என் மலர்tooltip icon

    ஈரோடு

    • பழனிச்சாமி அவரது வீட்டில் தூக்கு போட்டுக்கொண்டார்.
    • போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சிறுவலூர் நெடுஞ்செழியன் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 34). இவரது மனைவி பிரேமலதா (26). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். ரமேஷ் ஒரு கார்மெண்ட்ஸ் கம்பெனி யில் டெய்லராக வேலை பார்த்து வந்தார்.

    இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இவர் தினமும் குடித்து விட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்து வருவார் என கூறப்படுகிறது.

    இந்நிலையில் சம்பவத்தன்று வழக்கம் போல் குடித்து விட்டு வந்த ரமேஷ் மனைவி பிரே மலதாவிடம் தகராறில் ஈடு பட்டார். இதையடுத்து பிரே மலதா குழந்தைகளுடன் தூங்க சென்றார்.

    இந்நிலையில் அதிகா லையில் பிரேமலதா எழுந்து பார்த்தபோது ரமேஷ் வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொ ண்டதை கண்டு அதிர்ச்சி யடைந்தார்.

    பின்னர் இது குறித்து பிரேமலதா சிறுவ லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சின்ன குளத்து தோட்டம் பகுதி யைச் சேர்ந்தவர் பழனி ச்சாமி (63). இவருக்கு திரும ணம் ஆகவில்லை. இந்நிலையில் சம்பவத்தன்று பழனிச்சாமி அவரது வீட்டில் தூக்கு போட்டுக்கொண்டார்.

    இதையடுத்து அவ ரது உறவினர்கள் பழனிச்சா மியை மீட்டு தனியார் ஆம்பு லன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு பரிசோ தித்த மருத்துவர்கள் பழனி ச்சாமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    பின்னர் இது குறித்து உறவினர் அன்பழகன் சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளி த்தார். புகாரின் அடிப்ப டையில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
    • விநாயகர் சிலை போலீசார் பாதுகாப்புடன் ஆற்றில் கரைக்கப்பட்டது.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி நேரு நகர் பகுதியில் சுமார் 10 அடி விநாயகர் சிலை நிறுவப்பட்டு பொதுமக்கள் வழிபாட்டிற்காக வைக்கப்பட்டது.

    இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மினி ஆட்டோ வில் விநாயகர் சிலையுடன் மேள தாளங்கள் முழங்க போலீஸ் நிலையம் அருகே 300-க்கும் மேற்பட்டோர் வந்து கொண்டிருந்தனர்.

    அப்போது போலீசார் அவர்களை நிறுத்தி முன் அனுமதி இல்லாமல் வந்து உள்ளீர்கள். நாளை (வெள்ளிக்கிழமை) தான் புஞ்சை புளியம்பட்டியில் விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    ஆனால் எந்தவித முன்அனுமதி இன்றி விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்து வந்துள்ளீர்கள். இதற்கு அனுமதி கிடையாது என போலீசார் தெரிவித்தனர்.

    இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த பொது மக்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர். இதை தொடர்ந்து விநாயகர் சிலை ஆற்றில் கரைக்க எடுத்து செல்கிறோம். அனுமதிக்க வேண்டு மென பொதுமக்கள் கோரி க்கை விடுத்தனர்.

    ஆனால் போலீசார் அனுமதி மறுத்தனர். தொடர்ந்து பொதுமக்கள் போலீசாரிடம் வாக்குவாத்ததில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்க ப்பட்டது. இதையடுத்து மாற்று வழியில் அனைத்து வாகனங்களும் திருப்பி விடப்பட்டன.

    இதை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் அன்பரசு மற்றும் அவரது தலைமையிலான போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் எவ்வித முடிவும் எட்டப்படவில்லை.

    அதன் பிறகு சத்தியமங்கலம் தாசில்தார் சக்தி கணேஷ் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதையடுத்து சுமார் 4 மணி நேரத்திற்கு பிறகு போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலையை மட்டும் எடுத்து சென்று ஆற்றில் கரைக்க அனுமதி அளிக்க ப்பட்டது.

