என் மலர்tooltip icon

    ஈரோடு

    • மலைப்பாதை வழியாக மேலே சென்று அந்த இயற்கை அழகை பார்த்து ரசித்து செல்கின்றார்கள்.
    • மர்மநபர்கள் திருடி வந்து எரிபொருள் இல்லாமல் அங்கேயே நிறுத்திவிட்டு சென்று விட்டார்களா?

    அந்தியூர், 

    அந்தியூர் அடுத்த மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவார பகுதியில் அமை ந்துள்ளது வரட்டுப்பள்ளம் அணை.

    இந்த அணையை சுற்றி பார்ப்பதற்கு விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணி கள் அதிக அளவில் வந்து செல்வார்கள். தற்போது இந்த அணையின் முன் பகுதி நுழைவாயிலில் பெரிய கதவு போட்டு பூட்டப் பட்டுள்ளது. இதனால் பர்கூர் மலைப்பாதை வழியாக மேலே சென்று அந்த இயற்கை அழகை பார்த்து ரசித்து செல்கின்றார்கள்.

    இந்த நிலையில் வரட்டுப்பள்ளம் அணை அருகே கடந்த 2 நாட்களாக மோட்டார் சைக்கிள் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்ட இடத்திலேயே இருப்பதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றார்கள்.

    இந்த மோட்டார் சைக்கிள் யாருடையது, மர்மநபர்கள் திருடி வந்து எரிபொருள் இல்லாமல் அங்கேயே நிறுத்திவிட்டு சென்று விட்டார்களா? இல்லை மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் அங்கு நிறுத்திவிட்டு வனப்பகுதிகளுக்குள் சென்று மீண்டும் திரும்பி வரவில்லையா? என்ற பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது.

    இதனால் அந்தியூர் பகுதியில் இந்த செய்தி சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. எனவே இது தொடர்பாக பர்கூர் போலீசார் அந்த மோட்டார் சைக்கிளை கைப்பற்றி யாருடையது, எதற்காக இங்கே நிற்த்தப்பட்டுள்ளது என்று குறித்து விசாரணை செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலைக்கு சென்று வந்தார்.
    • பெற்றோரிடம் தகராறு செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

    ஆப்பக்கூடல், 

    ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே உள்ள கீழ்வானி பகுதியில் உள்ள முருகன் கோவில் அருகே நேற்று அதிகாலை 35 வயது மதிக்கதக்க வாலிபரின் உடல் கிடப்பதாக ஆப்பக்கூடல் கிராம நிர்வாக அலுவலருக்கு அப்பகுதி பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.

    கிராம நிர்வாக அலுவலரின் தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இறந்த வாலிபர் யார்? இறப்பிற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி கொண்டிருக்கையில் அந்த வழியாக ஆட்டோ ஒன்று வந்து நின்றுள்ளது.

    ஆட்டோவில் இறங்கி வந்த நபர் சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்ததால் அங்கிருந்த போலீசார் விசாரித்த போது தனது பெயர் ராஜாமணி என்றும் இறந்து கிடப்பது தனது மகன் என்றும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது தனது மகன் காணாமல் போனதால் தேடி வந்ததாக முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார்.

    இதனால் ராஜாமணியின் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்படவே போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நஞ்சகவுண்டன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜாமணி (58). இவரது மனைவி மகேஸ்வரி. இவர்களது ஒரே மகன் சிவானந்தம் (33). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    ராஜாமணி கோபிசெட்டி பாளையம் பஸ் நிலையத்தில் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார், இவரது மகன் சிவானந்தம் 10-ம் வகுப்பு வரை மட்டும் படித்து விட்டு திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலைக்கு சென்று வந்தார்.

    இதற்கிடையே சிவானந்தம் குடிப்பழக்க த்திற்கு அடி மையானதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அடிக்கடி குடித்து விட்டு எந்த ஒரு வேலைக்கும் செல்லாமல் ஊர் முழுவதும் கடன் வாங்கி வைத்துக்கொண்டு குடித்து விட்டு வந்து பெற்றோரிடம் தகராறு செய்வதை வாடி க்கையாக வைத்துள்ளார்.

