என் மலர்
தர்மபுரி
- அனைத்து பஞ்சாயத்துகளிலும் நடந்த வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.
- பணி காலத்தில் காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் நடந்த பல்வேறு முறைகேடுகள் குறித்து அதிகாரிகள் உரிய விசாரணை நடத்த வேண்டும்,
காரிமங்கலம்,
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் 30 பஞ்சாயத்துகள் உள்ளது.
கடந்த ஆட்சியில் பல்வேறு பஞ்சாயத்துகளில் வரவு செலவு உட்பட பல்வேறு நிகழ்வுகளில் முறைகேடு நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக தனி அலுவலர் காலத்தில் பஞ்சாயத்துகளில் நடந்த வரவு செலவு கணக்கு மற்றும் பதிவேடுகள் ரசீதுகள் ஆகியவற்றை தணிக்கை துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்ற னர்.
முதல் கட்டமாக 10 பஞ்சாயத்துகளில் நடந்த வரவு செலவு கணக்கு பில் புத்தகங்கள் ரசீதுகள் ஆகியவற்றை சரிபார்த்தனர்.
நேற்று 20 பஞ்சாயத்துகளில் வரவு செலவு கணக்கு புத்தகம் பதிவேடுகள் ரசீது புத்தகங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.
மேலும் அனைத்து பஞ்சாயத்துகளிலும் நடந்த வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.
2017 முதல்2020 ஆம் ஆண்டு வரை காரிமங்கலம் ஊராட்சி ஒன்றிய தனி அலுவலராகவும் பி டி ஓ (திட்டம்) ஆக பணிபுரிந்த வர் வடிவேலன் என்பவர் வீட்டில் கடந்த ஆண்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் கலெக்டர் கலெக்டர் மலர்விழி ஆதரவாளராக செயல்பட்ட வடிவேலன், பணி காலத்தில் காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் நடந்த பல்வேறு முறைகேடுகள் குறித்து அதிகாரிகள் உரிய விசாரணை நடத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
- சுமார் 85 கடைகள் மற்றும் நவீன கழிவறை ஆகியவற்றுடன் சந்தை மேம்படுத்தும் பணி நடந்து வருகிறது.
- இப்பணியை பேரூராட்சி உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
காரிமங்கலம்,
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் பேரூராட்சிக்கு உட்பட்ட வாரச்சந்தை மேம்படுத்த வேண்டும் என பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பேரூராட்சி தலைவர் மனோகரன் அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.
இதை அடுத்து அமைச்சர்கள் நேரு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் பரிந்துரையின் பேரில் சந்தை மேம்படுத்தும் பணிக்கு ரூ.2.16 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதை அடுத்து சுமார் 85 கடைகள் மற்றும் நவீன கழிவறை ஆகியவற்றுடன் சந்தை மேம்படுத்தும் பணி நடந்து வருகிறது.
இப்பணியை பேரூராட்சி உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து மாடு சந்தை நடைபெறும் இடத்தையும் பார்வையிட்டு அதை சீரமைக்க பேரூராட்சி நிர்வாகத்துடன் ஆலோ சனை மேற்கொண்டார்.
ஆய்வின் போது பேரூராட்சி தலைவர் மனோகரன், செயல் அலுவலர் ஆயிஷா, வார்டு கவுன்சிலர்கள் ரமேஷ், மாதப்பன், சக்திரமேஷ், பிரியாசங்கர், உதவி பொறியாளர் முருகன், மற்றும் பலர் உடன் இருந்தனர்.
- பைப் லைன்களும் முழுமையாக துண்டிக்கப்பட்டு மூன்று நாட்களாக குடிநீர் விநியோகமும் முழுமையாக தடைபட்டுள்ளது.
- தீர்வு ஏற்றப்படாததால் 3 நாட்களாகவே வெட்ட ப்பட்ட சாலையும் பைப் லைன்களும் அப்படியே உள்ளது.
தொப்பூர்,
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம் பாகலஹள்ளி ஊராட்சியில் பச்சையப்பன் கொட்டாய் கிராமம் அமைந்துள்ளது.
