என் மலர்
திண்டுக்கல்
- நகராட்சி கவுன்சிலர்களை நகராட்சி ஊழியர்களுடன் ஒன்றிணைந்து செயல்படும் விதமாக அவர்களுடனான அறிமுக ஒன்றிணைப்புக் கூட்டம் நடத்த வேண்டும்.
- உறுப்பினர்கள் தங்களது கோரிக்கைகளை தலைவரிடம் எழுத்து பூர்வமாக தெரிவித்தால் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கொடைக்கானல்,
கொடைக்கானல் நகராட்சி நகர்மன்றக்கூட்டம் தலைவர் செல்லத்துரை தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் மாயக்கண்ணன் முன்னிலை வகித்தார். ஆணையாளர் நாராயணன் வரவேற்றார் இக்கூட்டத்தில் பல்வேறு விவாதங்கள் நடைபெற்றது.
சுப்பிரமணிபால்ராஜ் (அ.தி.மு.க):- நகரில் நடைபெற்ற வளர்ச்சி பணிகள் குறித்து நகர்மன்ற உறுப்பினர்களுக்கு தெரிவ தில்லை. பல அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு கவுன்சிலர்களை யார் என்று தெரியவில்லை. எனவே இதனை முறைப்படுத்த வேண்டும்.
பரிமளா (தி.மு.க.):- நகர்மன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை இதுவரை வழங்கப்படவில்லை.
ஆணையாளர்:- உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பிரபா ஷர்மிலி (தி.மு.க.):- நகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் கவுன்சிலர்கள் அடங்கிய கூட்டுக் குழு கூட்டம் நடத்த வேண்டும். நகராட்சி கவுன்சிலர்களை நகராட்சி ஊழியர்களுடன் ஒன்றிணைந்து செயல்படும் விதமாக அவர்களுடனான அறிமுக ஒன்றிணைப்புக் கூட்டம் நடத்த வேண்டும்.
ஜெயசுந்தரம் (அ.தி.மு.க.):- அரசு மூலம் சிறு வியாபாரிகளுக்கு தள்ளு வண்டி கடைகள் வழங்க ப்பட்டு வருகின்றன. ஆனால் பல்வேறு இடங்க ளில் தன்னிச்சையாக ஆக்கிரமிப்பு கடைகள் உருவாகி வருகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
ஆணையாளர்:- இது அரசின் கொள்கை முடிவு. நாடு முழுவதும் ஏழை களுக்கு இலவச கடைகள் வழங்கப்பட்டு வருகின்றன. கொடைக்கானல் பகுதியில் சுமார் 1050 பேருக்கு வழங்கப்பட உள்ளது. அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்படும். அட்டை இல்லாதவர்கள் வருங்காலங்களில் கடை வைக்க முடியாது.
தலைவர்:- நகரில் ஏற்பட்டு வரும் போக்கு வரத்து நெரிசலை தவிர்க்க கே.ஆர்.ஆர். கலையரங்கம் பகுதியில் ரூ.41 கோடி செலவில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் அமைக்க அறிக்கை தயார் செய்து அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் பஸ் நிலையம் அருகில் அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான 6 ஏக்கர் நிலத்தில் சுமார் 3.5 ஏக்கர் இடம் வாங்க பேச்சு வார்த்தை நடத்தி வருகின்ற னர். இதற்காக வல்லுனர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு இடங்களிலும் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அருள்சாமி (தி.மு.க.):- சீசன் தொடங்கியுள்ள நிலையில் துப்புரவு பணி யாளர்கள் அதிக அளவில் நியமிக்க வேண்டும்.
ஆணையாளர்:- கூடுதலாக 50 துப்புரவு பணியாளர்கள் நியமிக்க ப்பட்டுள்ளனர். இவர்கள் பணியில் ஈடுபடுவார்கள்.
மோகன் (தி.மு.க.):- நகரில் உள்ள சாலைகளை சீரமைக்க ஒதுக்கப்பட்ட நிதி போதுமானது அல்ல. எனவே கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்.