    மேலும் பணம் கிடைக்காத பட்சத்தில் வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டு சென்று அடமானம் வைத்தும் குடித்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி குடிப்பதற்கு பணம் இல்லாததால் ராஜா மணியின் செல்போனை எடுத்துக் கொண்டு சென்று அடமானம் வைத்து குடித்து விட்டு இரவு வீட்டுக்கு வந்துள்ளார். இதனால் ராஜாமணி செல்போனை எடுத்துக்கொண்டு சென்று அடமானம் வைத்து குடிக்கும் அளவிற்கு ஆளாகி விட்டாய் என கூறி மகன் சிவானந்தத்தை கண்டித்து உள்ளார்.

    மேலும் சிவானந்தம் மதுபோதையில் படுத்து இருந்த போது வீட்டில் இருந்த இரும்பு பைபால் தலை, கால் உள்ளிட்ட பல இடங்களில் பலமாக ராஜாமணி தனது மகனை தாக்கியுள்ளார். இதன் காரணமாக கடந்த 2 நாட்களாக முடியாமல் வீட்டிலேயே சிவானந்தம் உடல் நலக்குறைவில் கிடந்துள்ளார், மேலும் வழி தாங்க முடியாமல் கத்தி அலறியுள்ளார் சிவானந்தம்.

    சத்தமிட்டு கத்தி உயிருக்கு போராடிய மகன் சிவானந்தத்தை அருகில் யாருக்கும் சந்தேகம் ஏற்படாத வகையில் நேற்று அதிகாலை சுமார் 3 மணியளவில் ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு நஞ்சகவுண்டன் பாளையத்தில் இருந்து சுமார் 13 கிலோ மீட்டர் தூரம் தொலைவில் உள்ள ஆப்பக்கூடல் அருகே உள்ள கீழ்வானி பகுதியில் உள்ள முருகன் கோவில் அருகே சென்று ராஜாமணி வீசி விட்டு சென்று விட்டார்.

    உடல் நிலை பாதிக்கப்பட்டு கிடந்த சிவானந்தம் சிறிது நேரத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிகிறது. போலீசார் உடலை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆப்ப க்கூடல் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து ராஜாமணியை கைது செய்து பவானி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • கான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட போவதாக விவசாயிகள் அறிவித்திருந்தனர்.
    • இன்று 4-வது நாளாக விவசாயிகளின் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.

    பெருந்துறை:

    கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க ஒரு தரப்பு விவசாயிகள் ஆதரவும், மற்றொரு தரப்பு விவசாயிகள் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக ஏற்கனவே அமைச்சர் முத்துசாமி தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தும் சுமூகமான முடிவு ஏற்படவில்லை.

    இந்நிலையில் கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க கூடாது. அவ்வாறு அமைத்தால் நிலத்தடி நீர் மட்டம் குறையும் என்று விவசாயிகளின் ஒரு தரப்பினர் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

    அதன் ஒரு பகுதியாக கான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட போவதாக விவசாயிகள் அறிவித்திருந்தனர். இது தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.

    இதனைத்தொடர்ந்து பெருந்துறை ஒன்றியம் திருவாச்சி ஊராட்சிக்குட்பட்ட கூரபாளையம் பிரிவு ஈரோடு ரோட்டில் கடந்த 7-ந்தேதி விவசாயிகள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். இந்த போராட்டத்துக்கு கீழ்பவானி பாசன பாதுகாப்பு சங்க ஒருங்கிணைப்பாளர் ரவி தலைமை தாங்கினார்.

