என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாண்டிக்குடி ரேசன் கடையில் அதிகாரிகள் திடீர் ஆய்வு
    X

    தாண்டிக்குடி ரேசன் கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள்.

    தாண்டிக்குடி ரேசன் கடையில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

    • விற்பனையாளரிடம் அத்தியாவசிய பொருட்கள் பெறுவதற்கு பொதுமக்களை அலைக்கழிக்ககூடாது, கோதுமை, மண்எண்ணை சுழற்சி முறையில் வழங்கவேண்டும்.
    • தினமும் காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை ரேசன் கடை திறந்திருக்க வேண்டும்.

    பெரும்பாறை:

    கொடைக்கானல் கீழ்மலைப்பகுதி தாண்டிக்குடியில் உள்ள ரேசன்கடையில் கடந்த மாதம் அரிசி தரமற்ற முறையில் வந்துள்ளதாகவும், இதையடுத்து அப்பகுதி மக்களுக்கு பில் மட்டும் போட்டுவிட்டு இந்த மாதம் அரிசி வழங்குவதாக விற்பனையாளர் கூறியுள்ளார். ஆனால் இந்த மாதமும் அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்களை கார்டுதாரர்களுக்கு வழங்கப்படவில்லை என புகார் எழுந்தது.

    இதையடுத்து ரேசன் பொருட்களை பொதுமக்களுக்கு முறையாக வழங்கவேண்டும் என்று தாண்டிக்குடி சமூகஆர்வலர் கணேஷ்பாபு மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி தாண்டிக்குடியில் உள்ள ரேசன் கடையில் கொடைக்கானல் வட்டவழங்கல் அலுவலர் சரவணன், பொதுவினியோக திட்ட அலுவலர் ரமேஷ்குமார் ஆகியோர் திடீர் ஆய்வுமேற்கொண்டனர்.

    அப்போது பொதுமக்களிடம் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகிறதா என்று கேட்டறிந்தனர். மேலும் விற்பனையாளரிடம் அத்தியாவசிய பொருட்கள் பெறுவதற்கு பொதுமக்களை அலைக்கழிக்ககூடாது, கோதுமை, மண்எண்ணை சுழற்சி முறையில் வழங்கவேண்டும்.

    தினமும் காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை ரேசன் கடை திறந்திருக்க வேண்டும். மலைகிராம மக்களுக்கு முறையாக ரேசன் பொருட்கள் வழங்கவேண்டும் என்று அறிவுறத்தினர்.

    Next Story
    ×