போஸ் (சுயேட்சை):- பாக்கியபுரம் பகுதியில் 1959 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட கழிப்பறையை காண வில்லை. இதில் உள்ள 6.15 சென்ட் இடத்தினை தனி நபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார்.
ஆணையாளர்:- நகராட்சி நகரமைப்பு அலுவலர்கள் உடனடி ஆய்வு செய்து 24 மணி நேரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
பரிமளா (தி.மு.க.):- தங்கள் பகுதியில் உள்ள சமுதாயக் கூடங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொறியாளர்:- நகரில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. உறுப்பினர்கள் தங்களது கோரிக்கைகளை தலைவரிடம் எழுத்து பூர்வமாக தெரிவித்தால் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு விவாதங்கள் நடைபெற்றன.
முடிவில் நகராட்சி பொறியாளர் முத்துக்குமார் நன்றி கூறினார்.
- தேவ துந்துமி முழங்க பெண்கள் மங்கள இசையுடன் தேவராட்டம், கும்மியாட்டம், போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
- கோலாகலமாக நடந்த இந்நிகழ்ச்சியில் சுமார் 2000 குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
செம்பட்டி:
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே ஜே.புதுக்கோட்டையில் பூர்வீக மாக கொண்ட பொம்மி நாயக்கர், காளநாயக்கர், அம்பையநாயக்கர்களுக்கு பாத்தியப்பட்ட மாலை தாண்டும் பெருவிழா நடைபெற்றது. கடந்த 250 ஆண்டுகளாக 5 ஆண்டு களுக்கு ஒரு முறை இவ்விழா நடைபெறும். பொம்மைய சாமி மாலை தாத்தையா மலைக்கோவிலில் கடந்த 9-ந்தேதி மாலை பொங்கல் அழைப்பு,பிறந்தவீட்டு பிள்ளைகள் கொழுக்கட்டை, பழம் சிறப்பு அழைப்பு போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இரவு ராஜகம்பளத்தார் குல வழக்கப்படி தேவ துந்துமி முழங்க ெபண்கள் மங்கள இசையுடன் தேவராட்டம், கும்மியாட்டம், போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மாடுகளுக்கு பால்பூஜை செய்து மலைக்கோவில் வந்தடைந்தவுடன் மந்தையார்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. வில்வக்கூடை அழைத்தல், பொதிகல் எடுத்தல், சலகைஎருதுமாடுகள் மாலை தாண்டுதல் விழா போன்றவை சிறப்பாக நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட பக்தர்கள் சட்டை அணியாமல் தலையில் தலைப்பாகை கட்டி மாடுகளை ஊர்வலமாக அழைத்துச்சென்றனர். மாடுகளுக்கு பரிகாரங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். பின்னர் மேளதாளம் முழங்க மாடுகளை ஊர்வலமாக சாமியாடியபடி அழைத்துச்சென்றனர். கோலாகலமாக நடந்த இந்நிகழ்ச்சியில் சுமார் 2000 குடும்பத்தினர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் சிறப்பாக செய்திருந்தனர்.
- தெளிவான விளக்கம் அளிக்கப்படாத நிலையில் இன்று பகல் 12 மணியளவில் வானில் இருந்து மர்ம பொருள் விழுந்தது.
- சுமார் 1 கிலோ எடை கொண்ட அந்த பொருள் வெடிகுண்டாக இருக்குமோ என பொதுமக்கள் அச்சம்.
