என் மலர்
நீங்கள் தேடியது "ஈமக்கல் கண்டுபிடிப்பு"
- பாறை உச்சியில் 300 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட சிவன் கோயில் உள்ளது.
- பாறையின் அருகே உள்ள ஓடையில் கற்கால கல் ஆயுதங்கள் கிடைத்தன.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே வரலாற்று ஆய்வுக்குழு ஆய்வாளர் விசுவநாத தாஸ், சந்திரசேகர், மாணவர் முரளிதர், ஆசிரியர் கண்ணன், லெமூரியன்குரு ஆகியோர் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் அவர்கள் தெரிவித்ததாவது,
வேடசந்தூர் புளியமரத்துக்கோட்டை சாலையில் பூசாரிபட்டி மல்லீஸ்வரர் கோவில் அமைந்த பாறை ஆய்வு செய்யப்பட்டது. இங்கு நிறைய கற்கால பெருங்கற்கால சின்னங்கள் இருக்கின்றன பாறையின் வடக்கே நுழைந்தான் பாறை என்னும் சிறு பாறையின் கிழக்கே கற்காலத்தை சேர்ந்த ஒரு ஈமகல்திட்டை உள்ளது இக்கல்திட்டை 4000 ஆண்டுகளுக்கு முற்பட்டது.
இக்கல்திட்டை 3 புறமும் சாய்ந்து ஒருபுறம் நிமிர்ந்த நிலையில் இரு பலகைக் கற்கள் இருக்கின்றன. அதில் ஒரு கல் 4 அடி நீளம் 4 அடி உயரமும் மற்ற கல் 5 அடி நீளம் 4 அடி உயரம் கொண்ட ஒரு அடி கனம் கொண்ட 2 பலகை கற்கள் உள்ளது. மேலுள்ள பலகைக் கற்கள் கீழே விழுந்து கிடக்கின்றன. 5 அடி நீள பலகைகல்ளில் குறுக்கும் நெடுக்குமாக 7x7 கட்டங்கள் சதுரமாக செதுக்கப்பட்டுள்ளது. இந்தக் குறியீடு 7 பிறவிகளை குறிக்கும்.
இந்த ஈமகல் திட்டைக்ககு அருகே கல்லால் பாறையைக் குடைந்த 2x2 அடி சதுரத்தில் அரை அடிக்கு குறைவான குழி உள்ளது. இந்த அமைப்பு பறவைகளுக்கு அல்லது கற்கால மனிதனின் வளர்ப்பு பிராணிகளுக்கு உணவிடும் குழியாகவும், அதனருகே காலத்தால் பிற்பட்ட கல்தொட்டி ஒன்று உள்ளது. இந்தப் பாறையின் அருகே செல்லும் ஓடையில் கொட்டைகளை உடைக்கும் குழி ஒன்று உள்ளது. ஓடையின் மேட்டுப் பகுதியில் 2 நெடுங்கல் உள்ளது.
இதுவும் கற்காலத்தில் இறந்த குழுவின் தலைவனின் நினைவாக ஊன்றப்படும் நெடுங்கல். இன்நெடுங்கல் நடும் நடைமுறை கற்காலத்திலிருந்து சங்க காலம் வரை தொடர்கிறது. பெரிய பாறையான மல்லீஸ்வரர் மலையில் கிழக்குச் சரிவில் ஒரு நெடுங்கல் உள்ளது. சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் கல்லின் ஒரு பகுதி செதுக்கப்பட்டு, அதில் சூரியன் சந்திரன் உருவம் பொறிக்கப்பட்டு அதன் கீழ் சிவலிங்கமும் நந்தி உருவமும் பொறிக்கப்பட்டுள்ளது. இன் நெடுங்கல்லில் உள்ள சிற்பம் 300ஆண்டுகளுக்கு முற்பட்டது. பாறையின் தெற்குப்பகுதியில் 4 1/2அடி உயரமும், 4 1/2 அடி அகலமும், 100 அடி நீளமும் கொண்ட கல்லடுக்கு நீண்ட தொடராக எந்த சேதமும் இன்றி உள்ளது.
இத்தொடர் முடிவில் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த பெருங்கல் வட்டம் அரைவட்டமாக இவ்வடுக்குகல் முடிவிலிருந்து மல்லீஸ்வரன் பாறை வரை உள்ளது. இப்பாறையின் மேல் பகுதியில் 5x5, சதுர கட்டங்களில் ஒன்று 4x4 சதுரத்தில் 2ம் பெரிய சதுரத்தில் நடுவில் புள்ளி உடனும் பெருக்கல் வடிவ குறியீடு உள்ளது. கல்லால் தேய்க்கப்பட்ட குறியீடுகள் உள்ளது. இக்குறியீடுகள் தற்போதைய தாய விளையாட்டின் முன்னோடியாக இருந்தன. இந்த ஈம கல்திட்டை, நெடுங்கல் கல்லடுக்கு, பெருங்கல் வட்டம், கட்ட விளையாட்டு என்பவை கற்காலத்திலிருந்து பெருங்கற்காலம், சங்ககாலம் வரை தொல்லியல் சின்னமாக இப்பகுதி மக்கள் வசித்த இடமாக உள்ளது. பாறை உச்சியில் 300 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட சிவன் கோயில் உள்ளது.
இந்தப் பாறையின் அருகே உள்ள ஓடையில் கற்கால கல் ஆயுதங்கள் கிடைத்தன. மேலும் இரும்பு உருக்கின பாறை கற்கள் உள்ளன. நுழைந்தான் பாறையின் முன் ஒரு கிணறு உள்ளது இக்கிணறு அருகே நீதிபரிபாலன கல்வெட்டு ஒன்று உள்ளது. இக்கல்வெட்டில் கிணற்றிற்கு நல்லலூத்து என்று வெட்டப்பட்டுள்ளது. இந்த நீதி பரிபாலன கல்வெட்டு 200 ஆண்டுகளுக்கு முற்பட்டது. சங்க்காலத்திற்கு முன் இறந்தவர் நினைவாக வைக்கப்படும் கல் குதிர்கள் மலையை சுற்றி குவியலாக உள்ளது என்றனர்.