    பொதுமக்கள் ஊர்வலமாக தாரை தப்பட்டை முழுங்க செல்ல க்கூடாது என அறிவுறுத்த ப்பட்டது. இதனால் போரா ட்டம் கைவிடப்பட்டது.

    இதையடுத்து விநாயகர் சிலை போலீசார் பாதுகாப்புடன் ஆற்றில் கரைக்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • அமைப்பினர்கள் ஏலம் நடத்த எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
    • முடிதிருத்தும் குத்தகை ஏலம் தள்ளி வைப்பதாக அதிகாரிகள் தெரிவித்து கலைந்து சென்றனர்.

    கவுந்தப்பாடி:

    கவுந்தப்பாடி அருகே பி.மேட்டுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழா ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் நடைபெறும். இதையொட்டி இப்பகுதியில் உள்ள 40-க்கும் மேற்பட்ட முடி திருத்தும் தொழிலாளர்கள் பாரம்பரியமாக பொங்கல் திருவிழாவில் முடிதிருத்தும் தொழில் செய்து வருகிறார்கள்.

    இந்தாண்டு இந்து சமய அறநிலையத்துறை மற்றும் அறங்காவலர் சார்பில் முடி திருத்தும் குத்தகை ஏலத்தை நேற்று நடத்துவது என்று முடிவு செய்து அறிவித்திருந்தார்கள்.

    உள்ளூரில் உள்ள முடி திருத்தும் தொழிலாளர்கள் பாரம்பரியமாக நாங்கள் செய்து வரும் முடி திருத்தும் வேலையை நாங்கள் தான் செய்வோம் என்று இந்து சமய அறநிலையத்துறை மற்றும் அறங்காவலருக்கு எதிர்ப்பு தெரிவித்து டெண்டர் ஏலத்தை நடத்தக் கூடாது என்று முடி திருத்தும் தொழிலாளர்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி, பேனர் வைத்து எதிர்ப்பை தெரிவித்தனர்.

    இந்த நிலையில் இந்த சமய அற நிலையத்துறை அதிகாரிகள் பெரிய மாரியம்மன் கோவிலுக்கு வந்தார்கள். ஏலம் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முடி திருத்தும் தொழிலாளர்கள், ஊர் பொதுமக்கள், பேரூராட்சி கவுன்சிலர்கள், அ.தி.மு.க., பா.ஜ.க. மற்றும் இன்து முன்னணி அமைப்பினர்கள் ஏலம் நடத்த எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

    பாரம்பரியமாக முடி திருத்தும் தொழிலாளிகளுக்கே விட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். ஏலம் நடத்த எதிர்ப்பு தெரிவித்ததையொட்டி முடிதிருத்தும் குத்தகை ஏலம் தள்ளி வைப்பதாக அதிகாரிகள் தெரிவித்து கலைந்து சென்றனர்.

    முன்னெச்சரிக்கையாக கடத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் துரைபாண்டி தலைமையில் 4 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 15-க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ஏலம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்று தெரிந்த பின் ஏலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    • துவரை நடவுமுறை தொடர்பான பயிற்சி மைலம்பாடி கிராமத்தில் நடைபெற்றது.
    • தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளிடம் கூறினார்.

    ஈரோடு:

    பவானி வட்டாரத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் துவரை நடவுமுறை தொடர்பான பயிற்சி மைலம்பாடி கிராமத்தில் நடைபெற்றது.

    பவானி வேளாண்மை உதவி இயக்குநர் கனிமொழி வேளாண்மை திட்டங்கள் மற்றும் துவரை நடவுமுறை பயிரிட்டு அதிக மகசூல் பெற விவசாயிகளுக்கு ஆலோசனை கூறினார்.

    கோபி வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் உதவி பேராசிரியர் சீனிவாசன் துவரை பயிரில் விதை நேர்த்தி முறைகள் மற்றும் நாற்றங்கால் அமைப்பது மற்றும் 30-35 நாட்களில் நுனிக்கிள்ளுதல் போன்ற தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளிடம் கூறினார்.

    அங்கக விதை சான்று துறை மற்றும் விதை சான்று அலுவலர் தமிழரசு துவரை பயிரில் விதை தேர்வு முறை, விதைப்பண்ணை அமைத்தல், பூச்சி மற்றும் நோய் தாக்குதல், மதிப்புக்கூட்டுத்தல் குறித்து ஆலோசணை கூறினார்.

