என் மலர்tooltip icon

    ஈரோடு

    • வாய்க்கால் தடுப்பு சுவர் மீது அமர்ந்திருந்த ராபர்ட் நிலைதடுமாறி வாய்க்காலில் விழுந்து விட்டார்.
    • டாக்டர் ராபர்ட்டை பரிசோதித்து விட்டு வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

    ஈரோடு:

    ஈரோடு மூலப்பாளையம் பாரதி பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராபர்ட் (55). இவர் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 13 வருடங்களாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார்.

    இவரது மகன் ரிச்சர்ட் (24), மனைவி, குழந்தை–களுடன் நாமக்கல் மாவட்டம் திருச்செங் ேகாட்டில் வசித்து கொண்டு அங்குள்ள தார்பாய் கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.

    இந்நிலையில் ராபர்ட் வீட்டுக்கு செல்லாமல், மூலப்பாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையின் அருகில் சாலையோ ரத்திலேயே தங்கிக்கொண்டு அவ்வப்போது எலெட்ரீஷியன் வேலை செய்து கொண்டு அதில் வரும் வருமானத்தில் மது அருந்திவிட்டு சுற்றி திரிந்து வந்தார்.

    அவ்வப்போது திருச்செங்கோட்டில் உள்ள தனது மகன் ரிச்சர்டையும் சென்று பார்த்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று மூலப்பாளையம் டாஸ்மாக் கடைக்கு அருகில் உள்ள வாய்க்கால் தடுப்பு சுவர் மீது அமர்ந்திருந்த ராபர்ட் நிலைதடுமாறி வாய்க்காலில் விழுந்து விட்டார்.

    சிறிது நேரம் கழித்தே அவ்வழியாகச் சென்றவர்கள் வாய்க்காலில் விழுந்து கிடந்த ராபர்ட்டை கவனித்துள்ளனர்.

    உடனடியாக அவரை மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்துள்ளனர். அப்போது அங்கு பணியில் இருந்த டாக்டர் ராபர்ட்டை பரிசோதித்து விட்டு வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ராபர்ட்டின் மகன் ரிச்சர்ட் அளித்த புகாரின் பேரில் சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்ற னர்.

    • அறிக்கையின் அடிப்படையில் அந்தியூர் தாசில்தார் மற்றும் கல்வி அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
    • மேலும் சமையலர் வள்ளியம்மாளை சஸ்பெண்டு செய்தும் உத்தரவிட்டார்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அடுத்த அத்தாணி அருகே கரட்டூரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி யில் 157 மாணவ-மாணவி கள் படித்து வருகின்றனர். இதில் பெரும்பாலான மாணவர்கள் பள்ளியில் வழங்கப்படும் சத்துணவு சாப்பிட்டு வருகிறார்கள்.

    இந்த பள்ளியில் தலைமை ஆசிரியை விஜய லட்சுமி உள்பட 5 ஆசிரி யர்கள் பணியாற்றி வரு கின்றனர். அத்தாணி பகுதி யை சேர்ந்த ஜவகர் என்பவர் சத்துணவு அமைப்பாளராகவும், கரட்டூர் பகுதியை சேர்ந்த வள்ளியம்மாள் சமையல ராக கடந்த 20 வருடங்களாக பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில் பள்ளியில் படிக்கும் 132 மாணவ-மாணவிகள் வழக்கம் போல மதிய உணவு சாப்பிட சென்றனர். அவர்களுக்கு வெஜிடபிள் சாப்பாடு கொடுக்கப்பட்டது.

    இந்த உணவை சாப்பிட்ட ஒரு சில மாணவிகள் உணவில் ஏதோ கிடப்பதாக சமையலர் வள்ளியம்மா ளிடம் கூறினர். இதையடுத்து அவர் மற்ற மாணவர்களிடம் உணவை சாப்பிட வேண்டாம் என்று கூறி நிறுத்தி விட்டார்.

    இந்நிலையில் பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவ, மாணவிகள் மதிய உணவில் பல்லி கிடந்ததாக பெற்றோரிடம் கூறினர். அப்போது மாணவர்கள் சிலர் வாந்தி எடுத்து மயக்கம் அடைந்தனர்.

