என் மலர்
நீங்கள் தேடியது "இயற்கை விவசாயிகளுக்கு"
- இயற்கை விவசாயிகளுக்கு ஈரோடு மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் மோகனசுந்தரம் பயிற்சி அளித்தார்.
- இயற்கை விவசாயம் மேற்கொள்பவர்களுக்கு வழங்கப்படும் மானிய விபரம் குறித்து விளக்கமளித்தார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்த குருப்பநாயக்கன்பாளையம் அரசு விதைப்பண்ணை அலுவலக வளாகத்தில் ஈரோடு, நாமக்கல், சேலம் மற்றும் தர்மபுரி மாவட்டத்தில் இருந்து விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்றுத் துறையில் புதிதாக பதிவு செய்துள்ள இயற்கை விவசாயிகளுக்கு ஈரோடு மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் மோகனசுந்தரம் பயிற்சி அளித்தார்.
அங்ககப்பண்ணையில் மேற்கொள்ளப்பட வேண்டிய பயிர் மேலாண்மை முறைகள், விதை தேர்வு செய்தல், ரகம் தேர்வு செய்தல் மற்றும் பயிரிட வேண்டிய பருவங்கள், அங்ககப் பண்ணையில் பயன்படுத்தக் கூடிய இடுபொருட்கள் மற்றும் பயன்படுத்தக்கூடாத இடுபொருட்கள், அறுவடைக்கு பின் நேர்த்தி முறைகள், விற்பனை வாய்ப்புகள் குறித்து பயிற்சி அளித்தார்.
ஈரோடு அங்ககச்சான்று ஆய்வாளர் மகாதேவன் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள், களை மேலாண்மை மற்றும் நீர் மேலாண்மை பற்றி பயிற்சியளித்தார்.
உயிர் உரம் உற்பத்தி மையத்தின் வேளாண்மை அலுவலர் புனிதா உயிர் உரம் தயாரிப்பு முறைகள் மற்றும் பயன்படுத்தும் முறைகள் அதனால் பயிருக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து தெரிவித்தார்.
உயிரியல் கட்டுப்பாட்டு மையத்தின் வேளாண்மை அலுவலர்கள் கோகுலவாசன் மற்றும் மிதுன் ஆகியோர் உயிரியல் பூஞ்சாணக்கொல்லிகளான பெவேரியா பேசியானா, டிரைக்கோடெர்மா விரிடி, சூடோமோனஸ் புளோ ரசன்ஸ் ஆகியவற்றைக் கொண்டு நோயைக் கட்டுத்துதல், டிரைக்கோகி ரம்மா முட்டை ஒட்டுண்ணி மற்றும் கிரைசோபெர்லா இறை விழுங்கியை கொண்டு பூச்சிகளைக் கட்டுப்படுத்துல் பற்றி பயிற்சி அளித்தனர்.
பவானி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சத்யராஜ் வேளாண்மைத் துறை மூலம் பாரம்பரிய நெல் ரகங்கள் 50 சதவீத மானிய விலையில் வழங்கப்படுவது குறித்து தெரிவித்தார்.
தோட்டக்கலை உதவி இயக்குநர் மல்லிகா தோட்டக்கலை துறை மூலம் இயற்கை விவசாயம் மேற்கொள்பவர்களுக்கு வழங்கப்படும் மானிய விபரம் குறித்து விளக்கமளித்தார்.
குப்புச்சிபாளையத்தில் கடந்த 7 வருடங்களாக இயற்கை விவசாயம் மேற்கொண்டு வரும் ஞானபிரகாசம் தனது பண்ணையில் பஞ்சகாவ்யா, ஜுவாமிர்தம், மீன் அமிலம், வெர்மிகம்போஸ்ட், வெர்மிவாஷ் ஆகியவை தயாரிப்பது குறித்து செயல்விளக்கம் அளித்தார்.
இப்பயிற்சிகளுக்கான ஏற்பாடுகளை ராதா, நாசர்அலி, தமிழரசு ஆகிய விதைச்சான்று அலுவலர்கள் செய்திருந்தனர்.