    வட்டார தொழில்நுட்ப மேலாளர் கங்கா உழவன் செயலி பதிவேற்றம், இ-நாம் மற்றும் இ-வாடகை குறித்து விவசாயிகளிடம் கூறினார்.

    முடிவில் உதவி தொழில்நுட்ப மேலாளர் மணிகண்டன் நன்றி கூறினார்.

    • லோகநாதன் எல்லக்கடையில் உள்ள கீழ்பவானி கிளை வாய்க்காலில் பிணமாக கிடந்தார்.
    • இது குறித்து சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகிரி:

    ஈரோடு மாவட்டம் எழுமாத்தூர் அவலூர் காலனியை சேர்ந்தவர் லோ கநாதன் (45). கூலித்தொழிலாளி. இவர் சம்பவத்தன்று வேலைக்கு செல்வதாக தனது மனைவி பழனியம்மாளிடம் (36) கூறி விட்டு சென்றார்.

    ஆனால் அவர் மீண்டும் வீட்டுக்கு வர வில்லை. இந்த நிலையில் லோகநாதன் எல்லக்கடையில் உள்ள கீழ்பவானி கிளை வாய்க்காலில் பிணமாக கிடந்தார். இது குறித்து அவரது உறவினர் பழனியம்மாளுக்கு போனில் தகவல் கொடுத்தார்.

    இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற பழனியம்மாள் கீழ்பவா னிகிளை வாய்க்காலில் இறந்து கிடப்பது தனது கணவர் லோகநாதன் தான் என்பதை உறுதி செய்தார்.

    இது குறித்து சிவகிரி போலீசுக்கு தகவல் கொடு த்தனர். இதையடுத்து போலீ சார் சம்பவ இடத்துக்கு வந்து லோகநாதனின் உடலை மீட்டு பெருந்துறை மருத்துவகல்லூரி மருத்துவ மனைக்கு பிரேதபரி சோத னைக்காக அனுப்பி வைத்த னர்.

    இது குறித்து சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டில் 6 கட்டிடங்கள் முடியும் நிலையில் உள்ளன.
    • 39 கட்டிடத்துக்கான பணிகள் விரைவில் தொடங்கும்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் பெரும்பாலான அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் சொந்த கட்டிடத்தில் இயங்கு கின்றன. சில மற்றும் வாடகை கட்டத்தில் இயங்குகின்றன. சில கட்டிடங்கள் கட்டி பல ஆண்டுகள் ஆவதால் பழுதாகி உள்ளன.

    ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டில் 45 ஆரம்ப சுகாதார நிலையங்கள் கட்ட நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு, 6 கட்டிடங்கள் முடியும் நிலையில் உள்ளன.

    39 கட்டிடத்துக்கான பணிகள் விரைவில் தொடங்கும். இவை 15-ம் நிதி கமிஷன் நிதி ஒதுக்கீட்டில் கட்டப்படுகின்றன. கடம்பூரில் 2 குடியிருப்புகள் கட்டும் பணி தொடங்க உள்ளது. ஓசூரில் குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

    மலைப்பகுதியில் சேசன் நகர், தாளவாடியில் துணை சுகாதார நிலையம் குடியிருப்புடன் அமைய உள்ளது.

    இப்பணிகள் நிறை வடையும்போது மாவட்டத்தில் அனைத்து ஆரம்ப துணை சுகாதார நிலையங்களும் சொந்த கட்டிடத்தில் செயல்படும் என ஈரோடு மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் சோமசுந்தரம் தெரிவித்துள்ளார். 

    • 3 சாய தொழிற்சாலைகள் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்யாமல் வெளியேற்றியதை அதிகாரிகள் கொண்ட சிறப்புக்குழு கண்டுபிடித்தனர்.
    • ரசாயன தொழிற்சாலையின் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட்டில் நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன.

