என் மலர்
திண்டுக்கல்
- தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் வனவி லங்குகள் வேட்டை யாடப்பட்டு வருவதாக திண்டுக்கல் வன பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.
- இருந்த காட்டு எருமைகள், கடமான், காட்டுப்பன்றி மற்றும் முள்ளம்பன்றி ஆகியவற்றின் எலும்புக்கூடுகளை எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் தாலுகா பெரும்பள்ளம் வனச்சரகத்தைச் சேர்ந்த செம்பராங்குளம் அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் வனவி லங்குகள் வேட்டை யாடப்பட்டு வருவதாக திண்டுக்கல் வன பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து கொடைக்கானல் மாவட்ட வன அலுவலர் திலீப், உதவி வன பாதுகாவலர் சக்திவேல் ஆலோசனையின் பேரில் திண்டுக்கல் உதவி வனப்பாதுகாவலர் சீனிவாசன், கொடைக்கா னல் வனச்சரகர் குமரேசன் தலை மையிலான வனத்து றையினர் தனியாருக்கு சொந்தமான தோட்டப் பகுதியில் தீவிர சோதனை நடத்தினர்.
அப்போது அந்த தோட்டத்தில் இருந்த பெண் தோட்ட காவலரிடம் விசாரணை செய்தனர். அப்பகுதியில் செல்லும் மின்கம்பத்தில் இருந்து திருட்டுத்தனமாக மின்சாரம் எடுத்து அதில் வேலி அமைத்து வனவிலங்கு கள் வேட்டையாடப்பட்டது தெரிய வந்தது.
இதனையடுத்து அங்கு புதைக்கப்பட்டு இருந்த காட்டு எருமைகள், கடமான், காட்டுப்பன்றி மற்றும் முள்ளம்பன்றி ஆகியவற்றின் எலும்புக்கூடுகளை எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தோ ட்டத்தின் உரிமையாளரும் பழனி புது ஆயக்குடி பகுதியைச் சேர்ந்த வருமான அப்துல் ரசாக் என்ற சின்னத்தம்பி, அவரது தந்தை முகமதுஅப்பாஸ்ஒலி, தோட்டத் தொழிலாளி பாலமுருகன் ஆகிய 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்த வனத்துறையினர் தனிப்படை அமைத்து அவர்களை தேடி வருகின்றனர்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில் நீண்ட நாட்களாக இதுபோன்ற வனவிலங்கு வேட்டை நடைபெற்று வந்துள்ளது. தொடர்ந்து தனியார் தோட்டத்தில் உள்ள பல்வேறு இடங்கள் தோண்டப்பட்டு விசாரணை நடத்தப்படும். குற்றவாளி களை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு ள்ளது.
விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என கூறினர். அரிய வகை விலங்குகள் வேட்டையாடப் பட்டுள்ளதால் இந்தக் கும்பலுக்கு பல ஆண்டுகளாக விலங்குகளை கொன்று உடல் உறுப்புகளை விற்பனை செய்யும் கும்பலுடன் தொடர்புகள் இருக்கலாம் என்ற கோணத்தில் வனத்துறையி னர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அப்துல்ரசாக் கொடைக்கானல் தி.மு.க. முன்னாள் ஒன்றிய குழு தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடன் வேறு யாரேனும் வன விலங்கு வேட்டையில் தொடர்பில் உள்ளனரா? என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- திண்டுக்கல் நகரில் பரபரப்பு வாசகங்களுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
- பிரபாகரன் மக்கள் முன் தோன்றி தமிழ் ஈழத்திற்கான தீர்வுகளை அறிவிப்பார் என வாசகங்கள் இடம் பெற்றிருந்தன.
திண்டுக்கல்:
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உயிேராடு இருப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு உலகத்தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்தார். அவர் விரைவில் பொது வெளியில் தோன்றுவார் எனவும் பரபரப்பான செய்தியை வெளியிட்டார்.
