108 ஆம்புலன்சில் குழந்தை பெற்ற பெண்

ரூபா (23). ரூபா நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். உறவினர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.
108 ஆம்புலன்சில் குழந்தை பெற்ற பெண்
Published on

தாளவாடி, 

ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த தொட்டபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சித்துராஜ். கூலி தொழிலாளி. இவருடைய மனைவி ரூபா (23). ரூபா நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.

இந்த நிலையில் இன்று காலை ரூபாய்க்கு பிரசவ வலி அதிகமானது. இதனை அறிந்த அவரது உறவி னர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவயிடத்திக்கு வந்த 108 ஆம்புன்ஸ் ஓட்டுநர் ராஜப்பாஜி, உதவி மருத்துவர் தனசேகரன் தாளவாடி மருத்துவமனை நோக்கி விரைந்து சென்றனர்.

முதியனூர் அருகே அடர்ந்த வனப்பகுதி வனச்சாலையில் ஆம்பு லன்ஸ் சென்று கொண்டி ருந்த போது ரூபாய்க்கு பிரசவ வலி அதிகமாகவே வாக னத்தை சாலை ஓரத்தில் நிறுத்தி உதவி மருத்துவர் பிரசவம் பார்த்தார். இதில் 108 ஆம்புலன்சில் பெண்ணு க்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com