என் மலர்
நீங்கள் தேடியது "போலீஸ் நிலையத்தை முற்றுகை"
- தனியார் பஸ் முந்தி செல்லும் போட்டியில் 10-க்கும் மேற்பட்டோர் சரமாரியாக தாக்கி கொண்டனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல் காலம் தாழ்த்தி வருவதாக கூறி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஒட்டன்சத்திரம்:
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்தவர் ஜெயபாரதி. இவருக்கு சொந்தமான தனியார் பேருந்து ஒட்டன்சத்திரத்தில் இருந்து பழனிக்கு சென்று வருகிறது. அதேபோல் மற்றொரு தனியார் பேருந்து பழனியில் இருந்து திண்டுக்கல் வரை இயங்கி வருகிறது.
இந்த பேருந்தை இருளப்பன் என்பவர் ஓட்டி வந்துள்ளார். சம்பவத்தன்று இந்த தனியார் பேருந்து ஒட்டன்சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து கிளம்பியது. அப்போது ஜெயபாரதி என்பவருக்கு சொந்தமான தனியார் பேருந்தும் இந்தபேருந்தும் யார் முந்தி செல்வது என போட்டி ஏற்பட்டது.
இந்த பிரச்சினையில் வாக்குவாதம் ஏற்பட்டு தனியார் பேருந்து ஓட்டுனர் இருளப்பனை, மற்றொரு தனியார் பேருந்து உரிமை யாளர் மற்றும் அவரது மேலாளர் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் போலீஸ் நிலைய கூடாரத்தின் முன்பு வைத்து சரமாரியாக தாக்கும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் தனியார் பேருந்து ஓட்டுனர்கள் சங்கம் சார்பில் ஜெயபாரதி உள்பட 10 பேர் மீது புகார் அளிக்கப்பட்டது. ஆனால் போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யாமல் காலம் தாழ்த்தி வருவதாக கூறி போலீஸ் நிலையத்தை முற்றுகை யிட்டனர்.
மேலும் தனியார் பேருந்து உரிமையாளர் ஜெயபாரதி மீது நடவடிக்கை எடுக்க கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ஒட்டன்சத்திரம் பஸ் நிலையம் பகுதியில் சுமார் 2 மணி நேரம் தனியார் பேருந்து இயக்கப்பட வில்லை. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
மேலும் தனியார் பேருந்து உரிமையாளர் மற்றும் அவரது சக நண்பர்கள் சேர்ந்து மற்றொரு பேருந்து ஓட்டுனரை சரமாரியாக தாக்கும் வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