    தொடர்ந்து விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர், கல்லூரி மாணவர்கள் நேரில் சென்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று 4-வது நாளாக விவசாயிகளின் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. இன்று பா.ஜனதா மொடக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ. சரஸ்வதி, பா.ஜனதா விவசாய பிரிவு மாநில தலைவர் நாகராஜன், துணைத்தலைவர் தங்கராஜ் மற்றும் கட்சியினர் ஆதரவு தெரிவித்தனர். மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இருசக்கர வாகனங்களில் பேரணியாக போராட்டம் நடைபெறும் இடத்துக்கு சென்று ஆதரவு தெரிவித்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெருந்துறை தாலுகா போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் தயார் நிலையில் ஒரு ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 4-வது நாளாக போராட்டம் நீடித்து வருவதால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

    • எந்த நேரமும் இந்த சாலையில் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும்.
    • இந்த பகுதி எப்போதும் பச்சை பசேலென காட்சி அளிக்கும்

    அந்தியூர்,

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதியில் 33 குக்கிராமங்கள் உள்ளன. இதில் தாமரைக்கரை மிகவும் உயரமான பகுதியாக இருந்து வருகிறது.

    அந்தியூர், பர்கூர் வழி யாக கர்நாடகா மாநிலம் மைசூருக்கு செல்லும் பிர தான சாலை அமைந்து உள்ளது. இந்த வழியாக செல்வதால் மைசூருக்கு விரைவில் செல்ல முடியும் என்பதால் பெரும்பாலான வாகனங்கள் இந்த வழியாக சென்று வருகிறது. மேலும் லாரி, டெம்போ என சரக்கு வாகன ஓட்டிகள் அதிகள வில் இந்த வழியை பயன்படுத்தி வருகிறார்கள்.

    இதனால் எந்த நேரமும் இந்த சாலையில் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும்.

    மேலும் பர்கூர் மலை ப்பகுதியில் தாமரைக்கரை, தட்டக்கரை உள்பட பல்வேறு கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பெரும்பாலும் விவசாயம் செய்து வருகிறார்கள். இதனால் இந்த பகுதி எப்போதும் பச்சை பசே லென காட்சி அளிக்கும் வகையில் இருந்து வருகிறது.

    மலைப்பகுதிகளில் பயிரிடப்படும் விவசாய பொருட்களை விவசாயிகள் அந்தியூர் மற்றும் ஈரோடு மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப் பகுதிகளில் வெயில் காலங்க ளிலும் குளிர்ந்த காற்றுவீசு கிறது. இதனால் தற்போது இந்த பகுதிக்கு பல பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறா ர்கள். இதனால் இந்தப் பகுதிகளில் அதிக அளவில் தங்கும் விடுதிகள் அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டு உள்ளன.

    ஊட்டி, ஏற்காடு, கொடை க்கானல் உள்ளிட்ட பகுதி களுக்கு செல்ல முடியா தவர்கள் ஈரோடு மாவட்ட த்தில் பல்வேறு பகுதி களிலிருந்தும் பர்கூர் மலைப்பகுதிக்கு வந்து இயற்கை அழகை ரசித்து செல்கின்றனர். மேலும் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்களில் இங்கு வந்து தங்கி இயற்கை அழகு கொஞ்சும் மலைப் பகுதியை ரசிக்க ஏராளமா னோர் வந்து செல்கின்றார்கள்.

    இந்த நிலையில் கோடை காலம் தொடங்கியதில் இருந்து மலைகளில் உள்ள மரங்கள் வாடி இலைகள் உதிர்ந்து காணப்பட்டது. தற்போது அந்தியூர் மற்றும் பர்கூர் மலைப்பகுதிகளில் கோடை மழை தொடர்ந்து பெய்து வருகிறது.

    இதையடுத்து பர்கூர், தாமரைக்கரை, தட்டக்கரை மலைப்பகுதிகள் மேலும் பசுமையாக காட்சி அளிக்கிறது. இதனால் மலைப்பாதையின் முன் பகுதியில் சுற்றுலா பயணி கள் செல்பி எடுத்து செல்கி றார்கள்.

    மேலும் இந்த மலைப்பகுதி வழியாக கார், வேன் மற்றும் இரு சக்கர வாகனங்களில் வரும் பொதுமக்கள் மலை யின் அழகை கண்டு வாகனங்களை ஓரமாக நிறுத்தி இந்த ரசித்த ப்படியே செல்கிறார்கள். இதனால் இந்த மலையின் அழகை ரசிப்பதற்காகவே தினமும் பலர் இந்த வழியாக வருகிறார்கள்.