வடமதுரை:
வடமதுரை, அய்யலூர் பகுதியில் அவ்வப்போது திடீரென வெடிச்சத்தம் கேட்டு வருகிறது. இது குறித்து தெளிவான விளக்கம் அளிக்கப்படாத நிலையில் இன்று பகல் 12 மணியளவில் வானில் இருந்து மர்ம பொருள் விழுந்தது. இந்த சத்தம் கேட்டு அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
சுமார் 1 கிலோ எடை கொண்ட அந்த பொருள் வெடிகு ண்டாக இருக்குமோ என பொதுமக்கள் சந்தேகித்து புகைப்படம் எடுத்து வலை தளங்களில் பதிவிட்டு ள்ளனர். அது வைரலாகி வருகிறது. எனவே அதிகாரிகள் இந்த மர்ம பொருள் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- காந்திகிராம பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் குர்மித்சிங்கிற்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.
- பதவி ஏற்றவுடன் பல்கலைக்கழக பதிவாளராக இருந்த சிவக்குமாருக்கு மீண்டும் பணி நியமன ஆணை வழங்கி அவரது பதவியை 6 மாதம் நீட்டிப்பு செய்தார்.
சின்னாளபட்டி:
காந்திகிராம கிராமிய பல்கலைக்கழக பதிவாளராக இருந்தவர் சிவக்குமார். இவரது பதவிக்காலம் கடந்த 9.12.2022ந் தேதியுடன் முடிவடைந்தது. இந்நிலையில் மத்திய தணிக்கைக்குழு பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொண்டது. அப்போது பிசியோதெரப்பீஸ்ட்டு படித்த தகுதியில்லாத நபரை பல்கலைக்கழகத்தின் பதிவாளராக எவ்வாறு நியமனம் செய்தீர்கள் என கேட்டு அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
இதனிடையே பொறுப்பு பதிவாளராக ரங்கநாதன் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் காந்திகிராம பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் குர்மித்சிங்கிற்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.
அவர் பதவி ஏற்றவுடன் பல்கலைக்கழக பதிவாளராக இருந்த சிவக்குமாருக்கு மீண்டும் பணி நியமன ஆணை வழங்கி அவரது பதவியை 6 மாதம் நீட்டிப்பு செய்தார். அப்போதும் பல்கலைக்கழக பேராசிரியர்களிடையே மிகுந்த எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில் பதிவாளர் சிவக்குமாரின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்தது. ஆனால் மீண்டும் அவருக்கு 3 மாதம் பணி நீட்டிப்பு வழங்கி துணைவேந்தர் உத்தரவிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கத்தலைவர் ராஜாபிரான்மலை தலைமையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பல்கலைகழகத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பதிவாளர் பணிநியமனத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், இதற்கு உத்தரவு வழங்கிய துணைவேந்தருக்கு எதிராக அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
- ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மணிகண்டன் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
- உயர்ந்த பொறுப்பில் உள்ள அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நகர்வடக்கு போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
திண்டுக்கல்:
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதைகண்டித்து நாடு முழுவதும் அக்க ட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்ட ங்களில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் அருகே காங்கிரஸ் எஸ்.சி.எஸ்.டி பிரிவு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பேசிய திண்டுக்கல் மாநகர் மாவட்ட தலைவர் துரைமணிகண்டன் ராகுல்காந்தி பிரதமராகும் சமயத்தில் அவருக்கு 2 ஆண்டுகள் தண்டனை என தீர்ப்பு வழங்கிய சூரத் நீதிமன்ற நீதிபதி நாக்கை அறுப்போம் என பேசினார்.
ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் வகையில் பேசிய மணிகண்டன் மீது நடவடிக்கை எடுக்ககோரி பா.ஜ.க சார்பில் நகர் வடக்கு போலீஸ் நிலை யத்தில் புகார் அளிக்க ப்பட்டது. இந்த ஆர்ப்பா ட்டத்தில் கலந்து கொண்ட மணிகண்டன் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி யும் தங்கள் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
இதனையடுத்து துரை மணிகண்டன் மீது ஒற்றுமை, ஒருமைபாட்டை சீர்குலை க்கும் வகையில் பேசியது, உயர்ந்த பொறுப்பில் உள்ள அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நகர்வடக்கு போலீசார் வழக்குபதிவு செய்தனர். மேலும் இவரது பேச்சை கண்டித்து காங்கி ரஸ் கட்சி மாநில தலைவர் கே.எஸ்.அழகிரியும் அறிக்கை வெளியிட்டார்.