இங்கு சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் பொதுமக்கள் என அனைவரும் அப்பகுதியில் சுமார் 40 ஆண்டு களுக்கு முன்பு போடப்பட்டுள்ள மண் சாலையை பிரதானமாக பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில் அக்கிராமத்தில் சிலரின் தனிப்பட்ட மோதல் காரண மாக கிராமத்திற்கு செல்லும் சாலையில் 3 இடங்களில் பல ஆண்டுகளாக இருந்த மண் சாலையில் மூன்று இடங்களிலிலும் சாலைகளில் பள்ளத்தை தோண்டியும் முட்களை வைத்து அடைத்தும் துண்டி த்துள்ளனர்.
மேலும் இக்கிராமத்திற்கு வரும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட பைப் லைன்களும் மூன்று இடங்களில் துண்டிக்கப்பட்டுள்ளது.
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் வழியாக கிராமம் முழுவதும் குடிநீர் வழங்கப்பட்டுள்ள பைப் லைன்களும் முழுமையாக துண்டிக்கப்பட்டு மூன்று நாட்களாக குடிநீர் விநியோகமும் முழுமையாக தடைபட்டுள்ளது.
இந்த சம்பவங்கள் நடைபெற்ற உடன் கிராம நிர்வாக அலுவலர், வருவாய் அலுவலர் ஊராட்சி மன்ற தலைவர் உள்ளி ட்டோர் மோதலில் ஈடுபட்ட நபர்களுடன் சமரசம் செய்ய முயற்சி செய்தனர்.
இருப்பினும் தீர்வு ஏற்றப்படாததால் 3 நாட்களாகவே வெட்ட ப்பட்ட சாலையும் பைப் லைன்களும் அப்படியே உள்ளது.
இதனால் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு சாலை மற்றும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
- தக்காளி வரத்து குறைந்ததை அடுத்து விலை அதிகரித்து வருவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
- 26 கிலோ தக்காளி கூடை 1500 ரூபாய்க்கும் வாங்கப்படுகிறது.
தருமபுரி,
தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு திருமல்வாடி, பெல்ரம்பட்டி, மாரண்டஅள்ளி, ஏரி பஞ்சப்பள்ளி, பெரியானூர், பாளையம், பென்னாகரம், அரூர் பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்து வருகின்றனர்.
மாவட்டத்தில் விளையும் தக்காளிகளை ராயக்கோட்டை, ஜிட்டான்டஅள்ளி, வெள்ளிச்சந்தை, பாலக்கோடு, கம்பைநல்லூர், மொரப்பூர், இருமத்தூர் உள்ளிட்ட இடங்களில் தக்காளி மண்டி செயல்பட்டு வருகிறது.
தருமபுரி மாவட்டத்தில் கொள்முதல் செய்யப்படும் தக்காளிகளை சென்னை, பெங்களூர், கோவை, உள்ளிட்ட பகுதிகளுக்கு வியாபாரிகள் தினசரி வாங்கி செல்கின்றனர்.
அதேபோல் உள்ளூர் வியாபாரிகளும் மண்டிகளில் இருந்து தக்காளியை வாங்கி செல்கின்றனர். கடந்த மாதம் 15 கிலோ கூடை தக்காளி 400 முதல் 450 வரை விவசாயிகள் இடத்தில் கொள்முதல் செய்யப்பட்டது. இன்று 15 கிலோ தக்காளி கூடை 800 ரூபாய்க்கும் 26 கிலோ தக்காளி கூடை 1500 ரூபாய்க்கும் வாங்கப்படுகிறது.
மொத்தமாக கொள்முதல் செய்யப்பட்ட தக்காளி சில்லறையில் கிலோ 68 முதல் 70 வரை உழவர் சந்தையில் இன்று விற்பனை செய்யப்பட்டது. வெளிமார்க்கெட்டில் 85 முதல் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
தக்காளி வரத்து குறைந்ததை அடுத்து விலை அதிகரித்து வருவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இது குறித்து வியாபாரிகள் கூறுகையில் தற்போது ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருவதால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் வெகுவாக வரத்து குறைந்துள்ளதால் விலை உயர்வுக்கு காரணம் எனத் தெரிவித்தனர்.