    சிப்காட்டில் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளில் வெளியேற்றப்படும் கழிவுநீரால் பாலத்தொழு குளம் மாசடைவதாக பொதுமக்களிடம் இருந்து புகார் பெறப்பட்டதையடுத்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைமை அலுவலகம் 3 அதிகாரிகளை கொண்ட சிறப்புக்குழு மூலம் கடந்த ஆகஸ்ட் 30-ந் தேதி முதல் செப்டம்பர் 7-ந் தேதி வரை ஆய்வு மேற்கொண்டனர்.

    இதில் 3 சாய தொழிற்சாலைகள் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்யாமல் வெளியேற்றியதை அதிகாரிகள் கொண்ட சிறப்புக்குழு கண்டுபிடித்தனர். இதையடுத்து இந்த 3 சாய தொழிற்சாலைகளை மூட உத்தரவிட்டு அதற்கான ஆணை வழங்கப்பட்டு அந்த 3 தொழிற்சாலைகளின் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.

    இதேபோல் சிப்காட்டில் உள்ள ஒரு ரசாயன தொழிற்சாலை கழிவு நீரை தொழிற்சாலை வளாகத்திற்கு வெளியே வெளியேற்றியது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அந்த ரசாயன தொழிற்சாலையின் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.

    சிப்காட் வளாகத்தில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளும் தங்களின் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களையும் மற்றும் காற்று மாசு தடுப்பு சாதனங்களை முறையாகவும், தொடர்ச்சியாகவும் இயக்கி சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் செயல்பட வேண்டும்.

    அனைத்து தொழிற்சாலைகளும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு தவறு இழைக்கும் தொழிற்சாலை மீது சட்டரீதியாக தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் மாசு கட்டுப்பாடு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நிலக்கடலை விற்பனைக்கான ஏலம் நடந்தது.
    • மொத்தம் ரூ.5 லட்சத்து 65 ஆயிரத்து 223-க்கு விற்பனையானது.

    கொடுமுடி:

    கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நிலக்கடலை விற்பனைக்கான ஏலம் நடந்தது.

    இதில் 7 ஆயிரத்து 844 கிலோ எடையுள்ள நிலக்கடலைக்காய் விற்பனையானது.

    விற்பனையா நிலக்கடலைக்காய் கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.61.17 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ.84.10 காசுகள், சராசரி விலையாக ரூ.80.40 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ.5 லட்சத்து 65 ஆயிரத்து 223-க்கு விற்பனையானது.

    • சென்னிமலை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி வருகிற நாளை செயல்படுத்தப்பட உள்ளது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    சென்னிமலை:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பயிர்மான கழக பெருந்துறை செயற்பொறியாளர் பி.வாசுதேவன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

    சென்னிமலை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி வருகிற நாளை (வியாழக்கிழமை) செயல்படுத்தப்பட உள்ளதால் சென்னிமலை டவுன் பகுதி முழுவதும்,

    பூங்கா நகர், பாரதி நகர், சின்ன பிடாரியூர், ஊத்துக்குளி ரோடு, ஈங்கூர் ரோடு, குமராபுரி, சக்திநகர், பெரியார் நகர், நாமக்கல்பாளையம், அரச்சலூர் ரோடு, குப்பிச்சிபாளையம், திப்பம்பாளையம், அம்மா பாளையம்.

    அசோகபுரம், புதுப்பாளையம், ராமலி ங்கபுரம், ஒரத்துப்பாளை யம், அய்யம்பாளையம், கொடுமணல், சென்னிமலை பாளையம், வெப்பிலி, கே.ஜி.வலசு, பசுவபட்டி, முருங்கத்தெ ாழுவு, எம்.பி.என்.நகர் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என தெரிவித்துள்ளார்.

    • ஈரோடு மாநகர பகுதியில் மாலை சாரல் மழை பெய்தது.
    • மொடக்குறிச்சி பகுதியில் இடியுடன் கூடிய கன மழை பெய்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை வழக்கம் போல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.

    அதைத் தொடர்ந்து மாலை நேரத்தில் வானில் கருமே கங்கள் சூழ்ந்து மழை பெய்ய தொடங்கியது. ஈரோடு மாநகர பகுதியில் மாலை சாரல் மழை பெய்தது.

    மொடக்குறிச்சி பகுதியில் இடியுடன் கூடிய கன மழை பெய்தது. மாவட்ட த்தில் இங்கு அதிகபட்சமாக 54 மில்லி மீட்டர் அதாவது 5 செ.மீ். மழை பதிவானது.

