என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கயிறு-அழகுப்பொருட்கள்"

    • தைப்பொங்கலை முன்னிட்டு நகராட்சி வார சந்தையில் கால்நடைகள் விற்பனை அமோகமாக நடைபெற்றது.
    • இதேபோல் பொங்கல் வைப்பதற்கு பானைகள், கரும்புகளையும் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வாங்கி சென்றனர்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி வாரச்சந்தை தமிழ்நாட்டின் மிகப்பெரிய 2-வது சந்தையாகும்.

    இந்த சந்தைக்கு வெளி மாநிலங்களில் இருந்தும் மற்றும் வெளி மாவட்டங்க ளான கோவை, திருப்பூர், நாமக்கல், கரூர், சேலம் மற்றும் சுற்றுப்பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்தும் விவசாயிகள் மற்றும் பொது மக்கள் வந்து அவர்களுக்கு தேவைக்காக பொருட்கள் வாங்கி செல்வது வழக்கம்.

    இந்நிலையில்வரும் தைப்பொங்கலை முன்னிட்டு நகராட்சி வார சந்தையில் கால்நடைகள் விற்பனை அமோகமாக நடைபெற்றது. மாடுகளுக்கு கொம்பு சீவும் பணியும் நடைபெற்று வருகிறது.

    மாடு, கன்றுகளுக்கு கொம்புகள் சீவியும், அழகு படுத்தியும், வண்ணங்கள் பூசியும் விவசாயிகள் மகிழ்ந்தனர்.

    மேலும் மாடு, கன்றுகளுக்கு தேவையான மூக்கணாங்கயிறு, திரிகாணி, கயிறு, தும்பு சங்கு, கயிறு சாட்டை போன்ற அழகுப்பொருட்களையும், வாரு அரிவாள், சுத்தி, மம்முட்டி, கடப்பாரை போன்ற பொருட்களை விவசாயிகள் வாங்கி சென்றனர்.

    இதேபோல் பொங்கல் வைப்பதற்கு பானைகள், கரும்புகளையும் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வாங்கி சென்றனர்.

    ×