என் மலர்
நீங்கள் தேடியது "காங்கிரஸ் தலைவர் கைது"
- ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மணிகண்டன் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
- உயர்ந்த பொறுப்பில் உள்ள அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நகர்வடக்கு போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
திண்டுக்கல்:
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதைகண்டித்து நாடு முழுவதும் அக்க ட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்ட ங்களில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் அருகே காங்கிரஸ் எஸ்.சி.எஸ்.டி பிரிவு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பேசிய திண்டுக்கல் மாநகர் மாவட்ட தலைவர் துரைமணிகண்டன் ராகுல்காந்தி பிரதமராகும் சமயத்தில் அவருக்கு 2 ஆண்டுகள் தண்டனை என தீர்ப்பு வழங்கிய சூரத் நீதிமன்ற நீதிபதி நாக்கை அறுப்போம் என பேசினார்.
ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் வகையில் பேசிய மணிகண்டன் மீது நடவடிக்கை எடுக்ககோரி பா.ஜ.க சார்பில் நகர் வடக்கு போலீஸ் நிலை யத்தில் புகார் அளிக்க ப்பட்டது. இந்த ஆர்ப்பா ட்டத்தில் கலந்து கொண்ட மணிகண்டன் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி யும் தங்கள் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
இதனையடுத்து துரை மணிகண்டன் மீது ஒற்றுமை, ஒருமைபாட்டை சீர்குலை க்கும் வகையில் பேசியது, உயர்ந்த பொறுப்பில் உள்ள அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நகர்வடக்கு போலீசார் வழக்குபதிவு செய்தனர். மேலும் இவரது பேச்சை கண்டித்து காங்கி ரஸ் கட்சி மாநில தலைவர் கே.எஸ்.அழகிரியும் அறிக்கை வெளியிட்டார்.
இந்நிலையில் நகர்வடக்கு போலீசார் கட்சி அலுவலகத்தில் இருந்த துரைமணிகண்டனை கைது செய்தனர். பின்னர் அவரி டம் விசாரணை நடத்தி கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர்.
இந்நிலையில் கட்சி அலுவலகத்துக்கு போலீசார் வந்து கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் கோஷம் எழுப்பி போரா ட்டம் நடத்தினர். இதனால் பஸ் நிலையத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
- பெண் வக்கீல் தங்கியிருந்த அறையில் ‘வைபை’ வசதி செயல் இழந்து விட்டது.
- கொடைக்கானல் போலீஸ் நிலையத்தில் பெண் வக்கீல் புகார் அளித்தார்.
கொடைக்கானல்:
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நாயுடுபுரத்தை சேர்ந்தவர் அப்துல்கனி ராஜா (வயது 50). இவர் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவராக உள்ளார். மேலும் கொடைக்கானல் ஓட்டல் மற்றும் ரிசார்ட் உரிமையாளர்கள் சங்க தலைவராகவும் பதவி வகிக்கிறார். இவருக்கு சொந்தமான 2 தங்கும் விடுதிகள் நாயுடுபுரம் பகுதியில் உள்ளன.
இந்தநிலையில் சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த பெண் வக்கீல் ஒருவர் தனது 2 குழந்தைகள் மற்றும் தோழி, அவரது குழந்தைகளுடன் கொடைக்கானலுக்கு கடந்த 7-ந்தேதி சுற்றுலா சென்றிருந்தார்.
கொடைக்கானல் நாயுடுபுரத்தில் உள்ள அப்துல்கனி ராஜாவின் தங்கும் விடுதியில் அவர்கள் தங்கினர். பெண் வக்கீல் தனது குழந்தைகளுடன் ஒரு அறையிலும், அவரது தோழி தனது குழந்தைகளுடன் மற்றொரு அறையிலும் தங்கி இருந்தனர்.
பெண் வக்கீலுக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர், சுற்றுலா இடங்களை பார்க்க வெளியே செல்லவில்லை. அறையிலேயே தங்கி இருந்தார். அவரது குழந்தைகள், தோழி மற்றும் அவரது குடும்பத்தினர் சுற்றுலா இடங்களை பார்க்க சென்று விட்டனர்.
இதற்கிடையே பெண் வக்கீல் தங்கியிருந்த அறையில் 'வைபை' வசதி செயல் இழந்து விட்டது. இதுதொடர்பாக அந்த பெண் வக்கீல், அப்துல்கனி ராஜாவிடம் போன் மூலம் தகவல் தெரிவித்தார். இதனையடுத்து சிறிதுநேரத்தில் பெண் வக்கீல் தங்கியிருந்த அறைக்கு அப்துல்கனிராஜா வந்தார்.
அப்போது, உடல்நிலை சரியில்லாமல் இருந்த பெண் வக்கீலின் உடலை பரிசோதிப்பது போல அவரது ஆடைகளை விலக்கி அப்துல்கனி ராஜா பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த பெண் வக்கீல் அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து தனது கணவர் மற்றும் குழந்தைகள், தோழி ஆகியோருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக அந்த அறையை காலி செய்து விட்டு வேறு தங்கும் விடுதிக்கு சென்றனர். பின்னர் இதுகுறித்து கொடைக்கானல் போலீஸ் நிலையத்தில் பெண் வக்கீல் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்துல்கனி ராஜாவை கைது செய்தனர்.
போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு பிறகு, கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக அப்துல்கனி ராஜாவை போலீசார் அழைத்து சென்றனர். அப்போது போலீஸ் நிலைய வாசலிலேயே அவர் திடீரென மயங்கி விழுந்தார். போலீசார் அப்துல்கனி ராஜாவை மீட்டு சிகிச்சைக்காக கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சைக்கு பின் அவர், கொடைக்கானல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி கார்த்திக் உத்தரவிட்டார். அதன்பேரில், திண்டுக்கல் மாவட்ட சிறையில் அப்துல்கனிராஜா அடைக்கப்பட்டார்.
இதற்கிடையே பெண் வக்கீல் தன்மீது தவறான புகார் அளித்திருப்பதாக அப்துல்கனி ராஜா கொடைக்கானல் போலீசில் புகார் அளித்தார். இதேபோல் அவரது மனைவி மற்றும் பல்வேறு சங்கங்களை சேர்ந்த பிரமுகர்களும் புகார் கொடுத்துள்ளனர். இந்த புகார்கள் தொடர்பாக, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






