என் மலர்
தர்மபுரி
- மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டியது.
- காவிரி ஆற்றின் அழகை ரசிக்க மட்டும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.
தருமபுரி:
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ளதால் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான குடகு, கேரள மாநிலம் வயநாடு மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வந்தது.
இதனால் கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) அணை க்கும், கபினி அணைக்கும் நீர்வரத்து அதிகரித்தது.
இந்த இரு அணைகளிலும் இருந்தும் நேற்று வினாடிக்கு 55 ஆயிரத்து 450 கனஅடி நீர் தமிழகத்துக்கு காவிரியில் திறக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் வினாடிக்கு 1 லட்சத்து 16 ஆயிரத்து 330 கனஅடி நீர் சென்ற நிலையில், நேற்று தண்ணீர் திறப்பு பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு சற்று குறைந்துள்ளது.
இந்த தண்ணீர், கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக காவிரி ஆற்றில் கரைபுரண்டு தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நேற்று காலை 1 லட்சத்து 5 ஆயிரம் கனஅடி வந்தது. பின்னர் படிபடியாக நீர்வரத்து குறைய தொடங்கியது. மாலை 4 மணி அளவில் 50 ஆயிரம் கனஅடியாக வந்தது.
இதையடுத்து இன்றைய நிலவரப்படி நீர்வரத்து 32 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.
இருப்பினும் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டியது.
நீர்வரத்து அதிகரிப்பால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி மெயின் அருவி, ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் 4-வது நாளாக மாவட்ட கலெக்டர் சதீஸ் தடை விதித்துள்ளார்.
இதனால் மெயின் அருவிக்கு செல்லும் பாதை பூட்டு போட்டு பூட்டப்பட்டது. சுற்றுலா பயணிகள் செல்லாதவாறு கேட்டு முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் காவிரி ஆற்றின் அழகை ரசிக்க மட்டும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.
காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- போலீசார் காவல் நிலையம் முழுவதும் சல்லடை போட்டு தேடியும் வெடி குண்டு கிடைக்கவில்லை.
- பொன்முடியை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், தருமபுரி சிறையில் அடைத்தனர்.
மாரண்டஅள்ளி:
தருமபுரி மாவட்டம், மாரண்ட அள்ளி அடுத்த குஜ்ஜார அள்ளி கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி பொன்முடி (வயது45). இவர் கடந்த 18-ந் தேதி இரவு, சென்னை போலீஸ் கண்ட்ரோல் ரூமுக்கு போன் செய்து மாரண்ட அள்ளி போலீஸ் ஸ்டேஷனுக்கு வெடி குண்டு வைத்துள்ளதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார்.
இது குறித்து, மாரண்ட காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். போலீசார் காவல் நிலையம் முழுவதும் சல்லடை போட்டு தேடியும் வெடி குண்டு கிடைக்கவில்லை.
இதையடுத்து, குஜ்ஜார அள்ளிக்கு சென்ற போது, பொன்முடி தலைமறைவாகி விட்டார். அவர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர்.
இந்த நிலையில் மாரண்டஅள்ளி பஸ் நிலையம் அருகே பொன்முடி பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், போலீசார் விரைந்து சென்று அவரை கைது செய்தனர்.
விசாரணையில் அவ்வப்போது 100 என்ற எண்ணுக்கு போன் செய்து பேசுவேன் என்றும், அதே போல் கடந்த 18-ந் தேதி வெடிகுண்டு வைத்ததாக கூறியதாக குற்றத்தை ஒப்பு கொண்டார். இதையடுத்து, பொன்முடியை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், தருமபுரி சிறையில் அடைத்தனர்.
- மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டியது.
- மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் தொடர் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக குடகு மாவட்டம், கேரள மாநிலத்துக்கு உட்பட்ட வயநாடு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
இதனால் காவிரியின் குறுக்கே மண்டியா மாவட்டத்தில் அமைந்துள்ள கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.) அணைக்கும், மைசூரு மாவட்டத்தில் அமைந்துள்ள கபினி அணைக்கும் நீர்வரத்து அதிகரித்து இருக்கிறது.
ஏற்கனவே இந்த 2 அணைகளும் நிரம்பி விட்டதால் அணைகளுக்கு வரும் உபரி நீர் அப்படியே காவிரியில் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
இந்த நிலையில் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நேற்று மாலை 1 லட்சத்து 45 ஆயிரம் கன அடி நீர் வந்தது. இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து 1 லட்சத்து 5 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது.