- புதிய வேளாண்மை கருவி கண்டுபிடிப்புகளுக்கு ரூ.1 லட்சமும் என வேளாண்மைத்துறைக்கு இந்த திட்டத்தில் மொத்தம் ரூ.2 லட்சம் மட்டும் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.
- போட்டியில் கலந்து கொள்ளும் உள்ளூர் தொழில்நுட்பமானது அனைத்து விவசாயிகளும் எளிதில் கடைபிடிக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.
தருமபுரி,
தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி, வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-
தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் மாநில அளவில் சிறப்பாக செயல்படும் விவசாயிகளுக்கு விருது வழங்கிடும் திட்டமானது அறிவிக்கப்பட்டு அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின்படி புதிய வேளாண் தொழில் நுட்ப உள்ளூர் கண்டுபிடிப்புக்கு ரூ.1 லட்சமும், புதிய வேளாண்மை கருவி கண்டுபிடிப்புகளுக்கு ரூ.1 லட்சமும் என வேளாண்மைத்துறைக்கு இந்த திட்டத்தில் மொத்தம் ரூ.2 லட்சம் மட்டும் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.
மேலும் இயற்கை விவசாயத்தில் சிறந்து விளங்கும் விவசாயிக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சமும், இரண்டாவது பரிசாக ரூ.60 ஆயிரமும், மூன்றாவது பரிசாக ரூ.40 ஆயிரமும் வழங்கப்பட உள்ளது. வேளாண் ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் விவசாயிக்கு ரூ.2 இலட்சம் பரிசாக வழங்கப்பட உள்ளது.
இத்திட்டத்தில் தகுதியுடைய விவசாயிகள் பெருமளவில் கலந்து கொள்ள கேட்டு கொள்ளப்படு கிறார்கள்.
இத்திட்டத்தில் பங்கு பெற விரும்பும் விவசாயிகள் தங்களது பெயரை உழவன் செயலி மூலம் பதிவு செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சம்மந்த ப்பட்ட வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் வழங்க வேண்டும்.
இதற்கான பதிவு கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். விவசாயிகள் தங்கள் சாதனை குறித்த விவரங்களை மாவட்ட அளவிலான தேர்வுக்குழுவிடம் உரிய ஆவணங்களுடன் விளக்க வேண்டும்.
போட்டியில் கலந்து கொள்ளும் விவசாயியின் கண்டுபிடிப்பானது அவரது சொந்தக் கண்டுபிடிப்பாக இருக்க வேண்டும்.
இதற்கு முன்னர் இந்த கண்டுபிடிப்பு அல்லது தொழில்நுட்பம் வேறு எந்த போட்டியிலும் கலந்து கொண்டு பரிசு எதுவும் பெற்றதாக இருக்கக் கூடாது.
விருதுக்கு சமர்ப்பிக்கப்படும் இயந்திரம் வேறு ஒரு தனிநபருடைய அல்லது ஒரு கண்டுப்பிடிப்பின், தயாரிப்பின் அசலாகவோ, சாயலாகவோ, மேம்படுத்தப்பட்டதாகவோ இருக்கக்கூடாது.
இதற்கான குறிப்புரை வேளாண் பொறியியல் துறையின் மூலம் பெறப்பட வேண்டும்.
போட்டியில் கலந்து கொள்ளும் உள்ளூர் தொழில்நுட்பமானது அனைத்து விவசாயிகளும் எளிதில் கடைபிடிக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.
அது போல உள்ளூர் கண்டுபிடிப்பானது விவசாயிகளால் எளிதில் உபயோகப்படுத்தக் கூடியதாக இருக்க வேண்டும்.
தனிப்பட்ட விவசாயி களின் தொழில் நுட்ப கண்டுபிடிப்பை மதிப்பாய்வு செய்து இதற்கான குறிப்புரை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக விஞ்ஞானிகளிடம் பெறப்பட வேண்டும்.