ஆனால் இலங்கை அரசு இதனை திட்டவட்டமாக மறுத்தது. 9 ஆண்டுகளுக்கு முன்பே பிரபாகரன் சுட்டு கொலை செய்யப்பட்ட தாகவும், இதற்கு போதிய ஆதாரங்கள் இருப்பதாக வும் தெரிவித்தனர். இந்நிலையில் திண்டுக்கல் நகரில் தமிழர்தேசிய முன்னணி சார்பில் பரபரப்பு வாசகங்களுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
விடுதலை போராட்ட களத்தில் இருக்கும் வரையில் இந்தியாவிற்கு எதிரான நாடுகள் எதையும் இலங்கையில் கால் பதிக்கவிடவில்லை என்பதை இந்தியா சிந்திக்க வேண்டும். சர்வதேச அரசியல் சூழலையும் இலங்கை அரசியல் சூழலையும் கருத்தில் கொண்டு தமிழ்ஈழ தேசிய தலைவர் பிரபாகரன் மக்கள் முன் தோன்றி தமிழ் ஈழத்திற்கான தீர்வுகளை அறிவிப்பார். எனவே உலகத்தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பேராதரவு தரவேண்டும். பழ.நெடுமாறன் வழிகாட்டுதலின்படி அவருக்கு துணை நிற்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளது.
கடந்த சில தினங்களாக பரபரப்பை கூட்டி பின் மெல்ல நகர்ந்த இப்பிரச்சினை மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி யுள்ளது.
- கோடைகாலம் தொடங்கும் முன்னரே தற்போது பழனியில் வெயில் வாட்டி வதைக்கிறது.
- பழனி மலைக்கோவிலில் தரிசனத்திற்காக நீண்டநேரம் வரிசையில் காத்திருக்கும் சூழல் ஏற்படுகிறது.
பழனி:
பழனி தண்டாயுதபாணிசுவாமி கோவிலுக்கு விடுமுறை நாட்கள் மட்டுமின்றி திருவிழா காலங்களிலும் வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து அதிகளவிலான பக்தர்கள் வருகின்றனர். கோடைகாலம் தொடங்கும் முன்னரே தற்போது பழனியில் வெயில் வாட்டி வதைக்கிறது.
இதனால் பழனி மலைக்கோவிலில் தரிசனத்திற்காக நீண்டநேரம் வரிசையில் காத்திருக்கும் சூழல் ஏற்படுகிறது. வெளிப்பிரகாரத்தை சுற்றிவரும் பக்தர்களும் சிரமப்படுகின்றனர். எனவே பக்தர்களை வெயிலில் இருந்து காக்கவும், நிழலில் இளைப்பாற வசதியாகவும் மலைக்கோவில் அலுவலகத்தை ஒட்டியுள்ள பகுதியில் தகரத்தில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் தரிசனம் முடிந்து வெளிப்பிரகாரத்தை சுற்றி வரும் பக்தர்கள் பாதத்தில் சூடு ஏற்படுவதை தவிர்க்கவும், தேங்காய் நாரினால் தயாரிக்கப்பட்ட தரைவிரிப்பு விரிக்கப்பட்டுள்ளது. அவ்வப்போது இந்த தரைவிரிப்பில் கோவில் பணியாளர்கள் தண்ணீர் தெளிப்பதால் பிரகாரத்தை சிரமமின்றி பக்தர்கள் சுற்றி வருகின்றனர்.
இருப்பினும் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தண்ணீர் தெளித்த சிறிதுநேரத்திலேயே ஆவியாகி விடுகிறது. இதனால் வெளிப்பிரகாரத்தை சுற்றிலும் கூலிங்பெயிண்ட் அடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. படிப்பாதை, யானைப்பாதை வழியாக மலைக்கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு வெயில் தெரியாமல் இருக்க வடக்கு கிரிவீதியில் 500 மீ நீளத்திற்கு தற்காலிக நிழற்பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
- தமிழர்கள் எங்களுடன் அன்பாக பழகி வருகின்றனர்.
- நிம்மதியாக நல்ல நண்பர்களாக இருக்கின்றோம் என்று தெரிவித்தார்.
வேடசந்தூர்:
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர், வடமதுைர, அய்யலூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவு தனியார் மில்கள் செல்பட்டு வருகின்றன.