இந்நிலையில் நகர்வடக்கு போலீசார் கட்சி அலுவலகத்தில் இருந்த துரைமணிகண்டனை கைது செய்தனர். பின்னர் அவரி டம் விசாரணை நடத்தி கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர்.
இந்நிலையில் கட்சி அலுவலகத்துக்கு போலீசார் வந்து கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் கோஷம் எழுப்பி போரா ட்டம் நடத்தினர். இதனால் பஸ் நிலையத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
- முகாமில் 359 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது.
- 96 போ் கண்புரை அறுவை சிகிச்சைக்காக மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
நத்தம்:
நத்தம் தாலுகா செந்துறை அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், செந்துறை சக்தி பவுண்டேசன் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் பரிசோதனை முகாமை நடத்தியது.
இந்த முகாமில் ஊராட்சி மன்ற தலைவர் சவரிமுத்து தலைமை தாங்கினார். சக்தி பவுண்டேஷன் நிர்வாக இயக்குனர்கள் மற்றும் நிர்வாகிகள் மணி, ஜெயராம்,அய்யணன், தனம் ஆகியோர் முன்னிலை வைத்தனர். முருகன் வரவேற்று பேசினார்.
இந்த முகாமில் 359 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு 96 போ் கண்புரை அறுவை சிகிச்சைக்காக மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
- தங்கும் விடுதியில் தங்கி சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.
- போலீசார் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை, அய்யலூர் பகுதிகளில் சூதாட்டம் நடைபெறுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் வேட சந்தூர் டி.எஸ்.பி. துர்கா தேவி தலைமையிலான போலீசார் மோர்பட்டி பிரிவு, வடமதுரை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது நூதன முறையில் டோக்கன் வைத்து சூதாட்டத்தில் ஒரு கும்பல் ஈடுபட்டது தெரிய வந்தது. அவர்களை மடக்கி பிடித்தனர். போலீசார் விசாரணையில் சூதாட்ட த்தில் ஈடுபட்டது திருப்பூர் சுப்பிரமணி, சிவகங்கை கணேசன், கரூர் யுவராஜ், பழனிச்சாமி, கோவை பழனிவேல், சக்திவேல், ஈரோடு ரமேஷ் ஆகியோர் என்பதும் வடமதுரை பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் தங்கி சூதாட்டத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. மேலும் அவர்களிடம் இருந்து ரூ.50 ஆயிரம் பெற்றுக்கொண்டு அரவக்குறிச்சியை சேர்ந்த கார்த்தி என்பர் டோக்கன் வழங்கி சென்றுள்ளார்.
எனவே இது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இப்பகுதியில் சூதாட்ட கிளப்புகள் சிறிய கட்டிடங்களில் கூட இயங்கி வருகிறது. இதனால் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே போலீசார் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் சூதாட்ட கும்பல் குறித்து கண்காணித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.
- வீட்டில் பொருட்கள் சிதறி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த நகை மாயமானது தெரிய வந்தது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வரு கின்றனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் அருகே கூக்கால் கிராமத்தை சேர்ந்த வர் பார்த்திபன் (வயது35). விவசாயி. இவர் பழனி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றார். இவரது மனைவி அருகில் உள்ள கோவிலுக்கு சென்றார்.
அப்போது இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீடு புகுந்து பீரோவில் இருந்த 16 பவுன் தங்க நகையை திருடிக் கொண்டு தப்பி ஓடினர். வீடு திரும்பிய அவரது மனைவி பொரு ட்கள் சிதறி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த நகை மாயமானது தெரிய வந்தது.
இது குறித்து கொடை க்கானல் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பால்ஜெயசீலன் தலைமை யிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வரு கின்றனர்.
- கூடுதலாக போக்குவரத்து காவலர்கள் நியமிக்கப்படாததன் காரணமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருவதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டி வருகின்றனர் .
