என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாயமான மூதாட்டி சடலமாக மீட்பு"

    • 4 மாதங்களுக்கு முன்பு மாயமான மூதாட்டி காணவில்லை என எரியோடு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
    • வடுகம்பாடி அருகே எலும்புகூடாக ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்டது. அது மாயமான மூதாட்டி என உறுதிசெய்யப்பட்டது. போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகில் உள்ள வடுகம்பாடியை சேர்ந்தவர் மாரியம்மாள்(75). இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 25-ந்தேதி முதல் காணவில்லை. இது குறித்து அவரது மகனான டாஸ்மாக் மேற்பார்வை யாளர் முருகன் எரியோடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    போலீசார் பல்வேறு இடங்களில் அவரை தேடிவந்தனர். மேலும் அவரது உறவி னர்களும் மாரியம்மாளை தேடி வந்தனர். இந்நிலையில் வடுகம்பாடி அருகே கல்குட்டையில் மீன்பிடிக்க சென்ற சிறுவர்கள் அங்கு எலும்புகூடாக ஒரு சடலம் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து எரியோடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் வேலாயுதம் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். இதில் இறந்து கிடந்தது மாரியம்மாள் என அவரது உறவினர்கள் உறுதி செய்தனர்.

    அவர் எவ்வாறு இறந்தார் என தெரிய வில்லை. 4 மாதங்களுக்கு முன்பு மாயமான மாரியம்மாள் சடலமாக மீட்கப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×