இங்கு சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக வடமாநில தொழிலாளர்கள் மீதான தாக்குதல் குறித்த சர்ச்சை வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவின் பேரில் வேடசந்தூர் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தனியார் மில்களுக்கு சென்று வடமாநில தொழிலாளர்களுடன் கலந்துரையாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அப்போது அவர் பேசியதாவது:-
சமூக வலைதளங்களில் வெளியாகும் வீடியோவை நம்பி யாரும் அச்சமடைய வேண்டாம். இங்கு உங்களுக்கு முழு பாதுகாப்பு உள்ளது. உங்களுக்கு எந்த நேரத்தில் உதவி தேவைப்பட்டாலும் அவசர எண் 100யை அழைக்கலாம்.
வேடசந்தூர் பகுதியில் உங்களுக்கு நூற்பாலை நிர்வாகம் மற்றும் போலீசார் உறுதுணையாக இருப்போம் என்று தெரிவித்தார். இதுகுறித்து வடமாநில தொழிலாளியான அசாம் மாநிலம் நல்வாழ் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது இஸ்லாம் என்பவர் கூறுகையில்,
நான் கடந்த 8 ஆண்டு காலமாக இங்கு பணியாற்றி வருகிறேன். தமிழர்கள் எங்களுடன் அன்பாக பழகி வருகின்றனர். அவர்களின் ஊர்களில் நடந்த திருவிழாவின்போது அவர்களின் வீட்டுக்கு அழைத்துச் சென்று தங்க வைத்துள்ளனர். எங்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை. நிம்மதியாக நல்ல நண்பர்களாக இருக்கின்றோம் என்று தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பொது மேலாளர் சரவணன், தொழிலாளர் மேற்பார்வையாளர் பிரகாஷ், தொழிலாளர் பொறுப்பாளர் வீரமணி, விடுதி காப்பாளர் சுப்பிரமணி, நிர்வாக விசாரணை அதிகாரி பழனிச்சாமி ஆகியோர் உடன் இருந்தனர்.
தொடர்ந்து வடமாநில தொழிலாளர்கள் பணிபுரியும் அனைத்து மில்களுக்கும் சென்று இதுபோன்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று போலீசார் மற்றும் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
- மலைகளின் இளவரசி யான கொடைக்கானலில் ரூ.90 கோடி மதிப்பில் பல்வேறு அபிவிருத்தி பணிகள் நடைபெற்று வருகின்றன.
- ஏரியில் சுமார் 14 அடி அகலமும் 460 அடி நீளமும் கொண்ட நவீன நடைமேடை அமைக்கப்பட்டு வருகிறது.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசி யான கொடைக்கானலில் ரூ.90 கோடி மதிப்பில் பல்வேறு அபிவிருத்தி பணிகள் நடைபெற்று வருகின்றன. செந்தில்குமார் எம்.எல்.ஏ. ஆலோசனையின் பேரில் நகர மன்றத்தலைவர் செல்லத்துரை, துணைத் தலைவர் மாயக்கண்ணன், நகராட்சி ஆணையாளர் நாராயணன் ஆகியோரது முயற்சியின் அடிப்படையில் புகழ் பெற்ற நட்சத்திர ஏரியில் சுமார் ரூ.24 கோடி மதிப்பில் பல்வேறு அபிவிருத்தி பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக ஏற்கனவே நகராட்சியால் நடத்தப்பட்டு வரும் படகு இல்லத்திற்கு 75 புதிய படகுகள் வாங்கப்பட உள்ளன. மேலும் சுற்றுலா பயணிகள் சென்று ஏறுவதற்காக நவீன முறையில் நடைமேடை அமைக்கப்பட்டு வருகிறது. இதன்படி சுமார் 14 அடி அகலமும் 460 அடி நீளமும் கொண்ட நடைமேடை அமைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
இதில் நடந்து கொண்டே சுற்றுலா பயணிகள் படகில் ஏறவும், நட்சத்திர ஏரியை கண்டுகளி்க்கவும் முடியும். சுமார் 500 மீட்டர் தூரம் ஏரியில் நடந்து செல்வ தற்காகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நகராட்சியின் இந்த முயற்சி பல்வேறு தரப்பினர் இடையே பெரிதும் வரவேற்பு பெற்றுள்ளது.