    மலைப்பாதை வழியாக செல்லும்போது சாலையின் ஓரமாக வாகனத்தை நிறுத்தி வரட்டு பள்ளம் அணையின் முழு தோற்றத்தையும், அணைக்கு தண்ணீர் குடிக்க வரும் யானை உள்ளிட்ட வனவிலங்குகளையும் காண முடிவதால் பர்கூர் வழியாக செல்லும் வாகன ஒட்டிகள் அணையின் தோற்றத்தையும் ரசித்து செல்கின்றார்கள்.

    • விநி யோகம் செய்ய கூட்டு குடிநீர் திட்டப் பணிகளை குடிநீர் வடிகால் வாரியம் செய்து வருகிறது.
    • காவிரி ஆற்றில் உள்ள பாறைகளை வெடி வைத்து தொழிலாளர்கள் தகர்த்து வருகின்றனர்.

    அம்மாப்பேட்டை, 

    ஈரோடு மாவட்டம், பவானி அடுத்த அம்மா பேட்டை காவிரியாற்றின் மறுகரையில் உள்ள சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே காட்டூர் பகுதி காவிரி ஆற்றில் ராசிபுரம் மல்லசமுத்திரம் கூட்டுக் குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

    இந்த கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் ராசிபுரம், மல்லசமுத்திரம், நாமக்கல் ஆகிய பகுதி பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் நடை பெற்று வருகிறது. காட்டூரில் நீரேற்று நிலையம் கட்ட ப்பட்டு கரட்டுப்புதூரில் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து குடிநீர் விநி யோகம் செய்ய கூட்டு குடிநீர் திட்டப் பணிகளை குடிநீர் வடிகால் வாரியம் செய்து வருகிறது.

    இந்நிலையில் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க இரவு, பகலாக 20-க்கும் மேற்பட்ட தொழி லாளர்கள் எந்திரத்தின் உதவியுடன் தீவிரமாக ஈடு பட்டுள்ளனர். அம்மா பேட்டை காவிரியாற்றின் மறுகரையில் கட்டப்படும் நீரேற்று நிலைய பணிகளுக்கு காவிரி ஆற்றில் உள்ள பாறைகளை வெடி வைத்து தொழிலாளர்கள் தகர்த்து வருகின்றனர்.

    கடந்த ஏப்ரல் மாதம் முதல் கட்டுமான பணிகள் நடைபெற்று வரு கிறது. அதற்காக பாறைகளை தகர்க்க அதிக திறன் கொண்ட 'தோட்டாக்களை' பயன்படுத்தி வருகின்றனர்.

    தினமும் காலை முதல் மாலைக்குள் 2 முறை பாறைகள் வெடி வைத்து தகர்க்கப்படுவதால் பிளவு பட்டு சிதறும் பாறைத் துகள்கள் ஆற்றில் விழு கிறது. பாறை துகள்களால் பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லை என்றாலும் வெடி சத்தம் பெரும் பாதிப்பை உருவாக்குவதாக அம்மாபேட்டை கரையோர பொதுமக்கள் கூறுகின்ற னர்.

    இதுபற்றி கரையோர த்தில் வசிக்கும் பொது மக்கள் கூறும்போது:-

    ராசிபுரம்மல்ல சமுத்திரம் கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு அம்மா பேட்டை காவிரி ஆற்றின் மறுகரையில் பணிகள் நடந்து வருகிறது. சுமார் 500 மீட்டர் தொலைவில் நடக்கும் கட்டுமான பணி க்காக ஆற்றில் உள்ள பாறைகளை 'தோட்டாக்களை' பயன்படுத்தி வெடி வைத்து தகர்த்து வரு கின்றனர்.

    குறிப்பிட்ட தொலைவில் வெடி வைக்கும் போது கரையோர வீடுகள் அதிர்வு அடைகின்றன. ஒரு சில நேரங்களில் வீடுகளில் உள்ள பாத்திரங்கள் உள்ளி ட்ட பொருட்கள் கீழே விழு கின்றன.