    இதையடுத்து ஒரு சில பள்ளி குழந்தைகளை பெற்றோர் கள் மீட்டு அத்தாணி கருவல்வாடி புதூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலை யத்துக்கு சிகிச்சை க்காக அழைத்துச் சென்ற னர்.

    இந்த தகவல் பரவியதும் பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 100-க்கும் மேற் பட்ட மாணவர்களும் கருவல்வாடிபுதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலை யத்துக்கு சென்று சிகிச்சை பெற்றனர்.

    மேலும் அந்தியூர் அரசு மருத்துவ மனையில் 29 மாணவ, மாணவிகள் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

    இது பற்றி தகவல் அறிந்த தும் அந்தியூர் தாசில்தார், கல்வி அதிகாரிகள் மற்றும் பவானி டி.எஸ்பி. ஆகியோர் விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் கரட்டூர் அரசு நடுநிலைப்பள்ளியில் உள்ள பயன்படுத்தப்படும் தண்ணீர் மற்றும் மதிய உணவுகளின் மாதிரிகளை எடுத்து இந்த உணவில் விஷத்தன்மை கலந்து உள்ளதா? என்பதை ஆய்வு செய்ய உணவு கட்டுப்பாடு அதிகாரிகள் கோவையில் உள்ள பரிசோதனை மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

    இதன் அறிக்கை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது.

    இந்த அறிக்கையின் அடிப்படையில் அந்தியூர் தாசில்தார் மற்றும் கல்வி அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

    இந்த அறிக்கையின் படி அந்தியூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜோதிலிங்கம் அந்த பள்ளி யின் சத்துணவு அமைப்பாளர் ஜவகர் என்பவரை பணியிடை மாற்றம் செய்து உத்தர விட்டார்.

    மேலும் சமையலர் வள்ளியம்மாளை சஸ்பெண்டு செய்தும் உத்தரவிட்டார்.

    • அவ்வழியாக வந்த வேன் எதிர்பாராத விதமாக முத்து மீது பலமாக மோதியது.
    • இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    பெருந்துறை:

    திருச்சி பொன்மலை பகுதியை சேர்ந்தவர் முத்து (வயது 45). லாரி டிரைவர்.

    இவர் சம்பவத்தன்று திருப்பூர் பகுதியில் லோடு இறக்கி விட்டு வீட்டிற்கு செல்வதற்காக லாரியை எடுத்துக்கொண்டு வந்துள்ளார்.

    இந்நிலையில் சாப்பிடுவதற்காக லாரியை பெருந்துறை சரளை அருகே ரோட்டின் ஓரத்தில் நிறுத்தி விட்டு ரோட்டை கடந்து மறுபுறம் ஓட்டலை நோக்கி சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது அவ்வழியாக வந்த வேன் எதிர்பாராத விதமாக முத்து மீது பலமாக மோதியது. இதில் தலை மற்றும் உடலில் பலத்த அடிபட்ட அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    பின்னர் இது தொடர்பாக தகவல் அறிந்த பெருந்துறை போலீசார் முத்துவின் உடலை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • ஏலத்தில் விவசாயிகள் 3,117 மூட்டைகள் நாட்டுச்சர்க்கரை கொண்டு வந்திருந்தனர்.
    • இதேபோல உருண்டை வெல்லம் 3,600 கிலோ எடையிலான 120 மூட்டைகள் விற்பனையாகின.

    ஈரோடு:

    பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பிரசாதங்கள் தயாரிக்க ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இருந்து கரும்புச்சர்க்கரை எனப்படும் நாட்டுச் சர்க்கரை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

    இதற்காக ஏலத்தில் பங்கேற்க சுற்று வட்டாரப் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 3,117 மூட்டைகள் நாட்டுச்சர்க்கரையை கொண்டு வந்திருந்தனர்.