இருப்பினும், மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டியது. மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
நீர்வரத்து அதிகரிப்பால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி மெயின் அருவி, ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் 3-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் மெயின் அருவிக்கு செல்லும் பாதை பூட்டு போட்டு பூட்டப்பட்டது. சுற்றுலா பயணிகள் செல்லாதவாறு கேட்டு முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- 11 டெல்டா மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
தருமபுரி:
கர்நாடகா மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.), கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
பாதுகாப்பு கருதி இந்த இரு அணைகளில் இருந்து தமிழக காவிரி ஆற்றில் நேற்று 78 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில் தற்போது 88 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
இதனை தொடர்ந்து காவிரி கரையோரத்தில் உள்ள 11 டெல்டா மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.), கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
- மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
தருமபுரி:
கர்நாடகா மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.), கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
பாதுகாப்பு கருதி இந்த இரு அணைகளில் இருந்து தமிழக காவிரி ஆற்றில் நேற்று 50 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில் தற்போது 80 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு இன்றுகாலை 8 மணி நிலவரப்படி 6,500 கனஅடி யாக வந்த நீர்வரத்து மதியம் 12 மணி அளவில் 16 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து உள்ளது.
இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர். பின்னர் அவர்கள் மெயின் அருவியில் குளித்து மகிழ்ந்தனர். மீன் சாப்பாடு வாங்கி கொண்டு பூங்காவில் அமர்ந்து சாப்பிட்டனர்.
மேலும் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- கவர்னர் கம்பு சுத்த வேண்டியது பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் தான்.
- கவர்னர் தமிழகத்தில் நீடிப்பது தான் நமக்கு நல்லது.
தருமபுரி:
தருமபுரியில் புதிய திட்டங்களை தொடங்கி வைத்து, நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதன்பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
* இந்தியாவிற்கான திசைக்காட்டி திராவிட மாடல். ஆட்சிக்கு எதிராக சில விஷமிகள் அவதூறு பரப்புகின்றனர்.
* தமிழகத்தின் வளர்ச்சியில் பொறாமை கொண்டு இழிவான அரசியல் செய்கிறார் கவர்னர் ஆர்.என்.ரவி.
* தி.மு.க. அரசின் சாதனைகளை பொறுத்துக்கொள்ளாமல் பொய்களை மேடைதோறும் கவர்னர் புலம்பி வருகிறார்.
* கவர்னர் கம்பு சுத்த வேண்டியது பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் தான்.
* கவர்னர் தமிழகத்தில் நீடிப்பது தான் நமக்கு நல்லது.
* தமிழ்நாடு இந்தியாவின் சிறந்த மாநிலம் என்பதை மத்திய அரசு வெளியிடும் புள்ளி விவரமே கூறுகிறது.
* பள்ளிக்கல்வியில் இந்தியாவின் சிறந்த மாநிலங்களில் 2-ம் இடத்தில் உள்ள தமிழ்நாட்டை கவர்னர் விமர்சிக்கிறார்.
* தமிழக மாணவர்களை இழிப்படுத்துகிறார் கவர்னர் ஆர்.என்.ரவி என்றார்.
- தி.மு.க. ஆட்சியில் வேளாண் மக்களளுக்கு ஏராளமான திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது.
- நல்லம்பள்ளி அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் ரூ.7.5 கோடியில் புதிய வகுப்பறைகள் கட்டப்படும்.
தருமபுரி:
தருமபுரியில் புதிய திட்டங்களை தொடங்கி வைத்து, நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதன்பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
* தருமபுரியின் வளர்ச்சி என்றாலே அது தி.மு.க. ஆட்சியில் தான். தருமபுரி மாவட்டத்தில் ஏராளமான திட்டங்கள் தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
* தருமபுரி தொழிற்பேட்டை தி.மு.க. ஆட்சியில் தான் கொண்டு வரப்பட்டது.
* இணையத்தில் விண்ணப்பித்த அன்றே விவசாய கடன் அளிக்கும் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளேன்.
* இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் வேளாண் பெருங்குடி மக்களுக்காக புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
* வேளாண்மையின் மைந்தனாகவும் நாளும் உழைத்துக் கொண்டிருக்கிறார் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.
* கலைஞர் ஆட்சியில் தொடங்கப்பட்ட ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் 2-ம் கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
* தி.மு.க. ஆட்சியில் வேளாண் மக்களளுக்கு ஏராளமான திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது.
* தருமபுரியில் பேருந்து வசதி இல்லாத 8 கிராமங்கள் போக்குவரத்து வசதி பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 40 புதிய பேருந்துகள் இயக்கம்.
* தருமபுரியில் 2.87 லட்சம் பேர் கலைஞர் மகளிர் உரிமை தொகை பெறுகின்றனர்.
