என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    • அந்தந்த கிராமங்களில் அம்மனுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளும் நடந்தது.
    • பக்தர்கள் மாவிளக்கு, அக்னிசட்டி, பால்குடம், கிடாய்கள் வெட்டி நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.

    நத்தம்:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே குட்டுப்பட்டி, நடுவனூர், பண்ணு வார்பட்டி, காசம்பட்டி, கல்வேலிபட்டி, சாத்தா ம்பாடி, தேத்தாம்பட்டி ஆகிய கிராமங்களில் முத்தாலம்மன் கோவில் திருவிழாக்கள் நடந்தது. இதில் அந்தந்த கிராமங்களில் அம்மனுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளும் நடந்தது.

    தொடர்ந்து பக்தர்கள் மாவிளக்கு, அக்னிசட்டி, பால்குடம், கிடாய்கள் வெட்டி நேர்த்திக்கடன்களை செலுத்தினர். தொடர்ந்து அந்தந்த கிராமங்களில் மாலையில் பக்தர்கள் புடை சூழ தீவட்டி பரி வாரங்களுடன் முத்தாலம்மன் பூஞ்சோலைக்கு சென்றது.

    இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • பலத்த காயமடைந்தவரை திண்டுக்கல் அரசுஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்ப ட்டார்.
    • இங்கு அடிக்கடி தகராறு மற்றும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டு வருகிறது.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே காமாட்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்த வன்னியபாறைப்பட்டியை சேர்ந்தவர் முனீஸ்வரன்(35). இப்பகுதியில் கடந்த 2 நாட்களாக கோவில் திருவிழா நடைபெற்று வந்தது. நேற்று மாலை முனீஸ்வரன் பாறைப்பட்டி அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் நின்றுகொண்டி ருந்தார்.

    அப்போது அங்கு வந்த சொக்கன்(28) என்பவர் பட்டா கத்தியுடன் அவரிடம் தகராறு செய்தார். மேலும் முனீஸ்வரனை பட்டாகத்தியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். பலத்த காயமடைந்த முனீஸ்வரன் திண்டுக்கல் அரசுஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்ப ட்டார். இது குறித்து வடமதுரை போலீ சில் புகார் அளிக்கப்பட்டது.

    இன்ஸ்பெக்டர் ஜோதி முருகன் தலைமையிலான போலீசார் பட்டாகத்தியுடன் சொக்கனை கைது செய்தனர். வடமதுரை, அய்யலூர் ஆகிய பகுதிகளில் 7 டாஸ்மாக் கடைகள் மற்றும் 3 சூதாட்ட கிளப்புகள் உள்ளன. இங்கு அடிக்கடி தகராறு மற்றும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. போலீசார் பற்றாக்குறை காரணமாக இதுபோன்ற பிரச்சினைகளில்உரிய நடவடிக்கை எடுக்க முடியாமல் திணறி வரு கின்றனர்.

    இதனால் பொது மக்களும் பாதிக்கப்பட்டு வருகினறனர். எனவே சூதாட்ட கிளப்புகளை ஆய்வு செய்து சட்டம்-ஒழுங்கு பிரச்சினை நடை பெறாமல் தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பக்தர்கள் விரதம் தொடங்கி தீர்த்தம் எடுத்து வந்து முருகபெருமானை தரிசனம் செய்து வருகின்றனர்.
    • கிரிவீதி, அடிவாரம், மின்இ ழுவை ரெயில்நிலையம், ரோப்கார்நிலையம், பஸ்நிலையம் உள்பட அனைத்து பகுதிகளிலும் பக்தர்கள் கூட்டமாக காணப்பட்டது.

    பழனி:

    தமிழ்கடவுள் முருகனின் 3ம் படை வீடான பழனிக்கு வெளிமாநிலங்கள், வெளி நாடுகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். தைப்பூச விழாவிற்கு அடுத்தபடியாக பங்குனி உத்திரம் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இதற்காக கொடுமுடி உள்பட பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் விரதம் தொடங்கி தீர்த்தம் எடுத்து வந்து முருகபெருமானை தரிசனம் செய்து வருகின்றனர். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த மார்ச்.29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்களாக நடைபெற்ற விழாவில் வெள்ளிகாமதேனு, வெள்ளி ஆட்டுக்கிடா, தங்கமயில், வெள்ளி யானை, தங்கக்குதிரை, வெள்ளி மயில் உள்ளிட்ட வாகனங்களில் முத்து க்குமாரசாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலி த்தார்.