    இதில், 60 கிலோ எடையிலான மூட்டை, முதல் தரம் ஒரே விலையாக ரூ. 2,400-க்கு விற்பனையானது. 2-ம் தரம், குறைந்தபட்சமாக மூட்டை ரூ.2,360-க்கும், அதிகபட்சமாக ரூ.2,480-க்கும் விற்பனையானது.

    இதில் மொத்தம் 1 லட்சத்து 13 ஆயிரத்து 280 கிலோ எடையிலான 1,888 நாட்டுச்சர்க்கரை மூட்டைகள் விற்பனையாகின. இதன் விற்பனை மதிப்பு ரூ.45 லட்சத்து 4 ஆயிரத்து 480 ஆகும்.

    இதேபோல உருண்டை வெல்லம் முதல் தரம் 30 கிலோ சிப்பம் ஒரே விலையாக ரூ.1,560 எனும் விலையில், 3,600 கிலோ எடையிலான 120 மூட்டைகள் விற்பனையாகின. இதன் மதிப்பு ரூ.1 லட்சத்து 87 ஆயிரத்து 200 ஆகும்.

    நாட்டுச்சர்க்கரை, வெல்லம் 2-ம் சேர்த்து மொத்தம் ரூ.46 லட்சத்து 91 ஆயிரத்து 680-க்கு கொள் முதல் செய்யப்பட்டதாக விற்பனைக்கூட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

    • நாகராஜ் தனது மனைவி விஜயலட்சுமிக்கு போன் செய்து விஷ மாத்திரைகள் சாப்பிட்டு விட்டேன் என கூறியுள்ளார்.
    • காஞ்சிக்கோயில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம் பெத்தாம்பாளையம் அருகே உள்ள கருக்கம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (49). இவரது மனைவி விஜயலட்சுமி (42). நாகராஜ் சொந்தமாக சாயப்பட்டறை வைத்து நடத்தி வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 3 மாதங்களாக தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் நாகராஜ் மனமுடைந்த நிலையில் இருந்து வந்துள்ளார்.

    இதனால் நாகராஜ் தனது வீட்டுக்கு செல்லாமல் அதேபகுதியில் உள்ள அவரது அம்மா வீட்டில் தங்கி அளவுக்கு அதிகமாக மது அருந்தி வந்துள்ளார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று அதிகாலை 5 மணியளவில் நாகராஜ் தனது மனைவி விஜயலட்சுமிக்கு போன் செய்து எனக்கு வாழ்க்கை வெறுத்துவிட்டது. அதனால் விஷ மாத்திரைகள் சாப்பிட்டு விட்டேன் என கூறியுள்ளார்.

    உடனடியாக விஜயலட்சுமி தனது தம்பியின் உதவியுடன் நாகராஜை மீட்டு கவுந்தப்பாடியில் உள்ள ஒரு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக சேர்த்தார். பின்னர் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.

    இதையடுத்து நாகராஜை மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே நாகராஜ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து காஞ்சிக்கோயில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பாலகிருஷ்ணன் தனது குடும்பத்தினர்களுடன் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக பண்ணாரியம்மன் கோவிலுக்கு வந்துள்ளார்.
    • அப்போது திடீரென பாலகிருஷ்ணன் மயங்கி விழுந்தார்.

    ஈரோடு:

    கோவை மாவட்டம் பேரூர் செட்டிபாளையம், போஸ்டல் காலனி பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (59). இவரது மனைவி பேச்சியம்மாள் (47). பாலகிருஷ்ணன் பேரூர் பச்சாபாளையத்தில் உள்ள ஆவினில் கணக்காளராக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

    இந்த நிலையில் பாலகிருஷ்ணன் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக சம்பவத்தன்று ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பண்ணாரியம்மன் கோவிலுக்கு வந்துள்ளார்.

    மதியம் சுமார் 2 மணியளவில் குடும்பத்தினர் பொங்கல் வைத்து கொண்டிருந்தபோது பூஜை பொருள்கள் வாங்குவதற்காக கோவிலுக்கு வெளியில் உள்ள கடைக்கு பாலகிருஷ்ணனும், அவரது மனைவியும் சென்றனர்.

