம் என 3 கும்கி யானைகள் ஜோரகாடு பகுதிக்கு வரவழைக்கப்பட்டது.
- 3 மயக்க ஊசி செலுத்தியும் கருப்பன் யானை மயக்கம் அடையாமல் சென்றது.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.வனவிலங்குகள் அவ்வப்போது உணவு, தண்ணீர் தேடி விவசாயத் தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்வதும், கால்நடைகளை வேட்டையாடுவதும் தொடர்கதையாகி வருகிறது.
கடந்த 1 வருடத்துக்கு முன்பு தாளவாடி மற்றும் ஜீர்கள்ளி வனச்சரகத்திக்கு உட்பட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வந்தது. அதேபோல விவசாய தோட்டத்தில் காவலுக்கு இருந்த தர்மபுரம் பகுதியை சேர்ந்த மல்லப்பா என்ற விவசாயி மற்றும் திகினாரை ஜோரைகாடு பகுதியை சேர்ந்த மாதேவா என்ற விவசாயியையும் அந்த ஒற்றை யானை மிதித்துக் கொன்றது.
அதைத் தொடர்ந்து பொள்ளாச்சியில் இருந்து ராஜவர்தன் மற்றும் சின்னத்தம்பி, என்ற கும்கி யானைகளை வரவழைத்த வனத்துறையினர் மனிதர்களை அச்சுறுத்திய யானைக்கு கருப்பன் என பெயரிட்டனர். பின்னர் கும்கியானைகள் உதவியுடன் கருப்பன் யானையை அடர்ந்த வனப்பகுதியில் விரட்டி அடித்தனர்.
மீண்டும் கடந்த 2 மாதமாக ஜீர்கள்ளி வனச்சரகத்திக்கு உட்பட்ட திகினாரை, ஜோரைகாடு, கரளவாடி, மரியபுரம், பகுதியில் அந்தக் கருப்பன் என்ற ஒற்றை யானை விவசாய தோட்டத்தில் புகுந்து தொடர்ந்து கரும்பு, வாழை, மக்காச்சோளம், முட்டைக்கோஸ், பயிர்களை சேதம் செய்வது தொடர்கதையாகி வந்தது.
யானையை விரட்டும் விவசாயிகளையும் ஒற்றை யானை துரத்துவதும் வாடிக்கையாகியுள்ளது. இந்த நிலையில் தொடர்ந்து பயிர்களை நாசம் செய்து வரும் ஒற்றை கருப்பன் யானையை கும்கி யானை கொண்டு வந்து பிடிக்க வேண்டும் என வனத்துறை வாகனத்தை அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் சிறை பிடித்தனர்.
அதை தொடர்ந்து பொள்ளாச்சி டாப்சிலிப் பகுதியில் இருந்து கபில்தேவ், அரிசி ராஜா, கலீம் என 3 கும்கி யானைகள் ஜோரகாடு பகுதிக்கு வரவழைக்கப்பட்டது. உயர் அதிகாரிகளின் உத்தரவுபடி கருப்பன் யானைக்கு மயக்க ஊசி செலுத்து பிடிக்க முடிவு செய்யப்பட்டது. அதை தொடர்ந்து கடந்த 11-ந் தேதி மாவட்ட வனப்பாதுகாவலர் ராஜ்குமார், ஆசனூர் வனக்கோட்ட உதவி இயக்குனர் தேவேந்திரகுமார் மீனா, வனச்சரகர்கள் ராமலிங்கம் (ஜீர்கள்ளி) சதீஸ் (தாளவாடி) தினேஷ் (கேர்மாளம்) கால்நடைதுறை மருத்துவர்கள் சதாசிவம் (சத்தியமங்கலம்), விஜயராகவன் (ஆனைமலை), ராஜேஷ்குமார் (முதுமலை), பிரகாஷ் (ஓசூர்) தலைமையில் 150 வன ஊழியர்களுடன் கருப்பன் யானையை பிடிக்க ஆபரேசன் தொடங்கப்பட்டது.
கடந்த புதன் இரவு விடிய விடிய காத்திருந்தும் கருப்பன் யானை வரவில்லை. பின்னர் வியாழன் இரவு இடத்தை மாற்றிய கருப்பன் யானை இரியபுரம், மல்குத்திபுரம் பகுதியில் நுழைந்தது. அங்கு சென்ற குழுவினர் கருப்பன் யானையை சுற்றிவளைத்தனர். ஆனால் அனைவரையும் துரத்தி பசுமாட்டை காயப்படுத்திவிட்டு வனப்பகுதிக்குள் தப்பியது.
