கோபிசெட்டிபாளையத்தில் பூட்டிய வீட்டிற்குள் பிணமாக கிடந்த மாமியார்-மருமகன்

பூட்டிய வீட்டுக்குள் 2 பேர் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோபிசெட்டிபாளையத்தில்  பூட்டிய வீட்டிற்குள் பிணமாக கிடந்த மாமியார்-மருமகன்
Published on

கோபி:

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் குமலன் வீதியில் ஒரு வீட்டில் மோகனசுந்தரம் (74) அவரது மாமியார் கனகாம்பாள் (80) ஆகியோர் வசித்து வந்தனர். கடந்த 3 நாட்களாக இவர்களது நடமாட்டம் இல்லாமல் இருந்தது. மேலும் அவர்கள் வீடும் பூட்டப்பட்டு இருந்தது. இதனால் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் அவர்கள் 2 பேரும் எங்கேயாவது ஊருக்கு சென்று இருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டனர்.

இந்நிலையில் அவர்கள் தங்கியிருந்த வீட்டிலிருந்து இன்று காலை துர்நாற்றம் வீசியது. இதையடுத்து அருகில் வசிக்கும் பொதுமக்கள் கோபிசெட்டிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் விரைந்து வந்து பார்த்த போது மோகன சுந்தரம் மற்றும் கனகாம்பாள் ஆகியோர் அழுகிய நிலையில் பிணமாக கிடப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவர்களது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் வயதானவர்கள் என்பதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார்களா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பூட்டிய வீட்டுக்குள் 2 பேர் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com