என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    • அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை அரசு பள்ளிக்கல்வி துறையோடு இணைப்பதை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி பிரமலைக்கள்ளர் வீடுகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை அருகே பிள்ளையார் நத்தம் ஊராட்சியில் உள்ள கொக்கு பிள்ளை பட்டி, ராமராஜபுரம், அணைப்பட்டி, எம். குரும்பபட்டி, என். ஊத்துப்பட்டி, எஸ். மேட்டுப்பட்டி, மட்டப்பாறை, சிலுக்குவார்பட்டி, சென்னஞ்செட்டிபட்டி, ஜி.தும்மலப்பட்டி, கெங்குவார்பட்டி, திண்டுக்கல், காமு பிள்ளை சத்திரம், குளத்துபட்டி ,என். கோயில்பட்டி, தெப்பத்துப்பட்டி, தருமத்துப்பட்டி, விராலி மாயன்பட்டி, விருவீடு , தாதபட்டி உள்ளிட்ட 30க்கு மேற்பட்ட கிராமங்களில் அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை அரசு பள்ளிக்கல்வி துறையோடு இணைப்பதை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி பிரமலைக்கள்ளர் வீடுகளில் தொடர்ந்து 5 நாளாக கருப்புக்கொடி ஏந்தி தங்களது போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் விழுந்து காயங்களுடன் செல்கின்றனர்.
    • சாலை சேறும் சகதியுமாக உள்ள தால் கூலி தொழிலாளிகள் வேலைக்கு செல்வதற்கு தயங்குகின்றனர்.

    பெரும்பாறை:

    திண்டுக்கல் மாவட்டம் பெரும்பாறை அருகே உள்ள புல்லாவெளியில் இருந்து சோலைக்காடு வரையிலான மலைப்பாதை யில் தார் சாலை அமைக்க வேண்டும் என்று அப்பகுதி பொது மக்கள் நீண்ட நாளாக கோரிக்கை விடுத்து வந்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று தற்போது புல்லா வெளி-சோலைக்காடு இடையே தார் சாலை அமைக்கப்பட்டு ள்ளது.

    ஆனால் புல்லாவெளியில் இருந்து அரை கி.மீ. தூரத்துக்கு தார் சாலை இன்னும் அமைக்கப்பட வில்லை. தார் சாலை அமைக்காமல் மண் மட்டும் போடப்பட்டுள்ளது. இப்பகு தியில் சில தினங்களாக மழை பெய்து வருவதால் இந்த சாலை சேறும் சகதியுமாக மாறியது.

    இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரம ப்பட்டுள்ளனர். மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் விழுந்து காயங்களுடன் செல்கின்றனர். தற்போது சோலைக்காடு, புலையன் வளைவு, நேர்மலை, கூட்டுக்காடு போன்ற பகுதிகளில் மிளகு சீசன் தொடங்கியுள்ளது. சாலை சேறும் சகதியுமாக உள்ள தால் கூலி தொழிலாளிகள் வேலைக்கு செல்வதற்கு தயங்குகின்றனர்.

    மேலும் இந்த சாலையில் சில இடங்களில் இன்னும் தடுப்புச்சுவர் அமைக்கப்பட வில்லை. இதனால் வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்து டன் சென்று வருகின்றனர். சாலையோரம் 200 அடி அபாய பள்ள த்தாக்கு உள்ளது. எனவே மலை ப்பாதை யில் தடுப்புச்சுவர் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பால்குடங்களை சுமந்தவாறு 5 கி.மீ தூரம் ஊர்வலமாக பக்தர்கள் வந்தனர்.
    • மேளதாளம் முழங்க பக்தர்கள் வருகை தந்தபோது ஒருசிலர் அருள்வந்து ஆடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    செம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் பிள்ளையார்நத்தத்தில் மகாமுத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா வெகுசிறப்பாக நடத்த ப்படும். நின்ற நிலையில் உள்ள அம்மனுக்கு சிறப்பு வழிபாடு செய்து நேர்த்தி க்கடன் செய்ய ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். அதன்படி இந்த வருட திருவிழாவை முன்னிட்டு மகாமுத்து மாரியம்மனுக்கு பாலா பிஷேகம் செய்ய அனுமந்த ராயன்கோட்டை அருகே உள்ள குடகனாற்றுக்கு சென்று அங்கிருந்து பால்குடங்களை சுமந்தவாறு 5 கி.மீ தூரம் ஊர்வலமாக பக்தர்கள் வந்தனர்.

