என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மிரட்டிய வாலிபர் கைது"

    • பலத்த காயமடைந்தவரை திண்டுக்கல் அரசுஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்ப ட்டார்.
    • இங்கு அடிக்கடி தகராறு மற்றும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டு வருகிறது.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே காமாட்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்த வன்னியபாறைப்பட்டியை சேர்ந்தவர் முனீஸ்வரன்(35). இப்பகுதியில் கடந்த 2 நாட்களாக கோவில் திருவிழா நடைபெற்று வந்தது. நேற்று மாலை முனீஸ்வரன் பாறைப்பட்டி அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் நின்றுகொண்டி ருந்தார்.

    அப்போது அங்கு வந்த சொக்கன்(28) என்பவர் பட்டா கத்தியுடன் அவரிடம் தகராறு செய்தார். மேலும் முனீஸ்வரனை பட்டாகத்தியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். பலத்த காயமடைந்த முனீஸ்வரன் திண்டுக்கல் அரசுஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்ப ட்டார். இது குறித்து வடமதுரை போலீ சில் புகார் அளிக்கப்பட்டது.

    இன்ஸ்பெக்டர் ஜோதி முருகன் தலைமையிலான போலீசார் பட்டாகத்தியுடன் சொக்கனை கைது செய்தனர். வடமதுரை, அய்யலூர் ஆகிய பகுதிகளில் 7 டாஸ்மாக் கடைகள் மற்றும் 3 சூதாட்ட கிளப்புகள் உள்ளன. இங்கு அடிக்கடி தகராறு மற்றும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. போலீசார் பற்றாக்குறை காரணமாக இதுபோன்ற பிரச்சினைகளில்உரிய நடவடிக்கை எடுக்க முடியாமல் திணறி வரு கின்றனர்.

    இதனால் பொது மக்களும் பாதிக்கப்பட்டு வருகினறனர். எனவே சூதாட்ட கிளப்புகளை ஆய்வு செய்து சட்டம்-ஒழுங்கு பிரச்சினை நடை பெறாமல் தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கணியம்பாடி தி.மு.க. பிரமுகர் புகார்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளான ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய குழு கவுன்சிலர்கள், வார்டு உறுப்பினர்களுக்கு கடந்த சில நாட்களாக சென்னை தலைமை செயலகத்தில் உள்ள முதல்வரின் தனிப்பிரிவில் பணிபுரியும் ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவக்குமார் பேசுவதாக தொடர்பு கொண்டு ஒருவர் பேசி உள்ளார்.

    அப்போது அவர், உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் உங்கள் மீது புகார்கள் வந்துள்ளது.

    நீங்கள் சென்னை வந்து என்னை சந்திக்க வேண்டும். இல்லையென்றால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறி மிரட்டினார்.

    இது குறித்து உள்ளாட்சி பிரதிநிதிகள் போலீஸ் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர்.

    அவரது செல்போன் எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அதுபோன்று யாரும் சென்னை தலைமை செயலகத்தில் வேலை செய்யவில்லை என்பது தெரிய வந்தது.

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் தி.மு.க. ஒன்றிய செயலாளரும், கணியம்பாடி ஒன்றிய குழு துணைத்தலைவர் கஜேந்திரன்என்ப வரையும், கடந்த 2 நாட்களுக்கு முன்பு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு சென்னை வரும்படி மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.

    இதுகுறித்து கணியம்பாடி ஒன்றிய குழு துணை தலைவர் கஜேந்திரன், வேலூர் தாலுகா போலீசில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சென்னையில் பதுங்கி இருந்த நபரை கைது செய்தனர்.

    பின்னர் போலீசார் அவரை வேலூர் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

    அவர் சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த சுபாஷ் (வயது 29) என்பது இவர் போலியான செல்போன் எண் மூலம் பல பேரை மிரட்டி பணம் பறித்தது தெரிய வந்துள்ளது.

    இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×