என் மலர்
திண்டுக்கல்
- பணிகள் முடிந்து 4 மாதங்களாகியும் பள்ளி கட்டிடம் திறக்கப்பட வில்லை.
- பள்ளி மாணவர்கள் நாடக மேடையில் அமர்ந்து படிப்பது மிகவும் வேதனை அளிக்கிறது.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே புதுக்களராம்பட்டியில் ரூ.16 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் புதிய பள்ளிக் கட்டிடம் கட்டப்பட்டது.
பணிகள் முடிந்து 4 மாதங்களாகியும் பள்ளி கட்டிடம் திறக்கப்பட வில்லை. இதனால் பள்ளி மாணவ-மாணவிகள் கடும் வெயிலில் நாடக மேடையில் அமர்ந்து கல்வி கற்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது பெற்றோர்களுக்கு பெரும் வேதனை அளித்து வருகிறது.
இது குறித்து ஊர் பொதுமக்கள் கூறுகையில், கடும் கோடை வெயிலில் பெரியவர்களே வெளியில் வர அச்சப்படும் நிலையில் பள்ளி மாணவர்கள் நாடக மேடையில் அமர்ந்து படிப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. எனவே மாவட்ட கலெக்டர் உடனடியாக தலையிட்டு பள்ளியை திறக்க வேண்டும் என்றனர். இதேபோல் தங்கம்மாபட்டி அங்க ன்வாடி மையம் கட்டி முடிக்கப்பட்டு 3 மாத ங்களாகியும் திறக்கப்படாமல் உள்ளது. எனவே வடமதுரை பகுதிகளில் புதிய கட்டிடங்களை விரைந்து திறந்து வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- விற்பனையாளரிடம் அத்தியாவசிய பொருட்கள் பெறுவதற்கு பொதுமக்களை அலைக்கழிக்ககூடாது, கோதுமை, மண்எண்ணை சுழற்சி முறையில் வழங்கவேண்டும்.
- தினமும் காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை ரேசன் கடை திறந்திருக்க வேண்டும்.
பெரும்பாறை:
கொடைக்கானல் கீழ்மலைப்பகுதி தாண்டிக்குடியில் உள்ள ரேசன்கடையில் கடந்த மாதம் அரிசி தரமற்ற முறையில் வந்துள்ளதாகவும், இதையடுத்து அப்பகுதி மக்களுக்கு பில் மட்டும் போட்டுவிட்டு இந்த மாதம் அரிசி வழங்குவதாக விற்பனையாளர் கூறியுள்ளார். ஆனால் இந்த மாதமும் அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்களை கார்டுதாரர்களுக்கு வழங்கப்படவில்லை என புகார் எழுந்தது.
இதையடுத்து ரேசன் பொருட்களை பொதுமக்களுக்கு முறையாக வழங்கவேண்டும் என்று தாண்டிக்குடி சமூகஆர்வலர் கணேஷ்பாபு மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி தாண்டிக்குடியில் உள்ள ரேசன் கடையில் கொடைக்கானல் வட்டவழங்கல் அலுவலர் சரவணன், பொதுவினியோக திட்ட அலுவலர் ரமேஷ்குமார் ஆகியோர் திடீர் ஆய்வுமேற்கொண்டனர்.
அப்போது பொதுமக்களிடம் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகிறதா என்று கேட்டறிந்தனர். மேலும் விற்பனையாளரிடம் அத்தியாவசிய பொருட்கள் பெறுவதற்கு பொதுமக்களை அலைக்கழிக்ககூடாது, கோதுமை, மண்எண்ணை சுழற்சி முறையில் வழங்கவேண்டும்.
தினமும் காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை ரேசன் கடை திறந்திருக்க வேண்டும். மலைகிராம மக்களுக்கு முறையாக ரேசன் பொருட்கள் வழங்கவேண்டும் என்று அறிவுறத்தினர்.
- அதிகாரிகள் கடையில் ஆய்வு செய்தபோது அங்கு சட்டவிரோதமாக நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளித்தது உறுதியானது.