    அப்போது திடீரென பாலகிருஷ்ணன் மயங்கி விழுந்தார். உனடியாக அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே பாலகிருஷ்ணன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • தேர்தல் பொறுப்பாளர்கள் தங்களுக்கு என ஒதுக்கப்பட்ட பகுதிகளில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் தங்கி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • ஈரோட்டில் உள்ள அனைத்து சாலைகளிலும் கார்களின் அணிவகுப்பாகவே இருந்தது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தேர்தல் பணியாற்ற தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அரசியல் கட்சியினர் வருகை தந்து தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்.

    தேர்தல் பொறுப்பாளர்கள் தங்களுக்கு என ஒதுக்கப்பட்ட பகுதிகளில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் தங்கி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பெரும்பாலான அரசியல் கட்சியினர் ஈரோட்டையொட்டிய புறநகர் பகுதிகளில் தோட்டங்களில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி உள்ளனர். அவர்கள் பிரசார நேரம் தவிர மற்ற நேரங்களில் அங்கு நடைபயிற்சி செய்தும், கிணற்றில் நீச்சல் அடித்து குளித்தும் உற்சாகம் அடைந்துவருகின்றனர்.

    மேலும் 3 வேளையும் சமையல்காரர்கள் மூலம் உணவு தயாரிக்கப்பட்டு சுடச்சுட உணவு கொடுக்கப்பட்டு வருகிறது. காலையில் சாப்பிட்டு விட்டு பிரசாரத்துக்கு செல்லும் கட்சியினர் மதியம் மீண்டும் தங்கியுள்ள இடங்களுக்கு வந்து சாப்பிட்டு விட்டு சிறிது நேரம் ஓய்வு எடுத்து விட்டு மீண்டும் மாலையில் பிரசாரத்துக்கு புறப்பட்டு சென்று வருகிறார்கள்.

    இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் நேற்று இரவு பிரசாரம் முடிந்ததும் பல்வேறு கட்சி நிர்வாகிகளும் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.

    இதனால் ஈரோட்டில் உள்ள அனைத்து சாலைகளிலும் கார்களின் அணிவகுப்பாகவே இருந்தது. இதுகுறித்து அரசியல் கட்சியினர் கூறும்போது, இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சொந்த ஊருக்கு கிளம்பி செல்கிறோம். மீண்டும் நாளைக்கு வந்துவழக்கம் போல பிரசாரம் மேற்கொள்வோம் என்றனர்.

    • 24 மணி நேரமும் சுழற்சி முறையில் ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • ரூ .50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு கடந்த மாதம் 18-ந் தேதி வெளியானது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதி முறைகள் அமலுக்கு வந்துவிட்டன.

    தேர்தலில் பொதுமக்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் 4 நிலை கண்காணிப்பு குழு, 3 பறக்கும் படை அமைக்கப்பட்டு அவர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதை தொடர்ந்து அவர்கள் ரூ .50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர்.

    அதன்படி கடந்த மாதம் 20-ந் தேதி முதல் நேற்று வரை உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட 38 லட்சத்து 53 ஆயிரத்து 370 ரூபாயை பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்து ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பா ட்டு அறையில் தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமாரிடம் ஒப்படைத்த னர்.

    இந்நிலையில் நேற்று இரவு 10.45 மணி அளவில் வீரப்பம்பாளையத்தில் நிலை கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு கார் வந்தது. அந்த காரை அதிகாரிகள் மற்றும் போலீசார் நிறுத்தி சோதனை செய்த போது அதில் ரூ.3 லட்சம் பணம் இருந்தது தெரிய வந்தது. இது குறித்து காரில் வந்த நபரிடம் விசாரித்த போது அவர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடை சேர்ந்த செல்வ பாரதி (30) என்பது தெரியவந்தது.