    மேளதாளம் முழங்க பக்தர்கள் வருகை தந்தபோது ஒருசிலர் அருள்வந்து ஆடியதால் பரபரப்பு ஏற்பட்டது. விழா விற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். சிறப்பு அழைப்பாளராக ஆத்தூர் யூனியன் தலைவர் மகேஸ்வரிமுருகேசன் , ஆத்தூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் முருகேசன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

    • பெண் வக்கீல் தங்கியிருந்த அறையில் ‘வைபை’ வசதி செயல் இழந்து விட்டது.
    • கொடைக்கானல் போலீஸ் நிலையத்தில் பெண் வக்கீல் புகார் அளித்தார்.

    கொடைக்கானல்:

    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நாயுடுபுரத்தை சேர்ந்தவர் அப்துல்கனி ராஜா (வயது 50). இவர் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவராக உள்ளார். மேலும் கொடைக்கானல் ஓட்டல் மற்றும் ரிசார்ட் உரிமையாளர்கள் சங்க தலைவராகவும் பதவி வகிக்கிறார். இவருக்கு சொந்தமான 2 தங்கும் விடுதிகள் நாயுடுபுரம் பகுதியில் உள்ளன.

    இந்தநிலையில் சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த பெண் வக்கீல் ஒருவர் தனது 2 குழந்தைகள் மற்றும் தோழி, அவரது குழந்தைகளுடன் கொடைக்கானலுக்கு கடந்த 7-ந்தேதி சுற்றுலா சென்றிருந்தார்.

    கொடைக்கானல் நாயுடுபுரத்தில் உள்ள அப்துல்கனி ராஜாவின் தங்கும் விடுதியில் அவர்கள் தங்கினர். பெண் வக்கீல் தனது குழந்தைகளுடன் ஒரு அறையிலும், அவரது தோழி தனது குழந்தைகளுடன் மற்றொரு அறையிலும் தங்கி இருந்தனர்.

    பெண் வக்கீலுக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர், சுற்றுலா இடங்களை பார்க்க வெளியே செல்லவில்லை. அறையிலேயே தங்கி இருந்தார். அவரது குழந்தைகள், தோழி மற்றும் அவரது குடும்பத்தினர் சுற்றுலா இடங்களை பார்க்க சென்று விட்டனர்.

    இதற்கிடையே பெண் வக்கீல் தங்கியிருந்த அறையில் 'வைபை' வசதி செயல் இழந்து விட்டது. இதுதொடர்பாக அந்த பெண் வக்கீல், அப்துல்கனி ராஜாவிடம் போன் மூலம் தகவல் தெரிவித்தார். இதனையடுத்து சிறிதுநேரத்தில் பெண் வக்கீல் தங்கியிருந்த அறைக்கு அப்துல்கனிராஜா வந்தார்.

    அப்போது, உடல்நிலை சரியில்லாமல் இருந்த பெண் வக்கீலின் உடலை பரிசோதிப்பது போல அவரது ஆடைகளை விலக்கி அப்துல்கனி ராஜா பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த பெண் வக்கீல் அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து தனது கணவர் மற்றும் குழந்தைகள், தோழி ஆகியோருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக அந்த அறையை காலி செய்து விட்டு வேறு தங்கும் விடுதிக்கு சென்றனர். பின்னர் இதுகுறித்து கொடைக்கானல் போலீஸ் நிலையத்தில் பெண் வக்கீல் புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்துல்கனி ராஜாவை கைது செய்தனர்.

    போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு பிறகு, கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக அப்துல்கனி ராஜாவை போலீசார் அழைத்து சென்றனர். அப்போது போலீஸ் நிலைய வாசலிலேயே அவர் திடீரென மயங்கி விழுந்தார். போலீசார் அப்துல்கனி ராஜாவை மீட்டு சிகிச்சைக்காக கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சைக்கு பின் அவர், கொடைக்கானல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி கார்த்திக் உத்தரவிட்டார். அதன்பேரில், திண்டுக்கல் மாவட்ட சிறையில் அப்துல்கனிராஜா அடைக்கப்பட்டார்.

    இதற்கிடையே பெண் வக்கீல் தன்மீது தவறான புகார் அளித்திருப்பதாக அப்துல்கனி ராஜா கொடைக்கானல் போலீசில் புகார் அளித்தார். இதேபோல் அவரது மனைவி மற்றும் பல்வேறு சங்கங்களை சேர்ந்த பிரமுகர்களும் புகார் கொடுத்துள்ளனர். இந்த புகார்கள் தொடர்பாக, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திண்டுக்கல்-கரூர் சாலையில் தாடிக்கொம்பு பகுதியில் வடமலையான் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
    • மதுரையில் இருந்து வந்த 5 பேர் கொண்ட வருமானவரித்துறை அதிகாரிகள் ஆஸ்பத்திரியில் சோதனை மேற்கொண்டனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல்-கரூர் சாலையில் தாடிக்கொம்பு பகுதியில் வடமலையான் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த ஆஸ்பத்திரியில் வரிஏய்ப்பு தொடர்பாக புகார் எழுந்தது.

    இதனைதொடர்ந்து மதுரையில் இருந்து வந்த 5 பேர் கொண்ட வருமானவரித்துறை அதிகாரிகள் ஆஸ்பத்திரியில் சோதனை மேற்கொண்டனர். ஆஸ்பத்திரி அலுவலகத்தில் உள்ள கணினி, மருந்தகம், டாக்டரின் அறை உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

    சோதனையின்போது ஊழியர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. தொடர்ந்து சோதனை நடைபெற்று வருவதால் ஆஸ்பத்திரி வளாகத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    • செந்துறை துணை மின்நிலையத்தில் நாளை (10ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

    நத்தம்:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலூகா செந்துறை துணை மின்நிலையத்தில் நாளை (10ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.

    எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செந்துறை, குரும்பபட்டி, பெரியூர்பட்டி, மல்லநாயக்கன்பட்டி, களத்துப்பட்டி, கருத்தநாய க்கன்பட்டி, கோவில்பட்டி, மாமரத்துபட்டி, ரெங்கை யன்சேர்வைகாரன்பட்டி, திருநூத்துப்பட்டி, நல்ல பிச்சன்பட்டி, ஒத்தக்கடை, சரளைபட்டி, கோட்டை ப்பட்டி, வேப்பம்பட்டி, ராக்கம்பட்டி, பிள்ளை யார்நத்தம், மாதவ நாயக்கன்பட்டி, கோசு குறிச்சி, கம்பிளியம்பட்டி, மங்களப்பட்டி,

    சிரங்காட்டு ப்பட்டி, சின்ன ராசிபுரம், மணக்காட்டூர், அடை க்கனூர், தொண்டபுரி, குடகிப்பட்டி, மந்தகுளத்து ப்பட்டி, சுக்காம்பட்டி ஆகிய பகுதிகளில் மின்சாரம் வினியோகம் இருக்காது என நத்தம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் வெங்கடேசன் தெரி வித்துள்ளார்.