- மருந்து கடைக்கு பூட்டி சீல் வைக்கப்பட்டது.
திண்டுக்கல்:
பழனி தாராபுரம் சாலையில் உள்ள மருந்து கடையில் ஒருவர் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பதாகவும், அதனால் மக்களுக்கு பல்வேறு விதமான உடல் உபாதைகள் ஏற்படுவதாகவும் சுகாதாரத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து திண்டுக்கல் மாவட்ட சுகாதாரத்துறை இணைஇயக்குனர் பூமிநாதன் தலைமையில் பழனி அரசு ஆஸ்பத்திரி டாக்டர் சதீஸ்குமார், மயக்கவியல் நிபுணர் டால்ஸ்டாய் உள்ளிட்டோர் அந்த மருந்து கடையை ஆய்வு செய்வதற்காக சென்றனர்.
அதிகாரிகள் வருவதை அறிந்த கடையின் உரிமையாளரும், சிகிச்சை அளித்தவருமான முகமதுகவுசிக் தப்பிஓடிவிட்டார். அதிகாரிகள் கடையில் ஆய்வு செய்தபோது அங்கு சட்டவிரோதமாக நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளித்தது உறுதியானது.
இதையடுத்து கடையில் இருந்த மாத்திரை, மருந்துகள், ஊசிகள் ஆகியவற்றை அதிகாரிகள் கைப்பற்றி பழனி நகர போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து புகார் அளித்தனர். மேலும் அந்த மருந்து கடைக்கு பூட்டி சீல் வைக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து முகமதுகவுசிக்கை தேடி வருகின்றனர்.
- பாறை உச்சியில் 300 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட சிவன் கோயில் உள்ளது.
- பாறையின் அருகே உள்ள ஓடையில் கற்கால கல் ஆயுதங்கள் கிடைத்தன.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே வரலாற்று ஆய்வுக்குழு ஆய்வாளர் விசுவநாத தாஸ், சந்திரசேகர், மாணவர் முரளிதர், ஆசிரியர் கண்ணன், லெமூரியன்குரு ஆகியோர் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் அவர்கள் தெரிவித்ததாவது,
வேடசந்தூர் புளியமரத்துக்கோட்டை சாலையில் பூசாரிபட்டி மல்லீஸ்வரர் கோவில் அமைந்த பாறை ஆய்வு செய்யப்பட்டது. இங்கு நிறைய கற்கால பெருங்கற்கால சின்னங்கள் இருக்கின்றன பாறையின் வடக்கே நுழைந்தான் பாறை என்னும் சிறு பாறையின் கிழக்கே கற்காலத்தை சேர்ந்த ஒரு ஈமகல்திட்டை உள்ளது இக்கல்திட்டை 4000 ஆண்டுகளுக்கு முற்பட்டது.
இக்கல்திட்டை 3 புறமும் சாய்ந்து ஒருபுறம் நிமிர்ந்த நிலையில் இரு பலகைக் கற்கள் இருக்கின்றன. அதில் ஒரு கல் 4 அடி நீளம் 4 அடி உயரமும் மற்ற கல் 5 அடி நீளம் 4 அடி உயரம் கொண்ட ஒரு அடி கனம் கொண்ட 2 பலகை கற்கள் உள்ளது. மேலுள்ள பலகைக் கற்கள் கீழே விழுந்து கிடக்கின்றன. 5 அடி நீள பலகைகல்ளில் குறுக்கும் நெடுக்குமாக 7x7 கட்டங்கள் சதுரமாக செதுக்கப்பட்டுள்ளது. இந்தக் குறியீடு 7 பிறவிகளை குறிக்கும்.