    3ம் தேதி திருக்கல்யாணமும், 4ம் தேதி பங்குனி உத்திர தோரோட்டமும் நடைபெற்றது. 6ம் தேதி முத்துக்குமாரசாமி வெள்ளிமயில் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதற்காக பக்தர்கள் பாதயாத்திரை யாக வந்து முருகனை தரிசனம் செய்தனர். நேற்று மலைக்கோவிலில் தங்கரத புறப்பாடு ஊர்கோவிலுக்கு தங்கக்குதிரை வாகனத்தில் சுவாமி திரும்புதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    பின்னர் இரவு திரு ஆவினன்குடி கோவிலில் கொடியிறக்கப்பட்டு விழா நிறைவுபெற்றது. விழாவையொட்டி பழனி அடிவாரம், கிரிவீதி, குடமுழுக்கு நினை வரங்கத்தில் பக்தி சொற்பொழிவு, இன்னிசை, பரதநாட்டியம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதில் கோவில் இணை ஆணையர் நடராஜன், துணை ஆணையர் பிரகாஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர். இன்று காலைமுதலே பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. கிரிவீதி, அடிவாரம், மின்இ ழுவை ரெயில்நிலையம், ரோப்கார்நிலையம், பஸ்நிலையம் உள்பட அனைத்து பகுதிகளிலும் பக்தர்கள் கூட்டமாக காணப்பட்டது. மலை க்கோவிலில் நீண்டநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    • தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
    • நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் தண்டனை தீர்ப்பு வழங்கிய சூரத் நீதிமன்ற நீதிபதி நாக்கை அறுப்போம் என பேசினார்.

    திண்டுக்கல்:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதைகண்டித்து நாடு முழுவதும் அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

    திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் அருகே காங்கிரஸ் எஸ்.இ.எஸ்.டி பிரிவு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பேசிய திண்டுக்கல் மாநகர் மாவட்ட தலைவர் துரை மணிகண்டன் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் தண்டனை தீர்ப்பு வழங்கிய சூரத் நீதிமன்ற நீதிபதி நாக்கை அறுப்போம் என பேசினார்.

    ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் வகையில் பேசிய மணிகண்டன் மீது நடவடிக்கை எடுக்ககோரி பா.ஜ.க சார்பில் திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மணிகண்டன் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் தங்கள் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

    இதனையடுத்து துரை மணிகண்டன் மீது ஒற்றுமை, ஒருமைபாட்டை சீர்குலைக்கும் வகையில் பேசியது, உயர்ந்த பொறுப்பில் உள்ள அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நகர்வடக்கு போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

    • கோடைகால சீசன் தொடங்கும்போது ஒவ்வொரு ஆண்டும் போக்குவரத்து நெரிசல் என்பது வழக்கமாகி உள்ளது.
    • சுற்றுலா வாகனங்கள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் நெரிசலில் திணறியது.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருக்கும். தற்போது புனிதவெள்ளியை தொடர்ந்து வார இறுதி விடுமுறை நாட்கள் என்பதால் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர்.

    இதன்காரணமாக அதிகாலை முதலே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நுழைவுவாயில் பகுதியான வெள்ளிநீர்வீழ்ச்சி சோதனைச்சாவடியில் சுமார் 3 கி.மீ தூரத்திற்கு சுற்றுலா வாகனங்கள் அணிவகுத்து நின்றன. மேலும் மூஞ்சிக்கல், உகாதே நகர் , ஏரிச்சாலை உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் சுற்றுலா வாகனங்கள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் நெரிசலில் திணறியது.

    காலை நேரத்தில் வேலைக்கு செல்பவர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் அவதிக்குள்ளாகினர். கோடைகால சீசன் தொடங்கும்போது ஒவ்வொரு ஆண்டும் போக்குவரத்து நெரிசல் என்பது வழக்கமாகி உள்ளது. போக்குவரத்து போலீசார் கூடுதலாக பணியமர்த்தி போக்குவரத்து நெரிசலை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் பல வருடங்களாக கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் எந்தநடவடிக்கையும் எடுக்கவில்லை.

    நேற்று இரவு நேரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் தன்னார்வலர்கள் மற்றும் டாக்சி டிரைவர்கள் உள்பட பொதுமக்கள் தாங்களாகவே போக்குவரத்தை சீரமைத்துக்கொண்டனர். மேலமலையில் போலீஸ் நிலையம் அமைக்க வேண்டும். போதுமான போக்குவரத்து போலீசார் பணியமர்த்தவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    குறைந்த அளவே போலீசார் பணியில் உள்ளதால் வேலைபளு அதிகரித்து மனஉளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் இதற்கு தீர்வு காணவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தொடர் விடுமுறை எதிரொலியாக கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் படையெடுத்தனர்.
    • ஏரிச்சாலையில் குதிரை சவாரி, சைக்கிள் சவாரி செய்தும் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர்.