- சீசன் ஆரம்பிக்க உள்ள நிலையிலும் கூடுதலாக காவலர்களை நியமிக்க வேண்டும்.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசி எனப்படும் கொடைக்கானலில் புனித வெள்ளியை தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை தினம் என்பதால் பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். மேலும் கோடைவெயிலின் தாக்கம் அதிகரிப்பின் காரணமாகவும் இங்கு சுற்றுலாபயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக கொடைக்கானல் மலைச்சாலை முழுவதிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பிரதான சாலைகளான வத்தலக்குண்டு- கொடைக்கானல் சாலை , வெள்ளி நீர்வீழ்ச்சி பிரதான சாலை , ஏரிச்சாலை , அப்சர்வேட்டரி சாலை , செண்பகனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 5 கி.மீ. வரையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதன் காரணமாக வாகனங்கள் அணிவகுத்து எறும்பு போல் ஊர்ந்து சென்றன . இதனால் சுற்றுலா பயணிகள் சுற்றுலா இடங்களுக்கு செல்ல முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகினர் . மேலும் சுற்றுலா பயணிகள் சில இடங்களில் நடந்து செல்லும் நிலை உள்ளது. கூடுதலாக போக்குவரத்து காவலர்கள் நியமிக்கப்படாததன் காரணமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருவதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டி வருகின்றனர் .
பிரதான நெடு ஞ்சாலையில் சிறுசிறு கடைகளின் ஆக்கிரமிப்பு, கனரக வாகன ஆக்கிரமிப்பு போக்கு வரத்து இடையூறுக்கு காரணமாக உள்ளது. எனவே தொடர் விடுமுறை என்பதாலும், சீசன் ஆரம்பிக்க உள்ள நிலையிலும் கூடுதலாக காவலர்களை நியமிக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் கோரிக்கை யாகவும் உள்ளது.
- புதிய நெருப்பு உண்டாக்கப்பட்டு திருப்பலியில் கலந்து கொண்ட அனைவரும் அந்த நெருப்பினை கொண்டு மெழுகுவர்த்தியை ஏற்றி பாஸ்கா திருவிழிப்பு ஜெயவழிபாடு நடத்தினர்.
- தேவாலயத்தில் ஆலயமணி ஒலிக்க கூடியிருந்த மக்கள் கரவொலி எழுப்பியும், வானவேடிக்கைகள் வெடித்தும் உற்சாகமாக கொண்டாடினர்.
திண்டுக்கல்:
கிறிஸ்தவர்களின் 40 நாட்கள் தவக்காலத்தை தொடர்ந்து ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளை புனித வெள்ளியாகவும், அவர் உயிர்த்தெழுந்த நாளை ஈஸ்டர் பண்டிகையாகவும், கொண்டாடி வருகின்றனர். அதன்படி இன்று திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் 350 ஆண்டுகள் பழமைவாய்ந்த புனித வியாகுல அன்னை பேராலயத்தில் நள்ளிரவில் ஈஸ்டர் தின வழிபாடு நடைபெற்றது.
இரவு 11 மணிக்கு தொடங்கிய திருப்பலியில் புதிய நெருப்பு உண்டாக்கப்பட்டு திருப்பலியில் கலந்து கொண்ட அனைவரும் அந்த நெருப்பினை கொண்டு மெழுகுவர்த்தியை ஏற்றி பாஸ்கா திருவிழிப்பு ஜெயவழிபாடு நடத்தினர். அதனைதொடர்ந்து நள்ளிரவு 12 மணியளவில் ஆலயத்தின் நடுவே அமைக்கப்பட்டிருந்த பூமியின் நடுவே மரித்த ஏசு கிறிஸ்து உயிர்த்தெழும் காட்சி தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. அப்போது தேவாலயத்தில் ஆலயமணி ஒலிக்க கூடியிருந்த மக்கள் கரவொலி எழுப்பியும், வானவேடிக்கைகள் வெடித்தும் உற்சாகமாக கொண்டாடினர்.