இந்த ஈமகல் திட்டைக்ககு அருகே கல்லால் பாறையைக் குடைந்த 2x2 அடி சதுரத்தில் அரை அடிக்கு குறைவான குழி உள்ளது. இந்த அமைப்பு பறவைகளுக்கு அல்லது கற்கால மனிதனின் வளர்ப்பு பிராணிகளுக்கு உணவிடும் குழியாகவும், அதனருகே காலத்தால் பிற்பட்ட கல்தொட்டி ஒன்று உள்ளது. இந்தப் பாறையின் அருகே செல்லும் ஓடையில் கொட்டைகளை உடைக்கும் குழி ஒன்று உள்ளது. ஓடையின் மேட்டுப் பகுதியில் 2 நெடுங்கல் உள்ளது.
இதுவும் கற்காலத்தில் இறந்த குழுவின் தலைவனின் நினைவாக ஊன்றப்படும் நெடுங்கல். இன்நெடுங்கல் நடும் நடைமுறை கற்காலத்திலிருந்து சங்க காலம் வரை தொடர்கிறது. பெரிய பாறையான மல்லீஸ்வரர் மலையில் கிழக்குச் சரிவில் ஒரு நெடுங்கல் உள்ளது. சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் கல்லின் ஒரு பகுதி செதுக்கப்பட்டு, அதில் சூரியன் சந்திரன் உருவம் பொறிக்கப்பட்டு அதன் கீழ் சிவலிங்கமும் நந்தி உருவமும் பொறிக்கப்பட்டுள்ளது. இன் நெடுங்கல்லில் உள்ள சிற்பம் 300ஆண்டுகளுக்கு முற்பட்டது. பாறையின் தெற்குப்பகுதியில் 4 1/2அடி உயரமும், 4 1/2 அடி அகலமும், 100 அடி நீளமும் கொண்ட கல்லடுக்கு நீண்ட தொடராக எந்த சேதமும் இன்றி உள்ளது.
இத்தொடர் முடிவில் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த பெருங்கல் வட்டம் அரைவட்டமாக இவ்வடுக்குகல் முடிவிலிருந்து மல்லீஸ்வரன் பாறை வரை உள்ளது. இப்பாறையின் மேல் பகுதியில் 5x5, சதுர கட்டங்களில் ஒன்று 4x4 சதுரத்தில் 2ம் பெரிய சதுரத்தில் நடுவில் புள்ளி உடனும் பெருக்கல் வடிவ குறியீடு உள்ளது. கல்லால் தேய்க்கப்பட்ட குறியீடுகள் உள்ளது. இக்குறியீடுகள் தற்போதைய தாய விளையாட்டின் முன்னோடியாக இருந்தன. இந்த ஈம கல்திட்டை, நெடுங்கல் கல்லடுக்கு, பெருங்கல் வட்டம், கட்ட விளையாட்டு என்பவை கற்காலத்திலிருந்து பெருங்கற்காலம், சங்ககாலம் வரை தொல்லியல் சின்னமாக இப்பகுதி மக்கள் வசித்த இடமாக உள்ளது. பாறை உச்சியில் 300 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட சிவன் கோயில் உள்ளது.
இந்தப் பாறையின் அருகே உள்ள ஓடையில் கற்கால கல் ஆயுதங்கள் கிடைத்தன. மேலும் இரும்பு உருக்கின பாறை கற்கள் உள்ளன. நுழைந்தான் பாறையின் முன் ஒரு கிணறு உள்ளது இக்கிணறு அருகே நீதிபரிபாலன கல்வெட்டு ஒன்று உள்ளது. இக்கல்வெட்டில் கிணற்றிற்கு நல்லலூத்து என்று வெட்டப்பட்டுள்ளது. இந்த நீதி பரிபாலன கல்வெட்டு 200 ஆண்டுகளுக்கு முற்பட்டது. சங்க்காலத்திற்கு முன் இறந்தவர் நினைவாக வைக்கப்படும் கல் குதிர்கள் மலையை சுற்றி குவியலாக உள்ளது என்றனர்.
- வனத்துறை அனுமதி பெற்று குணா குகை, பைன்பாரஸ்ட் உள்ளிட்ட இடங்களில் கேரள திரைத்துறையினர் படப்பிடிப்பு நடத்தினர்.