    கொடைக்கானல்:

    புனித வெள்ளி உள்ளிட்ட 3 நாள் தொடர் விடுமுறை எதிரொலியாக நேற்று கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் படையெடுத்தனர்.

    குளு, குளு சீசனை அனுபவித்து மகிழ்ந்தனர். நீர்வீழ்ச்சிகளை கண்டு ரசித்ததுடன், நட்சத்திர ஏரியில் படகுசவாரி செய்தும், ஏரிச்சாலையில் குதிரை சவாரி, சைக்கிள் சவாரி செய்தும் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர்.

    • தொட்டணம்பட்டி பிரிவு பகுதியில் தொடர்ந்து விபத்துகள் நடந்து வருகிறது.
    • மாலைக்குள் இதற்கு தீர்வு காணாவிட்டால் இறந்தவரின் உடலை வைத்து போராட்டம் நடத்தப்போவதாக கிராமமக்கள் தெரிவித்தனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல்-பழைய கரூர் சாலை தொட்டண ம்பட்டி பிரிவு பகுதியில் பழனிச்சாமி(60) கூலித்தொழிலாளி நடந்து சென்றார். அப்போது அதிவேகமாக வந்த பால் வாகனம் பழனிச்சாமி மீது பயங்கரமாக மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆனால் வழியிலேயே பழனிச்சாமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்ததும் போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர். தொட்டணம்பட்டி பிரிவு பகுதியில் தொடர்ந்து விபத்துகள் நடந்து வருகிறது. அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மேலும் ஒரு உயிர் பலியாகி உள்ளதாக குற்றம்சாட்டி அப்பகுதி மக்கள் திண்டுக்கல்-கரூர் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் இருபுறமும் அணிவகுத்து நின்றன. சம்பவம் குறித்து அறிந்ததும் அதிகாரிகள் மற்றும் போலீசார் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இன்று மாலைக்குள் இதற்கு தீர்வு காணாவிட்டால் இறந்தவரின் உடலை வைத்து போராட்டம் நடத்தப்போவதாக கிராமமக்கள் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் காணப்பட்டது.

    • பங்குனி உத்திர தேரோட்டம் முடிந்த பின்னரும் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
    • தினமும் இரவு 7 மணிக்கு தங்கரதத்தில் சின்ன குமாரசாமி புறப்பாட்டை பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.

    பழனி:

    தமிழ்கடவுள் முருக ப்பெருமானின் 3-ம் படை வீடான பழனிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடு களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். வருடம் முழுவதும் திருவிழா க்கோலம் பூண்டிருக்கும் பழனியில் எப்போதும் பக்தர்கள் கூட்டம் காணப்படுகிறது.

    தைப்பூச திருவிழாவிற்கு அடுத்தபடியாக பங்குனி உத்திரம் அதிவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி பக்தர்கள் கொடுமுடி உள்பட பல்வேறு பகுதி களில் இருந்து தீர்த்தகாவடி எடுத்துவந்து முருகனை வழிபட்டு வருகின்றனர்.

    இந்த ஆண்டுக்கான பங்குனிஉத்திர திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்ச்சி யான தேரோட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. அப்போது பல்வேறு பகுதிகளில் இருந்து தீர்த்தக்காவடிகள் எடுத்து வந்த பக்தர்கள் கிரிவீதியில் ஆடிய காட்சி காண்ப வர்களை பரவசமடைய செய்தது. தற்போது பங்குனி உத்திர தேரோட்டம் முடிந்த பின்னரும் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

    இதனால் அடிவாரம், மலைக்கோவில், வின்ச், ரோப்கார் நிலையத்தில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். மேலும் மலைக்கோவிலில் சுமார் 3 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் அன்னதானத்திற்கும் நீண்டவரிசையில் காத்திருந்தனர். தற்போது 10-ம் வகுப்பு தேர்வு நடைபெற்று வருகிறது. இன்னும் ஓரிருவாரங்களில் தேர்வு முடிந்து கோடை விடுமுறை அளிக்கப்படும்.

    அப்போது பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என்பதால் கூடுதல் போலீசாரை பணியமர்த்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பழனி செல்லும் பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறியவுடன் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். இதில் தங்கரத புறப்பாடு முக்கிய நிகழ்ச்சியாகும். பங்குனி உத்திர திருவிழாவை யொட்டி கடந்த 2-ந்தேதி முதல் இன்றுவரை தங்கரத புறப்பாடு நடைபெறாது என கோவில்நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டி ருந்தது.