இதையடுத்து 3-வது நாளாக நேற்று இரவு கருப்பன் யானையை பிடிக்க வனத்துறையினர் காத்திருந்தனர். அப்போது தோட்டத்தில் வரும்போது மயக்க ஊசி செலுத்தி பிடிக்க குழுவினர் தயார்நிலையில் இருந்தனர். அதேபோல் மல்குத்திபுரம் பகுதியில் விவசாய தோட்டத்தில் கருப்பன் யானை புகுந்தது. பின்னர் பொக்லைன் எந்திரம் உதவியுடன் கருப்பன் யானையை குழுவினர் சுற்றி வளைத்தனர். இன்று அதிகாலை 3.15 மணியளவில் கருப்பன் யானைக்கு துப்பாக்கி மூலம் மயக்கஊசி செலுத்தப்பட்டது. பாதி மயக்கத்தில் இருந்த கருப்பன் யானை விவசாய தோட்டத்தில் இருந்து வனப்பகுதிக்குள் சென்றது. தொடர்ந்து மேலும் 2 முறை மயக்க ஊசி செலுத்தப்பட்டது. 3 மயக்க ஊசி செலுத்தியும் கருப்பன் யானை மயக்கம் அடையாமல் சென்றது. இதையடுத்து கும்கிகளுடன் வனத்துறையினர் கருப்பன் யானையை பின்தொடர்ந்து வனப்பகுதிக்கு சென்றனர். இன்று மாலைக்குள் கருப்பன் யானை பிடிக்கப்படும் என்று வனத்துறையினர் நம்பிக்கை தெரிவித்தனர்.
- திவ்யா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த திங்களூர் செல்லப்பம்பாளையம் கிழக்கு புதூர் காலனி பகுதியை சேர்ந்தவர் திவ்யா. இவர் சிவகிரியை சேர்ந்த நவீன் குமார் என்பவைரை கடந்த 2021-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் திவ்யாவின் தாய், அண்ணன் மற்றும் அக்கா ஆகியோர் உடல் நலக்குறைவால் இறந்து விட்டனர். இதனால் திவ்யா மனவேதனையில் இருந்து வந்த நிலையில் கணவருடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து ஊர் பெரியவர்கள் முன்னிலையில் இருவரும் பிரிந்து வாழ்வதென முடிவு எடுத்து திவ்யா கணவரை பிரிந்து தந்தை பழனிச்சாமியுடன் கிழக்கு புதூர் காலனியில் வசித்து வந்தார்.
ஏற்கனவே தாய், அண்ணன் மற்றும் அக்காவை இழந்த நிலையில் தற்போது கணவரையும் பிரிந்து விட்டதால் கடந்த சில நாட்களாக திவ்யா மனவேதனையில் இருந்துள்ளார்.
இந்நிலையில் சம்பத்தன்று தற்கொலை செய்ய முடிவு எடுத்த திவ்யா வீட்டில் இருந்த சல்பாஸ் (விஷ) மாத்திரையை எடுத்து சாப்பிட்டு விட்டார். இதனால் வயிற்று வலியால் அவர் துடித்தார்.
இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் திவ்யாவை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சையில் இருந்த திவ்யா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து திங்களூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அந்தியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி சம்பவ இடத்துக்கு வந்து குப்பம்மாள் மற்றும் ரேசன் கடை ஊழியரிடம் விசாரணை நடத்தினார்.
- தனது சொந்த பணத்தில் மூதாட்டிக்கு ரூ.1000 வழங்கி பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடுங்கள் என தெரிவித்தார்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ள கூட்டுறவு ரேசன் கடைக்கு அந்த பகுதியை சேர்ந்த குப்பம்மாள் (வயது 80) என்ற மூதாட்டி பொங்கல் பரிசு பொருட்கள் வாங்க வந்திருந்தார்.
அப்போது அவருக்கு பரிசு பொருட்கள் மட்டும் கொடுத்து பணம் வழங்க வில்லை என அந்த மூதாட்டி புகார் கூறினார்.
இது பற்றி அந்தியூர் பேரூராட்சி 1-வது வார்டு கவுன்சிலர் சரஸ்வதி யின் கணவர் விஸ்வநாதனிடம் அந்த மூதாட்டி கூறினார். இதையடுத்து அவர் ரேசன் கடைக்கு வந்து இது குறித்து விசாரித்தார்.
இது பற்றி தகவல் அறிந்ததும் அந்தியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி சம்பவ இடத்துக்கு வந்து குப்பம்மாள் மற்றும் ரேசன் கடை ஊழியரிடம் விசாரணை நடத்தினார்.
இதையடுத்து கடை ஊழியர்கள் அங்கு பணத்தை சரி பார்தனர். இதில் பணம் சரியாக இருந்தது. மற்ற குடும்ப அட்டைகளுக்கு வழங்க வேண்டிய பணம் மட்டும் இருந்தது தெரிய வந்தது. மேலும் மூதாட்டி பணம் தவற விட்டதும் தெரிய வந்தது.
இதை தொடர்ந்து சப்- இன்ஸ்பெக்டர் கார்த்தி, தனது சொந்த பணத்தில் மூதாட்டிக்கு ரூ.1000 வழங்கி பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடுங்கள் என தெரிவித்தார்.