அத்துடன் நகரில் உள்ள பொதுமக்கள் இந்த நடைமேடை அமைப்பதை ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர். இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறுகையில் ஏரியை சுற்றி பல்வேறு அபிவிருத்தி பணிகள் நடைபெற்று வருவது வரவேற்கத்தக்கது. அத்துடன் இரவு நேரத்திலும் சுற்றுலா பயணிகள் கண்டு களிப்பதற்காக பொழுது போக்கு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் இரவு நேரத்திலும் படகு போக்குவரத்தை தொடங்க வேண்டும் என்றனர்.
- கொடைக்கானலில் முன்னாள் அமைச்சர் நத்தம்விசுவநாதன் நிருபர்களுக்கு பேட்டிய ளித்தார்.
- ஓ.பன்னீர்செல்வ த்துடன் சசிகலா, தினகரன் ஆகியோர் ரகசிய சந்திப்பு நடத்தி வருகின்றனர் என பேசினார்.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் முன்னாள் அமைச்சர் நத்தம்விசுவநாதன் நிருபர்களுக்கு பேட்டிய ளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
ஈரோட்டில் வள்ள ல்போல் பணத்தை தி.மு.க. வினர் வாரி இரைத்து ஜனநாயக படுகொலையை நடத்தி வெற்றிபெற்றுள்ள னர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு வழிப்பறி, கொள்ளை, கொலை போன்றவை அதிகரித்து வருகிறது.
பொதுமக்களின் உயிரு க்கும், உடமைக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. குறிப்பாக ஆதாயம் அடையும் வகையில் செய்ய ப்படும் கொலை களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து பலமுறை புள்ளிவிபரங்களுடன் சட்டமன்றத்தில் எடுத்து கூறியும் அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
போலீசாரின் கைகள் கட்டப்பட்டுள்ளன. அவர்க ளால் சுதந்திரமாக இயங்க முடியவில்லை. அனைத்து ரவுடிகளும் தங்களது ஆட்சிதான் நடக்கிறது என்று நினைத்து அராஜக செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக அமைச்சர்கள் கமிசன் ஏஜெண்டுகளாக மாறி உள்ளனர்.
வடமாநில தொழி லாளர்கள் பிரச்சினை குறித்து சமூகவலைதளங்கள் பெரிது படுத்தி வருகின்றன. அவர்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். ஓ.பன்னீ ர்செல்வம் எந்தஒரு நிலை யான முடிவு எடுக்கமுடியாத நிலையில் தடுமாற்றத்தில் உள்ளார். அவர் அரசியல் ரீதியாக வளர்ந்தவர் இல்லை. அயராத உழைப்பு இல்லை. பேச்சாற்றலும் இல்லை. முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் நிழலில் வளர்ந்தவர். தனிப்பட்ட திறமை இல்லாதவர். எனவே அவர் அரசியல் பற்றி பேசாமல் ஓய்வு எடுக்கலாம்.
அவரிடம் உள்ள பண்ருட்டி ராமச்சந்திரன் உள்பட பல நிர்வாகிகள் பல அரசியல் கட்சிகளுக்கு சென்று வந்தவர்கள். இதில் புகழேந்தி ஓ.பன்னீர்செல்வ த்தாலேயே கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர். கு.ப.கிரு ஷ்ணன் என்னை எதிர்த்து போட்டியிட்டவர். தற்போது இரட்டை இலை சின்னம் குறித்து அவர் பேசுவது வேடிக்ைக. ஓ.பன்னீர்செல்வ த்துடன் சசிகலா, தினகரன் ஆகியோர் ரகசிய சந்திப்பு நடத்தி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் 2-வது தர்மயுத்தம் நடத்தப்போவ தாக ஓ.பி.எஸ்.கூறுவதை யாரும் நம்ப மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
- திண்டுக்கல் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 75வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
- கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் கலந்து கொண்டு பேசினார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 75வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் மணிக்கூ ண்டில் நடைபெற்றது.
கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் கலந்து கொண்டு பேசியதாவது:-
கருணாநிதி, ஸ்டாலின், அழகிரி ஆகிய 3 பேரும் சேர்ந்து திருமங்கலம் பார்முலாவை தேர்தலில் முதன்முறையாக அறிமுகப்படுத்தினர். தற்போது அதைவிட பல மடங்கு தில்லுமுல்லு செய்து ஈேராடு கிழக்கு தேர்தலில் வாக்காளர்களை பட்டியில் ஆடு மாடுகளைப்போல அடைத்து வைத்து புதிய பார்முலாவை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆலோசனையின் பேரில் ஏற்படுத்தி உள்ளனர். பழைய தில்லுமுல்லு பார்முலாவை தி.மு.க.வே முறியடித்துள்ளது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன் ஆகியோரை தவிர மற்ற அனைத்து அமைச்சர்களும் ஈரோடு கிழக்கு தொகுதியில் முகாமிட்டு தில்லுமுல்லு செய்கின்றனர்.
வார்டுக்கு 2 அமைச்சர்கள் வீதம் செயல்பட்டு வாட்ச் முதல் வீட்டுக்கு தேவையான பொருட்கள், தினசரி ரூ.1000 என கூலி நிர்ணயித்து வாக்கா ளர்களை விலைக்கு வாங்கி தேர்தல் விதிமுறை களை காற்றில் பறக்க விட்டனர். ஒரு ஓட்டுக்கு ரூ.25 ஆயிரம் வரை தி.மு.க. செலவழித்துள்ளது.
238 பூத்துகள் உள்ள இடத்தில் 450 இடங்களில் முகாமிட்டு இவர்களின் தேர்தல் விதிமீறலில் கைவண்ணம் காட்டி உள்ளனர். தேர்தலில் சர்வாதிகார சூழ்நிலைக ளை உருவாக்கி தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. அ.தி.மு.க. ஆளும் கட்சியாக இருந்தபோது 22 இடைத்தேர்தல்களில் 3 தேர்தலில் தி.மு.க. டெபாசிட் இழந்தது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தோல்வி அடைந்தபோதிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. அதாவது, இந்த தேர்தலில் அ.தி.மு.க.வை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும் என்று சூழுரைத்த தி.மு.க.வினர் சூழ்ச்சியை முறியடித்து நமக்கு வா க்காளர்கள் வாக்களித்துள்ளனர்.
மு.க.ஸ்டாலினை தனது ராஜதத்திரத்தால் எடப்பாடி பழனிசாமி வென்று விட்டார். இவ்வாறு அவர் பேசினார்.
- கொடைக்கானல் வனப்பகுதியில், கடும் வெப்பம் நிலவி வருகிறது.
- கோடை காலத்தில் வனப்பகுதியில் தீத்தடுப்பு கோடுகள் அமைக்கப்படும்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் வனப்பகுதியில், கடும் வெப்பம் நிலவி வருகிறது. இதனால் அரசு, தனியார் தோட்டங்கள் மற்றும் வனப்பகுதியில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. இதனை வனத்துறையினர் அணைத்து வருகின்றனர்.
இந்தநிலையில் கருவேலம்பட்டி, கோம்பைப்பட்டி ஆகிய இடங்களில் மீண்டும் தீப்பிடித்தது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. காட்டுத்தீயில் அந்த பகுதியில் உள்ள அரிய வகை மரங்கள், மூலிகை செடி எரிந்து நாசமாகின. மேலும் வனவிலங்குகள் வெளியேறி வேறு பகுதிக்கு இடம் பெயர்ந்து வருகின்றன.
இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் மற்றும் மலைக்கிராம மக்கள் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த காட்டு தீயானது, கொடைக்கானல்-பழனி பிரதான மலைப்பாதைக்கும் பரவி எரிந்து வருகிறது.
வழக்கமாக, கோடை காலத்தில் வனப்பகுதியில் தீத்தடுப்பு கோடுகள் அமைக்கப்படும். இந்த ஆண்டு அவை அமைக்கப்படாததால்தான் காட்டுத்தீ வேகமாக பரவுகிறது என்றும், தீயை கட்டுப்படுத்துவதற்கு நவீன உபகரணங்கள் வாங்குவதற்கு வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மலைக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கொடைக்கானல் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட மலைப்பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட பறவைகள் உள்ளன.