போட்டியில் கலந்து கொள்ளும் போட்டியாள ர்கள் உள்ளூர் தொழில் நுட்ப கண்டுபிடிப்பு விவசா யிகளின் வேளாண்மை செலவினத்தைக் குறைக்க கூடியதாகவும், விலை குறைவானதாகவும், அதிக விளைச்சலை தரக்கூடியதாகவும் பயன்படுத்தக் கூடிய கருவியாகவும் இருக்க வேண்டும்.
வெற்றியாளர்களை அறிவிப்பதில் வேளாண்மை இயக்குநர் தலைமையிலான மாநில அளவிலான குழுவின் முடிவே இறுதியானது என தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு கலெக்டர் சாந்தி, தெரிவித்துள்ளார்.
- இரவு தூங்க சென்றவர் காலையில் எழுந்து பார்த்தால் காணவில்லை.
- பெற்றோர்கள், உறவினர்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகே உள்ள அன்பு நகர் பகுதியை சேர்ந்தவர் அஞ்சலாமேரி. பி.காம் பட்டதாரி. இரவு தூங்க சென்றவர் காலையில் எழுந்து பார்த்தால் காணவில்லை. பெற்றோர்கள், உறவினர்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து இவருடைய அப்பா கம்பைநல்லூர் போலீஸ் ஸ்டேசனில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.
- பள்ளிக்கு செல்லும் நுழைவாயில் சுவரில் சில ரோமியோக்கள் பிறந்தநாள் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர்.
- உப்பு இருந்தால் தானே உணவு சுவைக்கும், நட்பு இருந்தால் தானே வாழ்க்கை இனிக்கும் என்று வாசகத்துடன் பள்ளி சுவற்றில் ஒட்டி வைத்துள்ளனர்.
தருமபுரி,
தருமபுரி, திருப்பத்தூர் சாலையில் அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
தனியார் பள்ளிக்கு நிகராக செயல்பட்டு வரும் அரசு அவ்வையார் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதியிலிருந்தும் 3500- க்கும் மேற்பட்ட மாணவிகள் இப்பள்ளியில் பயின்று வருகின்றனர்.
தருமபுரி மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து வரும் மாணவிகள் தருமபுரி புறநகர் பேருந்து மற்றும் நகரப் பேருந்துகளில் பயணித்து பஸ் நிலையத்தை அடைந்து 8 மணி முதலே பள்ளிக்கு வர தொடங்குவர்.
இந்த சமயங்களில் அவ்வையார் அரசு மகளிர் பள்ளி நுழைவாயிலுக்கு எதிரில் சில வாலிபர்கள் பள்ளிக்கு செல்லும் மாணவி களிடம் கேலி கிண்டல் செய்து வருவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.
இந்த நிலையில் பள்ளிக்கு செல்லும் நுழைவாயில் சுவரில் சில ரோமியோக்கள் பிறந்தநாள் போஸ்டர் அடித்து அதில் உப்பு இருந்தால் தானே உணவு சுவைக்கும், நட்பு இருந்தால் தானே வாழ்க்கை இனிக்கும் என்று பள்ளி சுவற்றில் ஒட்டி வைத்துள்ளனர்.
இதனைக் கண்ட மாணவி களின் பெற்றோர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். மாணவிகள் மட்டும் படித்து வரும் பள்ளிக்கு எதிரே காலை , மாலை இரு வேலையும் மாணவிகளுக்கு காதல் அம்பை தொடுத்து கேலி. கிண்டல் செய்து வரும் நிலையில் பள்ளி சுவற்றில் இது போன்ற பிறந்தநாள் போஸ்டர்களை அடித்து ஒட்டி மாணவிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கும் இந்த ரோமியோக்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கோவிந்தராஜீக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
- போலீசார் வழக்குபதிவு செய்து தலைமறைவான மாதம்மாளை தேடி வருகின்றனர்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம், தொப்பூர் அடுத்துள்ள பாளையம்புதூர் காமராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது43), இவரது மனைவி மாதம்மாள் (39).