    நிலநடுக்கத்தால் ஏற்படும் உணர்வு போல, கரையோர மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதனால் இந்த பகுதிகளில் உள்ள கட்டிடங்கள் வலுவிழந்து நாளடைவில் சரிந்து விழும் நிலையும் உருவாகலாம்.

    எந்த நேரத்தில் வெடி வைக்கிறார்கள் என தெரியாததால் திடீரென கேட்கும் வெடி சத்தத்தால், பயம் ஏற்படுகிறது.

    மேலும் அம்மாபேட்டை காவிரி கரையோரத்தில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வரும் கர்ப்பிணி பெண்கள் மற்றும் மற்ற பெண்கள் வெடி சத்தத்தால் ஒரு வித அச்சத்தில் இருந்து வரு கிறார்கள்.

    அதே நேரத்தில் மீன்பிடி க்கும் தொழிலாளர்கள் அச்சத்துடனேயே ஆற்றில் மீன் பிடித்து வருகின்றனர். இதுபற்றி எந்த அதிகாரிக்கு தகவல் தெரிவிப்பது என தெரியாமல் பொதுமக்கள் விழிபிதுங்கி நிற்கின்றனர்.

    எனவே மாவட்ட நிர்வாகம் இந்த பிரச்சினையில் தலையிட்டு தீர்வு காண வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் இறப்பில் 10 சதவீதம் வயிற்று போக்கால் ஏற்படுகிறது.
    • பாதுகாப்பான குடிநீர் பற்றி விழிப்புணர்வு இல்லாததும் காரணமாகும்.

    ஈரோடு, 

    ஈரோடு மாவட்டத்தில் வரும் 12 முதல் 24-ந் தேதி வரை இரு வார கால வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் நடக்க உள்ளது. இத்திட்டத்தின் நோக்கம் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இறப்பு விகிதத்தை குறைப்பதாகும். 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் இறப்பில் 10 சதவீதம் வயிற்று போக்கால் ஏற்படுகிறது.

    இந்தியாவில் ஆண்டுக்கு 1 லட்சம் குழந்தைகள் வயிற்று போக்கால் இறக்கின்றன. பிறந்த குழந்தைகளில் பிறந்த உடன் சீம்பால் புகட்டாத குழந்தைகள், பிறந்து 6 மாதம் வரை பிரத்யோகமாக தாய்ப்பால் புகட்டாமல் இருத்தல், சுகாதாரமற்ற வளர்ப்பு முறை, கை சுத்தம் பேனாமல் இருத்தல், வளர்ப்பு குழந்தைகளில் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு இல்லாமை, பாதுகாப்பான குடிநீர் பற்றி விழிப்புணர்வு இல்லாததும் காரணமாகும். இதன்படி ஈரோடு மாவட்டத்தில் 5 வயதுக்கு உட்பட்ட 1 லட்சத்து 45,354 குழந்தைகள் உள்ளனர்.

    இரு வார கால தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாமை முன்னிட்டு அனைத்து அங்கன்வாடி மையங்கள் மூலம் குழந்தைகளின் தாய்மார்களுக்கு 'சின்க்' மாத்திரை, ஓ.ஆர்.எஸ். உப்பு சர்க்கரை கரைசல் பொட்டலங்கள் வழங்கப்பட்டு தயாரிக்கும் முறை, பயன்பாடு குறித்து விளக்கப்படும்.

    பிறந்த குழந்தைகளுக்கு தாய்பாலின் முக்கியத்துவம், கை கழுவுதல் முறை பற்றி விளக்கப்படும். பள்ளி குழந்தைகளுக்கு பாதுகாப்பான குடிநீர், கை கழுவுதல் முறை விளக்கப்படும். இந்த தகவலை ஈரோடு மாவட்ட துணை இயக்குனர் (சுகாதாரம்) சோமசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    • முதல் வாரம் தோறும் புதன்கிழமை முதல் ஏலம் நடக்க இருக்கிறது.
    • வெளி மாவட்ட நூற்பாலை வியாபாரிகள் வருகை தர உள்ளனர்.