- சிறப்பு கேமிராக்கள், பைனாகுலர்கள், ஒலிஅறியும் கருவிகள் கொண்டு கணக்கெடுப்பு பணிகள் 2 நாட்கள் நடைபெறும் என வனத்துறையினர் கூறினர்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் மலைப்பகுதியில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நேற்று தொடங்கி 20 இடங்களில் நடைபெறுகிறது. இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில்,
கொடைக்கானல் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட மலைப்பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட பறவைகள் உள்ளன. கிரேஹெட்டட் கென்னடி பிளேகேட்சிங், ஆரஞ்சு பிளைகேட்சிங், யுரேசியன்பிளாக் பேர், நீலகிரி பிளைகேட்ச்சர், ஓரியண்டல் ஒயிட்ஐ, பழனி லாபிங்திரஸ், ரஸ்டிடைல்டு பிளைகேட்சர் உள்ளிட்ட அரியவகை பறவை இனங்கள் உள்ளன.
இந்த பறவைகள் அனைத்தும் பழங்களை உண்ணாது. பூச்சிகளை மட்டுமே உண்டு வாழக்கூடியதாகும். இமயமலையில் 4 வகையான மரங்கொத்திகள் உள்ளன. இந்த கணக்கெடுப்பு பணிகள் இதுபோன்ற அரியவகை பறவைகள் பாதுகாக்கப்படுகின்றனவா, இனப்பெருக்கம் எந்த அளவில் உள்ளது. வெளிநாட்டு பறவைகள் வந்துள்ளதா என ஆய்வுக்கு பயன்படுத்தப்பட உள்ளது.
20-க்கும் மேற்பட்ட இடங்களில் கணக்கெடுப்பு நடைபெறுகின்றது. சிறப்பு கேமிராக்கள், பைனாகுலர்கள், ஒலிஅறியும் கருவிகள் கொண்டு இந்த பணிகள் 2 நாட்கள் நடைபெறும் என வனத்துறையினர் கூறினர்.
- வனவிலங்குகள் அடிக்கடி உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு, விவசாய நிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.
- யானை தாக்கியதில் விவசாயி மற்றும் கன்றுகுட்டி பலியானது
ஒட்டன்சத்திரம்:
பழனி அருகே மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் யானை, காட்டெருமை, காட்டுபன்றி, முயல், கடமான் உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இவை அடிக்கடி உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு, விவசாய நிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.
பழனி அருகே சிந்தல வாடம்பட்டி, ராமபட்டி ணம்புதூரை சேர்ந்தவர் தண்டபாணி(52). இவர் தென்னந்தோப்பில் குடும்பத்துடன் தங்கியிருந்து வேலைபார்த்து வருகிறார். இந்தோட்டத்தில் திடீரென காட்டுயானை புகுந்து தண்டபாணியை தாக்கியதில் படுகாயமடைந்தார்.
அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு பழனி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் தண்டபாணி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரி வித்தனர். இதுகுறித்து சத்திரபட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தா.புதுக்கோட்டையை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது ேதாட்டத்தில் கன்றுகுட்டி கட்டப்பட்டி ருந்தது. வனப்பகுதியில் இருந்து வழி மாறி வந்த காட்டுயானை தோட்டத்தி ற்குள் புகுந்தது.
அங்கிருந்த கன்று குட்டியை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அது பலியானது. தகவல் அறிந்து வந்த கால்நடை டாக்டர் கன்றுகுட்டியின் உடலை பிரேத பரிசோதனை செய்தார். பின்னர் தோட்டத்திலேயே உடல் புதைக்கப்பட்டது. காட்டு யானை நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சமடை ந்துள்ளனர்.
எனவே வனத்துறையினர் துரிதமாக செயல்பட்டு யானை நட மாட்டத்தை கண்காணித்து வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தினமும் பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதி உலா வருகிறார்.
- 8-ந்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.