* தருமபுரி சிப்காட் பூங்கால் தொழில்முனைவோருக்கு 200 ஏக்கர் பரப்பளவில் இடம் ஒதுக்கப்பட்டு வருகிறது.
* 63 மலைக்கிராம பழங்குடியின மக்கள், பொதுமக்கள் வசதிக்காக சித்தேரி ஊராட்சி அரூர் வருவாய் வட்டத்துடன் இணைக்கப்படும்.
* நல்லம்பள்ளி அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் ரூ.7.5 கோடியில் புதிய வகுப்பறைகள் கட்டப்படும்.
* புளி உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் தருமபுரியில் ரூ.11 கோடியில் புளி வணிக மையம் அமைக்கப்படும்.
* ஒகேனக்கல்- தருமபுரியை இணைக்கும் சாலையை 4 வழிச்சாலையாக மேம்படுத்தப்படும் என்றார்.
- முரசொலி மாறன் 92-வது பிறந்த நாளையொட்டி, அவரது படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
- பல்வேறு துறைகளின் சார்பில் 70.427 பயனாளிகளுக்கு ரூ.830.06 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டமாக சென்று கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
இந்த ஆய்வு பயணத்தின் போது முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைப்பதுடன், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும் ரோடு ஷோ நடத்தி மக்களை சந்தித்து வருகிறார்.
அந்தவகையில், தருமபுரி மாவட்டத்தில் இன்று அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அவர் நேற்று மாலை சேலத்தில் இருந்து சாலை மார்க்கமாக தருமபுரிக்கு வந்தார்.
இந்த நிலையில், ஒட்டப்பட்டியில் முரசொலி மாறன் 92-வது பிறந்த நாளையொட்டி, அவரது படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதனை தொடர்ந்து, அதியமான் கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கூட்டுறவுத்துறையின் சார்பில் விவசாயிகள் இணைய வழியில் விண்ணப்பித்த அன்றே பயிர்க்கடன் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதையடுத்து, நல்லம்பள்ளி வட்டம், தடங்கம் ஊராட்சி பி.எம்.பி. கல்லூரி அருகில் நடைபெறும் அரசு விழாவில் ரூ.512.52 கோடி மதிப்புள்ள 1,044 புதிய திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். ரூ.362.77 கோடி மதிப்புள்ள 1,073 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார்.
மேலும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, நகராட்சிகள் துறை, மகளிர் திட்டம், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் 70.427 பயனாளிகளுக்கு ரூ.830.06 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
- ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர்கள் சேர்க்கை, உங்களுடன் ஸ்டாலின் திட்டப்பணிகள் குறித்து கட்சியினருடன் ஆலோசனை நடத்துகிறார்.
- பல்வேறு துறைகளின் சார்பில் 70.427 பயனாளிகளுக்கு ரூ.830.06 கோடி மதிப்பிலான அரசு நலத் திட்ட உதவிகளை வழங்குகிறார்.
தருமபுரி:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டமாக சென்று கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
இந்த ஆய்வு பயணத்தின் போது முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைப்பதுடன், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும் ரோடு ஷோ நடத்தி மக்களை சந்தித்து வருகிறார்.
இந்த நிலையில் நாளை 17-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தருமபுரி மாவட்டத்தில் அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.
இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அவர் இன்று மாலை சேலத்தில் இருந்து சாலை மார்க்கமாக தருமபுரிக்கு 8 மணிக்கு வருகிறார்.
அவருக்கு தொப்பூர், பாளையம் சுங்கசாவடி உள்ளிட்ட இடங்களில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தி.மு.க. சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.
தொடர்ந்து அவர் 8.15 மணிக்கு அதியமான் கோட்டை மேம்பாலம் முதல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வரை சுமார் 3 கி.மீ. தூரத்திற்கு ரோடு ஷோ நிகழ்ச்சி நடக்கிறது.
பின்னர் அவர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பயணியர் மாளிகையில் இரவு தங்குகிறார்.
இதையடுத்து நாளை 11-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 8 மணிக்கு கட்சி நிர்வாகிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து, 2026 சட்டமன்ற தேர்தல் வியூகம் தொடர்பாக தருமபுரி மாவட்டத்தில் செய்யப்பட்டுள்ள பணிகள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
மேலும் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர்கள் சேர்க்கை, உங்களுடன் ஸ்டாலின் திட்டப்பணிகள் குறித்து கட்சியினருடன் ஆலோசனை நடத்துகிறார்.