    அம்மாபேட்டை, 

    அம்மாபேட்டை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதி மற்றும் மாவட்டத்தின் பல்ேவறு பகுதியில் இருந்து விவசாயிகள் தங்கள் பகுதியில் விளையும் பருத்தியை விற்பனைக்கு பூதப்பாடி ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வருவார்கள்.

    இங்கு இந்த வருடத்திற்கான பருத்தி ஏலம் வருகிற 14-ந் தேதி முதல் வாரம் தோறும் புதன்கிழமை முதல் ஏலம் நடக்க இருக்கிறது. மறைமுக ஏலம் நடைபெறும் என்றும், ஏலம் முடிந்தவுடன் விவசாயிகளின் தொகை நேரடியாக விவசாயிகள் கணக்கில் வரவு வைப்பதால் வங்கி பாஸ் புக் மற்றும் ஆதார் அட்டை, பாஸ்போ ர்ட் சைஸ் போட்டோ ஆகியவற்றின் நகல்களை கொண்டு வர வேண்டும்.

    மேலும் இந்த ஏலத்தில் உள்ளூர் மற்றும் வெளி மாவட்ட நூற்பாலை வியாபாரிகள் வருகை தர உள்ளனர். எனவே விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் விளையும் பருத்தியினை நன்கு உலரவைத்து தூசி களை நீக்கி தரமான பஞ்சு களை கொண்டு வர வே ண்டும்.

    இந்த வருடம் சுற்று வட்டார பகுதிகளில் அதிக அளவில் பருத்தி பயிர் செய்திருப்பதால் விற்பனைக்கு வரும் பருத்தியின் அளவு அதிகரிக்கும்.

    அதனால் விவசாயிகள் தங்கள் பருத்திகளை விற்று பயனடையுமாறு பூதப்பாடி ஒழுங்கு முறை விற்பனை கூட கண்கானிப்பாளர் சந்திரசேகரன் தெரிவித்து ள்ளார்.

    • நால்ரோடு பகுதியில் கடந்த சில நாட்களாக சாலை விரிவாக்க பணி நடந்து வருகிறது.
    • வில்லரசம்பட்டி வழியாக சித்தோடு பவானி வழியாக கோபி, சத்தியமங்கலம் செல்கின்றன.

    ஈரோடு, 

    ஈரோடு மாநகர் பகுதி நெருக்கடி மிகுந்த பகுதியாக உள்ளது. இதனால் இங்கு எப்போதுமே வாகன போக்குவரத்து நெரிசல் இருந்து வருகிறது.

    ஈரோடு மேட்டூர் ரோடு, பெருந்துறை ரோடு, ஈ.வி. என்.ரோடு போன்ற பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும். இந்நிலையில் தற்போது மாநகர் பகுதியில் பல்வேறு இடங்களில் வளர்ச்சி திட்ட பணிகளு–க்காக குழிகள் தோண்டப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இதனால் மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நிற்கின்றன.

    இந்நிலையில் வில்லரசம் பட்டி நால்ரோடு பகுதியில் கடந்த சில நாட்களாக சாலை விரிவாக்க பணி நடந்து வருகிறது. வில்லரசம் பட்டி நால்ரோடு பகுதி முக்கிய போக்குவரத்து பகுதியாக காணப்படுகிறது. இந்த பகுதி வழியாக சரக்கு வாகனங்கள் ஈரோடு மாநகர பகுதிக்குள் வராமல் ஈரோடு பெருந்துறை ரோடு நசியனூர் ரோட்டில் இருந்து வில்லரசம்பட்டி வழியாக சித்தோடு பவானி வழியாக கோபி, சத்தியமங்கலம் செல்கின்றன.

    இதேபோல் அங்கிருந்து வரும் வாகனங்கள் மாநகர் பகுதிக்குள் செல்லாமல் கனிராவுத்தர் குளம் வழியாக வில்லரசம்பட்டி நால்ரோடு வந்து பெருந்துறை ரோடு வந்து திண்டல் வழியாக பரிந்துரை கோயம்புத்தூர், திருப்பூர் போன்ற பகுதிகளுக்கு சென்று வருகின்றன.