    • பிளஸ்-2 பொதுத்தேர்வில் முடிவுகள் நேற்று வெளியானது.
    • பிளஸ்-2 பொதுத்தேர்வில் 12 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டத்தில் 215 பள்ளிகளை சேர்ந்த 20,802 மாணவர்கள் பிளஸ்-2 பொதுத்தேர்வில் எழுதினர். இவர்களில் 19,505 மாணவர்கள் தேர்ச்சி அடைந்த நிலையில் 67 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றனர்.

    இவற்றில் அரசு பள்ளிகள் , கள்ளர்சீரமைப்புத்துறை பள்ளிகள், பழங்குடியினர் நலத்துறைபள்ளி என மொத்தம் 12 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றன.

    அதன்படி மன்னவனூர் அரசு மேல்நிலைப்பள்ளி(29), பாப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி(44), பாலசமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளி(49), கொக்கரக்கால் வலசு அரசு மேல்நிலைப்பள்ளி (39), லந்தக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி (27), கோம்பைப்பட்டி அரசுமேல்நிலைப்பள்ளி (22), செட்டியபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி (20),

    கே.புதுக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி(65), விலாம்பட்டி அரசு கள்ளர்மேல்நிலைப்பள்ளி (58), சேவுகம்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி(28), சென்னமநாயக்கன்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி(57), பெரும்பாறை அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளி (19) ஆகிய பள்ளிகளில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர்.

    • ரவுடி வாலிபரை மிரட்டி சட்டைப்பையில் இருந்த ரூ.1000-ஐ பறித்து கொலை மிரட்டல் விடுத்தார்.
    • புகாரின் பேரில் ரவுடியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை அருகே உள்ள அணைப்பட்டியை சேர்ந்தவர் தினகர்(24). இவர் அதேபகுதியில் தனியார் கேபிள் டி.வியில் ஆபரேட்டராக வேலை பார்த்து வருகிறார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று அணைப்பட்டி அருகே உள்ள சொக்குபிள்ளைப்பட்டி பிரிவில் உள்ள ஒரு கடையில் நின்று கொண்டிருந்த போது அதே பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி(25) என்பவர் சட்டையில் இருந்த ரூ.1000-ஐ எடுத்துக்கொண்டு தினமும் இதேபோல் குடிப்பதற்கு பணம் கொடுக்க வேண்டும்.

    இல்லைஎன்றால் கொலை செய்து விடுவேன் என கத்தியை காட்டி மிரட்டியுள்ளார். இதுகுறித்து தினகர் கொடுத்த புகாரின் அடிப்படையில் விளாம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் வழக்குபதிவு செய்து பணம் கேட்டு மிரட்டிய சத்தியமூர்த்தியை கைது செய்து திண்டுக்கல் சிறையில் அடைத்தனர்.

    • கொடைக்கானலில் பல்வேறு பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மிதமான மழை பெய்தது.
    • சிறுவர்கள் பிரையண்ட் பூங்காவில் விளையாட்டு மைதானம் போல் பயன்படுத்தி பல்வேறு விளையாட்டுகளை விளையாடி வருகின்றனர்.

    கொடைக்கானல் :

    கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக பகலில் சிறிது நேரம் வெயிலும், மாலை வேளையில் குளிரும் நிலவி வந்தது. இந்நிலையில் இன்று காலை முதலே கொடைக்கா னல் நகர் பகுதிகள் மட்டு மின்றி பல்வேறு இடங்களில் மேகமூட்டம் காணப்பட்டது.

    கொடைக்கானல் அண்ணா சாலை, ஏரிச்சாலை, கே.ஆர்.ஆர் கலையரங்கம் பகுதி, பிரையண்ட் பூங்கா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மிதமான மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியது. இதனால் கொடைக்கான லுக்கு வந்த சுற்றுலா பயணிகள் மழையால் நிலவிய குளிரை அனு பவித்து மகிழ்ச்சியடை ந்தனர்.