- ஊட்டியை போல் கோடை காலங்களில் கொடைக்கானலிலும் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி வழங்க கூடாது என கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் வனத்துறைக்கு சொந்தமான மோயர்பாய்ண்ட், பைன் பாரஸ்ட், குணா குகை, தூண்பாறை உள்ளிட்ட ஏராளமான இடங்கள் உள்ளன. பேய்களின் சமையல்அறை என அழைக்கப்பட்ட இடத்தில் நடிகர் கமல்ஹாசனின் குணா திரைப்படம் எடுக்கப்பட்டது. அதன்பின்னர் இந்த இடம் பிரபலமானது. இதனால் குணா குகை என அழைக்கப்பட்டது. இங்கு 15க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் தவறி விழுந்து இறந்துள்ளனர்.
இதனால் குணா குகையை சுற்றிலும் வேலி அமைத்து பாதுகாத்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் இங்கு வனத்துறை அனுமதி பெற்று குணா குகை, பைன்பாரஸ்ட் உள்ளிட்ட இடங்களில் கேரள திரைத்துறையினர் படப்பிடிப்பு நடத்தினர். காலக்கெடு முடிந்த நிலையிலும் அங்கு தொடர்ந்து சினிமா படப்பிடிப்பு எடுக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து மதுரையை சேர்ந்த வக்கீல் ரமேஷ் வன பாதுகாவலருக்கு மனு அனுப்பி உள்ளார். அதில் அனுமதியின்றி சினிமா படப்பிடிப்பு நடத்தியது, மரங்களை வெட்டியது, விதிகளை மீறி அனுமதிக்கப்படாத இடங்களில் சூட்டிங் நடத்தியது, வனப்பகுதியில் கியாஸ் சிலிண்டர் வைத்து சமைத்தது உள்ளிட்டவை குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் முதன்மை உதவி வன பாதுகாவலர் தெபாஸீஸ்ஜனா மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்க தொடங்கி உள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்து அனுமதியின்றி படப்பிடிப்பு நடைபெற்றது குறித்து விசாரித்தனர். ஊட்டியை போல் கோடை காலங்களில் கொடைக்கானலிலும் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி வழங்க கூடாது என வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சூரியகிரகணம் குறித்து அனைத்து தரப்பினரும் அறிந்து கொள்ளும் வகையில் வானியற்பியல் விஞ்ஞானிகள் மூலம் விளக்கம் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- அடுத்த முழு சூரிய கிரகணம் 2172-ம் ஆண்டுதான் வரும்.
கொடைக்கானல்:
150 ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இந்த அரிய நிகழ்வு ஆஸ்திரேலியாவில் நாளை நடக்கிறது. வழக்கமாக கங்கன சூரிய கிரகணம், வளைய சூரிய கிரகணம் ஆகியவை அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது.
பூரண கிரகணம் 150 ஆண்டுகளுக்கு ஒருமுறை வருகிறது. இந்த கிரகணம் குறித்து சுற்றுலா பயணிகள், பொதுமக்களுக்கு விளக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது குறித்து முதன்மை விஞ்ஞானி எபினேசர் கூறியதாவது:-
நாளை (20ந் தேதி) நடக்கும் பூரண சூரியகிரகணம் குறித்து அனைத்து தரப்பினரும் அறிந்து கொள்ளும் வகையில் வானியற்பியல் விஞ்ஞானிகள் மூலம் விளக்கம் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை 7.30 மணியில் இருந்து 9 மணி வரை சுற்றுலா பயணிகள், பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. அடுத்த முழு சூரிய கிரகணம் 2172-ம் ஆண்டுதான் வரும். எனவே பொதுமக்கள் இந்த அரிய நிகழ்வை கண்டு கழிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
- வாலிபரிடம் மர்ம நபர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆன்லைன் வர்த்தகம் தொடர்பாக பேசி முதலீடு செய்யுமாறு கூறி உள்ளனர்.
- ஆன்லைனில் இழந்த ரூ.1.20 லட்சம் பணத்தை சைபர் கிரைம் போலீசார் மீட்டனர்.
