என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நெல் கொள்முதல்"

    • 15 இடங்களில் கொள்முதல் நிலையங்கள் அமைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
    • விவசாயிகள் என்ற பெயரில் போலியாகவும் வியாபாரிகள் மூலமும் நெல்லை கொள்முதல் செய்வதை தடுக்க வேண்டும்.

    ஈரோடு:

    பவானிசாகர் அணையில் திறக்கப்படும் தண்ணீர் மூலம் கீழ்பவானி பாசன வாய்காலில் 1 லட்சத்து 3 ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன.

    நடப்பாண்டு கீழ்பவானியில் தண்ணீர் திறப்பு உரிய நேரத்தில் நடந்தாலும், ஆங்காங்கே முறையாக பராமரிப்பு பணி செய்யாததால் உடைப்பு ஏற்பட்டது.

    அதனை விரைவாக சீரமைக்காததால் பல நாட்கள் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. இருப்பினும் மழை கை கொடுத்ததால் கடந்த 15 நாட்களுக்கு மேலாக அறுவடை பணிகள் நடந்து வருகிறது.

    இது குறித்து நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் கூறியதாவது:

    கீழ்பவானி பாசன பகுதியில் அறுவடை பணிகள் நடந்து வருவதால் 12 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, விவசாயிகள் கொண்டு வரும் நெல் முழு அளவில் கொள்முதல் செய்யப்படுகிறது.

    வரும் வாரங்களில் மேலும் சில இடங்களில் கொள்முதல் நிலையங்கள் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    ஏற்கனவே 15 இடங்களில் கொள்முதல் நிலையங்கள் அமைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளன. கூடுதல் நிலையங்கள் விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சுப்பு கூறியதாவது:

    கீழ்பவானி பாசன பகுதியில் அறுவடை பணிகள் தீவிரமாக நடப்பதால் தேவையான இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் உடன் திறந்து முழு அளவில் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும்.

    நெல் கொள்முதலுக்கு கடந்த காலங்களில் நடந்த தவறுகள் இந்தாண்டு நடக்காமல் தொடக்கம் முதல் தடுக்க வேண்டும்.

    குறிப்பாக சாக்கு எடை எனக்கூறி மூட்டைக்கு 10 ரூபாய் விவசாயிகளிடம் கட்டாயமாக வசூலிப்பதை தடுக்க வேண்டும். விவசாயிகள் என்ற பெயரில் போலியாகவும் வியாபாரிகள் மூலமும் நெல்லை கொள்முதல் செய்வதை தடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மக்கள் தங்களுக்கு தேவையான சாதி, இருப்பிட சான்று போன்ற சான்றிதழ்கள் பெற கட்டப்பட்டது.
    • திருப்பந்தியூர் கிராமச் சேவை மையம் நெல் கொள்முதல் நிலையமாக மாறி உள்ளது.

    திருவள்ளூர் அருகே உள்ள திருப்பந்தியூர் ஊராட்சிக்குட்பட்டது பண்ணுார் கிராமம். இங்குள்ள கால்நடை மருத்துவமனை அருகே கடந்த 2014-15-ம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.14.55 லட்சம் மதிப்பீட்டில் கிராம சேவை மையம் கட்டப்பட்டது.

    இதன் மூலம் மக்கள் தங்களுக்கு தேவையான சாதி, இருப்பிட சான்று போன்ற சான்றிதழ்கள் பெற கட்டப்பட்டது. ஆனால் பணிகள் நிறைவடைந்து 5 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்று வரை இந்த கிராம சேவை மையம் பயன்பாட்டிற்கு வராமல் பூட்டியே கிடக்கிறது. இந்நிலையில் தற்போது திருப்பந்தியூர் கிராமச் சேவை மையம் நெல் கொள்முதல் நிலையமாக மாறி உள்ளது. அங்கு முழுவதும் நெல்மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளன. இது அப்பகுதி மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மாவட்ட நிர்வாகம் கிராம சேவை மையத்தை முறையான மக்கள் சேவை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    ×