    அவரிடம் பணத்திற்குரிய ஆவணங்கள் இல்லாததால் நிலை கண்காணிப்பு குழுவினர் ரூ.3 லட்சத்தை பறிமுதல் செய்து தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் ஒப்படைத்தனர். இதுவரை ஈரோடு கிழக்கு தொகுதியில் மொத்தம் ரூ. 41 லட்சத்து 53 ஆயிரத்து 370 ரூபாய்யை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

    • ஈரோடு இடைத்தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் பரிசுப்பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது.
    • துணை ராணுவத்தினர் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதற்றமான 32 வாக்குச்சாவடிகளில் பணிபுரிவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் 3 பறக்கும் படையினர் மற்றும் 4 நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் பணம் பட்டுவாடா நடப்பதாக வந்த புகார் அடிப்படையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் துணை ராணுவத்தினர், ரெயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே கடந்த 8-ந் தேதி சென்னை ஆவடி, வேலூர் ஆகிய இடங்களில் இருந்து தமிழ்நாடு சிறப்பு காவல் படையைச் சேர்ந்த 160 வீரர்கள் ஈரோட்டுக்கு வந்தனர்.

    இதனைத் தொடர்ந்து துணை ராணுவ படை வீரர்கள் ஈரோடு வருகை தந்தனர். நேற்று முன்தினம் இரண்டு கம்பெனி துணை ராணுவத்தினர் ரெயில் மூலம் ஈரோடு வந்தனர். மேலும் இரண்டு கம்பெனி துணை ராணுவ வீரர்கள் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஈரோடு வந்தனர். மொத்தம் 5 கம்பெனி வீரர்கள் ஈரோடு வந்துள்ளனர். துணை ராணுவத்தினர் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதற்றமான 32 வாக்குச்சாவடிகளில் பணிபுரிவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

    மேலும் அவர்கள் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினருடன் வாகன சோதனையிலும் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று முதல் துணை ராணுவத்தினர் பறக்கும் படை குழுவினர் மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினருடன் இணைந்து வாகன சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

    ஒரு குழுவில் 8 துணை ராணுவத்தினர், நிலை கண்காணிப்பு குழுவினர் 4 பேர் , காவல்துறையினர் 3 பேர் மற்றும் ஒளிப்பதிவாளர் ஓட்டுனர் என 17 நபர்கள் செயல்பட்டு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஈரோடு ரெயில் நிலையம், காளை மாட்டு சிலை, கொல்லம்பாளையம், செங்கோடம்பள்ளம் அக்ரஹாரம் , சூரம்பட்டி நால்ரோடு, குமலன்குட்டை, வில்லரசம்பட்டி, வீரப்பம்பாளையம் பிரிவு, வீரப்பன்சத்திரம், கருங்கல்பாளையம், வெண்டிபாளையம் பேரேஜ், மரப்பாலம் ஆகிய 15 இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு வாகனங்களையும் நிறுத்தி சோதனை செய்கின்றனர். அதில் பயணம் செய்யும் நபர்கள் எங்கிருந்து வருகிறார்கள் முகவரி, செல்போன் எண் விவரம் போன்றவற்றை பதிவு செய்கின்றனர்.

    • பூட்டிய வீட்டுக்குள் 2 பேர் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் குமலன் வீதியில் ஒரு வீட்டில் மோகனசுந்தரம் (74) அவரது மாமியார் கனகாம்பாள் (80) ஆகியோர் வசித்து வந்தனர். கடந்த 3 நாட்களாக இவர்களது நடமாட்டம் இல்லாமல் இருந்தது. மேலும் அவர்கள் வீடும் பூட்டப்பட்டு இருந்தது. இதனால் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் அவர்கள் 2 பேரும் எங்கேயாவது ஊருக்கு சென்று இருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டனர்.

    இந்நிலையில் அவர்கள் தங்கியிருந்த வீட்டிலிருந்து இன்று காலை துர்நாற்றம் வீசியது. இதையடுத்து அருகில் வசிக்கும் பொதுமக்கள் கோபிசெட்டிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் விரைந்து வந்து பார்த்த போது மோகன சுந்தரம் மற்றும் கனகாம்பாள் ஆகியோர் அழுகிய நிலையில் பிணமாக கிடப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவர்களது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் வயதானவர்கள் என்பதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார்களா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பூட்டிய வீட்டுக்குள் 2 பேர் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனும் வரும் 19-ந் தேதி பிரசாரம் மேற்கொள்கிறார்.
    • தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் நாளை பிரசாரம் மேற்கொள்கிறார்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ந் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 14 நாட்களே உள்ள நிலையில் பிரசாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ், அ.தி.மு.க, தே.மு.தி.க, நாம் தமிழர் கட்சி உள்பட 77 பேர் போட்டியிடுகின்றனர். இதில் 4 பெண் வேட்பாளர்கள் அடங்குவார்கள்.