திண்டுக்கல்:
நிலக்கோட்டையை சேர்ந்தவர் முருகன் (வயது35). இவரிடம் கடந்த 2022ம் ஆண்டு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆன்லைன் வர்த்தகம் தொடர்பாக பேசி முதலீடு செய்யுமாறு கூறி உள்ளனர். அதனை நம்பி முருகன் ரூ.1.20 லட்சம் பணத்தை முதலீடு செய்துள்ளார்.
பின்னர் அவர்கள் முறைகேடாக தன்னிடம் இருந்து பணம் பெற்றதை அறிந்து கொண்ட முருகன் இது குறித்து திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். ஆன்லைன் வர்த்தகம் மூலம் மோசடி செய்த ரூ.1.20 லட்சத்தை மீட்டனர். இதை யடுத்து அந்த பணத்தை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் பாதிக்கப்பட்ட நபருக்கு வழங்கினார்.
- நிலக்கோட்டை தாலுகாவில் மக்கள் தொடர்பு முகாம் நாளை நடைபெற உள்ளது.
- இந்த வாய்ப்பை பயன்படுத்தி பொதுமக்கள் மனுக்கள் கொடுத்து பயன்பெற நிலக்கோட்டை தாசில்தார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நிலக்கோட்டை,ஏப்.18-
நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள பகுதிகளில் அனைத்து தரப்பு பொதுமக்களும் பட்டா மாறுதல், முதியோர் உதவித் தொகை,ரேஷன் கார்டு, வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடம் மனுக்கள் பெரும் மக்கள் தொடர்பு முகாம் திண்டுக்கல் எம்.பி வேலுச்சாமி தலைமையில் நடைபெற உள்ளது.
நிலக்கோட்டை ஒன்றியத்திற்கு 19 -ந்தேதி நிலக்கோட்டை ஹெச்-என்.பி.ஆர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள மங்கள் பகவான் மண்டபத்தில்நடைபெறஉள்ளது. வத்தலகுண்டு ஒன்றியத்திற்குவருகின்ற 20-ந்தேதி வத்தலகுண்டு பேரூராட்சி அருகே உள்ள சமுதாயக்கூடத்தில் நடக்க இருக்கிறது.இம்முகாமில்மாவட்ட அளவிலான அதிகாரிகள் கலந்து கொண்டு அனைத்து விதமான நலத்திட்ட உதவிகளுக்கும் மனுக்கள் பெற உள்ளனர்.
எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி பொதுமக்கள் மனுக்கள் கொடுத்து பயன்பெறநிலக்கோட்டை தாசில்தார் தனுஷ்கோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
- இறந்தவர் கொடைரோடு பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்தது.
- குடும்ப பிரச்சினை காரணமாக தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது
வேடசந்தூர்:
வேடசந்தூர் வாரச்சந்தையில் இன்று காலை ஒரு வாலிபர் தூக்குமாட்டியநிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து வேடசந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து
அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் இறந்தவர் கொடைரோடு பகுதியை சேர்ந்த விசுவாசம் மகன் சிறுமணிசெல்வம்(32) என தெரியவந்தது.
இவர் குடும்ப பிரச்சினை காரணமாக வேடசந்தூருக்கு வந்த நிலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது விசா ரணை யில் தெரிய வந்தது.
- 4 மாதங்களுக்கு முன்பு மாயமான மூதாட்டி காணவில்லை என எரியோடு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
- வடுகம்பாடி அருகே எலும்புகூடாக ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்டது. அது மாயமான மூதாட்டி என உறுதிசெய்யப்பட்டது. போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகில் உள்ள வடுகம்பாடியை சேர்ந்தவர் மாரியம்மாள்(75). இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 25-ந்தேதி முதல் காணவில்லை. இது குறித்து அவரது மகனான டாஸ்மாக் மேற்பார்வை யாளர் முருகன் எரியோடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் பல்வேறு இடங்களில் அவரை தேடிவந்தனர். மேலும் அவரது உறவி னர்களும் மாரியம்மாளை தேடி வந்தனர். இந்நிலையில் வடுகம்பாடி அருகே கல்குட்டையில் மீன்பிடிக்க சென்ற சிறுவர்கள் அங்கு எலும்புகூடாக ஒரு சடலம் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து எரியோடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் வேலாயுதம் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். இதில் இறந்து கிடந்தது மாரியம்மாள் என அவரது உறவினர்கள் உறுதி செய்தனர்.