மேலும் ஒருவருக்கொருவர் ஈஸ்டர் தின வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். ஈஸ்டர் தின சிறப்பு திருப்பலியை மேட்டுப்பட்டி பங்குத்தந்தை செல்வராஜ் தலைமையில் உதவிபங்குத்தந்தை ஆரோக்கியம், அருட்தந்தையர்கள் அருமைசாமி, லாரன்ஸ், பீட்டர்ராஜ், ஆரோக்கியம், கப்புசின்சபை ஆகியோர் நிறைவேற்றினர். மேலும் அருட்சகோதரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோல் திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் நள்ளிரவில் ஈஸ்டர் தின சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
- வேசம் அணிந்து வாலிபர்கள் சிலர் போர்வாள், கத்தி மற்றும் சமுதாய கொடியுடன் ஊர்வலமாக நடனமாடி வந்ததை சாலையில் நடந்து சென்ற கிராமமக்கள் அச்சமடைந்தனர்.
- கோவில் திருவிழாக்களை கட்டுப்பாடுடன் நடத்த போலீசார் அறிவுரை வழங்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
வத்தலக்குண்டு:
வத்தலக்குண்டு அருகே பட்டிவீரன்பட்டி செங்கட்டாம்பட்டியில் முத்தாலம்மன், பகவதியம்மன் கோவில் திருவிழா 10 ஆண்டுகளுக்கு பின்பு நடத்தப்பட்டது. இந்தநிகழ்ச்சியில் வெளியூரில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதில் முக்கிய நிகழ்ச்சியான வேசம் அணிந்து ஊர்வலம் வந்தது.
அப்போது கிழக்கு தெருவைசேர்ந்த வாலிபர்கள் சிலர் போர்வாள், கத்தி மற்றும் சமுதாய கொடியுடன் ஊர்வலமாக நடனமாடி வந்தனர். இதைபார்த்ததும் சாலையில் நடந்து சென்ற கிராமமக்கள் அச்சமடைந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைதொடர்ந்து பட்டிவீரன்பட்டி இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் முத்தையா மற்றும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்தினர். திருவிழாக்களின்போது உற்சாக மிகுதியால் சிலர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே கோவில் திருவிழாக்களை கட்டுப்பாடுடன் நடத்த போலீசார் அறிவுரை வழங்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
- சாமிகண்ணு தெரு ஆட்டோ டிரைவர்கள் 2 பேர் குடிபோதையில் தாக்கினர்.
- ஆத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திண்டுக்கல் சிறையில் அடைத்தனர்.
செம்பட்டி:
செம்பட்டி அருகே அழகர்நாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் பால்ராஜ் (57). இதே ஊரைச் சேர்ந்த சாமிகண்ணு தெரு ஆட்டோ டிரைவர் குமரேசன் (28), மகுடீஸ்வரன் (19) ஆகிய 2 பேரும் குடிபோதையில் பால்ராஜை தாக்கினர்.
இதுகுறித்து செம்படி போலீஸ் நிலையத்தில் பால்ராஜ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து குமரேசன் மற்றும் மகுடீஸ்வரனை கைது செய்தனர். அதேபோல் அழகர்நாயக்கன்பட்டியைச் சேர்ந்த ராமமூர்த்தி மனைவி போதும் பொண்ணு (48) என்பவரை மணிகண்டன் (33), பெரியசாமி (24) ஆகிய 2 பேரும் குடிபோதையில் தலையில் தாக்கி ரத்தக்காயம் ஏற்படுத்தினர்.
இதுகுறித்து போதும்பொண்ணு செம்பட்டி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டன் மற்றும் பெரியசாமியை கைது செய்தனர். குடிபோதையில் 2 வேறு சம்பவங்களில் ஈடுபட்ட 4 பேரையும் ஆத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திண்டுக்கல் சிறையில் அடைத்தனர்.