    அதன்படி கடந்த 5 நாட்களாக சாமி தங்கரத புறப்பாடு நடைபெற வில்லை. நாளை(7-ந்தேதி) முதல் வழக்கம்போல் மலைக்கோவில் வெளி பிரகாரத்தில் தங்கரதபுற ப்பாடு நடைபெறுகிறது. தினமும் இரவு 7 மணிக்கு தங்கரதத்தில் சின்ன குமாரசாமி புறப்பாட்டை பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் என காவடி மற்றும் பால்குடம் எடுத்து பக்தி பரவசத்துடன் பாதயாத்திரை ஊர்வலமாக சென்றனர்.
    • பக்தர்கள் தங்கள் பங்குனி உத்திர விரதத்தை நிறைவு செய்தனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு குறிஞ்சி ஆண்டவர் முருகன் கோவிலுக்கு 1001 காவடி எடுக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.இந்நிகழ்வில் நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் என காவடி மற்றும் பால்குடம் எடுத்து பக்தி பரவசத்துடன் குறிஞ்சி ஆண்டவர் முருகன் கோவிலுக்கு பாதயாத்திரை ஊர்வலமாக சென்றனர்.

    முன்னதாக இந்த ஊர்வலத்தை கொடைக்கானல் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கார்த்திக் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னாள் நகர் மன்ற தலைவர்கள் கோவிந்தன், ஸ்ரீதர், தற்போதைய கொடைக்கானல் நகர் மன்ற தலைவர் செல்லத்துரை, துணைத் தலைவர் மாயக்கண்ணன் மற்றும் காவடி விழா குழுவினர் கலந்து கொண்டனர்.

    காவடி ஊர்வலமானது ஏழு ரோடு, அண்ணாசாலை, மூஞ்சி க்கல், ஆனந்தகிரி பகுதி வழியாக குறிஞ்சி ஆண்டவர் முருகன் கோவிலிலுக்கு சென்றடைந்தது.அங்கு சென்று பக்தர்கள் தங்கள் பங்குனி உத்திர விரதத்தை நிறைவு செய்தனர்.அங்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • பிற்கால பாண்டியர்கள் காலத்தில் நிர்வாக வசதிக்காக தாங்கள் ஆட்சி செய்த பகுதிகளை பல நாட்டு பிரிவுகளாக பிரித்து இருந்தனர்.
    • பண்டைய காலத்தில் மக்களின் வாழ்க்கையும், வாழ்விடமும் மலையும் மலை சார்ந்த இடமாக இருந்துள்ளது.

    நத்தம்:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகா செந்துறை அருகே மணக்காட்டூரில் கி.பி 14, 15 ஆம் நூற்றாண்டு நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆற்றூர் நாடு வரலாற்று ஆய்வு மையக்குழுவின் முனைவர். மாணிக்கராஜ், சுப்பு உலகநாத பாண்டியன், ராமு, திண்டுக்கல் மாவட்டம் நெல்லூர் அரசு கள்ளர் உயர்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர் கருப்பையா ஆகியோர் இணைந்து நத்தம் அருகே உள்ள மணக்காட்டூர் பகுதியில் நேரடி கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 14, 15-ம் நூற்றாண்டை சேர்ந்த அப்புச்சி என்று இப்பகுதி மக்களால் அழைக்கப்படும் வில்வீரன் நடுகல்லை கண்டறிந்தனர்.

    பிற்கால பாண்டியர்கள் காலத்தில் நிர்வாக வசதிக்காக தாங்கள் ஆட்சி செய்த பகுதிகளை பல நாட்டு பிரிவுகளாக பிரித்து இருந்தனர். அதன்படி இப்பகுதியானது புறமலை நாட்டு பிரிவின் கீழ் இருந்து வந்துள்ளது. இப்பகுதியானது மலையும் மலை சார்ந்த குறிஞ்சி நிலப்பகுதியாகும். இங்கு வாழ்ந்த வில்வீரன் ஒருவனின் மரணத்தின் நினைவாக இந்த நடுகல் எடுக்கப்பட்டிருக்கலாம். இந்த நடுகல் 3.5 அடி உயரம், 1.5 அடிஅகலம் உடையதாக உள்ளது. இதில் வீரன் தனக்கு எதிரே நேராக பார்த்தவாறு புடைப்பு சிற்பமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

    வீரன் முகம் தேய்ந்த நிலையில் உள்ளது. வீரன் தனது வலது கையில் வில்லின் அம்பை பிடித்தவாறும், இடது கையில் வில்லின் நடுப்பகுதியான நாபியை பிடித்தவாறும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. வீரனுக்கு வலது பக்கமாக கூந்தலை அள்ளி கட்டி முடிக்கப்பட்ட கொண்டையும், வீரனுக்கே உரிய விரிந்த மார்புடனும் இடை சிறிதாக வீரனுக்குரிய உடல் அமைப்புடனும் அழகாக வெட்டப்பட்டிருக்கிறது. இந்த நடுகல் வீரனின் இடுப்புக்கு கீழ் பகுதி முழுவதும் மண்ணில் புதைந்து காணப்படுவதால் வீரனின் ஆடை மற்றும் காலில் அணிவிக்கப்பட்டு இருக்கும் அணிகலன்களை அறிந்து கொள்ள முடியவில்லை.