இதை கண்ட அங்கு இருந்த பொதுமக்கள் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தியின் மனிதநேய செயலை பாராட்டி அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
- கொடிவேரி பிரிவு பகுதியில் 2 வேன்களும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி கொண்டது.
- இதில் வேனின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.
கோபி:
ஈரோடு மாவட்டம் வெள்ளித் திருப்பூர் பகுதி யில் இருந்து அதே பகுதியை சேர்ந்த சங்கை (40) என்பவர் வேனில் பால் கேன்களை ஏற்றி கொண்டு சத்திய மங்கலத்துக்கு சென்று கொண்டு இருந்தார். வேனை சங்கை ஓட்டி சென்றார்.
அவர் கோபிசெட்டிபாளையம் ரோட்டில் இன்று காலை வந்து கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக எதிரே மற்றொரு வேன் வந்தது.
கொடிவேரி பிரிவு பகுதியில் வந்த போது அந்த 2 வேன்களும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி கொண்டது. இதில் வேனின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.
இதில் சங்கை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது பற்றி தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவரது உடலை மீட்டு கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் மற்றொரு வேனில் வந்த டிரைவர் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்சு மூலம் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.
- தைப்பொங்கலை முன்னிட்டு நகராட்சி வார சந்தையில் கால்நடைகள் விற்பனை அமோகமாக நடைபெற்றது.
- இதேபோல் பொங்கல் வைப்பதற்கு பானைகள், கரும்புகளையும் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வாங்கி சென்றனர்.
பு.புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி வாரச்சந்தை தமிழ்நாட்டின் மிகப்பெரிய 2-வது சந்தையாகும்.
இந்த சந்தைக்கு வெளி மாநிலங்களில் இருந்தும் மற்றும் வெளி மாவட்டங்க ளான கோவை, திருப்பூர், நாமக்கல், கரூர், சேலம் மற்றும் சுற்றுப்பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்தும் விவசாயிகள் மற்றும் பொது மக்கள் வந்து அவர்களுக்கு தேவைக்காக பொருட்கள் வாங்கி செல்வது வழக்கம்.
இந்நிலையில்வரும் தைப்பொங்கலை முன்னிட்டு நகராட்சி வார சந்தையில் கால்நடைகள் விற்பனை அமோகமாக நடைபெற்றது. மாடுகளுக்கு கொம்பு சீவும் பணியும் நடைபெற்று வருகிறது.
மாடு, கன்றுகளுக்கு கொம்புகள் சீவியும், அழகு படுத்தியும், வண்ணங்கள் பூசியும் விவசாயிகள் மகிழ்ந்தனர்.
மேலும் மாடு, கன்றுகளுக்கு தேவையான மூக்கணாங்கயிறு, திரிகாணி, கயிறு, தும்பு சங்கு, கயிறு சாட்டை போன்ற அழகுப்பொருட்களையும், வாரு அரிவாள், சுத்தி, மம்முட்டி, கடப்பாரை போன்ற பொருட்களை விவசாயிகள் வாங்கி சென்றனர்.
இதேபோல் பொங்கல் வைப்பதற்கு பானைகள், கரும்புகளையும் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வாங்கி சென்றனர்.
- பக்தர்கள் குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
- தொடர்ந்து மாவிளக்கு பூஜை, கூத்தாண்டவர் அழைப்பு மற்றும் கம்பம் பிடுங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
நம்பியூர்:
ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஊராட்சி ஒன்றிய த்திற்கு உட்பட்ட கோசணம் மாகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா கடந்த 4-ந் தேதி பூச்சாட்டுகளுடன் தொடங்கி நடந்து வருகிறது.
விழாவையொட்டி கூத்தாண்ட மாரியம்மன் காப்பு கட்டுதல் மற்றும் கம்பம் நடப்பட்டது. தொடர்ந்து கடந்த 10-ந் தேதி பச்சை பழம் அபிஷேகம் நடைபெற்றது.
இதையொட்டி 11-ந் தேதி இரவு அம்மன் அழைப்பு மற்றும் குண்டம் திறப்பு விழா நடைபெற்றது. அதனை தொடர்ந்து நேற்று காலை குண்டம் விழா நடந்தது.
இதில் நம்பியூர், கோசணம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
தொடர்ந்து மாவிளக்கு பூஜை, கூத்தா ண்டவர் அழைப்பு மற்றும் கம்பம் பிடுங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னதாக பக்தர்கள் அம்மனுக்கு எருமைக்கிடாய் பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது. தொடர்ந்து இன்று மாகாளியம்மனுக்கு மஞ்சள் நீராட்டு மற்றும் சாமி ஊர்வலம் நடந்தது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை பொத்தப்பாளையம் மாகாளிஅம்மன் கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.