    மேலும் பிரையண்ட் பூங்காவில் தற்போது அடிக்கடி பெய்து வரும் மழையால் பூக்கள் அழுகும் சூழலும் ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை நேரத்தில் தொடங்கிய மழை சுமார் 4 மணி நேரம் வெளுத்து வாங்கியது. இதனால் நகரின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    இரவு நேரத்தில் சாலைகளில் நீர் வெள்ளம்போல் வழிந்தோடியதால் சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். இருந்த போதும் பள்ளி விடுமுறை காரணமாக சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு குவிந்த வண்ணம் உள்ளனர். சிறுவர்கள் பிரையண்ட் பூங்காவில் விளையாட்டு மைதானம் போல் பயன்படுத்தி பல்வேறு விளையாட்டுகளை விளையாடி வருவதை பெற்றோர்கள் உற்சாகமாக கண்டு ரசிக்கின்றனர்.

    • கே.வி.ரெங்கநாதபுரம் துணை மின்நிலையத்தில் நாளை (10ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் கே.வி.ரெங்கநாதபுரம் துணை மின்நிலையத்தில் நாளை (10ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    எனவே அன்று காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை சரளபட்டி, காசிபாளையம், மேட்டுப்பட்டி, வெள்ளையம்பட்டி, எல்லப்பட்டி, கல்வார்பட்டி, கல்லுப்பட்டி, பூதிபுரம்,

    தேவிநாயக்கன்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது என வேடசந்தூர் உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    • தனியார் பஸ் முந்தி செல்லும் போட்டியில் 10-க்கும் மேற்பட்டோர் சரமாரியாக தாக்கி கொண்டனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல் காலம் தாழ்த்தி வருவதாக கூறி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்தவர் ஜெயபாரதி. இவருக்கு சொந்தமான தனியார் பேருந்து ஒட்டன்சத்திரத்தில் இருந்து பழனிக்கு சென்று வருகிறது. அதேபோல் மற்றொரு தனியார் பேருந்து பழனியில் இருந்து திண்டுக்கல் வரை இயங்கி வருகிறது.

    இந்த பேருந்தை இருளப்பன் என்பவர் ஓட்டி வந்துள்ளார். சம்பவத்தன்று இந்த தனியார் பேருந்து ஒட்டன்சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து கிளம்பியது. அப்போது ஜெயபாரதி என்பவருக்கு சொந்தமான தனியார் பேருந்தும் இந்தபேருந்தும் யார் முந்தி செல்வது என போட்டி ஏற்பட்டது.

    இந்த பிரச்சினையில் வாக்குவாதம் ஏற்பட்டு தனியார் பேருந்து ஓட்டுனர் இருளப்பனை, மற்றொரு தனியார் பேருந்து உரிமை யாளர் மற்றும் அவரது மேலாளர் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் போலீஸ் நிலைய கூடாரத்தின் முன்பு வைத்து சரமாரியாக தாக்கும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் தனியார் பேருந்து ஓட்டுனர்கள் சங்கம் சார்பில் ஜெயபாரதி உள்பட 10 பேர் மீது புகார் அளிக்கப்பட்டது. ஆனால் போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யாமல் காலம் தாழ்த்தி வருவதாக கூறி போலீஸ் நிலையத்தை முற்றுகை யிட்டனர்.

    மேலும் தனியார் பேருந்து உரிமையாளர் ஜெயபாரதி மீது நடவடிக்கை எடுக்க கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ஒட்டன்சத்திரம் பஸ் நிலையம் பகுதியில் சுமார் 2 மணி நேரம் தனியார் பேருந்து இயக்கப்பட வில்லை. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

    மேலும் தனியார் பேருந்து உரிமையாளர் மற்றும் அவரது சக நண்பர்கள் சேர்ந்து மற்றொரு பேருந்து ஓட்டுனரை சரமாரியாக தாக்கும் வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • இந்த ஆண்டு புலிப்பாணி ஆசிரமத்தில் போகர் ஜெயந்தி விழாவை நடத்த இந்து சமய அறநிலையத்துறை தடை விதித்துள்ளது.
    • தமிழக முதல்வர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் பக்தர்களை திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என இந்து அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