இந்த நிலையில் கோவிந்தராஜீக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
நீ இப்படி தினமும் மது குடித்து விட்டு வந்தால் எப்படி குடும்பம் நடத்துவது என்று மாதம்மாள் கேட்டுள்ளார். இதனால் நேற்று மீண்டும் இருவருக்கும் தகராறு நடந்துள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த மாதம்மாள், தனது கணவர் என்று கூட பாராமல் கோவிந்தராஜை அடுப்பு பற்ற வைக்க பயன்படுத்தப்படும் ஊது குழலால் தலையில் சரமாரியாக அடித்துள்ளார்.
இதனால் வலி தாங்க முடியாமல் அவர் அலறினார். பின்னர் சிறிது நேரத்தில் கோவிந்தராஜ் துடி துடித்து உயிரிழந்தார்.
இதை பார்த்து அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் வருவதற்குள் மாதம்மாள் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.
இது குறித்து பாளையம்புதூர் கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணனுக்கு கிராம மக்கள் தகவல் கொடுத்தனர்.
அவர் வந்து பார்வையிட்டு இது பற்றி தொப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
குடும்ப தகராறு காரணமாக அடித்து கொலை செய்யப்பட்ட கோவிந்தன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து தலைமறைவான மாதம்மாளை தேடி வருகின்றனர்.
- சுரேஷ் தரப்பினர் கோவில் திருவிழாவில் கலந்து கொள்ள எவ்வித ஆட்சேபனை இல்லை என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
- கிராமத்தில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர்.
தொப்பூர்:
தர்மபுரி மாவட்டம், பொம்மிடி அருகே உள்ள வேப்பமரத்தூர் கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெறுவதாக இருந்தது.
கோவில் கும்பாபிஷேகத்திற்காக அந்த கிராமத்தில் உள்ள 250 குடும்பங்களிலும் வீட்டுக்கு ரூ.5 ஆயிரம் வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. இதில் அதே கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் (வயது37) என்பவர் மொரப்பூர் அருகே உள்ள பறையப்பட்டியில் வேறு சமூகத்தை சேர்ந்த சுதா (30) என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.
இதனால் விழாக்குழுவினர் சுரேஷ் குடும்பத்தினரிடம் கோவில் விழாவுக்கு வரி வாங்கவில்லை. இதனால் கோவில் திருவிழாவில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு சுதா பொம்மிடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அந்த புகாரின் பேரில் இருரப்பினர்களையும் அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார் கோவில் கும்பாபிஷேகம் நடத்த அனுமதி வழங்க முடியாது விழா ஏற்பாடுகளை நிறுத்தி வையுங்கள் என்று கிராம மக்களிடம் தெரிவித்தனர்.
இதனால் நேற்று முன்தினம் இரவு காதல் தம்பதி சுரேஷ், சுதா ஆகியோர் குடும்பத்தினர் கோவில் திருவிழாவில் பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்து அதே கிராமத்தை சேர்ந்த முருகன் மனைவி ராமு (வயது 35), மற்றொரு முருகன் மனைவி கவிதா (38), அனுமந்தன் மனைவி அலமேலு (36), மாதேஷ் மனைவி தேன்மொழி (35), ரமேஷ் மனைவி அமுதா (35), அசோகன் மனைவி விஜயா (23) ஆகிய 6 பேரும் கோவில் அருகே பாயாசம் செய்து அதில் விஷம் கலந்து குடித்து விட்டு தற்கொலைக்கு முயன்றனர்.
இதைப்பார்த்த அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு தருமபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து நேற்று வேப்பமரத்தூர் கிராமத்தில் தாசில்தார் ஜெயசெல்வம், அரூர் போலீஸ் துணை சூப்பிரண்டு (பொறுப்பு) நாகலிங்கம், போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி, கோவிந்தசாமி எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலையில் ஊர்கவுண்டர் துரை மற்றும் சுரேஷ், அவரது மனைவி சுதா ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் சுரேஷ் தரப்பினர் கோவில் திருவிழாவில் கலந்து கொள்ள எவ்வித ஆட்சேபனை இல்லை என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனால் இருதரப்பிலும் சமரசம் ஏற்பட்டது.