இதையடுத்து அவர் 9 மணிக்கு ஒட்டப்பட்டியில் முரசொலி மாறன் 92-வது பிறந்த நாளையொட்டி, அவரது படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
பின்னர் 9.30 மணிக்கு அதியமான் கோட்டையில் நடைபெறும் நிகழ்ச்சியில், கூட்டுறவுத்துறையின் சார்பில் விவசாயிகள் இணைய வழியில் விண்ணப்பித்த அன்றே பயிர்க்கடன் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
இதையடுத்து 10 மணி அளவில் நல்லம்பள்ளி வட்டம், தடங்கம் ஊராட்சி பி.எம்.பி. கல்லூரி அருகில் நடைபெறும் அரசு விழாவில் ரூ.512.52 கோடி மதிப்புள்ள 1,044 புதிய திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார். ரூ.362.77 கோடி மதிப்புள்ள 1,073 முடிவுற்ற திட்டப்பணிகளை அவர் திறந்து வைக்கிறார்.
மேலும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, நகராட்சிகள் துறை, மகளிர் திட்டம், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் 70.427 பயனாளிகளுக்கு ரூ.830.06 கோடி மதிப்பிலான அரசு நலத் திட்ட உதவிகளை வழங்குகிறார்.
மேலும், தருமபுரியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை தரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர்.
இதையடுத்து சாலையின் இரு புறங்களிலும் தி.மு.க., கொடி, தோரணங்கள் கட்டப்பட்டுள்ளது. இதனால் தருமபுரி விழாக்கோலம் பூண்டுள்ளது.
முதலமைச்சர் வருகையையொட்டி, மேற்கு மண்டல ஐ.ஜி., செந்தில்குமார் மேற்பார்வையில் தருமபுரி எஸ்.பி. மகேஸ்வரன் தலைமையில் 1,606 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
- அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
- சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.
ஒகேனக்கல்:
கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து தொடர்ந்து 4 தினங்களாக 6 ஆயிரத்து 500 கனஅடியாக நீடித்து வந்தது.
நீர்வரத்து குறைந்த போதிலும் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர். மேலும் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் பாறைகளுக்கு நடுவே விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர். பின்னர் அவர்கள் மெயின் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.
காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தருமபுரி தி.மு.க. மாவட்ட சார்பில் நல்லம்பள்ளி சந்தை பகுதியில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.
- வேளாண் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியை பார்வையிடுகிறார்.
தருமபுரி:
அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தருமபுரி மாவட்டத்திற்கு வருகை தருகிறார்.
இதையொட்டி வருகிற 16-ந் தேதி (சனிக்கிழமை) சேலத்தில் நடைபெறும் மாநாட்டில் கலந்து கொண்ட பின்பு இரவு தருமபுரிக்கு வருகிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தருமபுரி தி.மு.க. மாவட்ட சார்பில் நல்லம்பள்ளி சந்தை பகுதியில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் அங்கிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் "ரோடு ஷோ" நடத்துகிறார். அதைத்தொடர்ந்து கட்சி நிர்வாகிகளை சந்திக்கிறார். அன்று இரவு தருமபுரி சுற்றுலா மாளிகையில் ஓய்வு எடுக்கிறார்.
தொடர்ந்து 17-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சுற்றுலா மாளிகையில் இருந்து காலை 9 மணிக்கு ஒட்டப்பட்டி, கற்கஞ்சிபுரம் வழியாக பி.எம்.பி. கலைக்கல்லூரி அருகே அமைந்துள்ள நிகழ்ச்சி நடக்கும் திடல் வரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் "ரோடு ஷோ" நடத்துகிறார்.
பின்னர் அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். தொடர்ந்து வேளாண் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியை பார்வையிடுகிறார்.
அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்ட பின்னர் காலை 11 மணிக்கு சேலம் விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.
- தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நேற்று 18 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டு இருந்தது.
- ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் சற்று குறைந்தே காணப்பட்டது.
தருமபுரி:
கர்நாடகா காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது.
இதனால் கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.) அணையும், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது காணப்பட்டது. இதனால் அணைகளின் பாதுகாப்பை கருதி இரு அணைகளில் இருந்து தமிழக காவிரி ஆற்றில் தண்ணீர் அவ்வ பொழுது திறந்து விடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நேற்று 18 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டு இருந்தது.
தொடர்ந்து, இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து 14 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. ஆனாலும் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்த ருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் சற்று குறைந்தே காணப்பட்டது. மேலும், அருவிகளில் குளிக்கவும், பரிசல் சவாரி செய்யவும் தடை எதுவுமில்லை.
காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.