    பழனி:

    பழனியில் ஒவ்வொரு ஆண்டும் மே 18-ந் தேதி போகர் ஜெயந்தி விழா மிக சிறப்பாக நடைபெறும். போகர் ஜீவ சமாதியில் இருக்கும் புலிப்பாணி ஆசிரமத்தில் இந்த விழாவை ஸ்ரீமத் போகர் ஆதீனம் பாத்திரசாமி நடத்தி வருகிறார். இந்த ஆண்டு புலிப்பாணி ஆசிரமத்தில் போகர் ஜெயந்தி விழாவை நடத்த இந்து சமய அறநிலையத்துறை தடை விதித்துள்ளது.

    இது பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இணை ஆணையர் நடராஜன், போகர் ஜெயந்தி விழாவுக்கு தடை விதித்துள்ள நிலையில் திட்டமிட்டபடி போகர் ஜெயந்தி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்து தமிழர் கட்சி நிறுவன தலைவர் ராமரவிக்குமார் தெரிவிக்கையில்,

    போகர் சமாதியில் ஒவ்வொரு ஆண்டும் ஜெயந்தி விழா சிறப்பாக நடத்தப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டு தடை விதிக்க ப்பட்டது ஏன்? என்பது பக்தர்கள் அதிர்ச்சியடை ந்துள்ளனர். பழனி மலையில் அமைந்திருக்கும் போகர் ஜீவ சமாதியை தரிசிக்க வரும் பக்தர்கள் தங்களுடைய காணிக்கையை செலுத்த அங்கே உண்டியல் வைக்க வில்லை. ஆனால் பழனி முருகன் கோவில் உண்டியலில்தான் காணி க்கை செலுத்துகி ன்றனர்.

    போகர் ஜெயந்தி விழா நிறுத்தப்பட்டால் அதுவும் ஆகம விதி மீறல்தான். ஆகம விதி மீறல் நடந்தால் அது ஆட்சிக்கு ஆபத்தை விளைவிக்கும். இதனால் பழனி கோவில் மூலவரான தண்டாயுதபாணி சுவாமி சிலை வடிவமைத்த போகருக்கும் இப்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் தண்டாயுதபாணி சுவாமியின் கோபத்திற்கும் கட்டாயம் ஆளாக நேரிடும். கடந்த ஆண்டும் இதே போல போகர் ஜெயந்தி விழா நடத்தக்கூடாது என்பதற்காக இடையூறு ஏற்படுத்தினர்.

    சித்தர் வழிபாட்டை நிறுத்த முயற்சிகள் மேற்கொ ள்ளக்கூடாது எனவே தடை விதிப்புக்கு எதிராக வருவாய் கோட்டாட்சியரி டம் மனு அளித்துள்ளோம். இப்பிரச்சினையில் தமிழக முதல்வர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் பக்தர்களை திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்றார்.

    இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் விடுத்துள்ள அறிக்கையில், போகர் ஜீவசமாதி கோவில் புலி ப்பாணி ஆசிரமம் கட்டுப்பா ட்டில்தான் தற்போது வரை உள்ளது. ஆனால் இந்த ஆண்டு போகர் ஜெயந்தியை நடத்த அறநிலையத்துறையும், பழனி கோவில் நிர்வாகமும் தடை விதித்துள்ளது.

    இது முற்றிலும் சட்டத்துக்கும், ஆன்மீகத்துக்கும் எதிரானது. போகருக்கு ஏதேனும் தீங்கு விளைவித்தால் தண்டாயு தபாணி சுவாமியின் கோப த்துக்கு ஆளாக நேரிடும். தமிழக அரசும், இந்து சமய அறநிலை யத்துறையும், பழனி தேவஸ்தானமும் கடந்த ஆண்டைப்போலவே வருகிற 18-ந் தேதி போகர் ஜெயந்தி நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்றார்.

    ×