இதையடுத்து இன்று கோவில் கும்பாபிஷேகம் வெகுசிறப்பாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிப்பட்டனர். பிரச்சினை எதுவும் ஏற்படாமல் இருக்க அந்த கிராமத்தில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர்.
- பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் 2324 மூட்டை பருத்தியை விற்பனைக்காக கொண்டு வந்தனர்.
- கூட்டுறவு சங்கத்தில் ரூ.62 லட்சத்திற்கு பருத்தி ஏலம் போனதாக சங்க செயலர் அறிவழகன் தெரிவித்தார்.
அரூர்,
தருமபுரி மாவட்டம், அரூர் கூட்டுறவு வேளாண்மை உற்பத்தி யாளர்கள் சங்கத்தில் நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது.
அரூர், கம்பைநல்லூர், கோட்டப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் 2324 மூட்டை பருத்தியை விற்பனைக்காக கொண்டு வந்தனர்.
பி.சி. ரக பருத்தி குவிண்டால் ரூ.5,819 முதல் ரூ.6,700 வரை ஏலம் போனது. கூட்டுறவு சங்கத்தில் ரூ.62 லட்சத்திற்கு பருத்தி ஏலம் போனதாக சங்க செயலர் அறிவழகன் தெரிவித்தார்.
- அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று அவர் மீது மோதியது.
- அவரை பரிசோதித்த டாக்டர்கள் சுதேஷ்குமார் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் பொம்மரத்தாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மகன் சுதேஷ்குமார் (வயது17). இவர் சுற்றுலா பஸ்சில் கிளீனராக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று சுதேஷ்குமார் சோகத்தூர் கூட்ரோடு அருகே பெட்ரோல் வாங்க நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சுதேஷ்குமாரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சுதேஷ்குமார் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தருமபுரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 9 மாதம் கர்ப்பிணியாக உள்ள அந்த சிறுமிக்கு கடந்த சிலநாட்களுக்கு முன்பு வலி ஏற்பட்டது.
- சிறுமி தற்போது தான் 18 வயது பூர்த்தியாகி உள்ளதும், அவரை மகேந்திரமணி குழந்தை திருமணம் செய்து கொண்டு கர்ப்பமாக்கியதும் டாக்டர்களுக்கு தெரியவந்தது.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் மோதூர் கொட்டாய் காட்டுவளவு பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரமணி (வயது25).
செல்போன் மூலம் காதல்
இவர் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு தனது செல்போனில் தவறுதலாக வேறு எண்ணிற்கு தொடர்பு கொண்டபோது தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதியைச் சேர்ந்த சிறுமியிடம் பேசியுள்ளார். அப்போது இருந்து இருவரும் செல்போனில் பேசி பழகி வந்தனர். இதுநாளடைவில் காதலாக மாறியது.
இந்தநிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். ஆனால், இதற்கு பெண்வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததால், கடந்த ஆண்டு அந்த சிறுமி வீட்டை விட்டு வந்தது.
குழந்தை திருமணம்
அப்போது மகேந்திரமணியும், சிறுமியும் காரிமங்கலத்தில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் ஓசூரில் தனியாக வசித்து வந்தனர். இந்த நிலையில் அந்த சிறுமி கர்ப்பமானார்.
தற்போது 9 மாதம் கர்ப்பிணியாக உள்ள அந்த சிறுமிக்கு கடந்த சிலநாட்களுக்கு முன்பு வலி ஏற்பட்டதால் அவரை பிரசவத்திற்காக தென்காசியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அப்போது சிறுமி தற்போது தான் 18 வயது பூர்த்தியாகி உள்ளதும், அவரை மகேந்திரமணி குழந்தை திருமணம் செய்து கொண்டு கர்ப்பமாக்கியதும் டாக்டர்களுக்கு தெரியவந்தது. இதுகுறித்து டாக்டர்கள் தென்காசி போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக தென்காசி போலீசார் தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். குழந்தை திருமணம் செய்த சம்பவம் தொடர்பாக காரிமங்கலம் போலீசார் மகேந்திமணி மீது போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






