2 வேன்கள் நேருக்கு நேர் மோதி டிரைவர் பலி

கொடிவேரி பிரிவு பகுதியில் 2 வேன்களும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி கொண்டது.இதில் வேனின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.
2 வேன்கள் நேருக்கு நேர் மோதி டிரைவர் பலி
Published on

கோபி:

ஈரோடு மாவட்டம் வெள்ளித் திருப்பூர் பகுதி யில் இருந்து அதே பகுதியை சேர்ந்த சங்கை (40) என்பவர் வேனில் பால் கேன்களை ஏற்றி கொண்டு சத்திய மங்கலத்துக்கு சென்று கொண்டு இருந்தார். வேனை சங்கை ஓட்டி சென்றார்.

அவர் கோபிசெட்டிபாளையம் ரோட்டில் இன்று காலை வந்து கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக எதிரே மற்றொரு வேன் வந்தது.

கொடிவேரி பிரிவு பகுதியில் வந்த போது அந்த 2 வேன்களும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி கொண்டது. இதில் வேனின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.

இதில் சங்கை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது பற்றி தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவரது உடலை மீட்டு கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் மற்றொரு வேனில் வந்த டிரைவர் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்சு மூலம் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com