    இந்தப் பகுதியில் குடியிருப்புகள் அதிக அளவில் உள்ளன. கடந்த சில நாட்களாக இந்த பகுதியில் சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக சலையின் இருபுறமும் அகலப்படுத்தப்பட்டு தார்ரோடுகள் போடப்பட்டு வருகின்றன. இதற்காக பல்வேறு இடங்களில் மின்கம்பங்கள் அகற்றப்பட்டு வருகின்றன.

    ஆனால் ஒரு சில இடங்களில் மின் கம்பங்கள் அகற்றப்படாமல் அதனை சுற்றி தார்ரோடு போட்டு சென்று உள்ளனர். இதனால் இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் இந்த மின்கம்பங்களில் மோதி விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இந்த பகுதியில் இதேபோன்று 4 இடங்களில் மின்கம்பங்களை சுற்றி தார்ரோடுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பகுதியில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த மின்கம்பங்களால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால் அதனை அகற்ற வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் இந்த பகுதியில் மின் வயர்கள் தாழ்வாக செல்வதால் வாகனங்கள் அதில் உரச வாய்ப்புள்ளது. எனவே அந்த மின் வயர்களின் உயரத்தை அதிகரிக்க வேண்டும் எனவும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கம் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
    • மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.

    ஈரோடு, 

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் ஈரோடு மாவட்ட தலைவர் ஆர்.கே.சண்முகவேல் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நீர் நிலைகளை சீரமைத்தல் மற்றும் பாதுகாத்தல் என்ற அடிப்படையில் ஈரோடு கீழ்பவானி வாய்க்காலை சீரமைத்து கடை கோடி விவசாய நிலங்களுக்கும் நீர் சென்று சேரும் வகையில் கட்டுமான பணிகள் தமிழக அரசு சார்பில் நடந்து வருகிறது.

    உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் நடைபெற்று வரும் இந்த வாய்க்கால் கட்டுமான பணியை நிறுத்த வேண்டி கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கம் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    போராடுவது அவர்களது தார்மீக உரிமை. ஆனால் வரும் 12-ந் தேதி ஈரோட்டில் கடைகள் அடைப்பு என அவர்கள் அறிவித்து இருப்பதில் எங்களது தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புக்கு உடன்பாடு இல்லை.

    மின் கட்டணம், தொழில் வரி, டோல் கேட், டீசல் விலை உயர்வு, ஜி.எஸ்.டி. மற்றும் ஆன்லைன் வணிகம் போன்றவற்றால் வணிகத்தை விட்டு 25 சதவீத வியாபாரிகள் வெளியேறி விட்டனர்.

    மேலும் தற்போது வெயில் கடுமையாக உள்ளதால் பகல் முழுவதும் கடை வீதிகளில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது. இந்த நிலையில் வியாபாரிகளை கலந்து ஆலோசிக்காமல் கடை அடைப்பு என அறிவித்து இருப்பது எந்த விதத்திலும் சரியானதாக இல்லை. எனவே 12-ந் தேதி நடக்கும் கடை அடைப்புக்கு எங்களால் ஆதரவு தர இயலாது.

    எனவே கடைகள் வழக்கம் போல் இயங்கும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • இணைய வழியில் விண்ணப்பித்து சேர்க்கை பெறாத மாணவர்கள் பங்கேற்கலாம்.
    • 14-ந் தேதி அதே பிரிவுக்கும் கலந்தாய்வு நடக்க உள்ளது.

    ஈரோடு, 

    மொடக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடப்பாண்டு இளநிலை பட்ட ப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை 2-ம் கட்ட கலந்தாய்வு நடக்க உள்ளது.

    இதன்படி வரும் 12-ந் தேதி (திங்கட்கிழமை) ஏற்கனவே இணைய வழியில் விண்ணப்பித்து சேர்க்கை பெறாத மாணவர்கள் பங்கேற்கலாம்.