    இதை போல் சென்னி மலை மற்றும் அதன் சுற்றுவ ட்டார பகுதிகளிலும் இடியு டன் கூடிய கனமழை பெய்தது. நம்பியூர், கொடிவேரிஅணை, சத்தியமங்கலம், பெருந்துறை, கொடுமுடி பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. காலை முதல் மாலை வரை வெயில் வாட்டி வைத்தாலும் இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    ஈரோட்டில் நேற்று இரவு மழை அளவு மில்லி மீட்ட ரில் வருமாறு:- மொடக்கு றிச்சி-54, சென்னி மலை-42, நம்பியூர்-24, கொடி வேரி அணை-17.20, சத்திய மங்கலம்-11, பெரு ந்துறை-3, கொடுமுடி-2.40.

    • பள்ளிகளில் மூலிகை தோட்டம் அமைக்க அரசு திட்டமிப்பட்டுள்ளது.
    • 20 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

     ஈரோடு:

    பள்ளிகளில் மரக்க ன்றுகள் நடுதல், மூலிகை தோட்டங்கள் அமைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைக ளை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் நடப்பா ண்டில் மட்டும் 20 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இதில் பள்ளிகல்வி த்துறை சார்பில் இந்தாண்டு மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் நிதி உதவி பெறும் பள்ளிகளில் 1 லட்சம் மரங்கள் நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே மாணவர்க ளுக்கு இயற்கை மீதான பற்றினை உருவாக்கவும், மூலிகை தாவரங்கள் குறி த்தும், அதன் பயன்கள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் மூலிகை தாவரத்தின் பெயர், பயன்கள், அவற்றை பராமரிக்கும் முறைகளை எடுத்துக்கூறும் வகையில் பள்ளிகளில் மூலிகை தோட்டம் அமைக்க அரசு திட்டமிப்பட்டுள்ளது.

    தனியார் தொண்டு நிறுவனம் மூலம் அமைக்கப்படும் இந்த மூலிகை தோட்டத்தை தொண்டு சம்மந்தப்பட்ட தொண்டு நிறுவனம் 3 ஆண்டுகளுக்கு பராமரிப்பு செய்து பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைக்க உள்ளது.

    12 சென்ட் காலி இடம், சுற்றுச்சுவர் வசதி, தண்ணீர் வசதி உள்ள அரசு மற்றும் நிதி உதவி பெறும் பள்ளிகள் மூலிகை தோ ட்டம் அமைக்க விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கல்வித்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

    பள்ளி வளாகத்தில் காலி இடம் இல்லாவிட்டாலும், மாடியில் இடமிருந்தாலும் மூலிகை தோட்டம் அமைத்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 46 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட பகுதிகளில் குற்ற சம்பவங்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என ஈரோடு டவுன், கோபி போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது பெருந்துறை, சென்னிமலை, பர்கூர், வெள்ளி திருப்பூர், கடத்தூர், சத்தியமங்கலம், பங்களாபுதூர் ஆகிய சுற்று வட்டார பகுதிகளில் அனுமதியின்றி மது விற்று கொண்டிருந்த திருப்பூர் மாவட்டம் போயம்பாளையம் பகுதியை சேர்ந்த வீரபத்திரன் மகன் சுரேஷ்கு மார் (வயது 41),

    கருங்கல்பாளையம் மரப்பாளையம் சாலையை சேர்ந்த சம்பத் மகன் சக்திவேல் (44), சென்னிமலை ஆறுமுகம் மகன் நாகராஜ் (59), பர்கூர் ராஜா (33),

    அந்தியூர் மாணிக்கம் மகன் பிரபு (41), மங்களாபுரம் சுந்தரம் மகன் சதீஷ் என்ற சுரேஷ் (40), சத்தியமங்கலம் சொர்ணம் மகன் பாலு (55), பாரதி நகர் மினியல் (60), டி.என்.பா ளையம் செல்வன் மனைவி ஈஸ்வரி (45) ஆகியோரை போலீசார் பிடித்தனர்.

    பின்னர் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 46 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    ×