அவர் எவ்வாறு இறந்தார் என தெரிய வில்லை. 4 மாதங்களுக்கு முன்பு மாயமான மாரியம்மாள் சடலமாக மீட்கப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- வீட்டில் இருந்த 10 வயது சிறுவனுக்கு சூடு வைத்து சித்ரவதை செய்துள்ளார்.
- எரியோடு போலீசார் மணிகண்டனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகில் உள்ள புங்கம்பாடியை சேர்ந்தவர் மணிகண்டன்(23). பெயிண்டர் வேலை பார்த்து வருகிறார். இவரது மாமா கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். அவரது மனைவி தனது 2 மகள்கள் மற்றும் ஒரு மகனை கூலி வேலைக்கு சென்று வளர்த்து வந்துள்ளார். தினமும் அவர் காலையில் வேலைக்கு சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்புவது வழக்கம். அந்த சமயங்களில் வீட்டிற்கு வந்த மணிகண்டன் குழந்தைகளை அடித்து வேலை வாங்கி தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.
மேலும் வீட்டில் இருந்த 10 வயது சிறுவனுக்கு சூடு வைத்து சித்ரவதை செய்துள்ளார். சிறுவன் அழுதபோது வாயில் துணியை வைத்து அழுத்தி இதுகுறித்து வெளியில் யாரிடமும் சொல்லகூடாது என மிரட்டி வந்துள்ளார். மணிகண்டனின் தொல்லை நாளுக்குநாள் அதிகரிக்கவே குழந்தைகளின் தாய் இதுகுறித்து வேடசந்தூர் டி.எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்தார். மேலும் சிறுவன் சூடுபட்டு கதறி அழுத வீடியோ சமூகவலைதளங்களிலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் எரியோடு போலீசார் மணிகண்டனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- மலைக்கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பியவரிடம் வழிமறித்த ஒரு வாலிபர் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை தருமாறு கேட்டுள்ளார்.
- புகாரின்பேரில் கத்தியை காட்டி பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பழனி:
கோவையைச் சேர்ந்தவர் ராஜா. இவர் தனது குடும்பத்துடன் பழனி கோவிலுக்கு சாமி கும்பிட வந்தார். மலைக்கோவிலில் சாமி தரிசனம் செய்து முடித்து விட்டு மின் இழுவை ரெயில் மூலம் அடிவாரம் வந்தார். அவரது குடும்பத்தினர் முன்னே சென்று விட ராஜா தனது கார் நிறுத்தியுள்ள இடத்தை நோக்கி வந்து கொண்டு இருந்தார். அப்போது அவரை வழிமறித்த ஒரு வாலிபர் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை தருமாறு கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ராஜா தன்னிடம் இருந்த ரூ.2000 பணத்தை அவரிடம் கொடுத்தார்.
இதன் பிறகு அடிவாரம் போலீஸ் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் பொருத்த ப்பட்டு இருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளின் அடிப்படையில் குற்றவா ளியை தேடினர். இதில் ராஜாவிடம் பணத்தை பறித்தது பழனி மதன புரத்தைச் சேர்ந்த தனுஷ் (25) என தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்ப டுத்தி சிறையில் அடைத்த னர்.
பழனி பகுதியில் கோவி லுக்கு வரும் பக்தர்களை குறி வைத்து இது போன்று அடிக்கடி வழிப்பறி சம்ப வங்கள் நடந்து வருகிறது. மேலும் தனியாக நடந்து செல்லும் பெண்களை குறி வைத்தும் நகை பறிப்பு நடந்து வருகிறது. இது போன்ற சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் மற்றும் வியா பாரிகள் வலியுறுத்தியுள்ள னர்.