    பண்டைய காலத்தில் மக்களின் வாழ்க்கையும், வாழ்விடமும் மலையும் மலை சார்ந்த இடமாக இருந்துள்ளது. அவ்வாறு வாழ்ந்த மக்கள் விலங்குகளை உணவுக்காக வேட்டையாடும்போது அவற்றுடன் சண்டையிட்டு இறப்பது வழக்கமாக இருந்துள்ளது. இவ்வாறான நிகழ்வுகளில் வீர மரணம் அடையும் வீரர்களின் நினைவாக கல்நட்டு அவர்களை தெய்வமாக வழிபடுவது தமிழர்களின் சிறப்பான பண்பாட்டு மரபாகும். இதனை இலக்கியங்கள், கல்வெட்டுச் சான்றுகள் கூறுகின்றன. பண்டைய காலம் முதல் தமிழர்கள் வீரர்களை போற்றி தெய்வமாக வணங்கும் செயலுக்கு இந்த வில்வீரன் நடுகல் சான்றாக உள்ளது. இந்த வில் வீரன் நடுகல்லை இப்பகுதி மக்கள் அப்புச்சி என்ற பெயரில் தெய்வமாக வணங்கி வருகின்றனர்.

    • மாநிலத்திலேயே சிறந்த மாநகராட்சியாக திண்டுக்கல்லை தரம் உயர்த்த பாடுபடுவேன்.
    • திண்டுக்கல் மாநகராட்சியில் பொறுப்பேற்ற முதல்பெண் கமிசனர் என்ற பெருமை யையும் பெற்றுள்ளார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாநகராட்சி கமிசனராக இருந்தவர் சிவசுப்பிரமணியன். இவர் பணி ஓய்வு பெற்று சென்றதையடுத்து புதிய கமிசனராக மகேஸ்வரி என்பவர் நியமிக்கப்பட்டார். அவர் இன்று முறைப்படி மாநகராட்சி அலுவலகத்தில் பதவிஏற்று கொண்டார். அதன்பின் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,

    2012-ம் ஆண்டு குரூப்-2 தேர்வில் தேர்ச்சிபெற்று பெண்கள் பிரிவில் மாநிலத்திலேயே முதல்இடம் பிடித்தேன். அதன்பிறகு 2014-ம் ஆண்டு பெரியகுளம் நகராட்சியில் ஆணையாளராக பணிபுரிந்த போது சிறந்த நகராட்சிக்கான விருதை பெற்றேன்.

    2019-ம் ஆண்டு தர்மபுரி நகராட்சியில் ஆணையாள ராக பணிபுரிந்தபோதும் சிறந்த நகராட்சிக்கான விருதுபெற்றேன். 2018-ம் ஆண்டு நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் பணிபுரிந்தபோது சிறந்த திடக்கழிவு மேலா ண்மைக்கான விருது பெற்றேன். பின்னர் சென்னையில் தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்பு மன்ற நடுவர் நீதிமன்ற செய லாளராக பணிபுரிந்தேன். தற்போது திண்டுக்கல் மாநகராட்சியின் கமிசனராக பொறு ப்பேற்றுள்ளேன்.

    மாநிலத்திலேயே சிறந்த மாநகராட்சியாக திண்டுக்கல்லை தரம் உயர்த்த பாடுபடுவேன். இவ்வாறு அவர் கூறினார். மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட திண்டுக்கல் மாநகராட்சியில் மகேஸ்வரி 5-வது கமிசனராவார். மேலும் மாநகராட்சியில் பொறுப்பேற்ற முதல்பெண் கமிசனர் என்ற பெருமை யையும் பெற்றுள்ளார்.

    • பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.
    • மனமுடைந்த அவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    வேடசந்தூர்:

    வேடசந்தூர் அருகே மல்வார்பட்டியை சேர்ந்த வர் ராஜா(29). சென்டிரிங் மேஸ்திரியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகவில்லை. கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.

    இதற்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த ராஜா தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் வேட சந்தூர் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×