    இதனால் இந்த தேர்தலில் 5 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. காலை 6 மணிக்கு பிரசாரத்தை தொடங்கும் அரசியல் கட்சித்தலைவர்கள் காலை 10 மணி வரை தீவிர பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர். பின்னர் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை தேர்தல் பணிமனைகளில் தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதனையடுத்து மதிய உணவுக்கு பிறகு சிறிது நேரம் ஓய்வெடுத்து மீண்டும் மாலை 4 மணி முதல் பிரசாரத்தை தொடங்கி இரவு 10 மணி வரை பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு வரும் முதல் இடைத்தேர்தல் என்பதால் இதில் வெற்றி பெற வேண்டும். அதுவும் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற வகையில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக அமைச்சர்கள் முத்துசாமி, சாமிநாதன், காந்தி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, செந்தில் பாலாஜி, பெரியசாமி, கே.என்.நேரு, எ.வ.வேலு என 30-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் ஈரோட்டில் கடந்த சில நாட்களாக முகாமிட்டு அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பகுதிகளில் வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 24, 25-ந் தேதி ஆகிய 2 நாட்கள் ஈரோடு கிழக்கு தொகுதியில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார். இதேபோல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி ஆகியோரும் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர்.

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனும் வரும் 19-ந் தேதி பிரசாரம் மேற்கொள்கிறார்.

    இதேபோல் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.வி.ராமலிங்கம், கருப்பணன், விஜயபாஸ்கர், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, செல்லூர் ராஜூ உள்பட 30-க்கும் மேற்பட்ட முன்னாள் அமைச்சர்கள் ஈரோட்டில் கடந்த சில நாட்களாக முகாமிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 2 கட்டமாக 5 நாட்கள் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

    இதேபோல் பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை 2 நாள் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

    தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி. கே.வாசன் நாளை பிரசாரம் மேற்கொள்கிறார். தே.மு.தி.க. வேட்பாளரை ஆதரித்து பிரேமலதா பிரசாரம் மேற்கொள்கிறார்.

    நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நாளை மாலை பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். அதை தொடர்ந்து 2 நாட்கள் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    தொடர்ந்து அரசியல் கட்சித்தலைவர்கள், வெளி மாவட்ட நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முற்றுகையிட்டு பிரசாரம் மேற்கொண்டு வருவதால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் களை கட்டியுள்ளது. வீதிவீதியாக சென்று தலைவர்கள், நிர்வாகிகள் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல் சுயேட்சை வேட்பாளர்களும் நேற்று முதல் பிரசார களத்தில் இறங்கியுள்ளனர்.

    • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளருக்கு மக்கள் ஆதரவு உள்ளது.
    • 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தென்னரசு வெற்றி பெறுவார்.

    ஈரோடு:

    ஈரோட்டில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளருக்கு மக்கள் ஆதரவு உள்ளது. குறிப்பாக பெண்கள் அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்க தயாராகி விட்டனர்.

    எம்.ஜி.ஆருக்கு திண்டுக்கல் தேர்தல், ஜெயலலிதாவுக்கு மருங்காபுரி தேர்தல் போன்று எடப்பாடி பழனிசாமிக்கு ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் திருப்பு முனையாக அமையும்.

    இந்தியாவே ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலை திரும்பி பார்க்கும் வகையில் தேர்தல் முடிவு அமையும். எத்தனை தடை இருந்தாலும் 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தென்னரசு வெற்றி பெறுவார்.

    இது அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதியிலும், 2026 சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி வெற்றி பெற்று நிரந்தர முதலமைச்சர் ஆக உதவும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×