    பி.எஸ்.சி. கணித அறிவியல், கணிதம், விலங்கியல், பி.காம். வணிகவியல், பி.காம். சி.ஏ., வணிகவியல் கணினி பயன்பாடு, மொழி பாடங்களான தமிழ், ஆங்கிலம் ஆகிய 8 பாடங்க ளுக்கும் வரும் 14-ந் தேதி அதே பிரிவுக்கும் கலந்தாய்வு நடக்க உள்ளது.

    கலந்தாய்வுக்கு உரிய நாளில் காலை 10 மணிக்கு இணைய விண்ணப்ப நகல், பள்ளி மாற்று சான்று நகல், 10-ம் வகுப்பு, பிளஸ்-1, பிளஸ்-2 மதிப்பெண் பட்டியல், ஜாதி சான்று, 2 போட்டோ, ஆதார் அடையாள அட்டை போன்ற வற்றை எடுத்து வர வேண்டும்.

    அதனை அறிந்து வரலாம். இந்த தகவலை கல்லூரி முதல்வர் ஜெ.எபெனேசர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    • ரூபா (23). ரூபா நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.
    • உறவினர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.

    தாளவாடி, 

    ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த தொட்டபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சித்துராஜ். கூலி தொழிலாளி. இவருடைய மனைவி ரூபா (23). ரூபா நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.

    இந்த நிலையில் இன்று காலை ரூபாய்க்கு பிரசவ வலி அதிகமானது. இதனை அறிந்த அவரது உறவி னர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவயிடத்திக்கு வந்த 108 ஆம்புன்ஸ் ஓட்டுநர் ராஜப்பாஜி, உதவி மருத்துவர் தனசேகரன் தாளவாடி மருத்துவமனை நோக்கி விரைந்து சென்றனர்.

    முதியனூர் அருகே அடர்ந்த வனப்பகுதி வனச்சாலையில் ஆம்பு லன்ஸ் சென்று கொண்டி ருந்த போது ரூபாய்க்கு பிரசவ வலி அதிகமாகவே வாக னத்தை சாலை ஓரத்தில் நிறுத்தி உதவி மருத்துவர் பிரசவம் பார்த்தார். இதில் 108 ஆம்புலன்சில் பெண்ணு க்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளனர்.

    • பகல் 1 மணி அளவில் பார்வதி பரமேஸ்வரன் திருக்கல்யாணம் நடந்தது.
    • இளைஞர்கள் ஏராளமானோர் யாகத்தில் கலந்து கொண்டனர்

    சத்தியமங்கலம்,

    சத்தியமங்கலத்தை அடுத்துள்ள கெம்பநாயக்கன் பாளையத்தில் கொருமடு என்ற இடத்தில் பாலதண்டாயுதபாணி கோவில் உள்ளது.

    இங்கு 27-வது ஆண்டு விழா மற்றும் திருமண தடை நீக்கும் சுயம்வர பார்வதி யாகம் நடை பெற்றது. காலை 8 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் யாகம் தொடங்கியது. பகல் 1 மணி அளவில் பார்வதி பரமேஸ்வரன் திருக்கல்யாணம் நடந்தது. காரைக்குடியை சேர்ந்த ஆர்.முரளி தரன் சாந்தி தம்பதிகள் திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தனர்.

    இதைத்தொடர்ந்து கோவில் முன்பாக அமைக்கப்பட்டு இருந்து பிர–மாண்ட பந்தலில் சுயம்வர பார்வதி யாகம் நடந்தது. திருமணம் ஆகாத இளம்பெண்கள், இளைஞர்கள் ஏராளமானோர் யாகத்தில் கலந்து கொண்டனர். வேதவிற்பனர்கள் சொல்வதை அவர்கள் திரும்ப கூறி வழிபட்டனர்.

    இதில் ஈரோடு மட்டு மின்றி கோவை, திருப்பூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் இருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்து கலந்து கொண்டனர். அனைவருக்கும் காலை மற்றும் மதியம் அன்ன தானம் வழங்கப்பட்டது.

    இந்த யாகத்தில் கலந்து கொள்பவர்களின் வசதிக்காக சத்தியமங்கலம் மற்றும் கோபிசெட்டி பாளையத்தில் இருந்து சிறப்பு பஸ் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    ×