பழனி முருகன் கோவிலின் உபகோவிலான மாரியம்மன் கோவிலில், கடந்த மாதம் 17-ந்தேதி முகூர்த்தக்கால் நடுதலுடன் மாசித்திருவிழா தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கம்பம் சாட்டுதல் கடந்த 21-ந்தேதி நடைபெற்றது. இதனையடுத்து தினமும் பக்தர்கள் பால், மஞ்சள் நீரை காலை, மாலை வேளைகளில் கம்பத்தில் ஊற்றி வழிபாடு செய்து வருகின்றனர். பின்னர் கடந்த 28-ந்தேதி கோவிலில் கொடியேற்றம், பூவோடு வைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. கொடியேற்றத்தை தொடர்ந்து தினமும் இரவு சிம்மம், வெள்ளி யானை, வெள்ளி காமதேனு, தங்ககுதிரை, வெள்ளி ரிஷபம் உள்ளிட்ட வாகனங்களில் அம்மன் வீதி உலா வருகிறார்.
மாசித்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான உற்சவர் திருக்கல்யாணம் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) மாலை 6.40 மணிக்கு மேல் 7.15 மணிக்குள் நடைபெறுகிறது. மேலும் திருக்கல்யாண நிகழ்ச்சியையொட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. தொடர்ந்து அன்று இரவு அம்மன் வீதி உலா வருகிறார். 8-ந்தேதி (புதன்கிழமை) தேரோட்டம் நடைபெறுகிறது.
இந்நிலையில் திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் காலை, மாலை வேளையில் தீச்சட்டி எடுத்து ரதவீதியை சுற்றி வந்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். இதற்காக ரதவீதிகளில் தீச்சட்டி பானை, விறகு சுள்ளி விற்பனையும் அமோகமாக நடந்து வருகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பழனி கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.
- திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலின் திருப்பணிகள் விரைவில் தொடங்க இருக்கிறது.
- அம்மனின் கருவறை மற்றும் கொடிமர மண்டபம் ஆகியவை முற்றிலும் கற்களால் ஆன கோவிலாக அமைக்கப்படும்.
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலின் மாசித்திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவில் நேற்று காலை வெண்ணை தாழி அலங்காரத்தில் அம்மன் புறப்பாடாகி வீதிஉலா நடந்தது. அதைத்தொடர்ந்து மாசித்திருவிழாவின் முக்கிய உற்சவ நிகழ்ச்சியான தசாவதாரம் நடந்தது. இதையொட்டி இரவு 10 மணி அளவில் தசாவதாரம் தொடங்கியது. இதில் காளி, மச்ச, கூர்ம என அடுத்தடுத்து தசாவதார காட்சிகள் இரவு முழுவதும் நடைபெற்றன.
இந்தநிலையில் இந்த ஆண்டு மாசித்திருவிழா நிறைவு பெற்றதும் கோட்டை மாரியம்மன் கோவிலின் திருப்பணிகள் தொடங்க இருப்பதாகவும், அந்த திருப்பணிகள் முடிவு பெறும் வரை மாசித்திருவிழா நடைபெறாது என்றம் தகவல் பொதுமக்களிடையே பரவியது. இதுகுறித்து கோவில் நிர்வாக பரம்பரை அறங்காவலர் சுபாஷினி கூறியதாவது:-
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலின் திருப்பணிகள் விரைவில் தொடங்க இருக்கிறது. இதையொட்டி அம்மனின் கருவறை மற்றும் கொடிமர மண்டபம் ஆகியவை முற்றிலும் கற்களால் ஆன கோவிலாக அமைக்கப்படும். இதற்கான வரைபடம் இந்துசமய அறநிலையத்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. வரைபட ஒப்புதல் கிடைத்தவுடன் திட்ட மதிப்பீடு செய்யப்படும். மேலும் இன்னும் 2 மாதங்களில் அதற்கான ஒப்புதல்கள் கிடைக்கும். அதன்பிறகு திருப்பணிகள் தொடங்கப்படும். அவ்வாறு திருப்பணிகள் தொடங்கப்பட்டாலும் அடுத்த ஆண்டு மாசித்திருவிழா எந்தவித தடையும் இன்றி ஒரு சில கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து நடத்தப்படும் என்றார்.






